சுவர்க்கத்திற்குள் வழி தடுமாறி நுழைந்த ஒருவன் அங்கிருக்கும் கற்பக மரத்தின் கீழ் உறங்கினான். அவன் கண்களை விழித்ததும் பசிக்கிறதே என்று எண்ணினான் உடனே நல்ல உணவு வந்தது. தாகமாக இருக்கிறதே என்றான் உடனே கேட்டதைக் கொடுக்கும் கற்பக மரம் நல்ல பழரசத்தைக் கொடுத்தது. பின் இதையெல்லாம் தருவது யார்? ஏதாவது பேய்களாக என்று நினைத்தான். பேய்கள் அங்கே வந்து ஆடின. உடனே இந்தப் பேய்கள் என்னைக் கொன்றால் என்ன செய்வதென நினைத்தான், பேய்கள் அவனை அடித்துக் கொன்றன. அவனுடைய நினைப்பே அவனுக்கு மரணத்தைக் கொடுத்தது. கேட்டதைக் கொடுக்கும் கற்பகதரு என்பது தேவலோகத்தில் இல்லை உங்கள் மனதிலேயே இருக்கிறது. மனதால் கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்.
சிந்தித்து பாருங்களேன்..
வரிக்கு வரி புரட்சிவசனம் எழுதி மொழிவடிவில்
வடித்துவிட்டதை தவிர வேறென்ன கண்டது நம் தமிழினம்? பக்கத்து வீட்டில் குழந்தை பால்
இல்லை என அழும் சத்தம் கேட்டாலும் திரும்பிப்பாக்காது.. தன் பிள்ளைக்கு பல ஆயிரம்
செலவழித்து பிறந்த நாள் கொண்டாடும் இனம்தானே இப்போது நம் இனம்!! நிச்சயமாக காலம்
மாறும்தான்.. ஆனால் நம் இனம் மாறுமா??? சிந்தித்து பாருங்களேன்..
Aucun commentaire:
Enregistrer un commentaire