முகப்பு

jeudi 25 septembre 2014

"கஞ்சன்"



இது ஒரு நகைச்சுவை கதை அவ்வளவு தான், ஏன்னா நீங்க சிரிக்கனுமில்ல அதான்...முன்னாடியேவும்...
ஒரு ஊரில் மிகப்பெரிய "கஞ்சன்" இருந்தான், அவனுடைய தொழில் பெருங்காயம் வாங்கி விற்பனை செய்வது. அவனுக்கு ஒரு மகனும் இருந்தான். எப்பொழுது பார்த்தாலும் மகனை நீ கொஞ்சம் கூட கஞ்சத்தனமாக இல்லை என்று திட்டிக் கொண்டேயிருப்பான். ஆனாலும் மகன் அப்பாவிடம் பெயர் எடுக்கவேண்டும் என்று முயற்சி செய்து கொண்டே இருந்தான்.
அதற்கு ஏற்றார் போல, அவருடைய அப்பாவும் வேலையின் காரணமாக வெளியூர் சென்று விட்டார். அந்த நேரம் பார்த்து பெருங்காய மூட்டைகள் பெருமளவில் வந்து இரங்கின. அதை இவன் இறக்க வேண்டியதாகி விட்டது. இறக்கும் பொழுது கைகளிலெல்லாம், பெருங்காயம் பெருமளவு ஒட்டிக் கொண்டது. கை கழுவச் சென்ற நேரத்தில் அவனது அம்மா, பருப்பு குழம்பு, சமைப்பதற்கு பெருங்காயம் வேண்டும் என்றார் உடனே இவன் தன் கையில் ஒட்டியுள்ள பெருங்காயத்தை தண்ணீரில் கழுவி அதை கொண்டுபோய் கொடுத்தான். அதை வைத்தே அவனுடைய அம்மா குழம்பு சமைத்தார்கள். உடனே பையன் இந்த கஞ்சத்தனத்தை கூறி அப்பாவிடம் பெயர் வாங்கி விட வேண்டும் என்று நினைத்தான். மறு நாள் அவனது அப்பா வீடு திரும்பினார்.
அப்பாவிடம் தான் செய்த கஞ்சத்தனத்தை கூறினான். அதை கேட்டு பாரட்டுவார் என்று நினைத்தான். ஆனால் அவனது அப்பா "ஒரே நாள்ள ரெண்டு கையையும் கழுவி ஊத்திட்டியே. ஒவ்வொரு விரலா கழுவி ஊத்தினா 10-நாள் கொழம்பு வைக்கலாமே என்றார்..." பையன் திகைத்து நின்றான்...
(சிரிப்பு வந்துச்சா...? வரலன்னா விடுங்க திரும்பவும் முயற்சி செய்யிறேன்...)

2 commentaires:

  1. சிரிப்பு வந்துடுச்சு. நெட் சென்றருக்கு வந்துள்ளபடியால் பதிவில் பதிவிட இயன்றது.
    http://kalapathy.blogspot.in
    http://httpdevamaindhan.blogspot.in
    http://ammaa.blogspot.in

    RépondreSupprimer