முகப்பு

samedi 7 décembre 2013

நெல்சன் மண்டேலா


நெல்சன் மண்டேலா....மனித உரிமைகளுக்காக போராடிய மாபெரும் தலைவன் .

புவியில் இதுவரை நிலவிய மிகப் பிரபலமான சக்தி மிக்க ஒளி இந்த உலகைவிட்டு விலகிச் சென்றுவிட்டது, உலகத்தின் மில்லியன் மில்லியன் கணக்கான மக்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர்
வெறுமனே தென்னாபிரிக்காவிற்கு மட்டுமல்ல உலகளாவிய மனித உரிமையை நேசிக்கும் அனைவருக்குமே பேரிழப்பு நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கிட்டிய மரண நிலையில் உயிர் போராட்டம் நடாத்திக் கொண்டிருந்தார், வியாழன் இரவு அவருடைய உயிர் அந்தப் போராட்டத்தில் இருந்து விடுபட்டு சுதந்திரமாகப் பறந்தது.
கறுப்பின மக்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழும் மக்கள் அனைவரும் போற்றித் துதிக்க வல்ல உன்னதப் பிறவி நெல்சன் மண்டேலா தனது 95 வது வயதில் அமைதியாக இந்த உலக வாழ்வைத் துறந்தார்.
18 யூலை 1918 ம் ஆண்டு தென்னாபிரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மவிசோ நகரத்தில் பிறந்தார்.
1940 போர்கார் பல்கலைக்கழக கல்லூரியில் இருந்து மாணவர் போராட்டத்தை நடாத்தியமைக்காக தூக்கி வீசப்பட்டார்.
1943 ஆபிரிக்க தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.
1944 ல் மருத்துவத்தாதி எவலான் மாஸ்சவை மணமுடித்தார்.
1952 ல் ஜொகானிஸ்பேர்க்கில் முதலாவது கறுப்பின சட்டத்தரணிகள் காரியாலயத்தைத் திறந்தார்.
1956- தேசத் துரோகக் குற்றச்சாட்டு அவருக்கு எதிராகப் பதியப்பட்டது, ஆனால் நான்காண்டு விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் கைவிடப்படுகின்றன
1958 முதல் மனைவியை விவாகரத்து செய்து வின்னி மண்டேலாவை மணமுடித்தார்.
1962-கலவரத்தைத் தூண்டியது, பாஸ்போர்ட் இல்லாமல் நாட்டைவிட்டு வெளியேறியது ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டு, ஐந்தாண்டு சிறைத் தண்டனை.
05.08.1965 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
05.07.1989 ஆபிரிக்க நிறவெறி அதிபர் பிடபிள்யூ போத்தாவை சந்தித்தார் சிறையில்.
11.02.1990 விடுதலை செய்யப்பட்டார்.
1990-ல் இந்தியாவின் ‘பாரத ரத்னா’ விருதும் வழங்கப்பட்டது
ஏப்ரல் 1992 வின்னி மண்டேலாவை விவாகரத்து செய்தார்.
15.10.1993 நோபல்பரிசு பெற்றார்.
18.07.1992 ல் முன்னாள் மொசாம்பிக் அதிபரின் மனைவி கிறேசா மைக்கலை மணமுடித்தார்.
1994- தென்னாப்ரிக்காவின் முதல் கறுப்பின அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
1999- தென்னாப்ரிக்காவின் அதிபர் பதவியிலிருந்து விலகுகிறார்.
2001- ப்ரொஸ்டேட் புற்று நோய் பீடிக்கிறது.
2004- பொது வாழ்விலிருந்து விலகுகிறார்.
2005- தனது மகன் எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோய் தொடர்பான உடல்நலக்குறைவால் இறந்ததாக அறிவிக்கிறார்.
05.12.2013 தனது 95 வது வயதில் மரணம்

Aucun commentaire:

Enregistrer un commentaire