முகப்பு

jeudi 13 octobre 2016

திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்?


  1. திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்?
    சம்ஸ்கிருதத்தில் இதை'சப்தபதி'
    என்று கூறுவார்கள்.
    ...
    அதாவது
    ஏழுஅடிகள்மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேர்ந்து நடந்து வருவதாகும்.
    அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன்உனக்குதுணையிருப்பான்என்றுகீழ்கண்டவாறுத‌னதுபிரார்த்தனையைச்சொல்கிறான்!
    "முதல் அடியில்: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்"
    "இரண்டாம் அடியில்: ஆரொக்கியமாக வாழ வேண்டும்"
    "மூன்றாம் அடியில்: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்"
    "நான்காவது அடியில்: சுகத்தையும் , செல்வத்தையும் அளிக்க வேண்டும்"
    "ஐந்தாவது அடியில் : லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்"
    "ஆறாவது அடியில்: நாட்டில் நல்ல பருவங்கள்நிலையாக தொடர வேண்டும்"
    "ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும்"
    என்றுபிராப்திப்பதாகசொல்லப்படுகிறது.
    இந்தசம்பிரதாயத்தில்மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூக்ஷமமான மனோவியல்விசயத்தை இந்து தர்மத்தில் உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.
    இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சினேகிதம்உண்டாகும் என்பது சாஸ்திரம்.
    உதாரணமாக நாம் சாலையில் நடக்கும் போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள்.
    ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களைவேகமாகதாண்டிவிடுவோம் அல்லது அவர்களைமுன்னே போகவிட்டுவிடுவோம்.
    முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம்.
    இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குளாக நடந்து விடும் என்பது ஒரு சூக்ஷமமான விஷயம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire