- ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லை. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள்.ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்...தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர். மூவரும் வீடு திரும்புகிறார்கள்.கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.
கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். “அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?”
அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு, “நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை” எனச் சொல்கிறான்.
வீரன் மகனிடம், “பின் யார் அப்பா?” எனக் கேட்கிறான்.
“தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்” என்றான் மகன்.
வீரனுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது. மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.
மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் தூங்கச் செல்லும் போது, தந்தையின் நிழலைக் காண்பித்து மகன், “இதோ என் அப்பா” என்றான்.
திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் 'இது யார்?' என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள், இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.
வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.
இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம். மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும்.
ஆனால் கணவன் தன் மனைவியின் மேல் சந்தேகப்பட்டு வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது, 'ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?' என்று கேட்டு அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள்.
வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் ஒரு குடும்பமே தகர்ந்து போனது.
எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பான அர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.
வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம் வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது. saveiour@gmail.com
jeudi 13 octobre 2016
திருமணம்
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire