முகப்பு

jeudi 18 mai 2017

முள்ளிவாய்கால் 8 ஆண்டுகளாகியும்




முள்ளிவாய்கால் 8 ஆண்டுகளாகியும்...
8ஆண்டுகள் கழிந்து போகும்போக்கில் பேரினவாதிகள் தமிழனின் மரண ஓலங்களும் அழுகுரலும் அச்சுறுத்தலும் அழிப்பினையும் தான் புலப்படுத்துகிறார்கள்.. முள்ளிவாய்க்கால் கொடூர அவலம் இனம் அழிந்த பாதகம் இனவழிப்பின் நோக்கம் எத்தனை ஆயிரம் காலம் ஓடிச்சென்றாலும் தமிழன் வாழ்வை பேரினவாதிகள் நேயத்துடன் நெருங்காது. தமிழனுக்குச் சிறைகள் கைதுகள் சித்திரவதைக் கூடங்களைத்தான் பெருக்குகின்றார்கள். போரின் அவலங்களுக்கு மத்தியிலும் அரசியல் பழிவாங்கள் நடத்தும் பேரினவாதம் முள...்ளிவாய்கால் படுகொலைக்குக் காரணமானவர்களை நீதியின் முன்னிறுத்தக் தயக்கம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த ரணங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கொடுத்த வாக்குறுதிகள் இன்னமும் சர்வதேச சமூகமும் நிறைவேற்றவில்லை. தமிழன் மகிழ்சியான வாழ்க்கை வாழ்வதைச் சொல்பவன் யார்? கைக்கூலிகளும் காட்டிக்கொடுக்கும் துரோகிகளும் பச்சோந்திகளும் தான். புத்தபிக்குகளும் சிங்களப் பேரினவாதக் கும்பல்களும் திரும்பவும் மேலிருந்து கீழாக தன்மானத் தமிழன் மீது இனவாதத்தை இறக்கிக் கொண்டு சீண்டிப் பார்க்கின்றார்கள். சொந்த நிலபுலன் விட்டு அகதியானவர் அவலம் 2009 .05.18 ஏழாண்டுகளாகியும் தீர்வுகாணத் தலையிடவில்லை சிஙகள இராணுவத்தால் விரட்டப்பட்டுத் துரத்தப்படும் போது அகதியானவர் இனவெறி இராணுவத்திடமே சொந்தமண்ணில் அடிமையாவது என்பது இன்றுவரை தீரவில்லை.
விடுதலைப் புலிகள் பதுங்கிப் பாய்வதையே விரும்பி வரவேற்று மாறும் சரித்திரத்தைக் காணத்துடிகின்றனர் என்பது இன்றைய அரசியல் அனுகுமுறையாகப்படுகிறது. புலம்பெயர் தமிழர்கள் நடத்தும் பேரணிகளும் போராட்டம்தான். கூட்டங்கள் நடத்தி இளவட்டங்கள் கலந்து நிறைந்து நீண்ட ஊர்வலங்கள் கோஷங்கள் எழுப்பி தமிழர் நிலைப்பாடுகளை உரக்க வெளிப்படுத்துவதும் போராட்டங்கள்தான். வரலாறுகள் மறைக்கப்படாத மறுக்கப்படாத தேசபக்தி தான் உண்மையான போராட்டம். நாம் இப்போது ஆயத்தம் கொள்வோம் நமது முள்ளிவாய்க்கால் கனத்த கவலை சுமந்த 8வது ஆண்டு நினைவு நாள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் அழிவையும் வார்த்தைகளிலும் படங்களிலும் என்றுமே விளங்கப்படுத்த முடியாது. புலம்பெயர்ந்த தமிழர் கண்டனப் போராட்டங்களால்தான் முடியும். புலம்பெயர் தமிழர்களின் மன உறுதி போராடும் திறன் வெளிப்பட வேண்டும்.(sountha 18.05.2017)

Aucun commentaire:

Enregistrer un commentaire