சிவப்பு ஒயின் குடித்தாலும் மாரடைப்பு வருவதை தடுக்க முடியாது
சிவப்பு ஒயின் குடித்தாலும் மாரடைப்பு வருவதை தடுக்க முடியாது:
சிவப்பு ஒயின் குடித்தால் இதய நோய்
பாதிப்புகள் வராது என இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆனால் அது உண்மை இல்லை என
சமீபத்தில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
ஒயின்களில் வெள்ளை, சிவப்பு என 2 வகை இருக்கின்றன. இதில் சிவப்பு ஒயின்(ரெட்
ஒயின்) உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதாகவும், இதயத்துக்கு வலுவளித்து மாரடைப்பு உட்பட
இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளிப்பதாகவும் நம்பப்படுகிறது.
இது உண்மையா என்பது குறித்து லண்டன் தொற்றுநோய் குறித்த ஆய்வு நிறுவனத்தின்
அடிக்ஷன் அன்ட் மென்டல் ஹெல்த் பிரிவு ஜுர்கென் ரெம் தலைமையில் ஆய்வு
நடத்தப்பட்டது.
மதுவும் இதய பாதிப்புகளும் தொடர்பாக நடந்த ஆய்வு குறித்து ஜுர்கென் கூறியதாவது:
தனி மனித வாழ்க்கை முறை, உணவு மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவை உடல்நலத்தை
காக்கின்றன. மது, புகையால் உடலுக்கு தீமைகள்தான் ஏற்படுகின்றன.
ஆனால் சிவப்பு ஒயின் அளவுடன் எடுத்து கொள்ளலாம். அளவுக்கு மிஞ்சினால் விஷமாகி
விடும். இதய நோய் மற்றும் மாரடைப்புக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் உணவு முறை
மற்றும் உடற்பயிற்சியே பிரதானமாக உள்ளன.
இரண்டிலும் கட்டுப்பாடு இல்லாவிட்டால் இதயநோய் மட்டுமின்றி சர்க்கரை நோய் உட்பட
பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. இதய நோய்களில் இஸ்சாமிக் ஹார்ட் டிசீஸ்
என்ற ஒரு வகை உள்ளது.
இதயத்துக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறையும் போது இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
மேற்கத்திய நாடுகளில் இத்தகைய பாதிப்பு அதிகம் உள்ளது.
இந்த வகை பாதிப்பால் அவதிபடுபவர்கள் உணவு கட்டுப்பாட்டு முறைகளை கடுமையாக
கடைபிடிக்க வேண்டும். மிகக்குறைந்த அளவுகூட சிவப்பு ஒயின் உட்பட மது வகைகளை
அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire