உடலில் நோய் எப்போது ஏற்படுகிறது?
உடலில் நோய் எப்போது ஏற்படுகிறது?
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது நோய்க்கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. ஊட்டசத்துக்குறைவினாலும் நோய்கள் ஏற்படுகின்றன.
நம் உடலில் நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் சில பலகீனமான உடலமைப்பு, மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள், அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய சூழலில் வாழ்வது, மது, போதைப் பொருள் பழக்கம், புகைப்பழக்கம், தூக்கமின்மை, சர்க்கரை நோய் இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை இல்லாமல் செய்கிறது.
இந்த எதிர்ப்பு சக்தி பிறக்கும் போதே ஒருவரது உடலில் அமைவது. மனித உடலுக்கு தோல் எப்படி ஒரு மிகப் பெரிய தடுப்பு சுவர் போல் உள்ளதோ, அதைப் போலவே மூக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக்கவசம் போல் செயல்படுகின்றன. இந்த கவசங்கள் நம்மை நோய் கிருமிகளிடம் இருந்து காப்பாற்றக் கூடியவை. அடுத்தபடியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக்கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடியவைகளான வெள்ளை அணுக்கள் உள்ளன. இவைகள் தூங்காத படை வீரனைப் போல் நம் உடலுக்குள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளாகும். இரண்டாவது வகையான எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, ஒவ்வொரு பாக்டீரியாக்களுக்கு தகுந்தவாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது லிம்போ டைடஸ் என்ற ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள். மூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படும் போது, இன்னொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாக பெறுதல்.
உதாரணமாக தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்புசக்தி தற்காலிகமாக கிடைக்கிறது. மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டனஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்க வைக்கும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire