இறந்த பிறகு உடலுக்கு என்ன மதிப்பு?
அசோக மாமன்னர் தனது தேரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, எதிரே ஒரு துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும், தேரிலிருந்து இறங்கி வந்து, அவர் காலில் விழுந்தார். அதைக் கவனித்த அவரது தளபதிக்கு, மாமன்னர் ஒரு பரதேசியின் காலில் விழுவதா என்று வருத்தம் ஏற்பட்டது. அதை அரண்மனைக்கு வந்ததும் மன்னரிடமே வெளிப்படுத்தினார் தளபதி. மன்னரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல், ஓர் ஆட்டுத்தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை ஆகிய மூன்றும் உடனே வேண்டும் என, ஒரு வினோதமான ஆணையிட்டார். மூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டன. அசோகர் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் சொன்னார். ஆட்டுத்தலை உடனே விலை போயிற்று. புலித்தலையை வாங்கப் பலரும் யோசித்தனர். இறுதியில், ஒரு வேட்டைக்காரர், தன் வீட்டுச் சுவற்றில் பாடம் பண்ணித் தொங்கவிட வாங்கிச் சென்றார். ஆனால், மனிதத் தலையைக் கண்டு, எல்லாரும் அஞ்சிப் பின்வாங்கினர். முகம் சுழித்து ஓடினர். ஒரு காசுக்குக்கூட யாரும் வாங்க முன்வரவில்லை. விபரங்களை மன்னரிடம் சொன்னபோது, மனிதத் தலையை யாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிடச் சொன்னார் மன்னர். இலவசமாக வாங்கக்கூட யாரும் தயாராயில்லை. இப்போது மாமன்னர் அசோகர் சொன்னார், “தளபதியே, மனிதன் இறந்துவிட்டால் அவன் உடல் ஒரு காசுகூடப் பெறாது. இருந்தும் இந்த உடல், உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் போடுகிறது? இறந்த பிறகு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரிகிறது. உடலில் உயிர் இருக்கும்போதே, தங்களிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் ஞானிகள். அத்தகைய ஞானிகளை, பாதத்தில் விழுந்து வணங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?” என்று. தளபதிக்கு இப்போது புரிந்தது

Aucun commentaire:
Enregistrer un commentaire