முகப்பு

lundi 18 juin 2012

முடியாமல்

 
 
கஷ்டப் படாமல் வாழ வேண்டும் எண்பதற்காக
கஷ்டப்பட்டு வேலை செய்கின்றார்...

நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக வீடு கட்டி நித்திரையின்றி திரிகின்றார்

படித்தால் வேலை கிடைக்கும் என்று படித்துவிட்டு வேலையின்றி திரிகின்றார்

அலங்காரமாக வாழ வென்று ஆபரணம் வாங்கி
லொக்கரில் வைத்து விட்டு அலங்காரமின்றி அலைகின்றார்

... அவசர தேவைக்கு வாகனம் வாங்கி
அவசியமற்ற தேவைக்கும் பயணிக்கின்றார்

முடியும் முடியும் என்றவர்கள் முடிந்தவர்களையும்
முடியாமல் இருக்க செய்கின்றார்


பாதை



அடுத்தவர்களின் பாதையைப் பின்பற்றக்கூடாது.
காரணம் அது அவர்களுடைய பாதை, உன்னுடையதுஅல்ல. உன்னுடைய பாதையைக் கண்டுபிடித்து
விட்டால், அதன்பிறகு நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை....

சந்தேகப்பட்டு வாழாதே...



சந்தேகப்பட்டு வாழாதே...
சந்தேகப்படும்படியும் வாழாதே - ஏனெனில்
அன்பை பெறவோ கொடுக்கவோ நேரம் இருக்காது..
சந்தேகப்படவே நேரம் சரியாகிவிடும்...............

வாடுவதா அழகு?..


மாலையில் மரணமென்று தெரிந்தும்
காலையில் அழுவதில்லை.. மலர்கள்.
நீ மட்டும் சோகங்களை நினைத்து
வாடுவதா அழகு?..

mercredi 6 juin 2012

தேங்காய் பாலின் .........



புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாதுபொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன.
தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெயை தீக்காயம் பட்ட இடத்தில் தடவி வந்தால் தீப்புண்கள் குணமாகும்.
கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்குடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில்(வெளிப்புற ஒடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளை குணப்படுத்துகிறது.
தேங்காய்ப்பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது-. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்கு தேங்காய்பால் நஞ்சு முறிவு சிறந்தது. தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.
குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால் தேன், கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும்.
பெருவயிறுக்காரர்களுக்கு(வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தல் சரியாகும். தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும்.
தேங்காய் பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுபுண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது. உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.


பசியைக் கட்டுப்படுத்தும் ஐந்து உணவுகள்



உடல் ஆரோக்கியமாக இருக்க உணவு நன்கு உண்ண வேண்டும். ஆனால் அந்த உணவே அளவுக்கு அதிகமாக உண்டால் உடல் பெருத்து விடும்.
சிலருக்கு வயிறு நிறைய சாப்பிட்டு 2-3 மணி நேரத்திலேயே மீண்டும் பசி எடுத்துவிடும். அப்படி பசி எடுக்கும் போதெல்லாம் சாப்பிட்டால் குண்டு தான் ஆக நேரிடும்.
அந்த பசியைக் கட்டுப்படுத்த ஒரு சில உணவுகள் உள்ளன. அந்த உணவுகள் பசியைக் அடக்குவதோடு, உணவுக் கட்டுப்பாட்டோடும் வைக்கிறது.
ஆப்பிள்: ஆப்பிளானது உடலுக்கு ஆரோக்கியமானது மட்டுமல்லாமல், பசியையும் கட்டுப்படுத்துகிறது. ஏனென்றால் ஆப்பிளில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளது, இதனால் வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும்.
ஏனெனில் ஆப்பிளை சாப்பிடும் போது நீண்ட நேரம் மென்று திண்பதால், நம் வயிறு நிறைந்துவிடும். மேலும் இதை நாம் சாப்பிட்டால் நம் எடையும் குறையும்.
காய்கறிகள்: காய்கறிகள் உடலுக்கு மிகவும் சிறந்த அதிகமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள். அந்த காய்கறிகளில் கீரை வகைகள், முட்டைக் கோஸ், பசலைக் கீரை, கேரட் போன்றவற்றை அதிகம் உண்பதால் பசி குறைவதோடு, உடலானது நன்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.
மேலும் காய்கறிகளை சூப் அல்லது ஜூஸ் செய்து குடித்தால் மிகவும் நல்லது.
வாழைப்பழம்: தினமும் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டால் பசி எடுக்காமல் இருப்பதோடு, சுறுசுறுப்பாகவும் இருக்கும். இது ஒரு எனர்ஜி பூஸ்டர் பழம், ஆகவே பசி வந்தால் இரண்டு வாழைப்பழம் சாப்பிடுங்கள். ஏனென்றால் இதில் உள்ள இனிப்புப் பொருள் பசியைக் கட்டுப்படுத்தும். மேலும் ஒரு நாளைக்கு இரண்டு பழத்திற்கு மேல் சாப்பிட வேண்டாம்.
இறால்: இதில் கலோரி குறைவாக இருப்பதால், பசியை நன்கு கட்டுப்படுத்தும். மேலும் இது உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு மிகச்சிறந்த உணவு. இந்த இறாலை வேக வைத்து, சாஸ் அல்லது சீஸோடு சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டால் சுவையாக இருப்பதோடு, எடையையும் குறைக்கிறது.
நட்ஸ்: நட்ஸில் ஒன்றான அல்மண்ட்ஸ் மற்றும் பைனில் அதிகமாக புரோட்டின் மற்றும் இரும்புச்சத்து இருக்கிறது. இது உடலில் உள்ள பசியைத் தூண்டும் ஹார்மோனின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
இதை காய்கறிகளோடு சேர்த்தும் சாப்பிடலாம். இதிலும் கலோரி குறைவாக இருப்பதால் எடையை குறைக்கவும் உதவுகிறது.


மனநிறைவோடு விட்டு கொடுங்கள்


சிந்திப்பதானால் நிதானமாக சிந்தியுங்கள்.....
செயற்படுவதானால் உறுதியோடு செயற்படுங்கள்....
விட்டு கொடுப்பதானால் மனநிறைவோடு விட்டு கொடுங்கள்....

lundi 4 juin 2012

திருமணப் பொருத்தம்


திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம் பல எண்ணிக்கையில் முனிவர்கள் வகுத்துத் தந்துள்ளாள்கள். நடைமுறையில் பொருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு பார்ப்பது வழக்கமாக இருக்கிறது. இதனை சரசோதி மாலை என்ற சோதிட நூல் பாடல் வழவில் தந்துள்ளது.

செப்பு நாள் கணங்கள் மாகேந்திர மொடு மங்கை தீர்க்கந்

தப்பிலா யோனி ராசி ராசியின் தலை தம்மோடு

ஒப்பிலா வசியம் நன்னூல் வரைதறு வேதை ஆக

மைபுயல் அளக மாதே மருவிய பொருத்தம் பத்தே.

10 பொருத்தங்களும் முழுமையாகப் பொருந்தி வருகிறவாறு அடிப்படையில் அமைக்கவில்லை. சில பொருத்தங்கள் இல்லை என்றாகிவிடும். மிக முக்கியமாக இருக்க வேண்டிய பொருத்தங்கள் ஐந்து.

அவை

தினப்பொருத்தம்
கனபோருத்தம்
யோனிப்போருத்தம்
ராசிப்போருத்தம்
ரஜ்ஜிப்பொருத்தம்.

இவை அவசியம் இருக்க வேண்டும். இதில் மிக மிக முக்கியமாக தவிர்க்க இயலாத – தவிர்க்கக் கூடாத பொருத்தமான இரண்டு உண்டு.

ஒன்று யோனிப்போருத்தம் மற்றொன்று ராஜ்ஜிப் பொருத்தம். இந்த இரண்டில் எந்தப் பொருத்தம் ஒன்று இல்லையாயினும் மணமுடிக்கக் கூடாது.

எனவே இவை இரண்டு பொருத்தமும் வாழ்விற்கு உயிர்நாடியாக இருக்கும் பொருத்தம்.

தினப் பொருத்தம்

மணமக்களின் ஆயுள் ஆரோக்கியம் இவை இரண்டையும் குறிப்பிடுவது. இது முக்கியம்.

கணப்பொருத்தம்

இது குணநலன் பண்பு நலனைக் குறிக்கும் இது மூன்று வகை தேவகானம் மனித கனம இராட்சஷ கணம். 27 நட்சத்திரங்கலியா முன்று பிரிவாகப் பிரித்து இன்ன நட்சத்திரத்தில் பிறந்தவர் இன்ன கணம் என்று முனிவர்கள் வகுத்துள்ளார்கள். இது முக்கியம். குண நலம் வாழ்விற்கு எத்துணை அவசியம் என்பது நீங்கள் அறிவீர்கள்.

மாகேந்திரப் பொருத்தம்

பொருளாதார வளமாக அமைந்திட இப் பொருத்தம் வேண்டும்.

ஸ்திரீ தீர்க்கம்

மணமகள் தீர்க்க சுமங்கலியாய் வாழ்ந்து சுமங்கலியாயாகவே வாழ்வு நிறைவு பெறுவாள் என்பதாகும்.

யோனிப் பொருத்தம்

இது மிக முக்கியமானது. பெரும்பான்மையான மனிதர்கள் உடல் தேவையே வாழ்வு என மயங்குகின்றனர். உடல் தேவையைப் பூர்த்தி செய்ய இப் பொருத்தம் வேண்டும். வேறு ஏதோ குறிக்கோளுக்காக இந்த வாழ்வை இறையருள் தந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள மனிதனை இழுக்கும் ஒரு மாயப் பொறி என்பதனை அனுபவஸ்தர்கள் அறிவார்கள். எனினும் உடலுடன் கூடிய வாழ்வில் தான் குறிக்கோளை அடைய முடியும். வாலிபக் காலத்தில் உடலில் கட்டளைக்கு மனக் ஒத்துழைத்து செயற்படும். அறிவு ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்கும். சில காலம் சென்ற பின் இயற்கைச் சட்டப்படி உடல் தளரும் ஞானம் பிறக்கும் அறிவுப்பூர்வமாக சிந்திப்பார். கடந்த கால வாழ்வை எண்ணி கலி விரக்கம் கொள்வார். வாழ்வில் இளமையில் பிழையும் நடுப் பகுதில் போராட்டமும் முதுமையில் கடந்த கால வாழ்வை எண்ணி கழிவிரக்கம் கொள்வதுதான் பெரும்பான்மையானவர்களின் வாழ்வாக இருக்கிறது. விதிவிலக்காக தற்சோதனை செய்து வாழ்வின் குறிக்கோளை உணர்ந்து மரணமில்லாத வாழ்வை அடைந்தவர் பலருண்டு. இதைக்கூறிடும் தகுதி எனக்கு உண்டு. ஏனெனில் பல்லாயிரக்கான மானிடரின் தனிப்பட்ட வாழ்வை அறியும் சூழ்நிலையில் என்பணி அமைந்தது தான் காரணம். எனவே மனிதன் மனிதப் பண்போடு பிற்காலத்தில் வாழ்ந்திட இப்பொருத்தம் துணை செய்யும். எனவே இது முக்கியம்.

ராசிப் பொருத்தம்

இது வம்ஸ விருத்திக்காக. இது முக்கியம்.

ராசி அதிபதி பொருத்தம்

சந்ததிகள் விருத்திக்காகவும் ஒருவர்க்கொருவர் நேசமுடன் வாழ வழி வகுப்பதற்காகவும் இது உதவும்.

வசியப் பொருத்தம்

மணமக்களின் நேச வாழ்விற்காக

ரஜ்ஜிப்பொருத்தம்

இது உயிர்நாடி போன்ற பொருத்தமாகும். வாழ்வில் முக்கியமான ஆயுள் புத்தோஷம் பிரயாணத்தில் தீமைக் பொருள் இழப்பு இவைகளைப் குறிப்பிடுவது. இதற்கு தீர்க்க சுமங்கலிப் பொருத்தம் என்று பெயரும் உண்டு இப்பொருத்தம் இல்லை எனில் மனம் முடிக்கக் கூடாது. இது மிக முக்கியம்.

வேதைப் பொருத்தம்

துக்கத்தை நீக்கக்கூடிய பொருத்தம்.

இந்த 10 பொருத்தங்களையும் சரிபார்த்து இன்ன நட்சத்திரப் பெண்ணிற்கு இன்ன நட்சத்திர வரன் இத்தனை பொருத்தங்கள் அமைகின்றன என்றும் பொருத்தம் உண்டு அல்லது இல்லை என்றும் அறிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளோம்.

- – - – – -ஆண்களுக்கு – - – - – -

கீலே குறித்த நட்சத்திரம் தவிர

மற்ற நட்சத்திரத்தில் பிறந்த பெண் பொருத்தமாகும்

மணமகன் நட்சத்திரம் அஸ்வினி

அசுவினி ஆயில்யம் மகம் அஸ்தம் சுவாதி கேட்டை முலம் ரேவதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் பரணி

பரணி பூரட்டாதி அவிட்டம் பூசம் பூரம் அனுஷம் பூராடம் உத்திரட்டாதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் கார்த்திகை

கார்த்திகை புனர்பூசம் உத்திரம் விசாகம் உத்தராடம் பூரட்டாதி பூராடம் திருவோணம் இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் ரோகினி

உத்தராடம் திருவாதிரை அஸ்தம் சுவாதி திருவோணம் சதயம் ரோகினி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் மிருகசீர்ஷம்

மிருகசீர்ஷம் சித்திரை அவிட்டம் உத்தராடம் இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் திருவாதிரை

திருவாதிரை கேட்டை அனுஷம் ரோகினி அஸ்தம் சுவாதி திருவோணம் சதயம் இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் புனர்பூசம்

புனர்பூசம் கிருத்திகை உத்திரம் விசாகம் உத்திரடாம் பூரட்டாதி மகம் பூரம் இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் பூசம்

பூசம் பூராடம் திருவோணம் பரணி பூசம் அனுஷம் உத்திரட்டாதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் ஆயில்யம்

ஆயில்யம் மகம் பூரம் அசுவினி கேட்டை முலம் ரேவதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் மகம்

மகம் ஆயில்யம் புனர்பூசம் அசுவினி கேட்டை முலம் ரேவதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் உத்ரம்

உதரம் விசாகம் சித்திரை புனர்பூசம் கிருத்திகை உத்திராடம் பூரட்டாதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் அஸ்தம்

அஸ்தம் திருவாதிரை ரோகினி சுவாதி திருவோணம் சதயம் அசுவினி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் சித்திரை

சித்திரை உதரம் உத்திரட்டாதி மிருகசீர்ஷம் அவிட்டம் இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் சுவாதி

சுவாதி ரோகினி திருவாதிரை அஸ்தம் திருவோணம் சதயம் அசுவினி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் விசாகம்

விசாகம் உத்திரம் உத்திரட்டாதி கிருத்திகை புனர்பூசம் உத்திராடம் பூரட்டாதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் அனுஷம்

அனுஷம் பரணி பூசம் பூராடம் உத்திரட்டாதி பூரம் முலம் திருவாதிரை இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் கேட்டை

கேட்டை முலம் திருவாதிரை அசுவினி ஆயில்யம் மகம் ரேவதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் முலம்

முலம் அசுவினி ஆயில்யம் மகம் கேட்டை ரேவதி திருவாதிரை இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் பூராடம்

பூராடம் பரணி பூசம் பூரம் அனுஷம் உத்திரட்டாதி கிருத்திகை இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் உத்தராடம்

உத்தராடம் ரோகினி மிருகசீர்ஷம் கிருத்திகை புனைபூசம் உதரம் விசாகம் பூரட்டாதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் திருவோணம்

திருவோணம் ரோகினி திருவாதிரை அஸ்தம் சுவாதி சதயம் பூசம் கிருத்திகை இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் அவிட்டம்

அவிட்டம் பரணி ரேவதி சித்திரை மிருகசீர்ஷம் இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் சதயம்

சதயம் ரோகினி திருவாதிரை அஸ்தம் சுவாதி திருவோணம் இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் பூரட்டாதி

பூரட்டாதி பரணி ரேவதி கிருத்திகை புனைபூசம் உதரம் உத்தராடம் விசாகம் இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் உத்திரட்டாதி

உத்திரட்டாதி விசாகம் சித்திரை பரணி பூசம் பூரம் அனுஷம் பூராடம் இவை ஆகாது. மற்ற நட்சர்ஹ்திரம் பொருந்தும்.

மணமகன் நட்சத்திரம் ரேவதி

ரேவதி அசுவினி ஆயில்யம் மகம் கேட்டை முலம் பூரட்டாதி அவிட்டம் இவை ஆகாது. மற்ற நட்சத்திரம் பொருந்தும்.

dimanche 3 juin 2012

மருத்துவ செய்தி..."வெந்தயம்".


 உடல் எடையை குறைக்கும் "வெந்தயம்".

கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது என்னவென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும்.
...
இதனை சாப்பிடுவதால் உடலை வறுத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

மேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது.

இரவில் ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.

வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.

வெந்தய விதையை பொன்னிறமாக வறுத்து அதை பொடியாக்கி, காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்து, உண்ணும் உணவில் கலந்து சாப்பிடலாம்.

வெறும் வயிற்றில் டீயுடன் வெந்தயப்பொடியை கலந்து சாப்பிடலாம். இதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும்.


mercredi 30 mai 2012

புன்னகை செய்தேன்


பூவை விட மென்மையானது புன்னகை...
அதனால் தான்
உனக்கு பூ கொடுப்பதைத் தவிர்த்து,
புன்னகை செய்தேன்...

இன்றே செய்.

 
 
நாளை என்பது வருங்காலம்,
நேற்றென்பது கடந்த காலம்,
இன்றென்பதே நிகழ்காலம்;

நாளை என்பது கவைக்குதவாது,
... நாளை நடப்பதை யாரறிவார்;
நன்றே செய்; அதுவும் இன்றே செய்.


ஏனோ பிடித்திருக்கின்றது எனக்கு


 
 
தினமும் கேட்கும் இசை பிடிக்கவில்லை
கூவும் குயிலின் ஓசையும் பிடிக்கவில்லை
ப்ச்சை வயல்களும் பிடிக்கவில்லை
யுத்தம் புரியும் இந்நாடும் பிடிக்கவில்லை
விரும்பி எழுதும் கவிதை பிடிக்கவில்லை
சிரிக்கும் குழந்தைமுகம் காண பிடிக்கவில்லை
... அழகான என் காதலும் பிடிக்கவில்லை
கலகலப்பான நட்பும் பிடிக்கவில்லை
விளையாட்டு பொம்மை பிடிக்கவில்லை
வளைந்து ஓடும் நதியும் பிடிக்கவில்லை
இரவில்வரும் நிலவும் பிடிக்கவில்லை
சுட்டெரிக்கும் சூரியனும் பிடிக்கவில்லை
சினிமாவும் பிடிக்கவில்லை
தனிமையும் பிடிக்கவில்லை
இனிக்கும் "சொக்ளேட்" பிடிக்கவில்லை
சிணுங்கும் "செல்போன்" பிடிக்கவில்லை
வாசம் தரும் பூக்கள் பிடிக்கவில்லை
வீசிப் போகும் தென்றலும் பிடிக்கவில்லை
சுவாசிக்கவும் பிடிக்கவில்லை
நேசிக்கும் உறவுகளையும் பிடிக்கவில்லை
என்னை விரும்பும் உன்னை பிடிக்கவில்லை
உனக்கு பிடித்த என்னையும் பிடிக்கவில்லை
நாம் ரசித்த எதுவுமே பிடிக்கவில்லை
உனக்கு பிடிக்காத மரணத்தை மட்டும்
ஏனோ பிடித்திருக்கின்றது எனக்கு.


'கடனல்ல அது கடல் '

 
 
நிறுத்திவிடு இறைவா
வயதின் ஓட்டத்தை .
என்னுடையதை அல்ல ,
என் பெற்றோரின் .

நித்தம் ஒரு யுத்தம் ,
... மனதுக்கும் அறிவுக்கும் இடையே .

'நிறைவான வாழ்க்கை ,
நலம் வாழும் வாரிசுகள் ,
இன்னும் என்ன மனக்குறை ?'
எடுத்துரைக்கும் அறிவு.

எங்களை வளர்த்துவிட
அவர்கள் இழந்த
சுயமும், சுகங்களும்?
பட்டியலிடும் மனது.

தாகம் கொண்ட காகம் போல்
இட்டு நிரப்ப முயல்கிறேன்
நன்றிக்கடன் பாத்திரத்தை !
நிரம்ப மறுத்து நகைக்கிறது .

'கடனல்ல அது கடல் '
என்று புரிந்தாலும் ,
இறைஞ்சுகிறேன் இறைவா !
நிறுத்திவிடு வயதின் ஓட்டத்தை .

காகம் இயன்றவரை நிரப்பட்டுமே
நன்றிக்கடன்[ல்] பாத்திரத்தை !


lundi 28 mai 2012

நல்ல நட்பே!



நட்பு ஒரு பிறப்பல்ல.
அழகிய அவதாரம்.
ஆண்டவன் வரைந்த
வரைபடம் நட்பு.
அதி சிறந்த பரிசு
நட்பு.
நட்புக்கு நிகர்
நல்ல நட்பே!

vendredi 25 mai 2012

காதல்



காதல் என்பதை
யார் வேண்டுமானாலும்
கற்பனை பண்ணலாம்
ஆனால் அதன் வலியை
காதலித்தவன் மட்டுமே
உணர முடியும் ...

பாதை


அடுத்தவர்களின் பாதையைப்
பின்பற்றக்கூடாது.
காரணம் அது அவர்களுடைய பாதை, உன்னுடையதுஅல்ல.
உன்னுடைய பாதையைக் கண்டுபிடித்து
விட்டால், அதன்பிறகு நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை....

இன்பம் வேறில்லை


வாழ்க்கையில் கஸ்டமான காலத்தில் கைகொடுப்பது பெரும்பாலும் நட்புத்தான். என்றைக்கும் நல்ல நண்பர்கள் கிடைத்தால் அதனைவிட பெரிய இன்பம் வேறில்லை.

வனப்பைக் கூட்டும்


ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்ந்தோம் என்றிருப்பதல்ல வாழ்க்கை! எப்படி வாழ்ந்தோம் என்பதும் ஒரு அங்கம். வாழக் கிடைத்த வாழ்க்கையில், ஒரு சிலருக்காவது வசந்தத்தின் முகவரியை அறிமுகம் செய்தோமேயானால் அதுவே வசீகரத்தின் வனப்பைக் கூட்டும்!

அன்பில்லாத


உன் உடலைத் தானம் செய்ய விரும்புகிறாயா.. அப்படியானால் உன்னிடம் அன்பு இருக்கிறதா என்று உன்னை நீயே கேட்டுப்பார். அன்பில்லாத உன் உடல் உறுப்புகள் இன்னொரு மனிதனில் பொருத்தப்பட்டால் அவனும் அன்பற்ற இயந்திரமாகிவிடுவான்.

lundi 21 mai 2012

விலகாது........


வலுவான நட்பு விலகிநிற்குமா.....
பிரியமான நட்பு பிரியத்துணியுமா.....
உண்மை நட்பென்றும் ஊமையாகிப்போகாது........
 உயிர் விலகும்வரை நட்பைவிட்டு விலகாது........

இதயம் உருவாக்குபவை...


சந்தோஷத்தை உங்களுக்கு யாரும் கொடுக்க முடியாது. 
உங்கள் மனதில் இருந்து உருவாகுபவை....................
மகிழ்ச்சி சூழ்நிலைகள் உருவாக்குபவை அல்ல......
  உங்கள் இதயம் உருவாக்குபவை...

jeudi 17 mai 2012

பெண்ணே அழாதே பெண்ணே

 
 
பெண்ணே அழாதே பெண்ணே

அழப் பிறந்தவள் அல்ல நீ
ஆளப் பிறந்தவள்.நீ
பெண்ணாகப் பிறந்ததற்கு
கவலை கொள்ளாதே நீ
... கர்வம் கொள் நீ
பெருமை கொள் நீ
அற்புதச் சிறகை
விரித்துப் பற.
கொட்டக்கொட்ட
குனிந்து போதும்
கொட்டும் கரம்
முறித்திடு நீ
இனி வெங்காயம்
நறுக்கும் போது கூட
அழவேண்டாம் .
இனி வெங்காயம்கூட
நறுக்க வேண்டாம் .
விழிகளில் கண்ணீர் நிறுத்து
இதழ்களில் புன்னகை ஏந்து
— avec Nirmala Mala.

mardi 15 mai 2012

அன்னமதை


அன்னமென நீ நடக்கும் வேளையிலே
கற்பனையில்..
அன்னமதை அடைவதுதான்
பாக்கியமாய் எண்ணுவேன்
 

முள்ளிவாய்க்கால்


பாலைமரக் கிளிகளே!
பாசமுடன் பாடும் பறவைகளே !
சோலையதை விட்டெங்கே
சென்றீர்கள்?

                   பாவியரின் 'பொமபரினால்' .
பாலைமரம்..வீரைமரம் எல்லாம்
வேரோடு சாய்ந்து விழுந்தன..!
தாவியதில் ஏறும் மந்தியினம்
கூவிவந்த குண்டுகளால்
அழிந்தன..!

பாட மறந்தன குயில்கள்.
ஆட மறந்தன மயில்கள்
ஓட மறந்தன மான்கள்
காடுதரும் சுகத்தில்
களித்திருந்த
காடைகளும்..சேவல்களும்
பாடையிலே ஏறி
பறந்தன!
                                     
தேன்தேடும் வண்டினம்
வான்கூவி வந்த
'பொஸ் பரசால்'
தாம் கூடும் கானகத்து
மரக்கிளையில்
எரிந்தன !

கூழைக் கடாக்கள் ....
கட்டிய கூடுகளில்...
சிறகு முளைக்காத
சிறுகுஞ்சுகள்
பாவியர்..
கொட்டிய குண்டுகளால்
பொசுங்கின..!
 
பச்சைப் புற்கள்கூட
பற்றி எரிந்த கொடுமையை
பாத்தவர் மனமெல்லாம்...
பற்றி எரிந்தது !
                                       
அக்கராயன் குளத்துக்
கரையெங்கும்
மரக்கிளையில்
அழகழகாய் கட்டி வைத்த
செந் நாரைக் கூடுகள்..
கொடியவரின்
வானூர்திக் குண்டுகளால்
பிய்த்து எறியப் பட்டன !
 
எத்தனைக்கும் மேலாய்
எம்மினத்து மக்களோ
கொத்துக் கொத்தாய்
பூக்கும்
பொன்னலரி பூக்களென..
பிடுங்கி எறியப்பட்டு..
வீதியெல்லாம் ..
செத்தழிந்த காட்சிகண்டு
மனம்
பித்தாகிப் போனதன்றோ.?

                                   

முள்ளிவாய்க்கால்
முடிவென்று சொன்னவரைக்
கண்டால்
தள்ளிவிழுத்தி புள்ளியிடு
அவர் நெற்றியில்.!
முடிவல்ல மூடா
அது புதிய
நாடொன்றின்
தொடக்கமென்று
நாமம் எழுதடா
அவர் நெற்றியில்.!
 

முள்ளி வாய்க்காலில்..

 
 
முள்ளி வாய்க்கால்
எறிகணைகள் சீறிவந்து
எருமைகள்போல் பாய்ந்தன
தறிகெட்டு நெறிகெட்டு..
தடுமாறி ஓடியது மக்கள் கூட்டம் !

***

ஒருகையில் பிள்ளை
மறுகையில் துணிப்பை
இசையமைத்து..சென்றது..
தலைக்குமேல்
இரும்புகளின் ஊர்வலம் ...!

***

எறிகணை விழுந்து ஒருவர்
இருகாலில் ஒன்றை இழந்து
கதறிய ஓசை
காடெங்கும் அதிர்ந்தது..!

***

துணைக்குப் போக
மனம் சொன்னது.!.
பிணைக்குப் போனால்
பிணமாவாய் என்று
'பொஸ்பரஸ்' குண்டுகள்
சொல்லின.!

***

வேஷ்டியை அவிழ்த்து
தனகாலில் ..தானே
கட்டியது கிழம்..!
வேட்டை நாய்கள் விடவில்லை
பனையால் விழுந்தவனை..
மாடேறி மிதித்தன..!

***

துவிச் சக்கர வண்டிகள்..
மாட்டு வண்டிகளாகி
முதுகில் மூட்டைகளை
சுமந்து சென்றன..
கால்வெடிக்குப் பயந்து..
காலாட் படையொன்றின்
நீண்ட அணிபோல்
மக்களணி
வீதியுலாப் போயின.!.

புவிச் சக்கரத்தை
சுற்றிவந்த சூரியன்
கவிச் சக்கரவர்த்தி
கம்பனின் தமிழில்
மாலை வணக்கம் கூறி
விடை பெற்றது
பூமித்தாயிடம்!

***

ஓய்வுதேடி ...வீதியோரம்
உறங்கியவர்கள் மீது
பாய்ந்துவந்து
பந்து விளையாடின
பகைவனின் கொத்துக் குண்டுகள்.!
அங்கே உதை பந்தாட்டமா..
இல்லை
சதைப் பந்தாட்டமா.
நடந்தேறியது..?
புரியவில்லை..!
***

பிணங்களை அள்ளக்கூட பின்னர்
நாய்களும் ..நரிகளும்
வரவேண்டியிருந்தது..நள்ளிரவில்.!
அந்த..
கணங்கள் ஒவ்வொன்றும்..
மனங்களை மலடாக்கின..!

***

இருபத்தோராம் நூற்றாண்டிலா.
இரண்டாம் நூற்றாண்டிலா
இருக்கின்றோம் என்பதை
எவராவது
உறுதிப் படுத்துங்கள்..!

***

முள்ளி வாய்க்காலில்..
துள்ளி விளையாடிய..
முயல்களுக்கு கூட
மரண தண்டனை கொடுத்தது.
சிங்கள ராணுவம்.!.
அள்ளியள்ளி தமிழர் பிணங்களை
கொள்ளி வைத்து எரித்தது
வெறியர் கூட்டம் !

(மு.வே.யோகேஸ்வரன்)

lundi 14 mai 2012

அம்மா


உலகிலே சிறந்தது
உயிரினம் மேலானது
உன் பாசம உன் நேசம்
உன் அன்பு உன் அரவணைப்பு
அம்மா


அன்பே..!


அன்பே..!
மீதி உயிர் வாழவேண்டும்,
உன் மடி மீது சாய வேண்டும்,
காலை நேரப் பொழுதாக
கண்களுக்கு காட்சிகொடு,
காலமெல்லாம் காத்திருக்க
காதலோடு பூத்திருக்க

காதல்

 
காதல் செய்யப்படுவது அல்ல...
அதுவாகவே உண்டாவது!

எடுக்க எடுக்க குறைவதுதான் இயற்கை.
ஆனால் காதல் மட்டும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

... காதல் பூக்கள் மட்டும் தருவதில்லை.
காயங்களும் தரும்.
ஆனால் அந்த காயங்களிலும்
பூக்கள் மலரும்.


அன்பை



உண்மையான அன்பை
மற்றவர்க்கு
கொடுத்து பார்
அதை விட
அதிகமான அன்பை
ஒரு நாள் அவர்களிடம்
இருந்து பெறுவாய்.....

dimanche 13 mai 2012

அன்னையர் தின வாழ்த்துக்கள்


அன்னையர்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

samedi 12 mai 2012

வாழ்க்கை


கற்பனையில் வாழ்க்கை கலைந்துவிடும்
என்று தெரிந்தும்
கண்கள் கனவு தேடி பயணிக்கிறது.!

தொலைந்து போனது வாழ்க்கை
என தெரிந்தும்
தொலைதுர பயணமாய் வாழ்க்கை நகருது..!

இதில் என்றோ ஒரு நாள் போகும் உயிர்
இன்று போனால் என்ன என்று கேட்க்கும் மனது
இவை எல்லாம் முற்று பெறும் நாளை

நாள்காட்டி...!



இன்று
என்ன செய்து கிழித்தாய்?
கேட்கிறது
நாள்காட்டி...!

நட்பாகும்


மனித வாழ்க்கையில் காதலைவிட சிறந்தது எதுவென்றால் அம்மாவின் அன்பிற்க்கு அடுத்ததாக சிலவேளைகளில் அம்மாவின் அன்பைவிட சிறந்தது நட்பாகும்.

vendredi 11 mai 2012

அவரது கருத்துக்கள

 
ஒரு நாத்திகர் கடவுள் இல்லை எனபதில் மிக தெளிவாக இருக்கிறார்.
ஒரு பணக்காரர் பணத்தினால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும்
என்பதில் தெளிவாக இருக்கிறார்.
ஒரு அரசியல்வாதி தன் அதிகாரத்தால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்பதில் தெளிவாக இருக்கிறார்.
ஒரு அறிவியல்வாதி உலகம் பரிணாம வளர்ச்சியால் உண்டானது என்ற
கருத்தில் தெளிவாக இருக்கிறார்.
ஒரு இந்து, தங்கள தெய்வங்கள் உண்மையானது என்பதில் தெளிவாக இருக்கிறார்
ஒரு இஸ்லாமியர் அவர் வேதம் உண்மையானது எனபதில் உறுதியாக தெளிவாக இருக்கிறார்
அதுபோல் ஒரு கிறிஸ்த்தவர் அவரது கருத்துக்கள எல்லாம் சரியானது என்ற முடிவில் தெளிவாக இருக்கிறார்.
 

உலகில் காணப்படும் அன்பை பொதுவாக மூன்று வகைகளாக பிரிக்கலாம்



உலகில் காணப்படும் அன்பை பொதுவாக மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
1. மிருக அன்பு :மிருகம் என்பது பகுத்தறிவு இல்லாத உயிரினமாக இருக்கின்ற போதிலும் அவைகளிடத்திலும் அன்பு உண்டு. அதிலும் சில மிருகங்கள் மனிதனைவிட ஒருபடி அதிகமான அன்பும் நன்றியும் உள்ளதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
என்னதான் மிருகங்களிடம் அன்பு காணப்பட்டாலும் அந்த அன்பு பொதுவாக சுயநலம் சார்ந்த அன்பாகவே இருக்கும். தனக்கும் தன் குட்டிகளுக்கும் போகத்தான் எதுவுமே என்ற நிலையில் வாழும். தன்னை வாழ வைப்பது யார், யாரிடம் தஞ்சமாக உள்ளோம், தனக்கு உணவு கொடுப்பது யார் என்ற எந்த ஒரு உணர்வும் இல்லாமல் அது சுகமாய் தங்கி இருக்கும் இடத்தில் அந்நியர் யாரும் வந்துவிட்டால் உடனே ஒரு சத்தமிட்டு தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதொடு கடும் கோபத்துடன் எதிராளி மீது மோதும் தன்மையுடையது
இது போன்ற அன்பு இன்று அனேக மக்களிடமும் காணப்படுவதுதான் மிகவும் வேதனையான விஷயம். தலைவிரித்தாடும் சுயநலம், எல்லாவற்றிலுமே ஏதாவது ஆதாயத்தை எதிர்பார்த்து செய்யும் நிலைமை, யார் நஷ்டம் அடைகிறார், அதனால் என்ன பாதிப்பு என்றெல்லாம் கொஞ்சமும் யோசனை செய்யாமல் தானும் தன் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும் யார் எப்படி போனால் நமக்கென்ன என்ற நோக்கோடு இன்று மனித கூட்டம் செயல்படுகிறது.
உயிர்காக்கும் மருந்திலிருந்து உணவு பொருள்கள் வரை எல்லாவற்றிலும் கலப்படம், தெரு பொறுக்கும் கார்பரேசன் துடப்பத்தில் இருத்து மனிதனின் கிட்னி வரை எங்கும் திருட்டு. இவை எல்லாம் மிருக அன்பை விட கேவலமான அன்பு மனிதனிடம் புகுந்து விட்டதால் வந்த அலங்கோலங்கள். .
2. மனித அன்பு:-
மனித அன்பு என்பது மாறும் அன்பாகும். இன்று "நீ இல்லாமல் வாழவே முடியாது" என்று சொல்லும் அதே வாய் நாளை "நீ இருந்தால் என்னால் வாழவே முடியாது" என்று மாறி பேசும். இன்று "உன்னை போல் நல்லவன் இல்லை" என்று சொல்லும் வாய் நாளை "உன்னை போல ஒரு கெட்டவனை நான் பார்த்ததே இல்லை" என்று சொல்லும் மனித அன்பு நம்பகத்தன்மை அற்றது ஆகும்
மேலும் இந்த அன்பு பச்சோந்தி போல அவ்வப்பொழுது நிறம் மாறும் தன்மை கொண்டது. ஏழை, பணக்காரன், பெண், ஆண், தொழிலாளி, முதலாளி, என்பதின் அடிப்படையிலும் வயது மட்டும் இருக்கும் சூழ்நிலை பதவிக்கு தகுந்தார்போலவும் நிறம் மாறும் தன்மையுள்ளது.
ஞாயிற்று கிழமை இயேசு எருசலேம் உள்ளே நுழையும் போது அவருக்கு மிக பெரிய வரவேற்பு கொடுத்து "உன்னதத்தில் இருந்து வந்தவருக்கு மகிமை" என்று பாட்டு பாடிய மக்களில் பலர் வியாழக்கிழமைக்குள் "அவரை அகற்றும்" "சிலுவையில் அறையும்" என்று சத்தம்போடும் அளவுக்கு மாறிவிட்டார்கள் என்றால் பாருங்களேன். காரணம் அவர்கள் இயேசுவை புகழ்ந்தால் தனக்கும் அவர்போல் அடி உதை கிடைத்து விடும் என்ற பயம்தான்.
ஆளை பார்த்தல் ஒரு அன்பு ஆளை பார்க்காவிட்டால் ஒரு அன்பு, தனியாக இருக்கும் போது ஒரு அன்பு கூட்டமாக இருக்கும் போது ஒரு அன்பு, பணம் இருந்தால் ஒருஅன்பு பணம் இல்லாவிட்டால் ஒரு அன்பு அப்பப்பா எத்தனை விதமான மனித அன்புகள்!
.
உலக மனிதர்களின் பச்சோந்திதனமான அன்பு எப்பொழுது எப்படி மாறும் என்பதை தனத்தையும் விளக்கி சொல்ல முடியவே முடியாது! . ஆகவேதான் "உங்கள் அன்பு மாயமற்றதாய் இருப்பதாக" என்று பவுலடியார் எச்சரித்துள்ளார்
3. தெய்வீக அன்பு:
ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. (யோவா 15:!3) என்று ஆண்டவராகிய இயேசு சொன்ன வார்த்தைகளில் வரும் உயர்ந்த அன்பினையே தெய்வீக அன்பு என்றும் நேசம் என்றும் சொல்ல முடியும்.
தெய்வீக அன்பு என்பது தன்னை பற்றி என்றுமே கவலைப்படாது, பிறர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்க்காக தன்னையே கொடுக்க கூட தயங்காது. ஒருவன் எத்தனை முறை திட்டினாலும், எத்தனை முறை கடன் வங்கி திருப்பிதாராமல் போனாலும், எவ்வளவுதான் துரோகம் செய்திருந்தாலும் அவன் மீதிலும் அன்பு வைக்கும் நிலையான அன்பே தெய்வீக அன்பு.
.
இந்த அன்பு மனிதன் எப்படிப்பட்டவன் என்று பார்க்காது, தனக்கு ஏதாவது கைமாறு கிடைக்குமா என்று பார்க்காது, ஏழை பணக்காரன் வித்தியாசம் பார்க்காது, யாரையும் மனம் நோக பேசாது, இருக்கும் சூழ்நிலையை பார்க்காது ஆனால் பிறருக்கு எவ்விதத்திலாவது உதவ வேண்டும் என்று நினைக்கும். இறைவனின் ஆவி நம்முள் உற்றப்பட்டால் ஒழிய இப்படி ஒரு அன்பை நாம் ருசித்து பார்க்க முடியாது. அப்படிப்பட்ட தெய்வீக அன்பை பற்றி அன்பை பற்றி 1கொரிந்தியர் 13ம் அதிகாரம் மிக அருமையாக விளக்குகிறது.
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
நரகம் என்று ஒரு கொடிய இடம் இருக்கிறது என்பதை நேரடியாக பார்த்த தெய்வீக மனிதர்கள், எப்படியாவது இந்த ஜனங்களை அங்கு போவதிலிருந்து மீட்க வேண்டும் எந்த ஆதங்கத்தில் சொந்த நாட்டை, நல்ல வாழ்க்கையை துறந்து காடு மேடு என்று அலைந்து இயேசுவை அறிவிக்கும் அந்த அன்பை என்னே சொல்வது.

நல்ல வாழ்க்கையை துறந்து இந்தியாவுக்கு வந்து இந்திய மக்களுக்காக உழைத்து மரித்த "கார்மைக்கேல் அம்மையார்" "மதர் தெரசா", ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததர்க்காக நெருப்பால் கொளுத்தப்பட்ட வில்லியம், மார்டின் லூதர் போன்ற தேவே மனிதர்களிடமே இந்த அன்பை கான முடியும். யாரென்றே தெரியாதவருக்காக கண்ணீர் விட்டு கதறி மன்றாடவும், பிறருக்காக தன்னையே கொடுக்கவும் கூடிய அன்பு கிறிஸ்தவத்திலன்றி வேறு எந்த மதத்திலும் கிடையாது. ஏனென்றால் அன்புக்கு இலக்கணமான ஆண்டவர் இயேசு என்னும் ஜீவனுள்ள உண்மை தேவன் இங்கு தான் இருக்கிறார்!
கண்ணதாசன் சொன்னதுபோல் "கருணையும் இரக்கமும் பொங்கும் உள்ளம் தான் கடவுள் வாழ்கின்ற இல்லமாகும்" " கருணை மறந்து வாழும் மக்கள் கடவுளை தேடி எங்கு அலைந்தாலும் அவரை கண்டுகொள்ள முடியாது"
 

காற்று அலை பாயும் தன்மை கொண்டது



காற்று அலை பாயும் தன்மை கொண்டது, அதுபோல மனமும் அலைபாயும் தன்மை உடையது. ஒன்றைவிட்டு ஒன்றை எண்ணி சதா அலைந்து கொண்டே இருக்கும். அதைக்கட்டுப்படுத்துவது கடினம், அப்படிச் செய்தால் அதை சித்தம் என்பார்கள். எனவேதான் மனதை கட்டுப்படுத்தியவரை சித்தர் என்கிறார்கள்.

மனம்


மனம் ஒரு தோட்டம் போன்றது. அதனுடைய மண்ணை நாமே கொத்தி பக்குவப்படுத்தி நல்ல விதைகளை விதைக்க வேண்டும். அந்த விதையில் வளரும் மரமே நம்மையும், நாம் சார்ந்த எல்லாவற்றையும் தீர்மானம் செய்கிறது.
ஒரு மனிதன் நினைத்தது போலவே ஆகிறான். அவனது நடத்தை அவன் எண்ணங்களின் ஒட்டு மொத்தத் தொகுப்பாக இருக்கிறது.

முழுமை காண முடியாது


அன்பு இல்லாமல் வாழ்வின் நீடித்த சந்தோஷம் சாத்தியமில்லை. வெற்றிகரமான திருமண வாழ்வும், நல்ல குடும்ப வாழ்வும் இல்லாமல் வாழ்வின் உயர்ந்த நோக்கத்தில் முழுமை காண முடியாது.

வழி.



கடந்த காலத்தை துடைத்துவிடுங்கள், மறந்துவிடுங்கள். புதிய நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்குங்கள். திருப்தியான மனதில் அமைதியை பெற அது ஒன்றே வழி.

dimanche 6 mai 2012

வாழ்க்கை போராட்டமாகும்

.

 நமக்குள்ளே ஒரு மனிதன் எப்போதும் உரையாடலை நடாத்திக் கொண்டிருப்பான் இவன் ஒரு பச்சோந்தி மனிதன். கோபம் வந்தால் கோபத்தை அதிகரிப்பான் மகிழ்ச்சி வந்தால் அதையும் அதிகரிப்பான் இந்த உள் மனிதன் ஒரு சந்தர்ப்பவாதி பச்சோந்தி மனிதன் என்பதை அடையாளம் கண்டு பிடியுங்கள். உங்களை திருத்துவதற்கு முதலில் இவனை அடையாளம் காண வேண்டும். இன்றுள்ள மனிதர்கள் நேரத்திற்கு ஒரு நாடகமும், நிமிடத்திற்கு ஒரு தாளமும், செக்கனுக்கு ஒரு கூத்தும் ஆட இந்த பஞ்சோந்தி மனிதனே காரணம். இவனை திருத்தி நல்லவனாக்குவதே வாழ்க்கை போராட்டமாகும்.

உடல் நலத்திற்கான மந்திர மொழிகளாகும் :


பின்வரும் நான்கு மந்திரங்களையும் தினசரி காலையும் மாலையும் சொல்லி புதிய மனிதராக மாற்றமடைய உங்களை இரு கரம் கூப்பி வாழ்த்துகிறோம் : இவை உடல் நலத்திற்கான மந்திர மொழிகளாகும் :

அ. இறையருளே எனது பலம்..! எனது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும் இறையருள் நலமடைய செய்கிறது..! புதுப்பிக்கிறது, வீரியம் பெறச் செய்கிறது..!

ஆ. இறையின் நலமாக்கும் அருளானது என் வாழ்வில் நிறைந்திருக்கிறது. இறையருளால் என் மனம், வாக்கு, உடல் ஆகியன நலமும், பொலிவும், வளமும் பெற்றுள்ளன.

இ. இறையருள், அன்பு, அழகு, ஆற்றல், ஊக்கம், திறன், மகிழ்ச்சி, வலிமை ஆகியவற்றை எனது உடலில் உள்ள எல்லாச் செல்களிலும் நிரப்புகிறது. எனவே எனது உடலில் உள்ள எல்லா உறுப்புக்களும், திசுக்களும், செல்களும் அளப்பரிய தேஜஸ்சையும், ஓஜஸ்சையும், பலத்தையும், வீரியத்தையும், தெய்வீகத்தையும் பெறுகின்றன.

ஈ. இறையன்பு என்னை சூழ்ந்துள்ளதால் அமைதியுடன் வழி நடக்கிறேன். தெய்வீக ஈர்ப்பு, அளப்பரிய ஆர்வம், சுடர்விடும் உடல் நலம் யாவும் என்னிலிருந்து வெளிப்பட்டு பரவுகின்றன.


 மற்றவர்களை நோக்கி தகாத தூஷண வார்த்தைகளை சொல்லித் திட்டிய எவரும் தன்னளவில் நலமாக இருந்தாக சரித்திரம் கிடையாது. ஆகவே நல்ல வார்த்தைகளை பேசுங்கள் நீங்கள் நல்லவர்களாக மாறுவீர்கள். நாகாஸ்திரம் என்பது நாக்கில் இருந்து வரும் நஞ்சு தடவிய வார்த்தைகளே என்பதை உணர வேண்டும்.
 தீமை தரும் வார்த்தைகளை ஒரு காலமும் உணர்ச்சி வசப்பட்டு சொல்லக்கூடாது, சொன்னால் இதயத்தின் ஆழத்தில் விழுந்து அது தீமைகளை விளைவிக்கும்.

உங்கள் மனமே



 உங்களைப் பார்த்தால் முதுமையாக இருக்கிறது.. அடடா நோயாளியாக மாறிவிட்டீர்கள் என்று மோசமான கருத்துக்களை மற்றவர்களை நோக்கி துப்பக்கூடாது. குப்பைத் தொட்டிக்குள் போடும் அருவருப்பான வார்த்தைகளை மற்றவரை நோக்கி உழிழக்கூடாது. அப்படிச் செய்தால் பாதிக்கப்படுபவரை விட உங்கள் மனமே அழுக்குக் கூடையாகும்.

வாழ்க்கையின் வெற்றிக்கான அடிப்படை



உடம்பு எந்த நோயையும் வென்று தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. அது தினமும் புதிதாக மாறுவதால்தான் உயிர் வாழ்கிறது. அந்த மாற்றம்தான் உயிர் அது நிற்பதுதான் மரணம். எப்போதுமே புதுப்பித்தலுக்கு இடையூறாக மனம் இருக்கும், அதை உணர்ந்து மனதைச் சரிசெய்து வாழ்வதே வாழ்க்கையின் வெற்றிக்கான அடிப்படை.

அரிது



தோழனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது உயிரை கொடுக்குமளவுக்கு தோழன் கிடைப்பது அரிது....

mercredi 2 mai 2012

"உயிர்!"



நீ என் வானில்
வரும் நிலவல்ல!
  நீ என் தோட்டத்தில்
பூக்கும் மலரல்ல!
... நீ என் தேகத்தை
உரசும் தென்றல்ல!
  நீ என் கடலில்
கலக்கும் நதியல்ல!
  நீ என் இரவில்
மின்னும் விண்மின்னல்ல!
   நீ என் பகலில்
கரையும் பனியல்ல!
   நீ என் தரையில்
விழ்வும் நிழலல்ல!
   நீ என் மரத்தில்
கூவும் குயிலல்ல!
   நீ என் சோலையில்
ஆடும் மயிலல்ல!
  நீ என் இதயத்தில்
துடிக்கும் "உயிர்!"


வாழ்க்கை

 
 
வாழ்க்கை என்பது
ஒரு புத்தகம் அதில்
ஒரு பக்கம் மட்டும்
வாழ்க்கையல்ல
ஒவ்வொரு
பக்கங்களானதே
... வாழ்க்கை
உன்
பேனாவைக் கூட
மூடிவைக்காதே
அதை திறக்கும்
வினாடிகளில் கூட
நீ
எழுத நினைத்ததை
மறந்துவிடக் கூடும்
 

அன்பல்ல


கடினமான வார்த்தைகள்
வாழ்வை நாசமாக்கும்
 கொடிய விஷமாகும்.
எல்லாவற்றையும் அரவணைப்பதே
அன்பு எதையும் நிராகரிப்பது அன்பல்ல

இருப்பதை தொலைக்காதே


நடந்ததை நினைத்து வருந்தினால்
நடக்கும் வாழ்க்கை தொலையும்
தொலைந்தது கிடைக்காது
இருப்பதை தொலைக்காதே
தொலைத்தால் கிடைக்காதே