வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க இலகுவான வழி
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க இலகுவான வழி
இந்த உலகில் யாராவது மகிழ்ச்சியாக இருப்பதை விரும்பாமல் இருப்பார்களா என்றால் அது உண்மையாக இருக்காது. ஏனெனில் மகிழ்ச்சிதான் வாழ்க்கையை இன்னும் பிரகாசமாக்குகிறது.
திருப்தியான வாழ்க்கையை வாழ்பவர்கள் ஏனையவர்களை விடவும் நீண்டகாலம் வாழ்கின்றார்களென்றும் குற்றங்களைச் செய்வது குறைவாக உள்ளதென்றும் உறவுகளை வளர்க்கவே அவர்கள் விரும்புகின்றார்களென்றும் ஓர் ஆய்வு கூறுகின்றது.
மகிழ்ச்சிதான் ஒரு நாட்டின் சொத்து. மகிழ்ச்சியானவர்கள் நீண்டகாலம் வாழ்ந்தால் அவர்களால் அதிகளவு பயன் கிடைக்கும். அது நாட்டிற்கும் வளர்ச்சியாக இருக்கும்.
ஆனால் முழு நேரமும் மகிழ்ச்சியாக இருப்பது சாத்தியமா என்று ஒருவர் கேட்கலாம். ஒருவர் தனது மனத்தினை மாற்றிக்கொண்டால் அதைச் சாத்தியமாக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
ஒரு பெண் முதலில் தனது சிகிச்சைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். பின்னர் தன்னை ஒருவாறு மாற்றிக்கொண்டார். உண்மையில் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவர் ஒருவருக்கும் வேதனையான சம்பவங்கள் இடம்பெறலாம். அதனை நாங்கள் தடுத்து முன்னேறி வரவேண்டும்.
ஒரு கிரேக்கத் தத்துவாசிரியர் சொல்வதுபோல விடயங்கள் எங்களைக் குழப்புவதில்லை. நாங்கள் அவ்விடயங்களைப் பார்க்கும் கோணந்தான் குழப்புகின்றது என்றார்.
இதுபோலவே அப்படியாயின் மக்களோ நிகழ்வுகளோ எங்களை மகிழ்ச்சிப்படுத்தாது என்று பதிலுக்கு ஒருவர் கேட்கலாம். ஆம் மகிழ்ச்சிதான் எங்களது செயலையும் தெரிவுகளையும் செயற்படுத்துகின்றது.
ஒருவர் எங்களில் அன்புசெலுத்தும்போது அல்லது ஒரு பதவியுயர்வு வரும்போது அவை எங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தருகின்றது. இவ்வாறான நன்மைபயக்கும் செயற்பாடுகள் இடம்பெறும்போது இயற்கையாகவே எமக்கு மகிழ்ச்சியேற்படுகின்றது.
ஆனால் இவை எவற்றையும் நாங்கள் எங்களது திருப்திக்கான முக்கிய நிகழ்வுகளாகக் கருதினோமானால் அவை எப்போதும் எங்களது வாழ்க்கையிலிருந்து காணாமற்போய்விடும்.
ஒருவரது மூளை 25 வயதில் முழுவதும் வளர்ச்சியடைந்துவிடும். அதன் பின்னர் அதனால் வளரவோ வளர்ச்சியடையவோ முடியாது. ஆனால் நரம்பியலில் ஏற்பட்ட அபிவிருத்தியால் மூளையால் புதிய நரம்புத்தொடர்புகளை உருவாக்க முடியுமெனக் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் ஒருவர் ஏதோவொன்றை மகிழ்ச்சியாக நினைக்கும்போது மூளையும் அந்த மகிழ்ச்சியினைப் பதிந்து இன்னும் செயற்றிறன் மிக்கதாகின்றது. நாங்கள் மகிழ்ச்சியாக எதை நினைக்கின்றோமோ அதுவே மூளையின் திறனையும் அதிகரிக்கின்றது.
ஒருவரது மகிழ்ச்சியை ஒரு குறிப்பேட்டில் பதிந்துவரும்போது அது இன்னும் அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றார் ஓர் இத்தாலிய மனோதத்துவவியலாளர். இந்த முறையைத் தான் தனது நோயாளிகளிடம் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
தன்னிடம் வந்த ஒரு தனிமையால் வாடிய பெண்நோயாளியிடம் தான் அவரது வேதனையான நினைவுகள் வரும்போதெல்லாம் நல்ல சம்பவங்களை நினைவுபடுத்தி ஒரு குறிப்பேட்டில் எழுதும்படி கூறியதாகவும் சிறிதுகாலத்தில் தனிமையில் வாடிய அந்தப் பெண் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தனக்கேற்ற ஒருவரைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் கூறினார்.
இதனால் வேதனைகளும் சோதனைகளும் தம்பாட்டில் வந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் அவற்றை நாம்தான் மகிழ்ச்சியானவையாக்க முயற்சியெடுக்கவேண்டும். இந்தப் பெண் முயன்றதால்தான் அவருக்கு நல்லதொரு வாழ்க்கை கிடைத்தது.
Aucun commentaire:
Enregistrer un commentaire