முகப்பு

lundi 22 avril 2013




lundi 15 avril 2013

நல்லதையே நினைப்போம்.நல்லதே செய்வோம்.நல்லதே நடக்கும்.

 
 
நமது நாட்டில் இன்றும் நல்ல நாள்,கெட்ட நாள் பார்க்கிறார்கள்.ஏதேனும் திருமணம் அல்லது விழாக்கள் என்றால் சுபமுகூர்த்த தினங்களில் வைக்கிறார்கள்.அதுவும் நல்ல நேரத்தில் மட்டுமே அந்த விழாவை நடத்துகிறார்கள்.

நமது பெரியோர்கள் ஒவ்வொரு கிழமைக்கும் ஒர...ு ராசிபலன் வைத்திருக்கிறார்கள்.

1. ஞாயிறு-நாய் படாத பாடு:

சாதாரணமாக ஒரு விலங்கின் ஏதேனும் ஓர் உறுப்பு செயலிழந்தாலோ அல்லது நாம் அதனை கடுமையாக அடித்துப் போட்டாலோ சீக்கிரத்திலேயே இறந்துவிடும்.ஆனால் நாய்கள் அப்படியில்லை.நான்கு கால்களையும் இழந்த நாய் கூட ஊர்ந்து சென்றாவது தன் உணவைத் தேடிக்கொள்ளும்.

அடிப்பட்டு முகத்தையே இழந்த நாய்கள் கூட பல மாதங்கள் உயிர் வாழ்ந்ததைப் பார்த்திருக்கிறேன்.அதாவது நாய்களுக்கு அடிப்பட்டாலோ அல்லது அவைகளுக்கு உணவே கிடைக்கவில்லை என்றாலும் கூட அவைகள் சீக்கிரத்தில் சாவதில்லை.

“நாய் பட்ட பாடு” என்றால் அவை சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் துன்பப்படுவதுதான்.”நாய் படாத பாடு” என்றால் அவைகள் பட்ட துன்பங்களையும் தாண்டியது.

ஞாயிற்றுக் கிழமைகளில் ஏதேனும் ஒரு காரியத்தை தொடங்கினால் குறிப்பாக திருமணம் செய்துகொண்டால் “நாய் படாத பாடு” என்பது ஐதீகம்.

2. திங்கட்கிழமை:

திங்கட்கிழமை பொதுவாக நல்ல நாளும் இல்லை கெட்ட நாளும் இல்லை.சுபமுகூர்த்த நாளாக இருந்தால் நல்ல நாள்.அவ்வளவுதான்.இது நமக்கு அவ்வளவாக தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

3. செவ்வாய்-வெறும் வாய்:

செவ்வாய் கிழமைகளில் முதன்முதலில் ஒரு கரியத்தைத் துவக்கினால் அந்த காரியத்தால் நமக்கு எந்த அனுகூலமும் இல்லை.குறிப்பாக தொழில் தொடங்கவே கூடாது.

4. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது:

அதாவது புதன் கிழமையை வீணடிக்கக் கூடாது.நல்ல காரியங்களை புதன் கிழமைகளில் துணிந்து செய்யலாம்.

5. வியாழன்-விருந்து என்று கூட மருந்து சாப்பிடக் கூடாது:

வியாழனில் வைத்தியம் பார்த்தால் அந்த நோய் குணமாவது கடினம் என்பது ஐதீகம்.

6. மங்கள வெள்ளி:

வெள்ளிக் கிழமைகளில் செய்யும் காரியம் மங்களகரமாக முடியும்.கடுமையான வேலைகள் கூட எளிமையாக முடியும்.விடியாத காரியம் கூட விடியும்.

7. சனி போனால் தனியாக போகாது:

சனிக் கிழமைகளில் யாரேனும் இறந்தால் விரைவிலையே அவரின் குடும்பத்தில் வேறு ஒருவர் இறப்பார்.இவ்வாறாக ஒரு நம்பிக்கை உண்டு.சனிக்கிழமைகளில் வெளியூர்களுக்கு கிளம்பி சென்றால் விபத்துகள் ஏற்படலாம்.




இவ்வாறாக ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு ராசிபலன் உள்ளது.இவைகள் முன்னோர்களின் ஐதீகங்கள்.ஆனால் இதையெல்லாம் கேட்டுக்கொண்டு நாட்களை வீணடிக்காதீர்கள்.

"நலிந்தவனுக்கு நாள் கிழமை கிடையாது" என்பது பழமொழி.நலிந்தவன் என்பவன் இறைவனுக்கு முன் தன்னையே வெறுமையாக்கிக் கொள்பவன்.இறை நம்பிக்கை இருந்தால் எந்நாளையும் நல்ல நாளாக மாற்றலாம்.

நல்லவர்களுக்கு எல்லா நாளும் நல்ல நாளே.நாம் ஒரு செயலை செய்யும்போது நல்லதையே நினைத்து செய்யும்போது நல்லதே நடக்கும்.ஒவ்வொரு நிமிடமும் நல்ல நேரமாகவே இருக்கும்.

நல்லதையே நினைப்போம்.நல்லதே செய்வோம்.நல்லதே நடக்கும்.

 

மூத்த குடி

 
 
கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி

விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.


கண்களை பத்திரமா பார்த்துக்கோ

 
 
 
ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத பெண்ணை லவ் பண்ணினான்.

அந்த பெண் "என்னை கை விடமாட்டியே " என்று கேட்டாள் .

அவன் "நிச்சியமாக உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் " என்று சொன்னான் .

... ஒரு நாள் அந்த பெண்ணிற்கு ஆபரேசன் நடந்து பார்வை வந்துவிட்டது .

அப்போ பையன் கேட்டான் " இப்போ கல்யாணம் செய்து கொள்ளலாமா" ?

அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி .
அந்த பையனுக்கு பார்வை இல்லை.
அதனால அந்த பெண் கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொல்லிவிட்டாள்.

சிறுது தூரம் சென்ற பிறகு அவன் அவளிடம் சொன்னான் .
" என்னை கல்யாணம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை என்னுடைய இரு கண்களை பத்திரமா பார்த்துக்கோ "


vendredi 12 avril 2013

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 
 
நிறைந்த வளம்,மிகுந்த சந்தோசம்,வெற்றி,
இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்குகொண்டுவரட்டும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! -


lundi 8 avril 2013

யோகி.

 
 
தனக்குள் சிரிப்பவன் ஞானி .
தனக்குத்தானே சிரிப்பவன் பைத்தியம்.
தன்னை மறந்து சிரிப்பவன் ரசிகன்.
தன்னை நினைத்துச் சிரிப்பவன் காதலன்.
பிறரைப் பார்த்துச் சிரிப்பவன் கர்வி.
பிறருக்காகச் சிரிப்பவன் கயவன்.
...பிறர் நோகச் சிரிப்பவன் கொடியவன்.
பிறர் காணச்சிரிப்பவன் கோமாளி.
சிரித்துக் கொண்டே வெற்றி பெறுபவன் மதியூகி.
வெற்றி பெற்றாலும் சிரிக்காதவன் கர்ம யோகி.
 

பழமொழி

 
 
பழமொழி

ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்.

விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும்.
அதாவது நம் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை க...ொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால் அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது.
 

நாளை சந்திப்போம்

 
 
இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகளாய்
இருந்தால் மண்ணில் வீழ்ந்து மடிவதை எண்ணி
வருந்தலாம்................
ஆனால்
விருட்சத்திலிருந்து விழும் முற்றிய விதைகள் நாம்...
மூடி வைத்தாலும் மண்ணை முட்டி முளைப்போம்
இன்று பிரிந்தாலும்...... நாளை சந்திப்போம்......


உரிமை!!

உரிமை!!
மலரிடம் சொன்னது முள்
பலருக்கு விருப்பம் உண்டு
உன்னை அடைய…
எனக்கு மட்டுமே
உரிமை உண்டு
உன்னை காக்க…! 

mercredi 3 avril 2013

முத்தம்..!!

 
இயற்கை எனக்கென எழுதிய நிலையான சொத்து
அம்மா..!!
அம்மா எனக்கென எழுதிய உயிருள்ள உணர்வு
முத்தம்..!!


காத்திருக்கும்!

 
 
கொண்டு செல்ல
எதுவும் இல்லை
உலகில்...
கொடுத்து செல்ல
எல்லாம் உள்ளது
உடலில்.
... காலம் காத்திருப்பதில்லை
ஆனால் நம்மை
நேசிக்கும் உண்மையான
இதயம் நமக்காக
நிச்சயம் காத்திருக்கும்!

 

பூவாக மலர

 
 
பூவாக மலர
வாய்ப்புக்கள்
இருக்கும் போது
ரோஜாவாக மலருங்கள்
எருக்கம் பூவாக அல்ல


கண்களுக்கு...

 

 
மெளனமாக தான்
அழுகின்றேன்
ஆனாலும்,
எப்படியோ தெரிந்துவிடுகிறது !
என்
கண்களுக்கு...


ஜெயித்து விடலாம்

 
 
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.


கண்ணீரை ஏற்படுத்தும்

 
 
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.


dimanche 24 mars 2013

திருமண பொருத்தங்கள்


 
 
திருமணம் செய்ய இருக்கும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கீழ்கண்ட பொருத்தங்கள் பார்த்து திருமணம் நடத்தி வைப்பது வழக்கம்.
 
1. தினப் பொருத்தம்: மணப் பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து துவங்கி மணமகன் நட்சத்திரம் வரை எண்ணி அந்தக் கூட்டுத் தொகையை ஒன்பதால் வகுத்தால்.ஈவு 2-4-6-8-9 என்று வருமானால் இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தத்தை இன்னொரு வகையிலும் கணக்கிடலாம். அதாவது பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணிக்கொண்டு வரும்போது அந்த எண் தொகை 2-4-6-8-9-11-13-15-17-18-20-22-26-27 என்று வருமானால் இதுவும் தினப் பொருத்தம்தான் என்று சொல்வார்கள். மணமகன்இ மணமகள் இருவருக்கும் ஒரே நட்சத்திரமானால் அதுவும் தினப் பொருத்தம்தான். ஆனால் பரணி ஆயில்யம் சுவாதி கேட்டை மூலம் அவிட்டம் சதயம் பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இருவருக்கும் ஒன்றாக இருக்குமானால் இது பொருந்தாது என்பதும் ஒரு கணிப்பு. மணமகள் மணமகன் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருக்கும் பட்சத்தில் மணமகனுக்கு அந்த நட்சத்திரத்தில் முதல் பாதமாகவும் மணமகளுக்கு அடுத்த பாதங்களில் ஏதாவதொன்றாகவும் அமையுமானால் அது சுபப் பொருத்தம் என்று கொள்ளப்படுகிறது. உதாரணமாக இருவருக்கும் கிருத்திகை நட்சத்திரம் என்று இருக்குமானால் மணமகனுக்கு கிருத்திகை முதல் பாதம்; மணமகளுக்கு கிருத்திகை 2-3 அல்லது 4-வது பாதம் என்று இருந்தால் மணமகனுக்கு மேஷ ராசியாகவும் மணமகளுக்கு ரிஷப ராசியாகவும் இருக்கும். இதில் மேஷ ராசி முதலில் வருகிறது என்பதால் இந்தப் பொருத்தமும் ஏற்புடையதுதான்.
அதேபோல மணமகனுக்கும் மணமகளுக்கும் ஒரே ராசியாக இருந்து அதில் மணமகனுடைய நட்சத்திரம் முதலில் இருக்குமானால் இதுவும் சரியான பொருத்தமாகத்தான் கொள்ளப்படுகிறது. உதாரணமாக மணமகன் மணமகள் இருவருக்கும் மிதுன ராசி என்று வைத்துக்கொள்வோம். இந்த ராசியில் உள்ள நட்சத்திரங்களில் (மிருக சீரிஷம் 2-3-ம் பாதங்கள் திருவாதிரை மற்றும் புனர்பூசம் 1-2-3-ம் பாதங்கள்) மணமகனுக்கு மிருக சீரிஷமாக இருந்து மணமகளுக்கு திருவாதிரை அல்லது புனர்பூசமாக இருக்குமானால் இந்தப் பொருத்தமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

