வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம் வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது. saveiour@gmail.com
jeudi 9 mai 2013
சந்தோஷங்கள் மாறுவதில்லை.
கவலையோ குழப்பமோ இன்றி ஒவ்வொரு நாளையும் வரவேற்று, தனக்கு விதிக்கப்பட்ட செயல்களை செய்து, சந்தோஷமாக, பயமற்று வாழுங்கள். நல்ல நண்பர்களை உருவாக்குங்கள், நல்ல நினைவுகளை எண்ணி மகிழுங்கள், காலம் மறைவதை புறக்கணியுங்கள், எதிர் காலத்தை மட்டும் பாருங்க...ள் வாழ்வில் சிறந்தது இனிமேல்தான் வரப்போகிறது.
வயதான காலத்தை அரவணைத்து நேசியுங்கள். அதை எப்படி நேசிப்பது என்று உங்களுக்கு தெரிந்தால் அதில் சந்தோஷம் மிதமிஞ்சி இருக்கிறது. மெதுவாக கடந்து செல்லும் வருடங்கள்தான் ஒரு மனித வாழ்வில் மிக இனிமையானவை. அவை இறுதியை அடைந்துவிட்டாலும் அதன் சந்தோஷங்கள் மாறுவதில்லை.

உண்மை உங்களுக்கு
கோழைகள் இறப்பதற்கு முன்பே பல தடவைகள் இறந்துவிடுகிறார்கள் ஆனால் வீரன் ஒருதடவைதான் இறக்கிறான். மரணம் ஒரு தேவையான முடிவுதான் எப்போது வரவேண்டுமோ அப்போது வந்துவிடும். அந்த அழைப்பு ஒன்றுமட்டுமே நிராகரிக்க முடியாத அழைப்பாகும்.
கால வெளியில் ஒரு கண...த்திற்கும் குறைவானது நம் வாழ்க்கை. அது பசுமையானது, வசந்தமானது, மிக சுருக்கமானது, ஒரு நாள் கல்லை உதைத்தவுடன் அதன் அடியில் இருந்து பறக்கும் பூச்சி போல பறந்துவிடும்.
உலகில் உயிருடன் வலம்வரும் அனைவரும் பூமிக்கு அடியில் உறங்குவோருடன் ஒப்பிட்டால் மிகவும் ஒரு சிலர்தான். இயற்கையின் போதனையை அமைதியாகக் கேட்டால் இந்த உண்மை உங்களுக்கு அழகாக விளங்கும்.

mercredi 8 mai 2013
நிச்சயமானது, நம்பகமானது
வாழ்க்கையைப்பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிகிறது என்பதைவிட நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். அடுத்தவர் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, தவறு செய்யாமல் இருப்பவர்கள் துன்பங்களில் சிக்குப்படமாட்டார்கள். நிச்சயமற்ற இந்த உலகில் மனித அனுவம் என்ற கடந்த காலச் சரித்திரமே நமக்கு தெரிந்தவற்றிலேயே நிச்சயமானது, நம்பகமானது
தீமை தரும் வார்த்தை
உங்களைப் பார்த்தால் முதுமையாக இருக்கிறது.. அடடா நோயாளியாக மாறிவிட்டீர்கள் என்று மோசமான கருத்துக்களை மற்றவர்களை நோக்கி துப்பக்கூடாது. குப்பைத் தொட்டிக்குள் போடும் அருவருப்பான வார்த்தைகளை மற்றவரை நோக்கி உழிழக்கூடாது. அப்படிச் செய்தால் பாதிக்கப்படுபவரை விட உங்கள் மனமே அழுக்குக் கூடையாகும்.
மற்றவர்களை நோக்கி தகாத தூஷண வார்த்தைகளை சொல்லித் திட்டிய எவரும் தன்னளவில் நலமாக இருந்தாக சரித்திரம் கிடையாது. ஆகவே நல்ல வார்த்தைகளை பேசுங்கள் நீங்கள் நல்லவர்களாக மாறுவீர்கள். நாகாஸ்திரம் என்பது நாக்கில் இருந்து வரும் நஞ்சு தடவிய வார்த்தைகளே என்பதை உணர வேண்டும்.
தீமை தரும் வார்த்தைகளை ஒரு காலமும் உணர்ச்சி வசப்பட்டு சொல்லக்கூடாது, சொன்னால் இதயத்தின் ஆழத்தில் விழுந்து அது தீமைகளை விளைவிக்கும்.
வெற்றிகரமான வாழ்க்கை
நல்ல பெயர்கள் நம்முடைய வாழ்க்கையை வழி நடாத்துகின்றன.. மக்கள் திலகம் என்ற பெயர் எம்.ஜி.ஆரை தமிழக முதல்வராக்கியது, நடிகர் திலகம் என்ற பெயர் சிவாஜியை ஆசிய – ஆபிரிக்க சிறந்த நடிகராக்கியது. காந்தி என்ற பெயர் காந்தம் போல மக்களை கவர்ந்து இந்திய சு...தந்திரத்தையே பெற்றுக் கொடுத்தது..
கம்பன் என்ற பெயருக்குள் கம்பராமாயணமே இருக்கிறது..
வள்ளுவன் என்ற பெயருக்குள் திருக்குறளே இருக்கிறது..
இளங்கோவடிகள் என்ற பெயரில் சிலப்பதிகாரம் இருக்கிறது..
ஒளவை என்ற பெயருக்குள் பெண் அறிஞர் இருக்கிறார்..
பிரபாகரன் என்ற பெயருக்குள் உலகப் புகழ்பெற்ற தன்மான வீரன் இருக்கிறான்..
இவைகள் வெறும் பெயர்கள் அல்ல வெற்றிகரமான வாழ்க்கை

mardi 7 mai 2013
mercredi 1 mai 2013
சிந்திக்கப் பழக வேண்டும்.
ரயில் தண்டவாளத்தில் சிக்குப்பட்டுவிட்டான் ஒருவன். நள்ளிரவு நேரம்..! காப்பாற்ற எவரும் வரவில்லை. தூரத்தே ரயில் வண்டி வருகிறது. மரணம் ஏறத்தாழ நிச்சயமாகிவிட்டது. என்ன செய்யலாம்.. பாக்கட்டை பார்த்தான் சிகரட் கொழுத்தும் லைட்டர் மட்டும் இருந்தது. ...அதை கொழுத்தி கையில் பிடித்து அங்கும் இங்கும் ஆட்டினான்… யாரோ நிற்பது தெரிந்து ரயில் நின்றது. சிகரட் பற்ற மட்டும் பயன்படும் என்ற லைட்டரின் பாவனையை மாற்றி சிந்தித்த காரணத்தால் அவன் உயிர் தப்பியது. ஆகவே எப்போதும் மாற்றி சிந்திக்கப் பழக வேண்டும்.
மலர்த்தோட்டமாக மாறும்
அன்பைக் கொடுத்தவர்கள் தோற்றதில்லை,
ஆறுதலைக் கொடுத்தவர்கள் இழந்ததில்லை,
மன்னிப்பைக் கொடுத்தவர்கள் துன்புற்றதில்லை,
புரிந்து கொண்டவர்கள் சண்டையிட்டதில்லை,
நேசித்தவர்கள் நஷ்டப்பட்டதில்லை.
இதைத் தொடர்ந்து சொன்னால் ஆறுதல், நேசம், புரிதல், மன்னிப்பு, அமைதி, அன்பு, மனத்தெளிவு, நம்பிக்கை ஆகிய வளமைகள் நம்மிடம் சேரும்.
நல்ல மன உணர்வுகள் என்ற வளமைகள் மலர்ந்தால் நாம் வாழும் இடம் மலர்த்தோட்டமாக மாறும்.

அவர்களின் ஊதியத்தை கொடுத்திடுங்கள்…
ஏழை உழைப்பாளர்கள் உழைத்துகொண்டே தான்
இருக்கிறார்கள்…
ஆனால்
ஊதியம் மட்டும் மிஞ்சுவதேயில்ல…!
உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்தது உடல்
அதில் மிஞ்சும் காசுக்கு
...தேய்ந்த உடலை தேத்தக் கூட முடிவதில்லை..!
உழைப்பாளர்களை காணும்போது உற்று கவனியுங்கள்…
அவர்கள் உடலின் ஒவ்வொரு
எலும்பிலும் ஏக்கம் தெரியும்…
எத்தனை உழைத்தபோதும் இந்த
எலும்பு மட்டுமே மிஞ்சுகிறது; என,
உழைப்பவர்களுக்கு அவர்கள்
வியர்வை உலர்ந்து விடுவதற்குள்

lundi 22 avril 2013
lundi 15 avril 2013
நல்லதையே நினைப்போம்.நல்லதே செய்வோம்.நல்லதே நடக்கும்.
நமது நாட்டில் இன்றும் நல்ல நாள்,கெட்ட நாள் பார்க்கிறார்கள்.ஏதேனும் திருமணம் அல்லது விழாக்கள் என்றால் சுபமுகூர்த்த தினங்களில் வைக்கிறார்கள்.அதுவும் நல்ல நேரத்தில் மட்டுமே அந்த விழாவை நடத்துகிறார்கள்.
நமது பெரியோர்கள் ஒவ்வொரு கிழமைக்கும் ஒர...ு ராசிபலன் வைத்திருக்கிறார்கள்.
1. ஞாயிறு-நாய் படாத பாடு:
சாதாரணமாக ஒரு விலங்கின் ஏதேனும் ஓர் உறுப்பு செயலிழந்தாலோ அல்லது நாம் அதனை கடுமையாக அடித்துப் போட்டாலோ சீக்கிரத்திலேயே இறந்துவிடும்.ஆனால் நாய்கள் அப்படியில்லை.நான்கு கால்களையும் இழந்த நாய் கூட ஊர்ந்து சென்றாவது தன் உணவைத் தேடிக்கொள்ளும்.
அடிப்பட்டு முகத்தையே இழந்த நாய்கள் கூட பல மாதங்கள் உயிர் வாழ்ந்ததைப் பார்த்திருக்கிறேன்.அதாவது நாய்களுக்கு அடிப்பட்டாலோ அல்லது அவைகளுக்கு உணவே கிடைக்கவில்லை என்றாலும் கூட அவைகள் சீக்கிரத்தில் சாவதில்லை.
“நாய் பட்ட பாடு” என்றால் அவை சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் துன்பப்படுவதுதான்.”நாய் படாத பாடு” என்றால் அவைகள் பட்ட துன்பங்களையும் தாண்டியது.
ஞாயிற்றுக் கிழமைகளில் ஏதேனும் ஒரு காரியத்தை தொடங்கினால் குறிப்பாக திருமணம் செய்துகொண்டால் “நாய் படாத பாடு” என்பது ஐதீகம்.
2. திங்கட்கிழமை:
திங்கட்கிழமை பொதுவாக நல்ல நாளும் இல்லை கெட்ட நாளும் இல்லை.சுபமுகூர்த்த நாளாக இருந்தால் நல்ல நாள்.அவ்வளவுதான்.இது நமக்கு அவ்வளவாக தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
3. செவ்வாய்-வெறும் வாய்:
செவ்வாய் கிழமைகளில் முதன்முதலில் ஒரு கரியத்தைத் துவக்கினால் அந்த காரியத்தால் நமக்கு எந்த அனுகூலமும் இல்லை.குறிப்பாக தொழில் தொடங்கவே கூடாது.
4. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது:
அதாவது புதன் கிழமையை வீணடிக்கக் கூடாது.நல்ல காரியங்களை புதன் கிழமைகளில் துணிந்து செய்யலாம்.
5. வியாழன்-விருந்து என்று கூட மருந்து சாப்பிடக் கூடாது:
வியாழனில் வைத்தியம் பார்த்தால் அந்த நோய் குணமாவது கடினம் என்பது ஐதீகம்.
6. மங்கள வெள்ளி:
வெள்ளிக் கிழமைகளில் செய்யும் காரியம் மங்களகரமாக முடியும்.கடுமையான வேலைகள் கூட எளிமையாக முடியும்.விடியாத காரியம் கூட விடியும்.
7. சனி போனால் தனியாக போகாது:
சனிக் கிழமைகளில் யாரேனும் இறந்தால் விரைவிலையே அவரின் குடும்பத்தில் வேறு ஒருவர் இறப்பார்.இவ்வாறாக ஒரு நம்பிக்கை உண்டு.சனிக்கிழமைகளில் வெளியூர்களுக்கு கிளம்பி சென்றால் விபத்துகள் ஏற்படலாம்.
இவ்வாறாக ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு ராசிபலன் உள்ளது.இவைகள் முன்னோர்களின் ஐதீகங்கள்.ஆனால் இதையெல்லாம் கேட்டுக்கொண்டு நாட்களை வீணடிக்காதீர்கள்.
"நலிந்தவனுக்கு நாள் கிழமை கிடையாது" என்பது பழமொழி.நலிந்தவன் என்பவன் இறைவனுக்கு முன் தன்னையே வெறுமையாக்கிக் கொள்பவன்.இறை நம்பிக்கை இருந்தால் எந்நாளையும் நல்ல நாளாக மாற்றலாம்.
நல்லவர்களுக்கு எல்லா நாளும் நல்ல நாளே.நாம் ஒரு செயலை செய்யும்போது நல்லதையே நினைத்து செய்யும்போது நல்லதே நடக்கும்.ஒவ்வொரு நிமிடமும் நல்ல நேரமாகவே இருக்கும்.

மூத்த குடி
கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி
விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.

கண்களை பத்திரமா பார்த்துக்கோ
ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத பெண்ணை லவ் பண்ணினான்.
அந்த பெண் "என்னை கை விடமாட்டியே " என்று கேட்டாள் .
அவன் "நிச்சியமாக உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் " என்று சொன்னான் .
... ஒரு நாள் அந்த பெண்ணிற்கு ஆபரேசன் நடந்து பார்வை வந்துவிட்டது .
அப்போ பையன் கேட்டான் " இப்போ கல்யாணம் செய்து கொள்ளலாமா" ?
அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி .
அந்த பையனுக்கு பார்வை இல்லை.
அதனால அந்த பெண் கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொல்லிவிட்டாள்.
சிறுது தூரம் சென்ற பிறகு அவன் அவளிடம் சொன்னான் .
" என்னை கல்யாணம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை என்னுடைய இரு கண்களை பத்திரமா பார்த்துக்கோ "

vendredi 12 avril 2013
lundi 8 avril 2013
யோகி.
தனக்குள் சிரிப்பவன் ஞானி .
தனக்குத்தானே சிரிப்பவன் பைத்தியம்.
தன்னை மறந்து சிரிப்பவன் ரசிகன்.
தன்னை நினைத்துச் சிரிப்பவன் காதலன்.
பிறரைப் பார்த்துச் சிரிப்பவன் கர்வி.
பிறருக்காகச் சிரிப்பவன் கயவன்.
...பிறர் நோகச் சிரிப்பவன் கொடியவன்.
பிறர் காணச்சிரிப்பவன் கோமாளி.
சிரித்துக் கொண்டே வெற்றி பெறுபவன் மதியூகி.
வெற்றி பெற்றாலும் சிரிக்காதவன் கர்ம யோகி.

பழமொழி
பழமொழி
ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்.
விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும்.
அதாவது நம் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை க...ொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால் அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது.

mercredi 3 avril 2013
dimanche 24 mars 2013
திருமண பொருத்தங்கள்
திருமணம் செய்ய இருக்கும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கீழ்கண்ட பொருத்தங்கள் பார்த்து திருமணம் நடத்தி வைப்பது வழக்கம்.
1. தினப் பொருத்தம்: மணப் பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து துவங்கி மணமகன் நட்சத்திரம் வரை எண்ணி அந்தக் கூட்டுத் தொகையை ஒன்பதால் வகுத்தால்.ஈவு 2-4-6-8-9 என்று வருமானால் இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தத்தை இன்னொரு வகையிலும் கணக்கிடலாம். அதாவது பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணிக்கொண்டு வரும்போது அந்த எண் தொகை 2-4-6-8-9-11-13-15-17-18-20-22-26-27 என்று வருமானால் இதுவும் தினப் பொருத்தம்தான் என்று சொல்வார்கள். மணமகன்இ மணமகள் இருவருக்கும் ஒரே நட்சத்திரமானால் அதுவும் தினப் பொருத்தம்தான். ஆனால் பரணி ஆயில்யம் சுவாதி கேட்டை மூலம் அவிட்டம் சதயம் பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இருவருக்கும் ஒன்றாக இருக்குமானால் இது பொருந்தாது என்பதும் ஒரு கணிப்பு. மணமகள் மணமகன் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருக்கும் பட்சத்தில் மணமகனுக்கு அந்த நட்சத்திரத்தில் முதல் பாதமாகவும் மணமகளுக்கு அடுத்த பாதங்களில் ஏதாவதொன்றாகவும் அமையுமானால் அது சுபப் பொருத்தம் என்று கொள்ளப்படுகிறது. உதாரணமாக இருவருக்கும் கிருத்திகை நட்சத்திரம் என்று இருக்குமானால் மணமகனுக்கு கிருத்திகை முதல் பாதம்; மணமகளுக்கு கிருத்திகை 2-3 அல்லது 4-வது பாதம் என்று இருந்தால் மணமகனுக்கு மேஷ ராசியாகவும் மணமகளுக்கு ரிஷப ராசியாகவும் இருக்கும். இதில் மேஷ ராசி முதலில் வருகிறது என்பதால் இந்தப் பொருத்தமும் ஏற்புடையதுதான்.
அதேபோல மணமகனுக்கும் மணமகளுக்கும் ஒரே ராசியாக இருந்து அதில் மணமகனுடைய நட்சத்திரம் முதலில் இருக்குமானால் இதுவும் சரியான பொருத்தமாகத்தான் கொள்ளப்படுகிறது. உதாரணமாக மணமகன் மணமகள் இருவருக்கும் மிதுன ராசி என்று வைத்துக்கொள்வோம். இந்த ராசியில் உள்ள நட்சத்திரங்களில் (மிருக சீரிஷம் 2-3-ம் பாதங்கள் திருவாதிரை மற்றும் புனர்பூசம் 1-2-3-ம் பாதங்கள்) மணமகனுக்கு மிருக சீரிஷமாக இருந்து மணமகளுக்கு திருவாதிரை அல்லது புனர்பூசமாக இருக்குமானால் இந்தப் பொருத்தமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

2. கணப் பொருத்தம்: மூன்றுவகை கணங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1. தேவ கணம் 2. மனித கணம் 3. ராட்சஸ கணம்.
தேவகணத்தில் அசுவினி மிருக சீரிஷம் புனர்பூசம் பூசம் ஹஸ்தம் ஸ்வாதி அனுஷம் திருவோணம் ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் அடங்கும். மனித கணத்தில் பரணி ரோகிணி திருவாதிரை பூரம் உத்திரம் பூராடம் உத்திராடம் பூரட்டாதி உத்திரட்டாதி ஆகியவை அடங்கும். ராட்சஸ கணத்தில் கார்த்திகை ஆயில்யம் மகம் சித்திரை விசாகம் கேட்டை மூலம் அவிட்டம் சதயம் இவை அடங்கும். இவற்றில் மணமகன் மற்றும் மணப்பெண் இருவரும் ஒரே கணத்தைச் சேர்ந்தவர்களானால் இருவருக்கும் மணம் செய்விக்கலாம். இருவருக்கும் முறையே தேவகணம் மனித கணமாக இருந்தால் இதுவும் கணப்பொருத்தம்தான். மணமகன் ராட்சஸ கணத்தைச் சார்ந்தவராக இருந்து மணமகளும் அதே கணத்தவளாக இருந்தால் மணமகளின் நட்சத்திரத்திலிருந்து மணமகனுடைய நட்சத்திரம் பதினான்காவதாக இருக்குமானால் இதுவும் கணப்பொருத்தம் என்றே கொள்ளலாம். மணமகள் ராட்சஸ கணமாகவும் மணமகன் தேவ கணமாவோ மனித கணமாகவோ இருத்தல் கூடாது. ஆனால் மணமகள் மனித கணமாகவும் மணமகன் ராட்சஸ கணமாகவும் இருந்தால் இந்தப் பொருத்தம் சரியானதே.
3. மகேந்திரப் பொருத்தம்: பெண் நட்சத்திரம் துவங்கி ஆண் நட்சத்திரம் முடிய வரும் எண்ணிக்கை 4-7-10-13-16-19-22-25 என்று அமையுமானால் இது மகேந்திரப் பொருத்தம் எனப்படும். இந்தப் பொருத்தத்தின் மூலம் மணமக்களின் தாம்பத்திய வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அதாவது புத்திர பாக்கியம் நிறைவானதாக இருக்கும்.
4. பெண் தீர்க்கப் பொருத்தம்: மணப்பெண் நட்சத்திரம் துவங்கி மணமகன் நட்சத்திரம் வரையிலான எண்ணிக்கை ஏழுக்கு மேல் இருக்குமானால் பெண் தீர்க்கப் பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்த எண்ணிக்கை 13க்கு மேல் இருப்பின் மிக மிகப் பொருத்தம் என்று கூறுவதுண்டு ஏழு என்ற எண்ணிக்கை பொருத்தமானது என்றும் அதற்கு மேல் அதிகரிக்கக்கூடும் எண்ணிக்கை அதிகப் பொருத்தமானது என்றும் கொள்ளலாம். இந்தப் பொருத்தத்தால் வளமான குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான சகல சம்பத்தும் கிட்டும்.
5. யோனிப் பொருத்தம்: இல்லற சுகத்துக்கு இந்தப் பொருத்தத்தைப் பார்ப்பது மிகவும் அவசியம் என்பார்கள். இன்னின்ன நட்சத்திரத்துக்கு இன்னின்ன மிருக அம்சம் என்று ஜோதிடத்தில் கணித்திருக்கிறார்கள். எந்த மிருக அம்சத்தோடு எது சேருவது பொருத்தமாயிருக்கும் என்று பார்ப்பதுதான் இந்தப் பொருத்தம். அதாவது அசுவினி சதயம் – குதிரை; பரணி ரேவதி – யானை; கார்த்திகை பூசம் – ஆடு; ரோகிணி மிருக சீரிஷம் – பாம்பு; திருவாதிரை மூலம் – நாய்; புனர்பூசம் ஆயில்யம் – பூனை; மகம் பூரம் – எலி; உத்திரம் உத்திரட்டாதி-பசு; ஹஸ்தம் சுவாதி – எருமை; சித்திரை விசாகம் – புலி; அனுஷம் கேட்டை – மான்; பூராடம் திருவோணம் – குரங்கு; உத்திராடம் -கீரி; அவிட்டம் பூரட்டாதி – சிங்கம்.
இந்த மிருக அம்சங்களில் குதிரை – எருமை யானை – சிங்கம்இ ஆடு- குரங்கு பாம்பு – எலி பசு – குதிரை எலி- பூனை கீரி – பாம்பு மான்-நாய் ஆகிய இவை ஒன்றுக்கொன்று பகையாகும். இந்த எதிர் அம்சங்கள் இல்லாத வகையில் பிற மிருக அம்சங்கள் ஒன்றுக்கொன்று இணையுமானால் அது யோனிப் பொருத்தம் என்று சொல்லப்படுகிறது. இல்லற இன்பம் எந்நாளும் நிலைத்திருக்க இந்தப் பொருத்தம் அவசியம்.
6. ராசிப் பொருத்தம்: மணப்பெண் ராசியிலிருந்து மணமகனின் ராசி வரையிலான எண்ணிக்கை ஆறுக்கு மேற்பட்டால் அது ராசிப் பொருத்தம் எனப்படுகிறது. ஒன்பதுக்கு மேற்பட்டாலும் அதி பொருத்தம் என்பார்கள். எண்ணிக்கை எட்டாக இருத்தல் கூடாது. மேஷம் மிதுனம் சிம்மம் துலாம் தனுசு கும்பம் இவை பெண் ராசியாக அமையுமானால் ஆறாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். அதேபோல ரிஷபம் கடகம் கன்னி விருச்சிகம் மகரம் மீனம் இவை பெண்ணுக்குரிய ராசியானால் இதற்குப் பன்னிரண்டாவது ராசியாக ஆண் ராசி அமைந்தால் பன்னிரண்டாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தம் ஆண் வாரிசுக்கு வழி வகுக்கும் என்கிறது சாஸ்திரம்.
7. ராசி அதிபதிப் பொருத்தம்: ஒவ்வொரு ஜாதகருக்கும் அவரவருடைய ராசிக்குரிய அதிபதி யார் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள் 114ம் பக்கத்தில். மணமகன் மணப்பெண் இருவருக்கும் ஒரே அதிபதியாக அமைந்துவிட்டால் அது சரியான பொருத்தம். அல்லது இரு அதிபதிகளும் நட்பானவர்களாக இருந்தால் இதுவும் விசேஷம்தான். பகை அதிபதிகளாக இருத்தல்கூடாது. இந்தப் பொருத்தம் மூலமாக இரு தரப்பிலும் சம்பந்திகள் மிகவும் அன்னியோன்யமாக இருப்பார்கள்.
8. வசியப் பொருத்தம்: ராசிகளில் ஒன்றுக்கொன்று எதெல்லாம் உடன்பாடானவை; எதெல்லாம் அல்லாதவை என்பதை அறிவதன் மூலம் இந்தப் பொருத்தத்தைத் தீர்மானம் செய்யலாம். மேஷத்துக்கு – சிம்மம் விருச்சிகம்; ரிஷபத்துக்கு – கடகம் துலாம்; மிதுனத்துக்கு – கன்னி; கடகத்துக்கு – விருச்சிகம் தனுசு; சிம்மத்திற்கு – துலாம்; கன்னிக்கு – மிதுனம் மீனம்; துலாத்துக்கு – கன்னி மகரம்; விருச்சிகத்திற்கு – கடகம் கன்னி; தனுசுக்கு – மீனம்; மகரத்துக்கு - மேஷம் கும்பம்; கும்பத்துக்கு – மேஷம் மீனம்; மீனத்துக்கு -மகரம் என்று வசியப் பொருத்தம் சொல்லப்பட்டிருக்கிறது. பெண் ராசிக்கு ஆண் ராசி மேற்கண்ட அமைப்புப்படி பொருந்துமானால்இ அதுவே சரியான வசியப் பொருத்தமாகும். மற்றவை பொருத்தமற்றவை. இப்பொருத்தம் அமைவதன் மூலம் தம்பதியர் ஒருவருக்கொருவர் வசியமாகிஇ எந்த சந்தர்ப்பத்திலும் ஒருவரை மற்றவர் விட்டுக் கொடுக்காமல் பூரண அன்புடன் இனிய வாழ்க்கை நடத்துவார்கள்.
9. ரஜ்ஜுப் பொருத்தம்: அசுவினி மகம் மூலம் – ஆரோகபாத ரஜ்ஜு ஆயில்யம் கேட்டை ரேவதி – அவரோகபாத ரஜ்ஜு; பரணி பூரம்இ பூராடம் – ஆரோக தொடை ரஜ்ஜு; பூசம் அனுஷம் உத்திரட்டாதி – அவரோக தொடை ரஜ்ஜு; கார்த்திகை உத்திரம் உத்திராடம் – ஆரோக உதர ரஜ்ஜு புனர் பூசம் விசாகம் பூரட்டாதி – அவரோக உதர ரஜ்ஜு; ரோகிணி அஸ்தம் திருவோணம் – ஆரோக கண்ட ரஜ்ஜு; திருவாதிரைஇ சுவாதி சதயம் – அவரோக கண்ட ரஜ்ஜு; மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம் – சிரோ ரஜ்ஜு. இந்த ரஜ்ஜு அமைப்பில் மணமகன் மணப்பெண் இருவரது நட்சத்திரமும் ஆரோகத்திலாவது அவரோகத்திலாவது ஒரே வரிசையில் இருக்குமானால் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று கொள்ளலாம். ஒன்று ஆரோகத்திலும் ஒன்று அவரோகத்திலும் வெவ்வெறு வரிசையில் இருந்தாலும் சரி; இரண்டு நட்சத்திரங்களுக்கும் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும் சரி இருவருக்கும் ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு என்று சொல்லலாம். மாங்கல்ய பலம் பெருக இந்தப் பொருத்தம் அவசியம்.
10. நாடிப் பொருத்தம்: அசுவினி திருவாதிரை புனர்பூசம் உத்திரம் அஸ்தம் கேட்டை மூலம் சதயம் பூரட்டாதி ஆகிய இந்த நட்சத்திரங்கள் தட்சிண பார்சுவ நாடியைச் சேர்ந்தவை. பரணி மிருக சீரிஷம் பூசம் பூரம் சித்திரை அனுஷம் பூராடம் அவிட்டம் உத்திரட்டாதி இவை மத்திய நாடி. கார்த்திகை ரோகிணி ஆயில்யம் மகம் ஸ்வாதி விசாகம் உத்திராடம் திருவோணம் ரேவதி இவை வர்ம பார்சுவ நாடி. மணப்பெண் மணமகன் இருவரும் ஒரே நாடியைச் சேர்ந்தவர்களானால் நாடிப்பொருத்தம் இருக்கிறது என்று அர்த்தம். இந்தப் பொருத்தமும் மாங்கல்ய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.
samedi 23 mars 2013
mercredi 20 mars 2013
நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்
-
- படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.
- மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.
- உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.
- வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.
- பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.
- ஆசைகள் வளர வளர தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.
- எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.
- மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.
- கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.
- அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்
-
சிறப்பாகச் சிந்திப்பது
யாருடைய குறைகளை எண்ணிவிட
முடியுமோ அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்.
- மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!
- பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
- சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது!
- மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது. ஆனால் முட்டாள்தனமாக செயற்படுவது!
- முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழி மௌனமாக இருப்பதுதான்!
- அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை. தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன!
- நன்றாகப் பேசுவது நல்லதுதான். ஆனால் நன்றாகச் செய்வது அதனிலும் நல்லது!
- மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும் மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான் இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்.
- தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்! வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்! இதுதான் வாழ்க்கையின் இரகசியம்!
mercredi 13 mars 2013
எது சிறந்தது ??
எது சிறந்தது ??
1. அனைவரையும் விட முதிர்ந்த மிகப் புராதன புருஷர் யார் ?
- இறைவன் !
- இறைவன் !
2. மிகுந்த அழகுடையது எது ?
- அகில உலகம் !
...
- அகில உலகம் !
...
3. மற்ற எதையும் விடப் பெரியது எது ?
- ஆகாயத்தின் வெட்டவெளி !
- ஆகாயத்தின் வெட்டவெளி !
4. இந்த உலகில் எது நிலையானது ?
- நம்பிக்கை மட்டுமே !
- நம்பிக்கை மட்டுமே !
5. மனிதனிடம் சிறந்ததாய் இருக்க வேண்டியது ?
- நற்குணம்தான் !
- நற்குணம்தான் !
6. மிகவும் விரைந்து செல்லக் கூடியது ?
- நாம் எண்ணுகின்ற எண்ணங்கள் !
- நாம் எண்ணுகின்ற எண்ணங்கள் !
7. வலிமை மிக்கதாய் விளங்குவது ?
- தேவை !
- தேவை !
8. மிகவும் சுலபமானது எது ?
- மற்றவருக்கு உபதேசம் செய்வது !
- மற்றவருக்கு உபதேசம் செய்வது !
9. மனிதன் மிக்க கடினமானதாய் எதைக் கருதுகிறான் ?
- தன்னைத்தான் அறிதலே அவனுக்கு கடினமானது !
- தன்னைத்தான் அறிதலே அவனுக்கு கடினமானது !
dimanche 10 mars 2013
பழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்..
பழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்..
எறும்பு தின்றால் கண்கள் நன்றாக தெரியும்.
விளக்கம்: இது உண்மை அல்ல... எறும்பு தின்னி என்னும் உயிரினத்திற்கு கண்கள் நன்றாக தெரியும் என்பதுதான் உண்மை.
2. ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்.
விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும். அதாவதுஇ நம் உறவினர்கள்இ நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால்இ அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது.
3. அடியாத மாடு படியாது.
விளக்கம்: உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும் என்பது தான்.
4. கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி
விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவேஇ (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.
5. ஆறிலும் சாவு நூறிலும் சாவு
5. ஆறிலும் சாவு நூறிலும் சாவு
விளக்கம்: மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கொளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் சாவுதான் என்பதுதான் அது. ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது.
6. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
விளக்கம்: உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்திலஇ பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு.
7. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
விளக்கம்: பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம்இ தஞ்சைஇ காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் "என் சிற்பம் எப்படி? என்று. அதற்குச் சுவைஞன் சொன்ன பதில் 'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை.
8. பசி வந்திட பத்தும் பறந்து போகும்
8. பசி வந்திட பத்தும் பறந்து போகும்
விளக்கம்: அறிவுடைமைஇ இன்சொல்இ ஈகைஇ தவம்இ காதல்இ தானம்இ தொழில்இ கல்விஇ குலப்பெருமைஇ மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை.
9. போக்கத்தவனுக்கு போலீஸ் வேலைஇ வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை
விளக்கம்: இந்த பழமொழியின் அர்த்தம்இ போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.
10. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
விளக்கம்: இதன் அர்த்தம்இ ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்து கொண்டால் இ அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.
11. சேலை கட்டிய மாதரை நம்பாதே
விளக்கம்: சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மை பொருள். சேல் என்றால் கண். தன் கணவனுடன் இருக்கும்போது கண்களை அகட்டி வேறு ஒரு ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே என்பது தான் உண்மை பொருள்.
12. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.
விளக்கம்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை. அதாவது ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.
பொன்மொழிகள்!
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது.
அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம்
வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
3. நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு
நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
4. நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும்
நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.
5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள
ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப்
பார்க்கிறான்.
6. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும்
இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய
சுமையாகியிருக்கும்.
7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம்
சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம்
கற்பிக்கப்படுகிறது.
8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச்
செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச்
செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.
9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம்
இருக்கிறது என்பதே முக்கியம்.
10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை
அல்ல; விடாமுயற்சியினால் தான்.
11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை
பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை
வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும்
நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ
சீர்திருத்த முயலுகிறார்கள்.
16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத
ஆசையால் பயனில்லை.
17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி
செய்யாது.
18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும்
சண்டையே இல்லாத சமாதானம்தான். வேண்டும்.
19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும்
நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம்
வீணானவையல்ல.
21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச்
சிறப்பாகப் படைக்க முடியாது.
22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி.
ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.
23. நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு
கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக
கிடைத்தே தீரும்.
24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.
அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த
செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.
jeudi 7 mars 2013
mardi 5 mars 2013
Inscription à :
Articles (Atom)