முகப்பு

jeudi 16 novembre 2017

மனிதன் என்பவன் யார்?



மனிதன் என்பவன் யார்?
விலங்கினத்தின் அடுத்த பரிணாமம் மனிதன்
அடுத்த பரிணாமம் எது?
...
விலங்கிற்கு ஐயறிவு.
அடுத்த பரிமாணம் என்பது ஆறாவது அறிவு அதாவது மனம் என்பது ஆறாவது அறிவு.
ஐயறிவு நிலைகள் யாது?
| .தொடு உணர்வு - (அறிவு)
2. சுவை உணர்வு _ (அறிவு)
3. நுகர் உணர்வு – (அறிவு)
4. ஒளி உணர்வு – (அறிவு)
5. ஒலி உணர்வு _ (அறிவு)
ஒவ்வொரு உணர்வும் ஒரு அறிவு என்று பேசப்படுகிறது
6. ஆறாவது அறிவு மனம்
ஆதாரம் என்ன?
ஆதாரம்:
தொல்காப்பியம்
ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அவற்றொடு
நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு
நுகர்வே
நான்கறிவதுவே அவற்றொடு
கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு
காதே
ஆறறிவதுவே அவற்றொடு
மனனே
ஐயறிவிற்கும் கருவிகள் உண்டு
1. தோல் - தொடு உணர்வு
2. நாக்கு-சுவை உணர்வு
3. மூக்கு- வாசனை உணர்வு
4. கண் - ஒளி உணர்வு
5. காது – ஒலி உணர்வு
மனத்திற்கு கருவி எது?
மனம் என்ற ஒரு கருவி தனியாக கிடையாது.
ஐந்து புலன்களையும் கருவியாகக் கொண்டு அவற்றின்
வழியே செயல்படும் ஒரு ஆற்றலே மனம் .
ஐந்து புலன்களையும் கண்களால் பார்க்கலாம்.
ஆனால் மனதை கண்களால் பார்க்க முடியாது.
ஐம்புலன்களும் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பொது வானது..
ஆனால்
மனம் மனிதனுக்கு
மட்டும் சிறப்பானது

Aucun commentaire:

Enregistrer un commentaire