முகப்பு

mardi 10 mai 2011

சூரியனில் ஏற்படும் தீப்பிழம்புகளால் ஆபத்து: நாசா விண்வெளி ஆய்வு

  
நாசா விண்வெளி ஆய்வு மையத்தினரால் சூரிய இயக்க கண்காணிப்பு கருவியின் மூலம் சூரியனைப் பற்றி தொடர்ந்து கண்கானிக்கப்பட்டது.
அதில் சூரியன் சுழலும் போது இருண்ட பகுதிகளுக்கும் காந்தபுலங்களுக்கும் இடையிலான செயற்பாட்டினால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சூரியனில் உருவான பெரிய சூரியப் தீப்பிழம்புகள் உருவானதாக இங்கிலாந்தின் மத்திய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியன் சுழலும் போது இருண்ட பகுதிகளின் இயக்கப்பாட்டினால் கடந்த பிப்ரவரி மாதம் பெரிய தீப்பிழம்புகள் உருவானதாகத் தெரிவிக்கப்படுகிறது. சன்ஸ்பொர்ட்ஸ் அல்லது சூரியனின் இருண்ட பகுதிகளினால் காந்தப்புல சக்தி அதிகமாக உருவாவதாக ஆய்வாளர் டேனியல் பிறவுண் தெரிவித்துள்ளார்.
எலாஸ்டிக் வயர்களை கைகளினால் இழுப்பதன் மூலம் அந்த வயர்களில் விசை சேகரிக்கப்படுவதாகவும் அவற்றை விடும் போது சக்தியுடன் செயற்படுவதாகவும், இதனையொத்த செயல்முறையே சூரியனின் இருண்ட பகுதியில் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சூரியன் சுழலும் போது இருண்ட வலயங்களில் உள்ள சக்தி சேமிக்கப்பட்டு அவை காந்தப்புல சக்திகளுடன் மோதும் போது பெரிய ஒளியுடன் தீப்பிழம்பாக உருவெடுப்பதாக அவர் தெரிவித்தார். க்ளாஸ் எக்ஸ் ரக சூரியப் பிழம்புகளே மிகவும் வலுவானவை இருக்கின்றன எனவும் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire