முகப்பு

dimanche 16 août 2015

தகுதிக்கேற்ப செயல்படுங்கள்

தகுதிக்கேற்ப செயல்படுங்கள்
ஒரு காட்டுப்பன்றி தற்பெருமை மிக்கதாக இருந்தது. காட்டிலுள்ள மரங்களைப் பார்த்த அந்தப் பன்றி, “”இந்த மரங்கள் எவ்வளவு உயரமாக இருக்கின்றன. இவற்றைப் போல என்னால் வளர்வதென்பது முடியாத காரியம். ஆனால், இந்த மரங்களை என்னளவுக்கு குறுக்கி விட்டால் என்ன என்று கணக்குப் போட்டது. ஒவ்வொரு மரத்தின் மீதும் தாவிக்குதித்து மேலே ஏறி, கிளைகளின் மீது நின்று அவற்றை ஒடித்துத்தள்ள முயன்றது.
கிளைகள் வளைந்ததே தவிர ஒடியவில்லை. பன்றிக்கோ கடும் கோபம். இந்த மரங்கள் இங்கே நின்றால் தானே உயரம் பற்றிய கவலை! இவற்றின் மீது முட்டி மோதினால் மொத்த மரங்களும் சாய்ந்து போகுமே என்று முட்ட ஆரம்பித்தது. மரம் சாயுமா என்ன! பன்றிக்கு தான் உடம்பெல்லாம் காயம். ரத்தம் வழிந்தது.
ஒரு கட்டத்தில், தன் முயற்சியில் தோல்வியுற்று, ரத்தம் அதிகமாக வெளியேறி பன்றி இறந்தே போனது. இது மாதிரி தான், யாரைப் பார்த்தாலும் அவர்கள் கருத்துக்கு எதிர்கருத்து பேசி, தங்கள் மூக்கை உடைத்துக் கொள்பவர்களாய் இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும், யாரைப் பார்த்தாலும் மோதல் என்ற போக்கை கைவிடுங்கள்.
அவர்களைப் போல உயர வேண்டும் என்பதற்காக பொறாமையுடன், நீங்களும் செய்ய முயலாதீர்கள். கடவுள் நமக்கு என்ன தகுதியைக் கொடுத்திருக்கிறானோ, அதற்கேற்ப செயல்படுவதே வெற்றியளிக்கும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire