முகப்பு

vendredi 29 novembre 2013

உள்ளத்தில் ஏற்றுவோம் விளக்கு..!

Photo : உள்ளத்தில் ஏற்றுவோம் விளக்கு..!

உயிர் விளக்குகளை ஏற்றி உலக நாடுகளின் வஞ்சக இருளை அகற்ற நடந்த போர் எதுவென்று கேட்டால் அது வன்னியில் நடந்த போர் என்பதுதான் விடை.. அதை நடாத்தியவர்கள் நமது மாவீரர்களே..
சங்கரில் ஏற்றப்பட்ட மாவீரர் நாளின் முதல் விளக்கு நூறாகி, ஆயிரங்களாகி, இலட்சோப இலட்சங்களாகி பெருகிச்செல்கின்றது.
இது சாதாரண ஒளியல்ல, ஈழத் தமிழினத்தைச் சூழ்ந்துள்ள கொடிய சிங்கள இனவாத இருளை விலக்கும் ஒளிப்போர்..
அந்த ஒளிப்போர் இந்த ஆண்டு பெற்ற வெற்றி மகத்தானது..
தன்னை இழந்தவன் உண்டு..
தன் உயிரை இழந்தவன் உண்டு..
தன் சமாதியையும் இழந்தவன் இந்த உலகில் உண்டா..?
இருக்கிறான்.. அவன்தான் மாவீரன்..!
ஆம்.. இது கல்லறைகளும் இல்லாத மாவீரர்களுக்கு உள்ளத்தில் விளக்கு வைக்கும் உன்னதக்காலம்..
கல்லறைகளை இடித்து மாவீரனைத் தேடுகிறான் பகைவன்.
மாவீரர் தீபத்தை ஏற்றிவிட்டு தியாகமே வடிவாக நின்ற திருமகன் பிரபாகரனிடம்,” உங்கள் அரசியல் கொள்கைதான் என்ன..? ” வென்று சிலர் வினவினார்கள்..
” என்னுடைய அரசியல் பாதை இந்தத் தீபங்களின் வெளிச்சத்தில் தெரிகிறது, இந்தத் தீபங்களே எனக்கு வழிகாட்டிச் செல்கின்றன..” என்றார்..
அன்று உலகத்தால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை..
அகலித்துக்கொண்டே அசுர வேகத்தில் ஓடும் இந்த ஒளி ஒரு கட்டத்தில் வளைகிறது, அது ஒரு நாள் புறப்பட்ட இடத்திற்கே மறுபடியும் வருகிறது அதுதான் இந்த ஆண்டு மாவீரர்நாளில் நடந்திருக்கிறது, ஒளி புறப்பட்ட இடத்திற்கே வந்திருக்கிறது.
ஓயாத அலைகள் மூன்றில் சிங்கள இராணுவம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் போல பலாலி முகாமிற்குள் முடக்கப்பட்டது.
அவர்களை நயவஞ்சகமாக அழித்திருக்கலாம்… ஆனால் அது போர் விதியல்ல.. அவர்களை மன்னித்து விட்டார்கள்.. போர் நெறி காத்தார்கள்.. ஆனாலும் ஈழத்தின் இதயத்தை இந்த உலகத்தால் பார்க்க முடியவில்லை.
அந்த மகத்தான முடிவை உலகம் மதித்ததா..? இல்லை..
பதிலுக்கு உலகத்தின் வல்லரசுகள் எல்லாம் ஒன்றிணைந்து புலிகளை வேரோடு அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி நின்றன.
அப்போதுதான் சிங்களத்தின் இதயம் மட்டுமல்ல உலகத்தின் இதயமே இருட்காட்டில் கிடப்பதை பிரபாகரன் கண்டு கொண்டார்.
மாவீரர்நாள் உரையில்.. ” சின்னஞ்சிறிய ஓர் இனத்தை அழிக்க இத்தனை உலக வல்லரசுகள் ஒன்று திரண்டு நிற்கிறீர்களே.. இது நீதியா..?” என்று கேட்டார்.
உலகத்தால் புரிய முடியவில்லை..
சரணடையுங்கள் என்றார்கள்..
சரணடைபவனை தன்னைவிட உயர்வாக மதிக்க வேண்டுமென்ற கொள்கை சிங்களக் கலாச்சாரத்திலேயே கிடையாதே..?
இது கல்லறைகளும் இல்லாத மாவீரர்களுக்கு உள்ளத்தில் விளக்கு வைக்கும் உன்னதக்காலம்..

உள்ளத்தில் இருக்கிறான் உயர்ந்த மாவீரன் என்பதை அவனெங்கே அறியப்போகிறான்.. பேதை..

காவிய நாயகர்களுக்கு கல்லறை எதற்கு..? உள்ளத்தில் ஏற்றுவோம் விளக்கு..!

Aucun commentaire:

Enregistrer un commentaire