2. கணப் பொருத்தம்: மூன்றுவகை கணங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1. தேவ கணம் 2. மனித கணம் 3. ராட்சஸ கணம்.
தேவகணத்தில் அசுவினி மிருக சீரிஷம் புனர்பூசம் பூசம் ஹஸ்தம் ஸ்வாதி அனுஷம் திருவோணம் ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் அடங்கும். மனித கணத்தில் பரணி ரோகிணி திருவாதிரை பூரம் உத்திரம் பூராடம் உத்திராடம் பூரட்டாதி உத்திரட்டாதி ஆகியவை அடங்கும். ராட்சஸ கணத்தில் கார்த்திகை ஆயில்யம் மகம் சித்திரை விசாகம் கேட்டை மூலம் அவிட்டம் சதயம் இவை அடங்கும். இவற்றில் மணமகன் மற்றும் மணப்பெண் இருவரும் ஒரே கணத்தைச் சேர்ந்தவர்களானால் இருவருக்கும் மணம் செய்விக்கலாம். இருவருக்கும் முறையே தேவகணம் மனித கணமாக இருந்தால் இதுவும் கணப்பொருத்தம்தான். மணமகன் ராட்சஸ கணத்தைச் சார்ந்தவராக இருந்து மணமகளும் அதே கணத்தவளாக இருந்தால் மணமகளின் நட்சத்திரத்திலிருந்து மணமகனுடைய நட்சத்திரம் பதினான்காவதாக இருக்குமானால் இதுவும் கணப்பொருத்தம் என்றே கொள்ளலாம். மணமகள் ராட்சஸ கணமாகவும் மணமகன் தேவ கணமாவோ மனித கணமாகவோ இருத்தல் கூடாது. ஆனால் மணமகள் மனித கணமாகவும் மணமகன் ராட்சஸ கணமாகவும் இருந்தால் இந்தப் பொருத்தம் சரியானதே.

3. மகேந்திரப் பொருத்தம்: பெண் நட்சத்திரம் துவங்கி ஆண் நட்சத்திரம் முடிய வரும் எண்ணிக்கை 4-7-10-13-16-19-22-25 என்று அமையுமானால் இது மகேந்திரப் பொருத்தம் எனப்படும். இந்தப் பொருத்தத்தின் மூலம் மணமக்களின் தாம்பத்திய வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அதாவது புத்திர பாக்கியம் நிறைவானதாக இருக்கும்.

4. பெண் தீர்க்கப் பொருத்தம்: மணப்பெண் நட்சத்திரம் துவங்கி மணமகன் நட்சத்திரம் வரையிலான எண்ணிக்கை ஏழுக்கு மேல் இருக்குமானால் பெண் தீர்க்கப் பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்த எண்ணிக்கை 13க்கு மேல் இருப்பின் மிக மிகப் பொருத்தம் என்று கூறுவதுண்டு ஏழு என்ற எண்ணிக்கை பொருத்தமானது என்றும் அதற்கு மேல் அதிகரிக்கக்கூடும் எண்ணிக்கை அதிகப் பொருத்தமானது என்றும் கொள்ளலாம். இந்தப் பொருத்தத்தால் வளமான குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான சகல சம்பத்தும் கிட்டும்.

5. யோனிப் பொருத்தம்: இல்லற சுகத்துக்கு இந்தப் பொருத்தத்தைப் பார்ப்பது மிகவும் அவசியம் என்பார்கள். இன்னின்ன நட்சத்திரத்துக்கு இன்னின்ன மிருக அம்சம் என்று ஜோதிடத்தில் கணித்திருக்கிறார்கள். எந்த மிருக அம்சத்தோடு எது சேருவது பொருத்தமாயிருக்கும் என்று பார்ப்பதுதான் இந்தப் பொருத்தம். அதாவது அசுவினி சதயம் – குதிரை; பரணி ரேவதி – யானை; கார்த்திகை பூசம் – ஆடு; ரோகிணி மிருக சீரிஷம் – பாம்பு; திருவாதிரை மூலம் – நாய்; புனர்பூசம் ஆயில்யம் – பூனை; மகம் பூரம் – எலி; உத்திரம் உத்திரட்டாதி-பசு; ஹஸ்தம் சுவாதி – எருமை; சித்திரை விசாகம் – புலி; அனுஷம் கேட்டை – மான்; பூராடம் திருவோணம் – குரங்கு; உத்திராடம் -கீரி; அவிட்டம் பூரட்டாதி – சிங்கம்.
இந்த மிருக அம்சங்களில் குதிரை – எருமை யானை – சிங்கம்இ ஆடு- குரங்கு பாம்பு – எலி பசு – குதிரை எலி- பூனை கீரி – பாம்பு மான்-நாய் ஆகிய இவை ஒன்றுக்கொன்று பகையாகும். இந்த எதிர் அம்சங்கள் இல்லாத வகையில் பிற மிருக அம்சங்கள் ஒன்றுக்கொன்று இணையுமானால் அது யோனிப் பொருத்தம் என்று சொல்லப்படுகிறது. இல்லற இன்பம் எந்நாளும் நிலைத்திருக்க இந்தப் பொருத்தம் அவசியம்.

6. ராசிப் பொருத்தம்: மணப்பெண் ராசியிலிருந்து மணமகனின் ராசி வரையிலான எண்ணிக்கை ஆறுக்கு மேற்பட்டால் அது ராசிப் பொருத்தம் எனப்படுகிறது. ஒன்பதுக்கு மேற்பட்டாலும் அதி பொருத்தம் என்பார்கள். எண்ணிக்கை எட்டாக இருத்தல் கூடாது. மேஷம் மிதுனம் சிம்மம் துலாம் தனுசு கும்பம் இவை பெண் ராசியாக அமையுமானால் ஆறாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். அதேபோல ரிஷபம் கடகம் கன்னி விருச்சிகம் மகரம் மீனம் இவை பெண்ணுக்குரிய ராசியானால் இதற்குப் பன்னிரண்டாவது ராசியாக ஆண் ராசி அமைந்தால் பன்னிரண்டாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தம் ஆண் வாரிசுக்கு வழி வகுக்கும் என்கிறது சாஸ்திரம்.

7. ராசி அதிபதிப் பொருத்தம்: ஒவ்வொரு ஜாதகருக்கும் அவரவருடைய ராசிக்குரிய அதிபதி யார் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள் 114ம் பக்கத்தில். மணமகன் மணப்பெண் இருவருக்கும் ஒரே அதிபதியாக அமைந்துவிட்டால் அது சரியான பொருத்தம். அல்லது இரு அதிபதிகளும் நட்பானவர்களாக இருந்தால் இதுவும் விசேஷம்தான். பகை அதிபதிகளாக இருத்தல்கூடாது. இந்தப் பொருத்தம் மூலமாக இரு தரப்பிலும் சம்பந்திகள் மிகவும் அன்னியோன்யமாக இருப்பார்கள்.

8. வசியப் பொருத்தம்: ராசிகளில் ஒன்றுக்கொன்று எதெல்லாம் உடன்பாடானவை; எதெல்லாம் அல்லாதவை என்பதை அறிவதன் மூலம் இந்தப் பொருத்தத்தைத் தீர்மானம் செய்யலாம். மேஷத்துக்கு – சிம்மம் விருச்சிகம்; ரிஷபத்துக்கு – கடகம் துலாம்; மிதுனத்துக்கு – கன்னி; கடகத்துக்கு – விருச்சிகம் தனுசு; சிம்மத்திற்கு – துலாம்; கன்னிக்கு – மிதுனம் மீனம்; துலாத்துக்கு – கன்னி மகரம்; விருச்சிகத்திற்கு – கடகம் கன்னி; தனுசுக்கு – மீனம்; மகரத்துக்கு - மேஷம் கும்பம்; கும்பத்துக்கு – மேஷம் மீனம்; மீனத்துக்கு -மகரம் என்று வசியப் பொருத்தம் சொல்லப்பட்டிருக்கிறது. பெண் ராசிக்கு ஆண் ராசி மேற்கண்ட அமைப்புப்படி பொருந்துமானால்இ அதுவே சரியான வசியப் பொருத்தமாகும். மற்றவை பொருத்தமற்றவை. இப்பொருத்தம் அமைவதன் மூலம் தம்பதியர் ஒருவருக்கொருவர் வசியமாகிஇ எந்த சந்தர்ப்பத்திலும் ஒருவரை மற்றவர் விட்டுக் கொடுக்காமல் பூரண அன்புடன் இனிய வாழ்க்கை நடத்துவார்கள்.

9. ரஜ்ஜுப் பொருத்தம்: அசுவினி மகம் மூலம் – ஆரோகபாத ரஜ்ஜு ஆயில்யம் கேட்டை ரேவதி – அவரோகபாத ரஜ்ஜு; பரணி பூரம்இ பூராடம் – ஆரோக தொடை ரஜ்ஜு; பூசம் அனுஷம் உத்திரட்டாதி – அவரோக தொடை ரஜ்ஜு; கார்த்திகை உத்திரம் உத்திராடம் – ஆரோக உதர ரஜ்ஜு புனர் பூசம் விசாகம் பூரட்டாதி – அவரோக உதர ரஜ்ஜு; ரோகிணி அஸ்தம் திருவோணம் – ஆரோக கண்ட ரஜ்ஜு; திருவாதிரைஇ சுவாதி சதயம் – அவரோக கண்ட ரஜ்ஜு; மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம் – சிரோ ரஜ்ஜு. இந்த ரஜ்ஜு அமைப்பில் மணமகன் மணப்பெண் இருவரது நட்சத்திரமும் ஆரோகத்திலாவது அவரோகத்திலாவது ஒரே வரிசையில் இருக்குமானால் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று கொள்ளலாம். ஒன்று ஆரோகத்திலும் ஒன்று அவரோகத்திலும் வெவ்வெறு வரிசையில் இருந்தாலும் சரி; இரண்டு நட்சத்திரங்களுக்கும் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும் சரி இருவருக்கும் ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு என்று சொல்லலாம். மாங்கல்ய பலம் பெருக இந்தப் பொருத்தம் அவசியம்.

10. நாடிப் பொருத்தம்: அசுவினி திருவாதிரை புனர்பூசம் உத்திரம் அஸ்தம் கேட்டை மூலம் சதயம் பூரட்டாதி ஆகிய இந்த நட்சத்திரங்கள் தட்சிண பார்சுவ நாடியைச் சேர்ந்தவை. பரணி மிருக சீரிஷம் பூசம் பூரம் சித்திரை அனுஷம் பூராடம் அவிட்டம் உத்திரட்டாதி இவை மத்திய நாடி. கார்த்திகை ரோகிணி ஆயில்யம் மகம் ஸ்வாதி விசாகம் உத்திராடம் திருவோணம் ரேவதி இவை வர்ம பார்சுவ நாடி. மணப்பெண் மணமகன் இருவரும் ஒரே நாடியைச் சேர்ந்தவர்களானால் நாடிப்பொருத்தம் இருக்கிறது என்று அர்த்தம். இந்தப் பொருத்தமும் மாங்கல்ய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.



samedi 23 mars 2013

மாட்டுக் கொட்டிலும் மாளிகை…!

 
 
நேசம் இருந்தால் விடுதியும் வீடு..!பாசம் இருந்தால் வெட்ட வெளியும் அரண்மனை..!இதயம் இருந்தால் இடுகாடும் சுவர்க்கம்..!மனம் இருந்தால் மாட்டுக் கொட்டிலும் மாளிகை…! 

mercredi 20 mars 2013

நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்


  1.  
  2. படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.
  3. மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.
  4. உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.
  5. வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.
  6. பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.
  7. ஆசைகள் வளர வளர தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.
  8. எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.
  9. மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.
  10. கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.
  11. அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்
  1. 

சிறப்பாகச் சிந்திப்பது

 
 
 
யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்.
  • மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!
  •  
  • பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
  • சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது!
  • மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது. ஆனால் முட்டாள்தனமாக செயற்படுவது!
  • முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழி மௌனமாக இருப்பதுதான்!
  • அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை. தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன!
  • நன்றாகப் பேசுவது நல்லதுதான். ஆனால் நன்றாகச் செய்வது அதனிலும் நல்லது!
  • மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும் மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான் இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்.
  • தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்! வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்! இதுதான் வாழ்க்கையின் இரகசியம்!


mercredi 13 mars 2013

தன்மானம் இழந்து நீ வாழ்க்கையை வாங்காதே ...!!!

 
 
வாழ்க்கையில் ஒன்றை இழக்க மற்றொன்று கிடைக்கும் ..
வியர்வையை இழந்து நீ வெற்றியை வாங்கு ..
ஆசையை இழந்து நீ அமைதியை வாங்கு ..
மோகத்தை இழந்து நீ ஞானத்தை வாங்கு ..
விரோதத்தை இழந்து நீ உறவுகளை வாங்கு ..
தன்மானம் இழந்து நீ வாழ்க்கையை வாங்காதே ...!!!