'பிறருக்குக் கொடுத்து வாழ்பவர்களை ஆனந்தம் நிழல் போல தொடரும், எப்போதுமே நீங்காது' சுயநலம் துறந்தால் கர்வம் நம்மை விட்டுக் கடந்து போய்விடுகிறது!
சுயநலமற்ற அன்பு தாயன்பு போல தூய்மையானது!
உணவு பற்றாத போது 'என்னமோ தெரியலை இன்னிக்குப் பசிக்கல' என பொய் சொல்லிவிட்டுப் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டும் அன்பு தாயன்பு!
தனக்குக் கிடைக்கும் ஒரே ஒரு சாக்லேட்டையும் குழந்தைக்குக் கொடுத்து மகிழும் அன்பு தாயன்பு!
தன்னிடமிருக்கும் கடைசிச் சொட்டு வலிமையையும், வசதியையும் பிள்ளைகளுக்குத் தாரை வார்க்கும் தாயன்பு.
இதைவிட புனிதமான ஒரு உதாரணத்தை சுயநலமற்ற அன்புக்காய் காட்ட முடியுமா?
'அடுத்தவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என நாம் நினைக்கும் எதுவும் நமக்குக் கிடைக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது'
சுயநலமற்ற ஒவ்வோர் செயலும் இன்னொரு நபருடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தையும், உற்சாகத்தையும் கொண்டு வரும். அந்த செயல் பல்கிப் பெருகி பூமியை நிரப்பும்.
ஒவ்வொரு செயலைச் செய்யும் போதும், 'இது எனது சுயநல எண்ணத்தின் வெளிப்பாடா?' எனும் ஒரு கேள்வியைக் கேட்டாலே போதும். உங்களுடைய செயல்களிலிருந்து சுயநலம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியேறத் துவங்கும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire