திருமணம் செய்ய இருக்கும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கீழ்கண்ட பொருத்தங்கள் பார்த்து திருமணம் நடத்தி வைப்பது வழக்கம்.
1. தினப் பொருத்தம்: மணப் பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து துவங்கி மணமகன் நட்சத்திரம் வரை எண்ணி அந்தக் கூட்டுத் தொகையை ஒன்பதால் வகுத்தால்.ஈவு 2-4-6-8-9 என்று வருமானால் இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தத்தை இன்னொரு வகையிலும் கணக்கிடலாம். அதாவது பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணிக்கொண்டு வரும்போது அந்த எண் தொகை 2-4-6-8-9-11-13-15-17-18-20-22-26-27 என்று வருமானால் இதுவும் தினப் பொருத்தம்தான் என்று சொல்வார்கள். மணமகன்இ மணமகள் இருவருக்கும் ஒரே நட்சத்திரமானால் அதுவும் தினப் பொருத்தம்தான். ஆனால் பரணி ஆயில்யம் சுவாதி கேட்டை மூலம் அவிட்டம் சதயம் பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இருவருக்கும் ஒன்றாக இருக்குமானால் இது பொருந்தாது என்பதும் ஒரு கணிப்பு. மணமகள் மணமகன் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருக்கும் பட்சத்தில் மணமகனுக்கு அந்த நட்சத்திரத்தில் முதல் பாதமாகவும் மணமகளுக்கு அடுத்த பாதங்களில் ஏதாவதொன்றாகவும் அமையுமானால் அது சுபப் பொருத்தம் என்று கொள்ளப்படுகிறது. உதாரணமாக இருவருக்கும் கிருத்திகை நட்சத்திரம் என்று இருக்குமானால் மணமகனுக்கு கிருத்திகை முதல் பாதம்; மணமகளுக்கு கிருத்திகை 2-3 அல்லது 4-வது பாதம் என்று இருந்தால் மணமகனுக்கு மேஷ ராசியாகவும் மணமகளுக்கு ரிஷப ராசியாகவும் இருக்கும். இதில் மேஷ ராசி முதலில் வருகிறது என்பதால் இந்தப் பொருத்தமும் ஏற்புடையதுதான்.
அதேபோல மணமகனுக்கும் மணமகளுக்கும் ஒரே ராசியாக இருந்து அதில் மணமகனுடைய நட்சத்திரம் முதலில் இருக்குமானால் இதுவும் சரியான பொருத்தமாகத்தான் கொள்ளப்படுகிறது. உதாரணமாக மணமகன் மணமகள் இருவருக்கும் மிதுன ராசி என்று வைத்துக்கொள்வோம். இந்த ராசியில் உள்ள நட்சத்திரங்களில் (மிருக சீரிஷம் 2-3-ம் பாதங்கள் திருவாதிரை மற்றும் புனர்பூசம் 1-2-3-ம் பாதங்கள்) மணமகனுக்கு மிருக சீரிஷமாக இருந்து மணமகளுக்கு திருவாதிரை அல்லது புனர்பூசமாக இருக்குமானால் இந்தப் பொருத்தமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.
அதேபோல மணமகனுக்கும் மணமகளுக்கும் ஒரே ராசியாக இருந்து அதில் மணமகனுடைய நட்சத்திரம் முதலில் இருக்குமானால் இதுவும் சரியான பொருத்தமாகத்தான் கொள்ளப்படுகிறது. உதாரணமாக மணமகன் மணமகள் இருவருக்கும் மிதுன ராசி என்று வைத்துக்கொள்வோம். இந்த ராசியில் உள்ள நட்சத்திரங்களில் (மிருக சீரிஷம் 2-3-ம் பாதங்கள் திருவாதிரை மற்றும் புனர்பூசம் 1-2-3-ம் பாதங்கள்) மணமகனுக்கு மிருக சீரிஷமாக இருந்து மணமகளுக்கு திருவாதிரை அல்லது புனர்பூசமாக இருக்குமானால் இந்தப் பொருத்தமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.
2. கணப் பொருத்தம்: மூன்றுவகை கணங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1. தேவ கணம் 2. மனித கணம் 3. ராட்சஸ கணம்.
தேவகணத்தில் அசுவினி மிருக சீரிஷம் புனர்பூசம் பூசம் ஹஸ்தம் ஸ்வாதி அனுஷம் திருவோணம் ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் அடங்கும். மனித கணத்தில் பரணி ரோகிணி திருவாதிரை பூரம் உத்திரம் பூராடம் உத்திராடம் பூரட்டாதி உத்திரட்டாதி ஆகியவை அடங்கும். ராட்சஸ கணத்தில் கார்த்திகை ஆயில்யம் மகம் சித்திரை விசாகம் கேட்டை மூலம் அவிட்டம் சதயம் இவை அடங்கும். இவற்றில் மணமகன் மற்றும் மணப்பெண் இருவரும் ஒரே கணத்தைச் சேர்ந்தவர்களானால் இருவருக்கும் மணம் செய்விக்கலாம். இருவருக்கும் முறையே தேவகணம் மனித கணமாக இருந்தால் இதுவும் கணப்பொருத்தம்தான். மணமகன் ராட்சஸ கணத்தைச் சார்ந்தவராக இருந்து மணமகளும் அதே கணத்தவளாக இருந்தால் மணமகளின் நட்சத்திரத்திலிருந்து மணமகனுடைய நட்சத்திரம் பதினான்காவதாக இருக்குமானால் இதுவும் கணப்பொருத்தம் என்றே கொள்ளலாம். மணமகள் ராட்சஸ கணமாகவும் மணமகன் தேவ கணமாவோ மனித கணமாகவோ இருத்தல் கூடாது. ஆனால் மணமகள் மனித கணமாகவும் மணமகன் ராட்சஸ கணமாகவும் இருந்தால் இந்தப் பொருத்தம் சரியானதே.
3. மகேந்திரப் பொருத்தம்: பெண் நட்சத்திரம் துவங்கி ஆண் நட்சத்திரம் முடிய வரும் எண்ணிக்கை 4-7-10-13-16-19-22-25 என்று அமையுமானால் இது மகேந்திரப் பொருத்தம் எனப்படும். இந்தப் பொருத்தத்தின் மூலம் மணமக்களின் தாம்பத்திய வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அதாவது புத்திர பாக்கியம் நிறைவானதாக இருக்கும்.
4. பெண் தீர்க்கப் பொருத்தம்: மணப்பெண் நட்சத்திரம் துவங்கி மணமகன் நட்சத்திரம் வரையிலான எண்ணிக்கை ஏழுக்கு மேல் இருக்குமானால் பெண் தீர்க்கப் பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்த எண்ணிக்கை 13க்கு மேல் இருப்பின் மிக மிகப் பொருத்தம் என்று கூறுவதுண்டு ஏழு என்ற எண்ணிக்கை பொருத்தமானது என்றும் அதற்கு மேல் அதிகரிக்கக்கூடும் எண்ணிக்கை அதிகப் பொருத்தமானது என்றும் கொள்ளலாம். இந்தப் பொருத்தத்தால் வளமான குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான சகல சம்பத்தும் கிட்டும்.
5. யோனிப் பொருத்தம்: இல்லற சுகத்துக்கு இந்தப் பொருத்தத்தைப் பார்ப்பது மிகவும் அவசியம் என்பார்கள். இன்னின்ன நட்சத்திரத்துக்கு இன்னின்ன மிருக அம்சம் என்று ஜோதிடத்தில் கணித்திருக்கிறார்கள். எந்த மிருக அம்சத்தோடு எது சேருவது பொருத்தமாயிருக்கும் என்று பார்ப்பதுதான் இந்தப் பொருத்தம். அதாவது அசுவினி சதயம் – குதிரை; பரணி ரேவதி – யானை; கார்த்திகை பூசம் – ஆடு; ரோகிணி மிருக சீரிஷம் – பாம்பு; திருவாதிரை மூலம் – நாய்; புனர்பூசம் ஆயில்யம் – பூனை; மகம் பூரம் – எலி; உத்திரம் உத்திரட்டாதி-பசு; ஹஸ்தம் சுவாதி – எருமை; சித்திரை விசாகம் – புலி; அனுஷம் கேட்டை – மான்; பூராடம் திருவோணம் – குரங்கு; உத்திராடம் -கீரி; அவிட்டம் பூரட்டாதி – சிங்கம்.
இந்த மிருக அம்சங்களில் குதிரை – எருமை யானை – சிங்கம்இ ஆடு- குரங்கு பாம்பு – எலி பசு – குதிரை எலி- பூனை கீரி – பாம்பு மான்-நாய் ஆகிய இவை ஒன்றுக்கொன்று பகையாகும். இந்த எதிர் அம்சங்கள் இல்லாத வகையில் பிற மிருக அம்சங்கள் ஒன்றுக்கொன்று இணையுமானால் அது யோனிப் பொருத்தம் என்று சொல்லப்படுகிறது. இல்லற இன்பம் எந்நாளும் நிலைத்திருக்க இந்தப் பொருத்தம் அவசியம்.
6. ராசிப் பொருத்தம்: மணப்பெண் ராசியிலிருந்து மணமகனின் ராசி வரையிலான எண்ணிக்கை ஆறுக்கு மேற்பட்டால் அது ராசிப் பொருத்தம் எனப்படுகிறது. ஒன்பதுக்கு மேற்பட்டாலும் அதி பொருத்தம் என்பார்கள். எண்ணிக்கை எட்டாக இருத்தல் கூடாது. மேஷம் மிதுனம் சிம்மம் துலாம் தனுசு கும்பம் இவை பெண் ராசியாக அமையுமானால் ஆறாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். அதேபோல ரிஷபம் கடகம் கன்னி விருச்சிகம் மகரம் மீனம் இவை பெண்ணுக்குரிய ராசியானால் இதற்குப் பன்னிரண்டாவது ராசியாக ஆண் ராசி அமைந்தால் பன்னிரண்டாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தம் ஆண் வாரிசுக்கு வழி வகுக்கும் என்கிறது சாஸ்திரம்.
7. ராசி அதிபதிப் பொருத்தம்: ஒவ்வொரு ஜாதகருக்கும் அவரவருடைய ராசிக்குரிய அதிபதி யார் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள் 114ம் பக்கத்தில். மணமகன் மணப்பெண் இருவருக்கும் ஒரே அதிபதியாக அமைந்துவிட்டால் அது சரியான பொருத்தம். அல்லது இரு அதிபதிகளும் நட்பானவர்களாக இருந்தால் இதுவும் விசேஷம்தான். பகை அதிபதிகளாக இருத்தல்கூடாது. இந்தப் பொருத்தம் மூலமாக இரு தரப்பிலும் சம்பந்திகள் மிகவும் அன்னியோன்யமாக இருப்பார்கள்.
8. வசியப் பொருத்தம்: ராசிகளில் ஒன்றுக்கொன்று எதெல்லாம் உடன்பாடானவை; எதெல்லாம் அல்லாதவை என்பதை அறிவதன் மூலம் இந்தப் பொருத்தத்தைத் தீர்மானம் செய்யலாம். மேஷத்துக்கு – சிம்மம் விருச்சிகம்; ரிஷபத்துக்கு – கடகம் துலாம்; மிதுனத்துக்கு – கன்னி; கடகத்துக்கு – விருச்சிகம் தனுசு; சிம்மத்திற்கு – துலாம்; கன்னிக்கு – மிதுனம் மீனம்; துலாத்துக்கு – கன்னி மகரம்; விருச்சிகத்திற்கு – கடகம் கன்னி; தனுசுக்கு – மீனம்; மகரத்துக்கு - மேஷம் கும்பம்; கும்பத்துக்கு – மேஷம் மீனம்; மீனத்துக்கு -மகரம் என்று வசியப் பொருத்தம் சொல்லப்பட்டிருக்கிறது. பெண் ராசிக்கு ஆண் ராசி மேற்கண்ட அமைப்புப்படி பொருந்துமானால்இ அதுவே சரியான வசியப் பொருத்தமாகும். மற்றவை பொருத்தமற்றவை. இப்பொருத்தம் அமைவதன் மூலம் தம்பதியர் ஒருவருக்கொருவர் வசியமாகிஇ எந்த சந்தர்ப்பத்திலும் ஒருவரை மற்றவர் விட்டுக் கொடுக்காமல் பூரண அன்புடன் இனிய வாழ்க்கை நடத்துவார்கள்.
9. ரஜ்ஜுப் பொருத்தம்: அசுவினி மகம் மூலம் – ஆரோகபாத ரஜ்ஜு ஆயில்யம் கேட்டை ரேவதி – அவரோகபாத ரஜ்ஜு; பரணி பூரம்இ பூராடம் – ஆரோக தொடை ரஜ்ஜு; பூசம் அனுஷம் உத்திரட்டாதி – அவரோக தொடை ரஜ்ஜு; கார்த்திகை உத்திரம் உத்திராடம் – ஆரோக உதர ரஜ்ஜு புனர் பூசம் விசாகம் பூரட்டாதி – அவரோக உதர ரஜ்ஜு; ரோகிணி அஸ்தம் திருவோணம் – ஆரோக கண்ட ரஜ்ஜு; திருவாதிரைஇ சுவாதி சதயம் – அவரோக கண்ட ரஜ்ஜு; மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம் – சிரோ ரஜ்ஜு. இந்த ரஜ்ஜு அமைப்பில் மணமகன் மணப்பெண் இருவரது நட்சத்திரமும் ஆரோகத்திலாவது அவரோகத்திலாவது ஒரே வரிசையில் இருக்குமானால் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று கொள்ளலாம். ஒன்று ஆரோகத்திலும் ஒன்று அவரோகத்திலும் வெவ்வெறு வரிசையில் இருந்தாலும் சரி; இரண்டு நட்சத்திரங்களுக்கும் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும் சரி இருவருக்கும் ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு என்று சொல்லலாம். மாங்கல்ய பலம் பெருக இந்தப் பொருத்தம் அவசியம்.
10. நாடிப் பொருத்தம்: அசுவினி திருவாதிரை புனர்பூசம் உத்திரம் அஸ்தம் கேட்டை மூலம் சதயம் பூரட்டாதி ஆகிய இந்த நட்சத்திரங்கள் தட்சிண பார்சுவ நாடியைச் சேர்ந்தவை. பரணி மிருக சீரிஷம் பூசம் பூரம் சித்திரை அனுஷம் பூராடம் அவிட்டம் உத்திரட்டாதி இவை மத்திய நாடி. கார்த்திகை ரோகிணி ஆயில்யம் மகம் ஸ்வாதி விசாகம் உத்திராடம் திருவோணம் ரேவதி இவை வர்ம பார்சுவ நாடி. மணப்பெண் மணமகன் இருவரும் ஒரே நாடியைச் சேர்ந்தவர்களானால் நாடிப்பொருத்தம் இருக்கிறது என்று அர்த்தம். இந்தப் பொருத்தமும் மாங்கல்ய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire