முகப்பு

lundi 15 avril 2013

நல்லதையே நினைப்போம்.நல்லதே செய்வோம்.நல்லதே நடக்கும்.

 
 
நமது நாட்டில் இன்றும் நல்ல நாள்,கெட்ட நாள் பார்க்கிறார்கள்.ஏதேனும் திருமணம் அல்லது விழாக்கள் என்றால் சுபமுகூர்த்த தினங்களில் வைக்கிறார்கள்.அதுவும் நல்ல நேரத்தில் மட்டுமே அந்த விழாவை நடத்துகிறார்கள்.

நமது பெரியோர்கள் ஒவ்வொரு கிழமைக்கும் ஒர...ு ராசிபலன் வைத்திருக்கிறார்கள்.

1. ஞாயிறு-நாய் படாத பாடு:

சாதாரணமாக ஒரு விலங்கின் ஏதேனும் ஓர் உறுப்பு செயலிழந்தாலோ அல்லது நாம் அதனை கடுமையாக அடித்துப் போட்டாலோ சீக்கிரத்திலேயே இறந்துவிடும்.ஆனால் நாய்கள் அப்படியில்லை.நான்கு கால்களையும் இழந்த நாய் கூட ஊர்ந்து சென்றாவது தன் உணவைத் தேடிக்கொள்ளும்.

அடிப்பட்டு முகத்தையே இழந்த நாய்கள் கூட பல மாதங்கள் உயிர் வாழ்ந்ததைப் பார்த்திருக்கிறேன்.அதாவது நாய்களுக்கு அடிப்பட்டாலோ அல்லது அவைகளுக்கு உணவே கிடைக்கவில்லை என்றாலும் கூட அவைகள் சீக்கிரத்தில் சாவதில்லை.

“நாய் பட்ட பாடு” என்றால் அவை சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் துன்பப்படுவதுதான்.”நாய் படாத பாடு” என்றால் அவைகள் பட்ட துன்பங்களையும் தாண்டியது.

ஞாயிற்றுக் கிழமைகளில் ஏதேனும் ஒரு காரியத்தை தொடங்கினால் குறிப்பாக திருமணம் செய்துகொண்டால் “நாய் படாத பாடு” என்பது ஐதீகம்.

2. திங்கட்கிழமை:

திங்கட்கிழமை பொதுவாக நல்ல நாளும் இல்லை கெட்ட நாளும் இல்லை.சுபமுகூர்த்த நாளாக இருந்தால் நல்ல நாள்.அவ்வளவுதான்.இது நமக்கு அவ்வளவாக தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

3. செவ்வாய்-வெறும் வாய்:

செவ்வாய் கிழமைகளில் முதன்முதலில் ஒரு கரியத்தைத் துவக்கினால் அந்த காரியத்தால் நமக்கு எந்த அனுகூலமும் இல்லை.குறிப்பாக தொழில் தொடங்கவே கூடாது.

4. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது:

அதாவது புதன் கிழமையை வீணடிக்கக் கூடாது.நல்ல காரியங்களை புதன் கிழமைகளில் துணிந்து செய்யலாம்.

5. வியாழன்-விருந்து என்று கூட மருந்து சாப்பிடக் கூடாது:

வியாழனில் வைத்தியம் பார்த்தால் அந்த நோய் குணமாவது கடினம் என்பது ஐதீகம்.

6. மங்கள வெள்ளி:

வெள்ளிக் கிழமைகளில் செய்யும் காரியம் மங்களகரமாக முடியும்.கடுமையான வேலைகள் கூட எளிமையாக முடியும்.விடியாத காரியம் கூட விடியும்.

7. சனி போனால் தனியாக போகாது:

சனிக் கிழமைகளில் யாரேனும் இறந்தால் விரைவிலையே அவரின் குடும்பத்தில் வேறு ஒருவர் இறப்பார்.இவ்வாறாக ஒரு நம்பிக்கை உண்டு.சனிக்கிழமைகளில் வெளியூர்களுக்கு கிளம்பி சென்றால் விபத்துகள் ஏற்படலாம்.




இவ்வாறாக ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு ராசிபலன் உள்ளது.இவைகள் முன்னோர்களின் ஐதீகங்கள்.ஆனால் இதையெல்லாம் கேட்டுக்கொண்டு நாட்களை வீணடிக்காதீர்கள்.

"நலிந்தவனுக்கு நாள் கிழமை கிடையாது" என்பது பழமொழி.நலிந்தவன் என்பவன் இறைவனுக்கு முன் தன்னையே வெறுமையாக்கிக் கொள்பவன்.இறை நம்பிக்கை இருந்தால் எந்நாளையும் நல்ல நாளாக மாற்றலாம்.

நல்லவர்களுக்கு எல்லா நாளும் நல்ல நாளே.நாம் ஒரு செயலை செய்யும்போது நல்லதையே நினைத்து செய்யும்போது நல்லதே நடக்கும்.ஒவ்வொரு நிமிடமும் நல்ல நேரமாகவே இருக்கும்.

நல்லதையே நினைப்போம்.நல்லதே செய்வோம்.நல்லதே நடக்கும்.

 

Aucun commentaire:

Enregistrer un commentaire