பக்கத்து வீட்டு பொண்ணுக்கு சமீபத்துல தான் கல்யாணம் ஆச்சு.
ஒரே பொண்ணு …
பொண்ணுக்கு நகை நட்டு, சீர் செனத்தின்னு பணத்தை தண்ணியா செலவழிச்சி கல்யாணத்தை நடத்துனாங்க.
நேற்று அந்தப் பெண்ணின் தகப்பனாருடன் பேசிக்கொண்டிருந்த போது,
“உங்க பொண்ணுக்கு ரொம்ப பிரமாண்டமா கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க … மொத்தம் எவ்வளவு செலவு பண்ணியிருப்பீங்க?” என்று கேட்டேன்.
“30 லட்ச ரூபாய் வரைக்கும் செலவு ஆகிடுச்சி தம்பி” என்றார் அவர்.
“பொண்ணு மாப்பிள்ளையெல்லாம் சந்தோசமா இருக்காங்களா? … மாப்பிள்ளைக்கு நீங்க செஞ்சதெல்லாம் திருப்தியா இருக்காமா? … அது வேணும் இது வேணும்னு வேற எதுவும் கேட்கலியே?”
“எம் பொண்ணு எதுவும் கேட்கல … மாப்பிள்ளைதான் ஒண்ணே ஒண்ணு கேட்டிருக்கார்”
“என்னது??”
“50 லட்ச ரூபாய் தர்றேன்… என்னைக் காப்பாத்துங்க மாமான்னு …கெஞ்சறார்”

Aucun commentaire:
Enregistrer un commentaire