முகப்பு

mercredi 28 octobre 2015

காற்றுக்கு பெயர்கள் !!!



    காற்றுக்கு பெயர்கள் !!!
    தெற்கிலிருந்து வீசினால் --தென்றல்
    வடக்கிலிருந்து வீசினால் --வாடை
    கிழக்கிலிருந்துவீசினால் ---கொண்டல்
    மேற்கிலிருந்து வந்தால் ---மேலை...
    திசை பொருத்து காற்றின் பெயர்கள்:
    (1) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
    (2) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
    (3) கிழக்கிலிருந்துவீசுவது கொண்டல்க் காற்று
    (4) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று
    காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:
    (1) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று"
    (2) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்"
    (3) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்"
    (4) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று"
    (5) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று"
    (6) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று"
    (7) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயற்காற்று"
    (8) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக் காற்று"

      இலங்கையில் வடக்கில் இருந்து வீசும் காற்றை வாடை,தெற்கில் இருந்து வீசும் காற்றைச் சோழகம், கிழக்கில் இருந்து வீசும் காற்றைக் கொண்டல், மேற்கில் இருந்து வீசும் காற்றை கச்சான் எனவும் எந்தப்பக்கம் இருந்து வீசினாலும் மென்மையாக காற்றைத் தென்றல் எனவும் அதே காற்று பலமாக அடிக்கும் போது புயல் எனவும் சுழட்டி அடித்தால் சூறாவளி எனவும் குறிப்பிடுவர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire