முகப்பு

mardi 13 octobre 2015

கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார்.

கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார்.
தமிழ்நாட்டின் மதுபானக் கடைகளில் இவ்வளவு கூட்டம் கூடியிருக்கிறதே... அந்த மதுபானத்தில் அப்படியென்னதான் சுவை இருக்கிறது என்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் தன்னைச் சாதாரண மனிதனைப் போல் மாற்றிக் கொண்டு அங்கிருந்த மது அருந்தும் கூடத்திற்குச் சென்று அமர்ந்தார்.
அங்கிருந்த பணியாளர், “என்ன வேண்டும்?” என்று கேட்டார்.
...
இவர் அருகிலிருந்த மேசையில் ஒருவர் குடித்துக் கொண்டிருந்த பாட்டிலைக் காண்பித்து, அது போல் தனக்கும் ஒன்றைக் கொண்டு வரும்படி கூறினார்.
அந்தப்பணியாளரும் அது போன்ற பாட்டிலைக் கொண்டு வந்து கொடுத்தார்.
அந்தப் பாட்டில் முழுவதையும் குடித்து விட்டு, “அப்படி ஒன்றும் வித்தியாசமாகத் தெரியவில்லையே...” என்றார்.
பணியாளர், “இது போதை குறைவானது. இந்தப் பாட்டிலைக் குடித்துப் பாருங்கள்...” என்று வேறு ஒரு நிறுவனத் தயாரிப்பைக் கொண்டு வந்து கொடுத்தார்.
அதிலும் அவருக்கு வித்தியாசம் எதுவும் தெரியவில்லை.
பணியாளர் அடுத்து மிகவும் போதை தரும் பாட்டிலைக் கொண்டு வந்து கொடுத்தார்.
அதையும் குடித்த கடவுளுக்குள் புதிய மாற்றம் ஏதும் தெரியாததால் அவர் அந்தப் பணியாளரைப் பார்த்து வேறு பாட்டிலைக் கொண்டு வரும்படி கேட்டார்.
பணியாளர், “யாருய்யா நீ? இவ்வளவு குடிச்சும் உனக்குப் போதை ஏறலயா...? மறுபடியும் கேட்கிறே..?” என்றார்.
அதற்கு கடவுள், “நான் தான் உங்களை ஆளும் கடவுள் எனக்கு இந்தப் போதை ஒன்றும் செய்யாது" என்றார்.
அந்தப் பணியாளர், “பாருடா...! இவன் கடவுளாமில்ல... இவனுக்கு இப்போதுதான் போதை ஏறத் தொடங்கியிருக்கு...!” என்றபடி அங்கிருந்து நகர்ந்தான்.
கடவுள் இப்போதும் ஒன்றும் புரியாமல் விழித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire