முகப்பு

lundi 31 août 2015

thappu




செய்யும் வரை...!



நமக்கு வரும்வரை, வலி புரிவதில்லை
ஒருமுறை செல்வந்தர் ஒருவரின் வீட்டின் தொலைபேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது.
'நான் நம்ம வீட்டு தொலைபேசியை பயன்படுத்துவதே இல்லை. எல்லாவற்றிற்கும் அலுவலத் தொலைபேசியைத்தான் பயன்படுத்துவேன். ஆனாலும் இவ்வளவு தொகை வந்திருக்கு. யார் இதற்கு காரணம்?' என்று யோசித்துக் கொண்டு தன் மனைவியிடம் கேட்டார் குடும்பத் தலைவர்.
'நானும் அலுவலகத் தொலைபேசியை மட்டுமே பயன்படுத்துகிறேன். எனக்குத் தெரியாது' என்று அவர் மனைவியும் கூறிவிட்டு, மகனிடம் கேட்குமாறு கூறினார்.
’நான் வீட்டு தொலைபேசியைத் தொடுவதே இல்லை. எனக்கு அலுவலகம் கொடுத்திருக்கும் கைத்தொலைபேசியில்தான், நண்பர்களிடம்கூட பேசுவேன் என்றார் மகன்.
‘நாம் யாரும் பயன்படுத்தலைன்னா எப்படி இவ்வளவு கட்டணம் வந்துள்ளது’ என தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அந்த வீட்டு வேலைக்காரரோ, 'ஐயா, நானும் உங்களைப்போல் எப்போதும் நான் வேலை செய்யும் இடத்திலுள்ள என்னோட அலுவலகத் தொலைபேசி மட்டுமே பயன்படுத்துகிறேன்' என்றார்.
அந்தக் குடும்ப உறுப்பினர்கள் செய்வதைத்தான் அவரும் செய்திருக்கிறார்.
சில நேரங்களில் நாம் செய்யும் தவறு நமக்குப் புரிவதே இல்லை, வேறொருவர் நமக்கு அதை செய்யும் வரை...!

jeudi 27 août 2015

ஏதும் விசேஷம் உண்டா…?

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டை காட்டி ” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.
… கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.
பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர்.
அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார் அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.
அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.
இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும். ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்” என்றார்.

என்னடா முனியா நான் ஊர்ல இல்லாதப்ப ஏதும் விசேஷம் உண்டா…?
பெருசா ஒன்னும் இல்லீங்க நம்ம நாய் செத்துப்போச்சு.­..
அடக்கடவுளே எப்படிடா திடீர்ன்னுசெத்துச்சு…?
கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடுச்சுங்க­….
மாட்டுக்கறி எங்கடா கிடைச்சது அதுக்கு…?
நம்ம வீட்ல தாங்க…
நாம தான் மாட்டுக்கறி திங்கிறதில்லையே ­…!!?
நெருப்புல அவிஞ்சி போன மாடு மூணு நாலா கிடந்து கெட்டுப்போச்சுங்க. அதைத்தான் நாய் தின்னிடுச்சு…­.
நம்ம மாடா…?
ஆமாங்க…
அய்யய்யோ….!! எப்படிடா எரிஞ்சி போச்சு..!?
நம்ம வீடு எறியும் பொது நெருப்பு பறந்து மாட்டுக்கொட்டகை யில் விழுந்துரிச்சு. ­…
வீடு எப்படிடா எரிஞ்சது….?
குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்சுங்க..­..
குத்து விளக்கு ஏத்துற பழக்கமே நம்ம வீட்டுல கிடையாதேடா…!
அதுக்காக… செத்தவங்க தலைக்கு விளக்கு வைய்க்காம இருக்க முடியுமா…?
யார்ரா செத்தது…?
உங்க அம்மா…
எப்படிடா செத்தாங்க…?
தூக்கு போட்டுக்கிட்டு. ­..
ஏன்டா…?
அவமானத்தில்தான் ­…
என்னடா அவமானம்…?
வீட்டுல இருக்குற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித்துப்பாதா.­..?
ஓடிப்போனது யாருடா…?
உங்க பொண்டாட்டிதான்.­.

kathavu


varumai


tamil


lundi 24 août 2015

வாழ்க்கையில் ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடத்தை புரியவைக்கும்,


வாழ்க்கையில் ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடத்தை புரியவைக்கும்,
உனக்குள் உள்ள உனது பலத்தை உனக்கு புரியவைக்கும்
உனது பலவீனத்தை உனக்கு தெரியவைக்கும்…
நல்ல அனுபவம் கிடைக்கும் போது பரவசப்படனும்…
மோசமான அனுபவம் கிடைக்கும் போது பக்குவப்படனும்…(sountha manuel)

நேசிப்பது இல்லை



உன் அருகில் இருப்பவர்கள் எல்லோரும் உன்னை நேசிப்பது இல்லை..
உன்னை நேசிப்பவர்கள் எல்லோரும் உன் அருகில் இருப்பது இல்லைsountha manuel

தேங்காய்



தேங்காய் உடைக்கிறார்கள் வாழ்க்கை சிதறிப் போகமலிருக்க!
தேங்காய் பொறுக்குகிறார்கள்… வாழ்க்கையில் சிதறிப் போனவர்கள்.....sountha

lundi 17 août 2015

மனிதனை பற்றிய சில உண்மைகள்




* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது
மாதத்திலிருந்துஉரு வாகின்றன.
* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள்ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.
* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும்40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.
* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.
* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால்அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.
* 60 வயதாகும்போது நாக்கின் சுவைமொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.
* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.
* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.
* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.
* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.
* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.
* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.
* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.
* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.
* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.
நமக்குள் நடக்கும் 18 அதிசியங்கள்!
1. வளர்ந்த மனித உடலில் 600 தசைகள். நூற்றுக்கும் மேலான இணைப்புகள். ஒரு லட்சம் கிலோமீட்டர் நீளம் உள்ள இரத்தக் குழாய்கள் 13000 மில்லியன் உயிரணுக் களும் உள்ளன.
2. மனிதனுக்குள்ள 206 எலும்பு களில் பெரும்பாலானவை கைகளிலும் கால்களிலும் உள்ளன.
3. ஆண்களில் விந்துவை உண்டாக்கும் விரை (விந்தகம்) நாள் ஒன்றுக்கு 10 மில்லியன்வரை விந்து உயிரணுக்களை உற்பத்தி செய்யும். இவை அப்படியே உயிருடன் ஆறு மாத காலம் இருந்தால் மற்றொரு உலக ஜனத்தொகையை உருவாக்கக்கூடும்.
4. மனித இதயம் ஒரு இயல்பான வாழ்நாளில் 2000 மில்லியன் முறை துடிக்கும். இந்த கால கட்டத்தில் 500 மில்லியன் இரத்தத்தை பம்ப் செய்யும். மனிதன் தூங்கும்போது கூட இதயம் ஒரு மணி நேரத்தில் சுமார் 340 லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்யும். ஒரு நாளைக்கு 1 லட்சம் முறைதுடிக்கும்.
5. இளைஞனின் நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 70 லிருந்து 72 முறை. ஆனால் இளம் பெண்ணின் நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 78 லிருந்து 82 முறைஇருக்கும்.
6. மனிதனின் சிறுநீரகத்தில் ஒரு மில்லியன் வடி கட்டிகள் இருக்கின்றன. அவை ஒரு நிமிடத் திற்கு 1.3 லிட்டர் இரத்தத்தை வடிகட்டுகின்றன. அந்த வடிப்பில் ஏற்பட்ட கழிச்சலை சிறுநீரகம் வெறியேற்றுகின்றன.
7. மனித உடலில் உள்ள இரத்தத்தை நிமிடத்திற்கு 4.5 லிட்டர் விகிதம் நுரையீரலில் சுத்தப் படுத்தும்.
8. மனித உடலில் சிவப்பணுக்களை எலும்புச் சோறு (எலும்பின் மச்சை) தயாரிக்கிறது. அந்த அணுக்கள் 100லிருந்து 120 நாட்கள் வாழ்கின்றன. மனித வாழ்வில் சுமார் அரை டண் சிகப்பணுக்கள் தயாராகும்.
9. ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் 50 டண் உணவை சாப்பிடுகிறான். 50 ஆயிரம் லிட்டர் திரவத்தை குடிக்கிறான்.
10. நாம் தினமும் கண் இமை களை திறக்கவும் மூடவும் செய்கிறோம் அல்லவா? இந்த செயல் 6 வினாடிக்கு கொருமுறை நடக்கிறது. அதன்படி இந்த சிமிட்டலை நாம் நம்முடைய வாழ் நாளில் 250 மில்லியன் முறை (25 கோடிமுறை) செய்கிறோம்.
11. மனிதனுக்கு 15 வயது வரையில்தான் மூளை வளரும்.
12. சாதாரண மனிதனின் தலையில் 10 ஆயிரம் ரோமங்கள் உள்ளன.
13. ஒரு விஞ்ஞானி, மனிதனின் மரணத்திற்கு சில நொடிகளுக்கு முன்பு இருந்த எடையும் மரணமடைந்த உடனே இருந்த எடையும் ஒப்பிட்டு பார்த்து 21 கிராம் குறைவாக இருந்ததை அறிந்து அதன்மூலமாக ஜீவான்மாவின் எடை 21 கிராம் என்று நிரூபித்தார்.
14. நாம் ஒரு நிமிடத்திற்கு சுமார் 25 முறை கண் இமை களை மூடி திறக்கிறோம்.
15. ஒரு ஆரோக்கியமான மனிதன் ஒரு நாளில் (24 மணிகளில்) 23000 முறை மூச்சிழுப்பான்.
16.பெரும்பாலோர் இரவுத் தூக்கத்தில் 40 முறை அப்படியும் இப்படியும் புரளுவார்கள்.
17. மனித உடலில் உள்ள அனைத்து இரத்தக் குழாய்களை வரிசையாக இணைத்தால் மொத்தம் ஒரு லடசம் கி.மீ நீளத்திற்கு சேரும். அந்த நீளம் பூமத்திய ரேகையை நான்கு தடவை சுற்றிவரக்கூடும்.
18. மனிதன் மனமார சிரிக்கும் பொழுது 17 தசை களும், கோபப்படும்பொழுது 43 தசைகளும் சுருக்கமடைகின்றன.

dimanche 16 août 2015

ஓடிப்போனது யாருடா…?



என்னடா முனியா நான் ஊர்ல இல்லாதப்ப ஏதும் விசேஷம் உண்டா…?
பெருசா ஒன்னும் இல்லீங்க நம்ம நாய் செத்துப்போச்சு.­..
அடக்கடவுளே எப்படிடா திடீர்ன்னுசெத்துச்சு…?
கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடுச்சுங்க­….
மாட்டுக்கறி எங்கடா கிடைச்சது அதுக்கு…?
நம்ம வீட்ல தாங்க…
நாம தான் மாட்டுக்கறி திங்கிறதில்லையே ­…!!?
நெருப்புல அவிஞ்சி போன மாடு மூணு நாலா கிடந்து கெட்டுப்போச்சுங்க. அதைத்தான் நாய் தின்னிடுச்சு…­.
நம்ம மாடா…?
ஆமாங்க…
அய்யய்யோ….!! எப்படிடா எரிஞ்சி போச்சு..!?
நம்ம வீடு எறியும் பொது நெருப்பு பறந்து மாட்டுக்கொட்டகை யில் விழுந்துரிச்சு. ­…
வீடு எப்படிடா எரிஞ்சது….?
குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்சுங்க..­..
குத்து விளக்கு ஏத்துற பழக்கமே நம்ம வீட்டுல கிடையாதேடா…!
அதுக்காக… செத்தவங்க தலைக்கு விளக்கு வைய்க்காம இருக்க முடியுமா…?
யார்ரா செத்தது…?
உங்க அம்மா…
எப்படிடா செத்தாங்க…?
தூக்கு போட்டுக்கிட்டு. ­..
ஏன்டா…?
அவமானத்தில்தான் ­…
என்னடா அவமானம்…?
வீட்டுல இருக்குற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித்துப்பாதா.­..?
ஓடிப்போனது யாருடா…?
உங்க பொண்டாட்டிதான்.­.

ஏன் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை….?


ஏன் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள்
பெறுவதில்லை….?
அது மாணவர்களின் தவறு கிடையாது,
அவர்களுக்கு படிப்பதற்கு நேரமே கிடைப்பதில்லை..
வருடத்தில் 365 நாட்கள் மட்டுமே உள்ளது ஒரு பெரிய
குறை..
உதாரணத்திற்கு ஒரு மாணவனின் ஒரு கல்வி ஆண்டை எடுத்துக்கொள்வோம்..
1.ஒரு வருடத்திற்கு 52 ஞாயிற்றுகிழமைகள்..
மற்ற நாள்கள் 313 (365-52=313)
2.கோடை விடுமுறை 50. ரொம்ப வெப்பமான காலம் என்பதால் படிப்பது கஸ்டம்.
மீதி 263 நாள்கள் (313-50=263).
3. தினமும் 8 மணி நேரம் தூங்கும் நேரம் என்பதால்
(கூட்டினால் 122 நாட்கள் வருகிறது).
மீதி 141 நாட்கள் (263-122=141).
4. 1 மணி நேரம் விளையாட்டு நேரம் வளரும் பசங்களுக்கு நல்லது. நாள் கணக்கு படி 15 நாள்.
மீதி 126 நாட்கள் (141-15=126).
5. 2 மணி நேரம் சாப்பாட்டு நேரம் . நன்றாக மென்று சாப்பிடு என்று அறிவுறுத்தப்படுவதால் 30 நாள்கள்.
மீதி 96 நாட்கள் (126-30=96).
6. 1 மணி நேரம் பேசியே கழிக்கிறோம்.
நிறைய பேசினால் நிறைய கத்துகலாம். 15 நாள் வருகிறது.
மீதி 81 நாட்கள் (96-15=81).
7. ஒரு வருடத்திற்கு 35 நாட்கள் தேர்வு எழுதியே கழிப்பதால் , மீதி 46 நாட்கள்
(81-35=46).
8. காலாண்டு,அரையாண்டு, பண்டிகை தினம் விடுமுறைகள் 40 நாட்கள்..
மீதி 6 நாட்கள்(46-40=6).
9. உடம்பு சரியில்லாமல் எடுக்கும் விடுப்பு குறைத்தது
3 நாட்கள். மீதி 3 நாட்கள் (6-3=3).
10. சினிமா, உறவினர் திருமணம்,விழாக்கு 2
நாள் போய்விடும். மீதி ஒரு நாள்
(3-2=1).
11. அந்த ஒரு நாளும் அந்த பையன் பிறந்த நாள்..
பின்ன எப்படி தேர்வில் அதிக மதிப்பெண்கள்
பெறமுடியும்….?

தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்”


200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டை காட்டி ” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.
… கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.
பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர்.
அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார் அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.
அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.
இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும். ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்” என்றார்.

தகுதிக்கேற்ப செயல்படுங்கள்

தகுதிக்கேற்ப செயல்படுங்கள்
ஒரு காட்டுப்பன்றி தற்பெருமை மிக்கதாக இருந்தது. காட்டிலுள்ள மரங்களைப் பார்த்த அந்தப் பன்றி, “”இந்த மரங்கள் எவ்வளவு உயரமாக இருக்கின்றன. இவற்றைப் போல என்னால் வளர்வதென்பது முடியாத காரியம். ஆனால், இந்த மரங்களை என்னளவுக்கு குறுக்கி விட்டால் என்ன என்று கணக்குப் போட்டது. ஒவ்வொரு மரத்தின் மீதும் தாவிக்குதித்து மேலே ஏறி, கிளைகளின் மீது நின்று அவற்றை ஒடித்துத்தள்ள முயன்றது.
கிளைகள் வளைந்ததே தவிர ஒடியவில்லை. பன்றிக்கோ கடும் கோபம். இந்த மரங்கள் இங்கே நின்றால் தானே உயரம் பற்றிய கவலை! இவற்றின் மீது முட்டி மோதினால் மொத்த மரங்களும் சாய்ந்து போகுமே என்று முட்ட ஆரம்பித்தது. மரம் சாயுமா என்ன! பன்றிக்கு தான் உடம்பெல்லாம் காயம். ரத்தம் வழிந்தது.
ஒரு கட்டத்தில், தன் முயற்சியில் தோல்வியுற்று, ரத்தம் அதிகமாக வெளியேறி பன்றி இறந்தே போனது. இது மாதிரி தான், யாரைப் பார்த்தாலும் அவர்கள் கருத்துக்கு எதிர்கருத்து பேசி, தங்கள் மூக்கை உடைத்துக் கொள்பவர்களாய் இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும், யாரைப் பார்த்தாலும் மோதல் என்ற போக்கை கைவிடுங்கள்.
அவர்களைப் போல உயர வேண்டும் என்பதற்காக பொறாமையுடன், நீங்களும் செய்ய முயலாதீர்கள். கடவுள் நமக்கு என்ன தகுதியைக் கொடுத்திருக்கிறானோ, அதற்கேற்ப செயல்படுவதே வெற்றியளிக்கும்.