முகப்பு

mardi 24 novembre 2015

சுகமாகிவிடுவான்


    அது ஒரு மனநல மருத்துவமனை...அங்கே அழகன் என்கிற ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார் , ஒரு நாள் புத்திரன் என்கிற சக மன நோயாளி ஒருவன் கிணற்றில் குதித்திவிட.., தன் உயிரை துச்சமென நினைத்து கிணற்றுக்குள் குதித்து அந்த நோயாளியை காப்பாற்றி விட்டார் அழகன். அவரின் இந்த வீரதீரச் செயல் மருத்துவமனை முழுக்க பரவிவிட்டது. அதைக் கேள்விப்பட்ட மருத்துவ நிபுணர் அழகனை அழைத்து “உனக்கு ஒரு நல்ல செய்தியும், ஒரு துக்கமான செய்தியும் சொல்லப் போகிறேன்” என்றார். உடனே இரமேஷ் “சொல்லுங்க டாக்டர்” என்றான். “நீ உனத...ு நண்பனைக் காப்பாற்றியபடியால் நீ சுகமடைந்து விட்டாய் என நினைக்கிறேன். நீ வீடு செல்லலாம். இது நல்ல செய்தி” “துக்கமான செய்தி நீ கிணற்றில் இருந்து காப்பாற்றிய உனது நண்பன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துவிட்டான்” டாக்டர் பேசி முடித்த உடன் அழகன் ஆர்வமுடன் சொன்னார்.., “டாக்டர் … அவன் சாகவில்லை. கிணறில் விழுந்து நனைந்தவனை ஈரம் காயட்டும் என்று நான் தான் அவனது கழுத்தில் கயிற்றினைக் கட்டி மரத்தில் தொங்க விட்டிருக்கிறேன். ஈரம் காய்ந்ததும் அவன் சுகமாகிவிடுவான்”….......

Aucun commentaire:

Enregistrer un commentaire