முகப்பு

samedi 19 mars 2016

மரமும் அவனை எதிர் பாத்து காத்திருந்தது



அது ஒரு பழ மரம். ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர் பாத்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான் .அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.
அதற்கு அவன் சொன்னான். என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, கடையில் வாங்கலாம் என்றாலும் கையில் காசில்லை என்றான்.
மரம் சொன்னது கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று அதில் பொம்மை வாங்கிக்கொள். என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்று சொன்னது... அவனும் மகிழ்ச்சியுடன் மரத்தில் ஏறி பழங்களை பறித்து சென்றான்.
மறுபடியும் அவன் பல நாள் வரவில்லை. வாரங்கள், மாதங்கள் ஓடின அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து அவன் ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா என்னிடம் விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது.
அதற்கு அவன் சொன்னான், இல்லை எனக்கு இப்பொது வயதாகி விட்டது, எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர், ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை என்றான். மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் அதில் ஒரு வீடு கட்டிக்கொள் என்றது.
அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். அப்போது மரம் அவனிடம் இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து என்னை பார்த்து செல் என்றது. அவனும் வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் அவன் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. அதற்கு பின் பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.
மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது. அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான். ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. அவன் சொன்னான் என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றான்.
மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள் என்றது. அவன் அடி மரத்தை வெட்டும் போது மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்போதாவது என்னை பார்க்க வா என்றது.
ஆனால் பல வருடங்கள் அவன் வரவேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது. அப்போது அவன் வந்தான். தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான். அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.
இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை கிளைகள் இல்லை அடி மரமும் இல்லை உனக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே என வருந்தியது.
அவன் சொன்னான் நீ பழங்கள் கொடுத்தாலும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும் படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது என்றான்.
அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது, அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது.
இது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை, இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம் வளர்ந்து பெரியவனானதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும் அது தான். அதை கூடவா நம்மால் தர முடியாது??????????.

ஆசை !!



    ஆசை !! -
    கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.
    கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, ''அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்...தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?'' என்று கேட்டார்.
    வியாபாரி நடந்ததைக் கூறினான்.

    துறவி சொன்னார், ''அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''
    வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.

குதிரை



    ஒருத்தர் மத்தியான வேளையில் மிக வேகமாக நடுந்து போய் கொண்டிருந்தார். அதற்கு காரணம் அவன் காலில செருப்பு இல்லை. வெயில் வேறு மிக அதிகம். அதனால அவனால கால் சூடு தாங்க முடியலை. எனவே நடந்தும் ஓடியுமாய் சென்றான்.
    அந்த வழியாக ஒருவன் குதிரையில் சென்று கொண்டிருந்தான். உடனே அந்த குதிரைக்கரனிடம்,
    ஐயா!! நீங்களோ குதிரையில் போறிங்க. நான் வெறும் காலோடு நடந்து செல்கிறேன்.
    ...
    ஆகையால் எனக்கு உங்க செருப்பை கொடுத்து உதவலாமே என்றான்.
    அந்த குதிரைக்கரனுக்கு இது நியாயமானதாக தோன்றியது. எனவே செருப்பை கழட்டி அவனிடம் கொடுத்துவிட்டு புறப்பட தயாரானான்.
    மீண்டும் அவன் குதிரைகக்ரனிடம் ஐயா !! செருப்பு கொடுத்ததுக்கு நன்றி. ஆனாலும் நீங்க குதிரையில் போறதால சீக்கிரமே போக வேண்டிய இடத்தக்கு போய் சேர்ந்துவிடுவீர்கள் ஆகையால் எனக்கு அந்த குடையையும் கொடுத்து உதவலாமே என்றான்..
    அந்த குதிரைக்கரனுக்கு இதுவும் நியாயமானதாக தோன்றியது. எனவே குடையையும் அவனிடம் கொடுத்துவிட்டு புறப்பட தயாரானான்.
    மீண்டும் அவன் குதிரைகக்ரனிடம் ஐயா !! செருப்பு, குடைகொடுத்ததுக்கு நன்றி. அந்த குதிரையும் எனக்கு கொடுக்க முடிமா? என்றான்.
    உடனே அந்த குதிரைக்கரனுக்கு கோபம் வந்து விட்டது. குதிரையை விட்டு கீழே இறங்கி அவனை சட்டையை கொண்டு அடி அடி என அடிதான். பிறகு கோபத்துடன் குதிரையில் ஏறி புறப்பட தயாரானான். அப்பொழுது அவன் சிரித்து கொடிருப்பதை பார்த்து ஆச்சர்யமாணன்.
    அவனை நோக்கி இவ்வளவு அடி வாங்கியும் இப்படி சிரிக்கிறாயே? என்ன காரணம் என்றான் அதட்டலுடன்.
    அதற்க்கு அவன் ஐயா நீங்க என்னை அடித்ததால் என்னுடைய பேராசைக்கும் ஒரு எல்லை உண்டுஎன்பதை புரிய வைத்துள்ளீர்!! இல்லை என்றால் என் காலம் முழுதும் நான் ஒருவேளை அந்த குதிரையும் கேட்ட கிடைச்சிருக்குமோன்னு நினச்சிட்டே இருந்திருப்பேன். ஆனா இப்போஎனக்கு தெளிவா நீங்க புரிய வைசிட்டுங்க!! ஆசைக்கும் அளவு உண்டு என!! இனிமேல் நான் நிம்மதியா நடந்தே என் ஊருக்கு போயிருவேன் என்றான்.. குதிரைக்காரனும் நானும் கோபத்தால் உங்களை அடித்து விட்டேன். மன்னித்து கொள்ளுங்கள் என்று கூறி வீட்டு புறப்பட்டு சென்றான்.

அம்மா எனும் தேவதை ...!



    அம்மா எனும் தேவதை ...!
    இன்னும் சிறிது நேரத்தில் பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.
    வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது, அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது, வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை அழைத்தது....
    குழந்தை : இறைவனே என்னை எங்கு அனுப்பப் போகிறாய் வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே எனக்கு ஒன்றும் புரியவில்லையே.
    கடவுள் : குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்
    குழந்தை : நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்
    கடவுள் : இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் இருப்பாய் சென்று வா.
    குழந்தை : என்னை நீ இங்கு பாத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்.
    கடவுள் : கவலைப் படாதே குழந்தாய் அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக பாடும் உன் மீது அன்பு செழுத்தும் அந்த அன்பை நீ உணர்வாய்.
    குழந்தை : மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய் நான் மிகச் சிறியவன் என்னால் நடக்க முடியாது என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது.
    கடவுள் : அது மிகவும் சுலபம் உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத் தேவையில்லை.
    குழந்தை : (அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் கடவுளையே பார்த்தது) ம்ம்ம்;;…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.
    கடவுள் : (மென்மையாக சிரித்து) நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.
    குழந்தை : உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்.
    கடவுள் : வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.
    குழந்தை: (மிகவும் சோகமான முகத்துடன்) இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா.
    கடவுள் : (குழந்தையை அன்பாக அணைத்து) உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லும் சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திருப்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க மாட்டாய்.
    உலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின
    குழந்தை : (மிகவும் கடவுளைப் பிரியும் சோகத்துடன்) இறைவனே இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன் நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல்
    கடவுள் : குழந்தாய் தைரியமாக சென்று வா உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் முக்கியமில்லை அவளை நீ அம்மா என்று அழைப்பாய்.
    கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த தேவதையின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.
    குழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது…

சிந்திக்க


    சிந்திக்க....
    நீதிபதி:
    உங்கள் கடையில் இரட்டை டம்ளர் முறை உள்ளதா?
    ...
    கடைக்காரர்:
    நிறைய டம்ளர் இருக்குங்கய்யா.
    நீதிபதி:
    அதில்லை தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு என தனியாகவும் ஆதிக்கசக்தி மக்களுக்கும் என தனி தனி டம்ளர்ல கொடுப்பீங்களா?
    கடைகாரர்:
    ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் வந்தா தனித்தனியா டம்ளர்லாதான் கொடுப்பேங்க.
    நீதிபதி:
    அது தீண்டாமை சட்டப்படி குற்றம்னு தெரியாதா?
    கடைக்காரர்:
    அய்யா ஒரே டம்ளரில் ரண்டு பேருக்கும் கொடுத்தா எப்படிங்கையா குடிப்பாங்க?
    நீதிபதி:
    வேண்டுமென்றே குழப்புகிறீர்கள்.
    தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி டம்ளர் வச்சிருக்கீரீர்களா?
    கடைகாரர்:
    அய்யா நான் சொந்தமா முதல் போட்டு கடைவச்சிருக்கேன்.என் கடையில் வியாபாரம் எப்படி பண்ணுவது என்பது என் விருப்பம்.நான் வித்தியாசமா ரண்டு டம்ளர்ல கொடுக்கரது அவங்களுக்கு அவமானம்னா வேறகடைக்கு போலாமே, என்னை இப்படித்தான் கொடுக்கனும்னு சொல்ல இவங்க யாரு?
    நீதிபதி:
    குற்றத்தை ஒப்புக்கொண்டதால் தண்டனை விதிக்கிறேன்.
    கடைக்காரர்:
    சரிங்கையா,
    எனக்கு அவசரமா பாத்ரூம் போகனும் உங்க பாத் ரூம்க்கு போகட்டுங்களா?
    நீதிபதி:
    அங்கெல்லாம் போகக்கூடாது.
    public னு தனியா இருக்கு அங்கதான் போகனும்.
    கடைக்காரர்:
    இங்க மட்டும் எதுக்கு ரண்டு பாத் ரூம்.
    அப்ப நாங்க தீண்ட தகாதவங்களா?
    போலீஸ்காரய்யா நீதிபதிமேல கேஸ் போடுங்க.

என் தெய்வம்



    என் தெய்வம் !!!
    முழுகாமல் இருப்பதை முதன்முதலில் அறிகையில் முகமலர்ந்து நின்றவள் !
    இரவுகளின் மடியில் எண்ணற்ற நாட்கள் என்னுருவம் தேடியவள் !
    ...
    கனவுகளின் வழியே காவல் காக்கும் கடமைச் செய்தவள் !
    காணாமல் எனைக் காதலித்தவள் கர்ப்பத்திலேயே எனக்கு பெயர் வைத்தவள் !
    என் தந்தையின் ஒருதுளி விந்தில் வந்துதித்த என்னை விரயப்படுத்தாமல் கரை சேர்க்க மேகம் பொழியும் தண்ணீரை விடவும் கண்ணீர் அதிகம் சிந்தியவள் நான் நோயுற்றுபோது மருத்துவச்சி ஆனவள் !!
    காவல்துறைப் பணியை கையிலெடுத்து என் காணாமல் போன பொம்மையைக் கண்டுபிடித்துத் தந்தவள் !!
    மரங்களுக்கும் குளிரும் மார்கழிக் குளிரில் முந்தானைத் தளர்த்தி என் முழுவுடலும் போர்த்தி கதகதப்புத் தந்தவள் !!
    பிஞ்சுவிரல் பார்த்து பஞ்சுவிரல் என்று நெஞ்சுக் கூத்தாடி கொஞ்சி மகிழ்ந்தவள் !!
    கண்களில் விளக்கேற்றி கைகளை விசிறியாக்கி கண்தூங்க வைத்தவள் !!
    மழைபோல் அழுகையில் மடியில் விழுகையில் மார்போடு அனைத்து மகிழ்ச்சி அளித்தவள் !!
    எட்டியவளை உதைக்கையில் என்பிள்ளை
    உதைக்கிறது என்றெண்ணி மகிழ்ந்தவள் !!
    நீச்சல் கற்றுத் தந்தவள் !!
    கால்சட்டை போட்டு விட்டவள் !!
    எண்ணெய் தேய்த்து தலைவாரி பவுடர் பூசி தன் முகத்தை என் முகத்தில் உரசித் தேய்த்து
    என் கண்ணே
    பட்டுடும் ன்னு பெருமூச்சி விட்டவள் !!
    உறங்கிய பிறகு என் தலைமுடிக் கோதி உவகை அடைந்தவள் !!
    கண்ணீரில் கவலையில் தலையணை
    நனைத்தவள் !
    வெந்நீரில் நான்குளிக்க விறகாக எரிந்தவள் !!
    நான் படிக்க விழித்திருந்த விளக்கவள் !!
    திரும்பிப் பார்க்கிறேன் ...
    அவளுக்கான வாழ்க்கையில் அவளின் தேடல் அத்தனையும் எனக்கானவை;
    விண்மீன் கணக்கானவை .!
    ஆட்டுக்காறி எடுத்து அற்புதமாகச் சமைத்து அப்பா,தங்கையை விடவும் ஜந்தாறு துண்டுகளை அதிகமாக எனக்கு வைக்கும் அவள் அன்புக்கு என்னதான் தர இயலும் என்னைவிட பெரிதாய் !!!..
    நான் உன்னை காதலிக்கிறேன் அம்மா ..

டைரியில் ஒரு பக்கம்



திருமணம் செய்த அன்பான ஒருவனின் டைரியில் ஒரு பக்கம்.(..படித்ததில் பிடித்தது....).
திருமணம் முடிந்து 2 மாதங்கள் வேகமாக நகர்ந்து விட்டது,
கல்யாணத்திற்காக, அதன் பின் தேன்நிலவிற்காக என ஏகப்பட்ட லீவ் எடுத்ததின் விளைவு, இப்போது ஆபீஸ் வேலை அதிகமாகிவிட்டது.
அதிலும் கடந்த இரண்ட வாரமாக ஆன்சைட் க்ளைய்ண்ட் கால் முடித்து உறங்க போவதிற்கு இரவு 12 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. இன்றும் அதுபோல் இரவு லேட்டாக எங்கள் ரூமிற்க்குள் தூங்க சென்றேன்.
அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் மனைவியை டிஸ்டர்ப் பண்ணாமல் குட் நைட் கிஸ் கொடுக்க அருகில் குனிந்தபோது கவனித்தேன், அவள் கன்னங்களில் கண்ணீர், கன்னத்தை தொட்டுப் பார்த்தேன். அதிலே கண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது.
சற்றுநேரத்துக்கு முன்னர்தான் அவள் தூங்கியிருந்தாள் என்று நினைக்கிறேன். ஆனால் கண்ணீர் தூங்கவில்லை. "அவளுக்கு கண்ணீர் விடும் அளவிற்கு என்ன துயரம்?
சொந்தகாரங்க யாராவது ஏதும் திட்டியிருப்பார்களா??
அவளோட friends கூட ஏதும் பிரச்சனையா???
என்மேல் ஏதும் கோபமாக இருக்குமோ???"
கேள்விகளுடனும்,குழப்பத்துடனும் உறங்கி போனேன்.
வழக்கம்போல் காலையில் 'பெட் காபி'யுடன் என்னை எழுப்பினாள்.
வழமைபோல் பளீச்சென்ற அவளது புன்னகை பூத்த முகம்,
இரவில் அழுதத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை .....
காபி அருந்தியபடியே அவளிடம் கேட்டேன் ஏன் இரவில் அழுதிருந்தாள் என்று....
'அப்படி ஒன்றும் இல்லை,அழவே இல்லை' என்று சாதித்துவிட்டாள். (அழுத்தக்காரி...!)
என் காதல் மனைவிக்கு என்னிடம் கூட பகிர்ந்துக்கொள்ள முடியாத துயரம் அவளை வாட்டுகிறது என்பது என் நெஞ்சை பிசைந்தது.
இருவருடைய குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன்
விமர்சையாக எங்கள் திருமணம் நடந்தது, நாங்க ஆசைப்பட்ட மணவாழ்க்கை அழகாக ஆரம்பித்திருக்கும் போது, அவளுக்கு கண்ணீர் விடும் அளவிற்கு என்ன மனக்கஷ்டம்????
யோசனையுடன் குளியல் அறைக்குள் சென்றேன்,
அவள் பெட்ரூம் கண்ணாடி ஜன்னலில் இரவு பெய்த மழை துளியின் ஈரத்தில் ஏதோ கிறுக்கி கொண்டிருந்தாள் விரல் நுனியால். நான் குளியல் அறையில் இருந்து வெளியில் வரும்போது, நான் குடித்து முடித்திருந்த காபி கப்புடன்
அறையைவிட்டு வெளியேறி இருந்தாள்.
எதேச்சையாக ஜன்னல் பக்கம் என் பார்வை சென்றது,
மழை துளியின் ஈரத்தில் "அப்பா " என்று எழுதியிருந்தாள்,
வெயிலின் உஷ்ணத்தில் மெது மெதுவாக எழுத்துக்கள் மறைந்து அவள் கண்ணீருக்கான காரணத்தை எனக்கு உணர்த்திக்கொண்டிருந்தது!
அவளுக்கு பிடித்த பாடலை முணு முணுத்தபடி காலை டிபன் பரிமாறினாள், நாங்கள் காதலித்த நாட்களில் விளையாட்டாக
அவள் பாடுவதை கிண்டல் அடித்து விட்டேன், அதிலிருந்து நான் எவ்வளவு கெஞ்சினாலும் என் முன் சத்தமாக பாடவே மாட்டாள், ரோஷக்காரி !
Office க்கு செல்லும் என்னை வழியனுப்ப வாசல்வரை
என் laptop bag யை தூக்கிக்கொண்டு வந்தவளிடம்,
"ஒரு வாரத்திற்கு தேவையான ட்ரஸ் நம்ம இரண்டு பேருக்கும் பேக் பண்ணி வைச்சுடு ..... இன்னைக்கு நைட் நாம கிளம்பறோம் "
"ஒரு வாரமா?.....எங்க போறோம்?"
"அது evening office ல இருந்து வந்து சொல்றேன் "
"Office trip ஆ?.....என்னையும் உங்க கூட கூட்டிட்டு போறீங்களா??"
"இல்ல...."
"அப்போ எங்க போறோம் நாம ......"
"ஏன் இவ்வளவு கேள்வி கேட்கிறே ?"
"இல்ல ஹனி மூனும் போய்ட்டு வந்துட்டோம்..... உங்க ஆபீஸ்'ல வேற உங்களுக்கு ரொம்ப வொர்க் ,அதான் எங்கே திடீர்னு travel பண்றோம்னு ...."
"அதான் evening சொல்றேன்னு சொல்றேன் ல "
(Suspense ஓடவே இரு ........என்கிட்ட கூட சொல்லாம தனியா அழு அழுன்னு அழுவியா நீ ? -> My Mind Voice)
"புஜ்ஜு evening சொல்றதை இப்பவே சொன்னாதான் என்னவாம்??"
(அடிப்பாவி புஜ்ஜு ன்னு செல்லம் கொஞ்சி நைஸா கேட்கிறியா?)
"Evening வரைக்கும் வெயிட் பண்ணுமா பட்டு குட்டி"
நான் பதிலுக்கு கொஞ்சினதும், ஹையோ நம்ம try வேஸ்ட் ஆ போச்சுதேன்னு அவ மனசுல நினைக்கிறது அவ கண்ணுல தெரிஞ்சுது,
அதை ரசித்துக்கொண்டே அவள் நெற்றி உச்சியில் முத்தமிட்டு நகர்ந்த என்னை என் ஷர்ட் காலர் பிடித்திழுத்து நிறுத்தினாள்.
அவள் விழி ஓரத்தில் கண்ணீர் ததும்பி நின்றது.
நா தழு தழுக்க.....சின்ன விசும்பலுடன்...."தேங்க்ஸ் ......." என்றபடி என் தோளில் சாய்ந்தாள்.
"எதுக்குடி பட்டு ...."
"ஹும் ......நாம..........இன்னைக்கு நைட் எங்கப்பா வீட்டுக்குத்தான போறோம்??"
"எப்படி...........எப்படி தெரியும்டி பட்டுமா "
" Possessiveness கலந்த காதலை 2 மாதத்திற்கு அப்பறமா இப்போ உங்க கண்ணுல பார்த்தேன்......கண்டிப்பா அதுக்கு என் அப்பா மட்டும் தான் காரணம்னு எனக்கு தெரியுமே "
"அடிகள்ளி........."
'இறைவா !
அப்பா மேல் பாசம் பொழியும் மகளை
எனக்கும் சீக்கிரம் வரமாக கொடு' என்ற வேண்டுதலோடு
இனிதே அன்றைய நாளை துவங்கினேன் !!.....(..படித்ததில் பிடித்தது....).

உண்மை


ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. இறைவனிடம் பலர் வந்து வேண்டிக் கொள்கின்றனர். அப்படி வேண்டிக் கொள்ளும் போது, ’இறைவா... நான் தினமும் உன்னை வணங்குகிறேன்' என்று சொல்கின்றனர்... இதில் உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தான் அந்த சந்தேகம்' நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தை கேட்டன.
அப்போது இறைவன், ’தேவதைகளே! இந்த ஊரில் பலரையும் போய் சந்தித்து யார் எனது உண்மையான பக்தன் என்பதை விசாரித்து வாருங்கள்' என்றார்.
உடனே தேவதைகள் புறப்பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன.
...
ஒருவன், ’நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்,' என்றான்.
அடுத்தவன், /நான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவில் போவேன்,' என்றான்.
மற்றவன், ’நான் வாரத்தில் ஒரு நாள் நிச்சயம் கோவிலுக்குச் செல்லுவேன்,' என்றான்.
இன்னொருவன், ’எனக்கு கஷ்டம் வரும் சமயத்தில் கடவுளிடம் முறையிடுவேன்,' என்றான்.
இப்படியாக பலரும் ஏதோ ஒரு சமயத்தில் கடவுளை நினைப்பவராகவே இருக்க, ’இதில் யார் உண்மையான பக்தன்' எனக் கண்டு பிடிப்பது எப்படி என்ற குழப்பம் தேவதைக்கு ஏற்பட்டது.
அப்போது அந்தவழியே அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒருவனை நிறுத்தி, ’அப்பனே! உனக்குக் கடவுள் பக்தி உண்டா? நீ எப்போது கடவுளை வழிபடுவாய்?'' என்று ஒரு தேவதை கேட்டது.
அதற்கு அவன், ’எனக்குக் கடவுளை நினைக்கவே நேரமில்லை... அவசரமாக சிலருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறது. நான் போகிறேன்...' என்று பதில் கூறிவிட்டு ஏழைகளுக்கு உதவிட அவன் விரைந்தான்.
தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியே விவரித்தன.
எல்லாவற்றையும் கேட்ட கடவுள் மவுனம் சாதித்தார்.
’தேவனே... உண்மையான பக்தன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?' என்று கேட்டன.
’கண்டுபிடித்துவிட்டேன்!' என்றார் கடவுள்.
’யார் பிரபு? தினமும் மூன்று வேளை கோவிலுக்கு வருபவர்தானே?' என்று கேட்டன தேவதை கள்.
கடவுள் புன்னகைத்தபடியே, ’இல்லை... இல்லை... கடைசியாக என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்கு சேவை செய்ய ஓடினானே... உண்மையில் அவன் தான் எனது உண்மைப் பக்தன்,' என்றார்.
அப்போது தான் உண்மை புரிந்தது தேவதைகளுக்கு.

samedi 12 mars 2016

குற்ற_உணர்வு

படித்ததில் வலித்தது

பசியில் இருந்த ஒரு பெண் சிங்கம் நீண்ட போராட்டத்தின் பின்
 ஒரு மானை வேட்டையாடி பிடித்து இறையை துண்டிக்க ஆரம்பித்தது.

சிறிது நேரத்தில் மான் கருவுற்றிருப்பதை கண்டு கொண்டது.

இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய
 சிங்கம் உடனே தாயின் வயிற்றிலிருந்து
 வெளியேறிய
 குட்டியை காப்பற்றுவதற்காக பகீரத
 பிரயத்தனம் மேற்கொண்டது.

இறுதியில் நீண்ட நேர
 முயற்ச்சி பலனளிக்காது குட்டி இறக்க
 நேரிட்டது. இதைத் தாங்க முடியாத
 சிங்கமும் கீழே சாய்ந்து கொண்டது.

சிறிது நேரத்தின் பின் இந்த நிகழ்வை முழுவதுமாக படம் பிடித்துக்
 கொண்டிருந்தவர் அருகில் சென்று பார்த்த போது சிங்கம் இறந்து கிடந்தது....
 #குற்ற_உணர்வு

மனிதர்களிடம் தொலைந்து போன கருணை..
‎இன்று‬ விலங்குகளிடம்

படித்ததில் வலித்தது

vendredi 11 mars 2016

இதுதான் விதி என்பதோ


இந்திரன்மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாகவளர்த்துவந்தாள்.

ஒருநாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது.

அதை பரிசோதித்த மருத்துவர்
இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்.

உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி,
இந்த கிளியை எப்படியாவதுக்காப்பாற்றுங்கள்.
கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள்.

இந்திரன்,
கவலைப்படாதே இந்திராணி...நான் உடனே பிரம்மாவிடம்சென்று முறையிடுகிறேன்...
ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே?

அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றியெழுதிவிடுவோம் என்று சொல்லிவிட்டு
பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்..

விஷயத்தைக்கேட்ட பிரம்மா ,

இந்திரா.... படைப்பது மட்டுமே என்வேலை.

உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில்.

நாம் அவரிடம்சென்று உதவிகேட்போம்...வா ...நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு
மஹாவிஷ்ணுவிடம்சென்று விஷயத்தை தெரிவித்தார் பிரம்மா.

மஹாவிஷ்ணுவோ, உயிர்களை காப்பது நான்தான்.

ஆனால் உன் கிளி இறக்குந்தறுவாயிலிருக்கிறது.

அழிக்கும்தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும்.

வாருங்கள் நானும் உங்களுடன்வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார் விஷ்ணு.

விபரங்களைக்கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான்.

உயிர்களையெடுக்கும்பொறுப்பை நான்
எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன்.

வாருங்கள் ....நாம் அனைவரும்சென்று எமதர்மனிடம்கூறி அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்றுசொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார் சிவன்.

தன்னுடைய அவைக்கு சிவன் , மஹாவிஷ்ணு , பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வருவதைக்கண்ட எமதர்மன் உடனே எழுந்து ஓடிவந்து வரவேற்கிறார்.

விஷயம் முழுவதையும்கேட்ட அவர் ,
ஒவ்வொரு உயிரையும் எந்தநேரத்தில் ,
எந்தசூழ்நிலையில் ,
என்னகார‌ணத்தால் எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம்.

அந்த ஓலை அறுந்துவிழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும்.

வாருங்கள் அந்த அறைக்குச்சென்று
கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று அவர்களை அழைத்துச்செல்கிறார்.

இப்படியாக
இந்திரன் ,பிரம்மா ,விஷ்ணு , சிவன் , எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச்சென்றனர்.

அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது.

உடனே அவர்கள் அவசரமாகச்சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர்.

அது அந்த கிளியின் ஆயுள் ஓலை.

அவசரமாக அதை படித்துப்பார்க்கின்றனர்....

அதில்,,,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,

இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன் , எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ,
அப்போது இந்த கிளி இறந்துவிடும்..... என்று எழுதப்பட்டிருந்தது.

இதுதான் விதி என்பதோ!

lundi 7 mars 2016

குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு...

குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு...

குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை. - சிக்மண்ட் ஃபிராய்ட் (மனவியலாளர்)

சிம்மாசனங்களை விட்டு இறங்காத அப்பாக்களுக்கு குழந்தையின் இனிசியலில் மட்டும்தான் இடம்.

குழந்தையோடு குழந்தையாக இறங்கி, விளையாடி, தோற்று, அடி வாங்கி, அழுவதுபோல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம். எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான்

அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது. மனவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது. அதிக தன்னம்பிக்கை பெறுகிறார்கள். சமூகத்துடனான பழக்கமும் அய்க்யூவும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது.

படிப்பில் முழுத் திறனையும் வெளிப் படுத்துவார்கள். எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுவார்கள். குழந்தையின் திறமையை வளர்க்க ஏதேதோ தேடும் அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி அவர்களோடு விளையாட வேண்டும்.

எல்லாக் குழந்தைகளுமே முழுத் திறமை யுடனும், அறிவுடனும்தான் பிறக்கின்றன. ஒரு மின்னல் விழுந்து மலையின் ஊற்றுக்கண் திறப்பது போல, குழந்தைக்குள் இருக்கும் அறிவுக் கண்ணைத் திறக்கும் அதிசய மின்னல் அப்பாக்களின் அன்பில் ஒளிந்திருக் கிறது. தான் சந்திக்கும் விஷயங்களை ஆராய்ந்து, தெளிவுபடுத்திக் கொள்ளும் போக்கை குழந்தைகளிடம் பார்க்க முடியும்.

அப்பாவுடன் விளையாடுவது, விவாதிப்பது என இருவருக்குமான தளம் விரிவடையும்போது மூளையின் செயல்பாடு அதிக அளவில் தூண்டப்படுகிறது (பிரெய்ன் ஸ்டிமுலேசன்). அப்பாவுடன் நேரம் செல வழிக்கும் குழந்தைகளின் திறன் மேம்படுவது உலகளவில் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக் கிறது.

தாயின் பனிக்குடம் தாண்டி உதிக்கும் அந்தத் தாமரையின் சின்னச் சிரிப்பு, செல்லச் சிணுங்கல், மின்னல் கோபம், கொல்லும் அழுகை - ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அப்பா நடக்கும் போது இருவருக்குமான இன்னொரு தொப்புள்கொடி முடிச்சு போடப்படுகிறது.

அது ஆயுள் முழுவதும் அறுக்கப்படுவதில்லை. அம்மாவோடு அப்பாவும் சேர்ந்து வளர்த்த குழந்தைக்கு எவ்வளவு சிக்கலான சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் வித்தை தெரிந்திருக்கும்.

படிப்பு, விளை யாட்டு, உறவு, சமூகம் என எல்லா இடத்திலும் தானாக முன்வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.

எது சரி, தவறு என்பதை உணர்ந்து செயல்படும் பக்குவத்தை அவர்களிடம் பார்க்க முடியும். தேடல் வேட்கையுடன் இருப்பார்கள். கோடிக்கணக்கான முகங்களுக்கு மத்தியில் தங்களுக்கான தனி அடையாளத்தை காட்ட எப்போதும் குழந்தைகள் விரும்புவார்கள். அதற்கு அவர்களுக்குத் தேவை அப்பாவின் ஆள்காட்டி விரலைப் பற்றிக் கொண்டு நடக்கிற சந்தோஷம்தான் - தீர்க்கமாகச் சொல்கிறார் மனநல மருத்துவர் மீனாட்சி..

mercredi 2 mars 2016

உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய பதிவு

உறவு முறைகள் ....பற்றி ....
மிகவும் சிந்திக்கவேண்டிய பதிவு

----------
அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா,
பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார்,
தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு,
பெரியப்பா பையன்,
பெரியப்பா பொண்ணு,
அத்தை பையன்,
அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன், இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது, யாரும் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்
காரணம்,
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்!
அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?
பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ, எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை!
திருமணத்தின் போது அரசாணைக்கால் நட
எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை, குழந்தைக்கு மோட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்?
கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள்,
இனி யார் போவார்?
ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி
ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள்
ஒவ்வொரு ஆணும்
தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன் தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள்
அப்பா அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை,
அந்த ஒரு குழந்தையும்
வெளியூருக்கோ
இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால்
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்!
உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு
ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு
எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும்
இதே நிலைதான் !
உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!
சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம்
எனக்கு உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான் வயதான காலத்தில் அப்பா அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடிவருவார்கள்!
கணவன் குடும்பம் குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு
ஒன்று என்றால் அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு முதலில் வந்து நிற்பார்கள்!
ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்துபாருங்கள்!
பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!
ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்துவிடக்கூடது!
கார் பங்களா வசதி வாய்ப்புகளுடன்
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும்,
வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு
ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள்?

வணக்கம்.

வணக்கம்.
தமிழர்கள் சொல்லும் ‘வணக்கம்’ பல்தரப்பட்ட பொருளினை உணர்த்துகின்றது. இறைவன் முதற்கொண்டு எளிய மாந்தர் வரையிலாக எல்லாரும் வணக்கம் என்னும் சொல்லுக்கு ஏற்புடையவராக உள்ளனர். இத்தகைய உயர்வுமிக்க கருத்தின் குறியீடாக வணக்கம் அமைந்துள்ளது.
இன்றைய நாளில் இச்சொல்லின் பயன்பாட்டில் பிற இனத்தவர் பண்பாடு கலந்துவிட்டது. காலையில் சந்திக்கும்போது ‘காலை வணக்கம்’, மாலை நேரச் சந்திப்பின்போது ‘மாலை வணக்கம்’, பின்னர் இரவின்போது ‘இரவு வணக்கம்’ எனச் சொல்லும் வழக்கத்தைத் தமிழர்கள் கொண்டுள்ளனர். இவ்வாறு காலத்தை முன் வைத்து வணக்கம் சொல்லும் மரபு தமிழர்களுடையதன்று. இஃது ஆங்கிலேயரின் மரபாகும். ‘குட் மார்னிங்’ (Good morning), குட் ஆஃப்டர்னூன் (Good afternoon), குட் ஈவினிங் (Good evening) எனச் சொல்வது ஆங்கிலேயரின் வழக்கமாகும். இதனையே தமிழர்களும் பின்பற்றுகின்றனர். தமிழரின் பண்பாட்டுடன் ஆங்கிலேயர் பண்பாடு கலப்புற்றதால் ஏற்பட்ட விளைவு இது.
“இன்றைய காலைப்பொழுது நற்பொழுதாக அமையட்டும்”, என்னும் கருத்தினையே ‘காலை வணக்கம்’ என்னும் தொடர் உணர்த்துகின்றது. இத்தகைய வணக்கம் குறிப்பிட்ட ஓர் எல்லையைக் கொண்ட பொருளினை மட்டுமே உணர்த்துகின்றது. ஆனால், தமிழர்களின் வணக்கம் பரந்துபட்ட நிலையினைக் கொண்டிருக்கின்றது. தமிழர்களின் தனிப்பெரும் சிந்தனையும் பண்பாடும் சிதைந்துள்ளது. குறிப்பிட்ட காலத்தினை முன்னிட்டு வணக்கம் சொல்வது தமிழர் மரபன்று. ‘நீடுழி வாழ்க’, ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க’, என வாழ்த்துவது தமிழர் மரபு. தமிழர்களின் வாழ்வியல் மரபுக்கு முரணாக ‘காலை வணக்கம்’, ‘மாலை வணக்கம்’ போன்ற தொடர்கள் அமைந்துள்ளன.
பிறருக்கு வணக்கம் சொல்லும்போது மனம் நிறைவு கொள்கின்றது. ஏற்றத் தாழ்வுகள் ஏதுமின்றி சொல்லப்படும் வணக்கத்தால் மனிதன் பண்பாளனாக ஆகின்றான். எளிய தமிழர் வாழ்வில் வணக்கம் தொடர்பான சில பழமொழிகள் உள்ளன. ‘வணங்கின புல் பிழைக்கும்’ என்பது தமிழ்ப் பழமொழிகளுள் ஒன்றாகும். இப்பழமொழியில் கையாளப்பட்டுள்ள வணக்கம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை உணர்த்துகின்றது. விட்டுக் கொடுத்து வாழ்வது மிக உயர்ந்த பண்பாட்டுக் கூறாகும்.
பகைவரும் நமக்கு வணக்கம் சொல்வர் என்னும் அரிய தகவலைத் தருகின்றது திருக்குறள். வில்லின் வணக்கம் என்பது தீமை செய்திடும். வில்லின் தன்மை வெளிப்படையாகத் தெரியக்கூடியது. ஆனால், பகைவரின் சொல் வணக்கம் அத்தகையதன்று. பகைவரின் வணக்கம் நன்மையளிக்க வல்லது என நம்பிடக்கூடாது. இக்கூற்றினைக் கீழுள்ள திருக்குறள் எடுத்துரைக்கின்றது.
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான் (குறள் 827)
அரசன் மக்களிடம் சொல்லும் வணக்கமும் மக்கள் அரசனிடம் சொல்லும் வணக்கமும் வேறுபட்ட பொருளினை உணர்த்துகின்றன. “என்னுடைய ஆட்சியில் நற்பேறு பெற்று வாழ்வாயாக”, எனும் வாழ்த்தின் குறியீடாக அரசனின் வணக்கம் அமைந்துள்ளது. “உங்கள் ஆட்சிக்கு உட்பட்ட இந்நாட்டில் நல்வாழ்வு பெற்றுள்ளமைக்காக என் நன்றியினைப் புலப்படுத்துகின்றேன்”, என்னும் பொருளில் மக்களின் வணக்கம் அமைந்துள்ளது.
தமிழர் வாழ்வியலில் ‘வணக்கம்’ எனும் சொல் குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டுமே பயன்படுத்துவதன்று. அரசன் முதல் ஆண்டி வரை எல்லாருக்கும் உரிய பொதுச்சொல்லாக வணக்கம் விளங்குகின்றது. 

mattaver


josanai


monam


vendredi 19 février 2016

nilai


moli


koli


thanimai


illa


mlo


urimai


vali


illa


samedi 13 février 2016

சாப்பாட்டு தத்துவம்

Photo de Jayaraman Venu.


    இது சாப்பாட்டு நேரம் !.... அதனால சாப்பாட்டு தத்துவம் !.. #
    "தோல்வி என்பது பெருங்காயம் போல... தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும !
    # ஒரு குக்கரைப் போல இருங்கள்.... பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!
    ...
    # லட்சியமும் முட்டையும் ஒன்று .... தவற விட்டால் உடைந்து விடும்!!!
    # சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல.... கிள்ளி எறிந்து விட வேண்டும்!!!
    வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்!
    # பொய், நூடுல்ஸ் போல் தற்காலிகமானது: உண்மை இட்லி போல நிரந்தரமானது!!
    # கோபத்தை உப்பைப் போல பயன்டுத்துங்கள் அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!!!
    ‪#‎தலைக்கனம்‬ என்பது வெந்நீர் போன்றது...அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள் நம் மீதே சிந்திவிடும்.
    ‪#‎தன்னம்பிக்கைச்‬ சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பி போல ...சமைப்பது உங்கள் கையில்தான்!
    ‪#‎வெற்றி‬ என்பது இட்லியை போல வேகுவது தெரியாது...
    வெந்தபின் தான் தெரியும்...
    # வெற்றி என்ற இட்லியை தனியே உண்ண முடியாது...
    நட்பு என்ற சட்னி வேண்டும்..

mercredi 10 février 2016

பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன ?



நாம செய்ய வேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னு தான் நாம கடமைய மட்டும் தான் செய்யனும் அடுத்தவங்க விஷயங்கள் தெரியாம, புரியாம மூக்க நுழைக்க கூடாது

காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி.

அவர் தவத்தின் போது கண் திறக்காமல், தினமும் ஒரு முறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.
ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார்.

மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான்.

மகரிஷியும் அதை வாயில் போட்டு விழுங்கி விட்டார்.

மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான்.

மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், ‘மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா? அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உனக்கு உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு!’ என்று கூறி விட்டு போய்விட்டார்.

இதைக் கேட்ட மன்னன் நடுநடுங்கி விட்டான்.

தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருந்தினான். தான தர்மங்கள் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான்.

அரண்மனை ஆடம்பர சுகத்தை மறந்தான். தன் நாட்டிலுள்ள இளம் பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக் கூறி அனுப்பிவைத்தான்.

இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.

அரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டி விட்டனர். ‘மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்’ என்று திரித்துக் கூறினர்.

இப்படியாக பல விமர்சனங்கள் வந்த வண்ணமிருந்தன. ஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள்.

அந்த கணவன், ‘நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?’ எனக் கேட்டான்.

‘அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு’ என்று பதிலளித்தாள் அந்தப் பெண்.

அதற்கு அவளது கணவன், ‘ஓ! தானம் கொடுப்ப தாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா?’ என்றான்.

அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாயைப் பொத்தினாள்.

பின் மெதுவாக தன் கணவனிடம் கூறத் தொடங்கினாள். ‘சுவாமி! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான்.

அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்பதற்காக தயாரானது. அவ்விஷயம் மன்னனுக்குத் தெரியவரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு, கன்னியருக்கு தானதர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறான்.

ஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசிக் கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள்.

மேலும் அடுத்த பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள்’ என்று கூறினாள்.

அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அவளது கணவன். தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது.

அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும். உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக் கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.

நாம் செய்த பாவத்தை சுமக்கவே, நமக்கு இந்த ஒரு பிறவி போதுமா என்பது தெரியாத நிலையில், தேவையில்லாமல் புறம்பேசி அடுத்தவரின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன ?

mardi 9 février 2016

மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவித


மாங்கல்யம் தந்துநாநேந மம
ஜீவித
ஹேதுநா | கண்டே பத்நாமி
ஸூபகே ஸஜீவ ஸரதஸ்ஸதம் ||
இது இது மணமகன் சார்பாக சொல்வதாக
அமைந்த மந்திரம். மந்திரத்தை அய்யர் எடுத்துக்கூற மணமகனும் அக்கினி சாட்டியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். கிருத்தவத்தில் குருவானவர் சொன்னதை 'I do' என்று சொல்லி ஏற்றுக்கொள்வதைப் போலவே இதுவும்..
‘‘உன்னோடு நான்
நீடுழி வாழ வேண்டி இந்த
மங்கல
நாணை உன் அழகிய கழுத்தில்
அணிவிக்கிறேன். எல்லாப்
பேறுகளும் பெற்று நீ
நூறாண்டு
நிறைவான வாழ்க்கை வாழ
இறைவன் அருள் புரியட்டும்!’’ ||ஸோம ப்ரதமோ விவிதே
கந்தர்வ
விவிதா: உத்ட்ராஹ
த்ரியோ அஹ்னித்தெபிதீஹ||
துரியஷ்டெமனுஷ்யஜஹ :
ஷோம ததத் கந்தர்வ கந்தர்வ த த்தயன; .
யே ரயின்ஷப்பூதரம் ஸ்காதத்
அக்னிர்மஹைமதோ இமாம்.

-★. இதன் பொருள்:★

"முதலில் சோமன் (சந்திரன்)
உன்னை
பாதுகாத்தான
பின் கந்தர்வன்
உன்னை பாதுகாத்தான் மூன்றாவதாக அக்னி
உன்னை
பாதுகாத்தான்
நான்காவதாக
மனிதனாகிய நான் உன்
பாதுகாவலன் ஆகிறேன்" இதன் உட்பொருள்:
1. ஒரு பெண் குழந்தை
பிறந்து
தானாக ஆடைகளை
அணியும் பருவம் (4 - 5 வயது)
வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை
ஒத்த
குணங்களை பெற்று
வளர்கிறது.
ஆகவே இப்பருவம் சந்திரனின்
ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம்
எனப்படுகிறது .

2. கந்தர்வன் என்பது
இசைக்கும்,
கேளிக்கைக்கும்
அழகியலுக்கும்
அதிபதியாக சொல்லப்படும்
தேவதை. ஒரு பெண்குழந்தையின் 5 - 11
வயது காலம் என்பது
குறும்பும், அழகும் நிரம்பி
வழிய, கள்ளம் கபடம் இல்லாமல்
துள்ளி திரியும் காலம்.
ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில்
(பாதுகாவலில்) இருக்கும்
பருவம் எனப்படுகிறது.

3. அதன் பின் 11 - 16 வயது
பருவ
காலம், உடலில்
ஹோமோன்களின்
மாற்றத்தால் உடலமைப்பு
மெல்ல மாற உஷ்ண அழுத்த
மாற்றங்கள்
ஏற்பட்டு பூப்படையும்
பருவம்.
காமவெப்பம் மெல்ல உடலில்
தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது
அக்னி
(வெப்பம்) யின் ஆதிக்கத்தின்
கீழ் வரும் பருவம்
எனப்படுகிறது
இப்படி ஒவ்வொரு பருவத்திலும்
ஒவ்வொரு தேவதைகளின்
அருளால்
பெண்மைக்குரிய
அம்சங்களை
எல்லாம் பெற்று மங்கையாய் அமர்ந்திருக்கும்
உனக்கு குறைவிலா நலமே
தர
இப்போது மானிடன் நான்
உன்
பாதுகாவலன்்ஆகிறேன். இது தான் இந்த
வேதமந்திரத்தின்
உட்பொருள். பசுபதி ..... பசு
என்றால்
ஆன்மா பதி என்றால்
காப்பவன். இதுவே திருமண
மந்திரத்திற்கான விளக்கம்.

உருவத்தை பார்த்து யாரும் யாரையும் எடைபோடாதீர்கள்.



படித்த போதே என்னை கண்கலங்க வைத்த. அழகான குட்டி உன்மை கதை படிக்கும் போது பாருங்கள் . உங்களை கூட உணர்ச்சிவச பட வைக்கும்.}
24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"
மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!" அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார்.
ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்.
மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.
"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்.
இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் "நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்" அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார். "நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.
என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."
அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம். சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.
'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடைபோடாதீர்கள்.

lundi 8 février 2016

கர்மவினை


கர்மவினை
"""""""""""""""""
ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்குஅன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்!!
ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான்.அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது!! மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது!! சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு பிராமணன் அதனால் இறந்து போனான்.
இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை! பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன்! அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல்தானே அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்??
குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின் "சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே ! இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்கவேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும்" என்றான்!! சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான்.
அதே நாடு நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் தேடினர். அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலைநீட்டிக் காட்டினாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை ! அவள் அந்த அந்தணர்களிடம் " கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் அந்தணர்களை சாகடிப்பது போலத் தெரிகிறது" என்றும் சொன்னாள் !!
அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.
நீதி: உனக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பற்றி, உனக்கு துன்பம் இழைக்காதவரைப் பற்றி, சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசாதே!!

வீட்டு பூஜை குறிப்புகள் - 20


Photo
வீட்டு பூஜை குறிப்புகள் - 20

1. தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கட...வுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.

2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.

3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும்.

அதனால் எந்தவித நோயும் வராது.

விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது.

தூய்மையான காற்றும் கிடைக்கும்.

4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள்.

இது இறை சக்தியைக் குறைக்கும்.

அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது.

மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.

6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும்.
மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும்.

அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.

7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும்.

இது துவாதசன தரிசனம் எனப்படும்.

8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.

10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.

11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது.

இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.

12. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது.

மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம்.

13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது.

14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும்.

இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

16. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும்.

எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.

17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.

18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.

19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது.

தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.

20. ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.

அர்ச்சனை பொருட்களும், அவற்றின் அர்த்தங்களும்...

Photo


அர்ச்சனை பொருட்களும், அவற்றின் அர்த்தங்களும்....

நாம் அனைவரும் கோயிலுக்கு செல்லும்போது, தெய்வத்திற்கு அபிஷேகத்திற்காகவும், அர்ச்சனை செய்யவும் பூஜை பொருட்கள் வாங்கிசெல்வோம்.

ஆனால் நாம் வாங்கி செல்லும் பூஜை பொருட்கள், எதற்காக வாங்குகின்றோம் அதன் அர்த்தமும், தத்துவமும் என்னவென்று நம்மில் பலருக்கு தெரியாது.

சில பூஜை பொருட்களுக்கான அர்த்தத்தையும், தத்துவத்தையும் பார்க்கலாம்.

தேங்காய் :

தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும், கடினமாகவும் இருக்கும்.

அதை இரண்டாக உடைக்கும்போது வெண்மையான தேங்காய் பருப்பும், இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது.

அதுபோல் அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும்பொழுது வெண்மையான மனமும், அதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் இனிமையாகவும், அன்பாகவும் இருக்கும்.

விபூதி(திருநீரு) :

சாம்பலின் மறுபெயரே விபூதி ஆகும்.

நாமும் இதுபோல் ஒரு நாளைக்கு சாம்பல் ஆகப்போகிறோம்.

ஆதலால் நான் என்ற அகம்பாவமும், சுயநலம், பொறாமை இருக்ககூடாது என்ற எண்ணத்தையும், சிந்தனையும் நமக்கு உணர்த்தவே, விபூதியை நெற்றியிலும், உடம்பிலும் பூசிக்கொள்கிறோம்.

வாழைப்பழம் :

வாழைப்பழத்தின் நடுவே கருப்பு கலரில் மிகச்சிறியதாக விதைகள் இருக்கும்.

ஆனால் முளைக்காது. ஏனென்றால் உலகத்தில் உள்ள எந்த வாழைப்பழ விதையும் பெரும்பாலும் முளைக்காது.

ஆதலால் எனக்கு இந்த பிறவியிலேயே முக்தியை கொடு வேறு பிறவி வேண்டாம் என அருள் பெறவே வாழப்பழத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம்.

அகல் விளக்கு :

ஒரு மின்சார விளக்கினால் மற்றொரு மின்சார விளக்கை ஒளிர வைக்கமுடியாது.

ஆனால் ஒரு அகல் விளக்கினால் மற்றொரு அகல் விளக்கை ஒளிர வைக்கமுடியும்.

அதுபோல் நாம் வாழ்ந்தால் மட்டும் போதாது, அடுத்தவரையும் வாழ வைக்கவேண்டும் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவே அகல் விளக்கை ஏற்றுகின்றோம்.

samedi 6 février 2016

ஒரு கவளம் சோறு,,,,,

    ஒரு கவளம் சோறு,,,,,
    ====================
    காலையில இருந்தே நிறைய வேலை,,,
    உடம்புக்கு வேறே எதோ சரில்லை லக்ஷ்மி க்கு
    ...
    லக்ஷ்மி,,,,ன்னு வீட்டு காரங்க கூப்ட
    குரல் கேட்டு,,,,இதோ வந்துட்டேங்க,,,ன்னு
    சரியாய் நடக்க கூட முடியாத அளவுக்கு,,,,உடம்பு வேதனை,,,என்ன செய்ய,,,ரெண்டும் பொம்பள
    புள்ளைங்க ஆய்டுச்சு,,,,
    முழுசா நாலு வீட்ல வேலை செஞ்சாத்தான்,,,
    ஒரு வேளை கஞ்சி வைத்துக்கும்,,,,
    புள்ளைகளுக்கு பாலும் ரொட்டியும்
    வாங்கி தர முடியும் ரெண்டு வேளை,,,,
    ஏனோ,,அந்த வாரமே,,,,வருமானம்,,ரொம்ப கம்மியா போயிடுச்சி,,,,
    அவளுக்கும்,,கஞ்சிக்கில்லாமே,,
    போனதோட புள்ளைகளுக்கும்,,,
    அறை வயிறா போச்சு,,,,
    சின்ன புள்ளைக்கு பால் கொடுத்து,,,
    பசியடங்க வச்சாலும்,,,,பெரிய புள்ள,,,
    ஒரு வேளை வச்ச கஞ்சியையும்
    குடிக்க மாட்டேங்குது,,,
    ,,,,கடையிலேர்ந்து கடனா வாங்கியாந்த
    ரொட்டியயும் சாப்பிடமாட்டேங்குது,,,
    ஒரு வாரமாவே எதையோ,,,எழந்தமாதிரி,,
    பாத்து யோசிக்குது,,,,உடம்புக்கு எதோ
    வெசனமோ ன்னு யோசிச்சப்பத்தா,,,
    பக்கத்து வீட்டு மேரியக்கா சொன்னாக,,,,
    புள்ளைகள,,பாக்கற வைத்தியரு டவுனுல
    யாரோ புதுசா யெலவச மருத்துவம் பாக்கறாகன்னு,,,
    அப்பனில்லாத புள்ளைகள வளத்து
    கரை சேக்கறதுகுள்ள அவளுக்கும் யெதுவும் ஆயிடக்கூடாதுங்குற ரோசனையுங்கூட,,,
    நல்ல வெய்யிலு,,
    வேலை விட்டு பாதியிலேயே ஓடியாந்து,,,
    புள்ளைகள கூட்டிகிட்டு பஸ் ஹ புடிச்சி,
    ஒரு வழியா ஆஸ்பத்திரிக்கு போயி சேருறப்போ ,,,மணி,,,சாயங்காலம்,,,நால,,,
    தொட்டுடிச்சி,,,,
    வரசையில நின்னு டோக்கன வாங்கியாந்து
    புள்ளைய டாக்டராண்டாம் காமிக்கும்போது
    மணி எழ தாண்டிருச்சி,,,
    லக்ஷ்மி டாக்டரிடம்
    டாக்டர் அய்யா ,,,,,இது என்னோட மூத்த பொண்ணு,,,,,
    எதிலேயுமே ஒரு ஆர்வம் இல்லாமே இருக்கா,,,
    கடந்த ஒரு வாரமா என்ன கொடுத்தாலும் சரியா சாப்பிடமாட்டேங்கறா எதையோ எழந்த மேனிக்கு யோசிக்கிறா,,ன்னு சொல்ல,,,
    டாக்டர் அந்த குழந்தையை பரிசோதனை
    பண்ணி பார்த்துட்டு,,
    லக்ஷ்மி,,கிட்டே,,,
    பசிக்கிறதுக்கு இதுல மருந்து எழுதிருக்கேன்,,
    அதுகூட ஊசியும் எழுதிருக்கேன்,,
    கொஞ்சம் மருந்து கடையில இருந்து
    வாங்கிட்டு வாங்க
    ஊசி போட்டுட்டு பின்ன மருந்து சாப்டான்னா பசியெடுக்கும்
    அப்புறம்,,நல்லா சாப்பிடுவான்னு சொன்னதை கேட்டு,,,
    லக்ஷ்மி மருந்து வாங்கி வர கடைக்கு போன தருணம்,,,
    ,,,,,அக்குழந்தை,,டாக்டரிடம் கேட்டது,,,
    "டாக்டர் பசிக்காம இருக்க மருந்து எதாச்சும்,,இருக்கா டாக்டர்,,,",,என்று கேட்ட அப்பெண்ணை,,,
    அதிசயத்துடன்,,உற்று பார்த்தபடியே
    புரிந்து கொண்டார் அவர்களின்,,
    வறுமை நிலையினை,,,,,,,,
    "ஒரு கவளம்,,சோறு கூட இல்லாத நிலையில் தன் பிள்ளைகளுக்கு பாலுட்டிய தாயானவள் தன் வயிற்றில் கட்டினாள் ஈரத்துணி"
    அதை புரிந்த அந்த மகவு,,,,இறைவனிடம் இறைஞ்சினாள் வறுமையிலும் கொடுமையான வரமொன்றை ,,அதுவே பசியின்மை என்னும் சாபம்,,,," 

நெஞ்சைத் தொட்ட கதை

        இது ‘சுட்ட’ கதை!! நெஞ்சைத் தொட்ட கதையும்கூட!!!
        அது பெரிய இடத்து மனிதர்களுக்கான ஒயின் கடை.
        நேரம், நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது.
        ...
        கப்பல் மாதிரியான ஒரு காரில் வந்திறங்கினார் ஒரு தொழிலதிபர்; தனக்குத் தோதான இடத்தில் அமர்ந்தார். தனக்குத் தேவையானதை ஆர்டர் செய்துவிட்டுத் தற்செயலாகத் திரும்பியவர் திடுக்கிட்டார். காரணம்.....
        நான்கு இருக்கைகள் தள்ளி ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் கடவுள்! வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவராக இருந்தார் அவர்.
        கடவுள்கூட இங்கெல்லாம் வருவாரா என்று ஆச்சரியப்பட்டார் தொழிலதிபர்; அவருக்குக் காணிக்கையாக ஏதாவது செலுத்திப் புண்ணியம் தேடிக்கொள்ள விரும்பினார்; பணியாளரைக் கூப்பிட்டு, “அதோ அங்கே அமர்ந்திருக்கும் கடவுளுக்கு ஒரு கோப்பை மது கொடு. பில்லை என் கணக்கில் சேர்த்துவிடு” என்றார். பணியாளரும் அப்படியே செய்தார்.
        சிறிது நேரத்தில், இன்னொரு பெரிய மனிதர் வந்தார். அவரும் கடவுளை அடையாளம் கண்டுகொண்டு, பணியாளரிடம், “கடவுளுக்கு அரை பாட்டில் மதுவைக் கொடுத்துவிட்டுப் பில்லை என் கணக்கில் சேர்த்துக்கொள்” என்றார்.
        அடுத்து, ஒரு பெரிய அரசு அதிகாரி அங்கு வந்தார்; மற்ற இருவரைப் போல அவரும் கடவுளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, “கடவுளுக்கு என் கணக்கில் ஒரு முழு பாட்டில் மதுவைக் கொடு” என்று பணியாளரிடம் சொன்னார்.
        நடந்தவற்றைக் கவனித்துக்கொண்டிருந்த கடவுள் இவர்களை அணுக, மூன்று பேரும் எழுந்து நின்று பவ்வியமாகக் கடவுளை வணங்கினார்கள்.
        ஒரு கோப்பை மதுவைத் தன் கணக்கில் கொடுத்த தொழிலதிபரின் தலையில் கை வைத்துக் கடவுள் ஆசீர்வாதம் செய்தார்.
        “ஆண்டவா, என்னே உன் கருணை! வருடக் கணக்கில் எனக்கிருந்த ஒற்றைத் தலைவலி பறந்துவிட்டது” என்று மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினார் அவர்.
        அடுத்ததாக, அரை பாட்டில் மதுவை அளித்த பெரிய மனிதரின் தோள்களில் ஆண்டவன் தம் கைகளை வைக்க, “தேவனே, பிறந்ததிலிருந்து விளங்காமலிருந்த என் ஒரு கை தங்களின் திருக்கரங்கள் பட்டதும் செயல்பட ஆரம்பித்துவிட்டது. என்னே உங்கள் கிருபை!” என்று மேனி சிலிர்த்தார்.
        கடவுள் மூன்றாமவருக்கு அருள்பாலிக்கத் தம் கையை உயர்த்தியபோது, “பகவானே, வேண்டாம். தயவு செய்து எனக்கு அருள்பாலிக்க வேண்டாம். நான் ஓர் அரசு அதிகாரி. உயர் பதவியில் இருப்பவன். உடல் ஊனமுற்றவர் கோட்டாவில் எனக்கு வேலை கிடைத்தது. தங்கள் கருணையால் என் கால் ஊனம் சரியாகிவிட்டால் என் வேலை போய்விடும்” என்று சொல்லி எகிறிக் குதித்து ஓடிவிட்டார் அவர்.
        “சே, நான் எல்லாம் அறிந்தவன் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன். அது எவ்வளவு பெரிய தவறு” என்று முணுமுணுத்துக்கொண்டே இடத்தைக் காலி செய்தார் கடவுள்!

vendredi 29 janvier 2016

படித்து அறிந்தது #



படித்து அறிந்தது #

ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்... பூனைக்

இதனின் ௨ட்பொருள். ஆனையைப் பிரித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிபடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து ௨டலில் சோ்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது...

பூனைக்கு என்பதை, பூ + நெய் என்று பிரித்துப் பார்க்கும் போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அா்த்தமாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் ௨ணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.

பழமொழியின் பொருள்:

நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல்... தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம், ஆயுளும் வளரும்
கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்...இது ஒரு பழமொழி... ஆனால்... இது ஒரு மருத்துவக் குறிப்பு.