முகப்பு

mercredi 8 mars 2017

அனைவருக்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துகள்!!.........


  1. அனைவருக்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துகள்!!.........
    1908ம் ஆண்டு வாக்குரிமை கேட்டு பெண்கள் நடத்திய போராட்டத்தை கண்டு அமெரிக்க ஜனாதிபதி பியோடர் ரூஸ்ரெல்ட்டே அஞ்சினார். 1910ம், ஆண்டு ஓப்பன் ஹேகனில் கிளாரா ஜெட்கின் தலைமையில் அனைத்துலக பெண்கள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் சர்வதேச மாதர் அமைப்பு உருவானது. ஐரோப்பா முழுக்க பெண்கள் போராட்டம் நடத்த உத்வேகம் ஊட்டியது. ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் ஆகிய நாடுகளை சேர்ந்த பெண்களின் தொடர் போராட்டங்களைக் கண்டு அரசு ஆடிப்போனது. இத...்தாலிய பெண்கள், வாக்குரிமை கேட்டு போராடினர். பிரான்ஸில் பிரஷ்யனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் சேர்க்கவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புக்கொண்ட அந்த நாள் 1848 மார்ச் 8. அந்தநாளைத்தான் உலகம் முழுக்க பெண்கள் உரிமை தினமாக கொண்டாடுகின்றனர்.
    1789ம் ஆண்டு பிரஞ்ச் புரட்சி நடந்தபோது பெண்களும் போராட்ட களத்தில் இறங்கினர். சமத்துவ உரிமைகள் வேண்டும் என்றும் எட்டு மணி நேர வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம், பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தக் கூடாது என்றெல்லாம் கோரிக்கைகளை முன்வைத்து போராடினர். அதை நசுக்க நினைத்த மன்னர் லூயிஸ் பிலீப், போராட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போராட்ட காரர்களை சமாதான படுத்திப் பார்த்தான். ஆனால் முடியவில்லை. இதனால் தன் மன்னர் பதவியை துறந்தான். சமீபகாலமாக ஐ.நா.சபையின் பெண்கள் அமைப்பு சார்பில், மார்ச் 8ம் தேதியை சர்வதேச மாதர் தினமாக உலகெங்கும் கடைபிடிக்கின்றனர். சுமார் 226 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் போராடிப்போராடி தங்கள் உரிமைகளை பெற்றுவருகின்றனர்.-sountha




Aucun commentaire:

Enregistrer un commentaire