முகப்பு

mardi 3 mai 2016

காயப்படுத்தி, கஷ்டப்படுத்தி பார்க்க விரும்பாதீர்கள்...



    யாரும் உங்களின் அன்பானவர்களை காயப்படுத்தி, கஷ்டப்படுத்தி பார்க்க விரும்பாதீர்கள்...
    ஒரு ஊரில் இரு காதலர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் இரண்டு மூன்று வருடங்கள் சந்தோஷமாக தான் வாழ்ந்தார்கள்.
    ஆனால் ஒரு நாள் தன் சுதந்திரத்தை பறிப்பதாய் கூறி கணவன் தன் மனைவியுடன் சண்டை பிடித்து அவளை வார்த்தையால் காயப்படுத்தி விட்டு வேறொரு ஊரில் தனியே வாழத்தொடங்கினான்.
    ...
    ஒரு நாளும் பிரிவு என்ற சொல்லை தாங்காத மனைவி தவிப்புற்றாள்...ஒருவழியாக கணவன் இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட அவள்... எப்படியும் தன்னை தன் கணவன் பார்க்க விரும்பமாட்டான் என எண்ணிக்கொண்டு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தாள்." உங்களை கட்டாயம் ஒரே ஒரு தடவை பார்க்க வேண்டும்... உங்கள் பிரிவை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.. தயவு செய்து நான் ஏதும் தவறு செய்திருந்தால் மன்னித்து ஒரு தடவை தன்னை பார்த்து விட்டு செல்லுமாறு" கூறியிருந்தாள்.
    எனினும் அந்த கடிதத்தினை பொருட்படுத்தாத அவன் தன் வேலையை பார்க்க தொடங்கினான்... தன்னை இதுவரைக்கும் பார்க்க வராத கணவன் வேறு திருமனம் செய்திருப்பான் என தவறாக எண்ணினாள்...! எனினும் 5,6 நாட்கள் களித்து அவனுக்கு தன் காதல் மனைவியின் நினைவுகள் கண்ணை கூசவே உடனே தன் மனைவியை பார்க்க ஊருக்கு கிளம்பினான்.
    ஏனோ துயரம்! அவனின் வீட்டு வாசலில் ஊரே கூடி நின்றது...! ஏதும் புரியாத அவன் விறு விறுவென தன் வீட்டுக்குள் நுழைந்தான்... அவலம்! அவனின் மனைவி மாலைகளுடன் மலர்வளையத்தின் நடுவே...! என்ன செய்வதென்று அறியாத அவன் திகைத்து போய் மனம் செத்து நின்றான்...! காதல் நினைவுகளுடன் அவளின் இறுதி சடங்குகளும் முடிந்து போனது....! அன்று இரவு....... தன் மனைவி இறுதியாக வாழ்ந்த அறைக்குள் சென்று அழுதான்...!அங்கு ஒரு கடதாசி உறையில் என் ஆசை கணவனுக்கு என்று எழுதிய கடிதம் ஒன்று இருந்ததை கண்டான்...!
    " உங்களுக்கு இது வரைக்கும் ஒன்றையும்மறைத்தது இல்லை... ஏனோ என்னை கொஞ்ச நாளகவே உங்களுக்கு பிடிக்கவில்லை... பிடிக்காத ஒன்றுடன் வாழ முடியாது என்று தானே! அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்..!
    என்னால் உங்களை 3 வருடங்கள் மட்டுமே சந்தோஷ படுத்த முடிந்தது என நினைகிறேன்... என்னை மன்னித்து விடுங்கள்...! காதலில் அவசரபட்டு விட்டீகள்..! இனியாவது உஙகளின் மனசுக்குபிடிச்சவளோடு வாழுஙகள்...!
    இறுதியாக ஒரே ஒரு ஆசை மட்டுமே...! நான் இறந்த பின்னர் என்னை அடக்கம் செய்யும்போது நீங்கள் என்னை காதலிக்கும் போது கொடுத்த பரிசுகள், மடல்கள் அனைத்தையும் சேர்த்து புதைத்து விடுங்கள்...! என்னோடு வாழ்ந்த வாழ்க்கையை பற்றி உங்களின் எதிர்கால வாழ்க்கை துணையிடம் கூறிவிடாதீர்கள்...பாவம் அவளாவது நிம்மதியாக உங்களுடன் வாழட்டும்...! என எழுதியிருந்ததை கண்டு "அய்யோ......" என குளறி அழுதான்.... அழுதும் என்ன பயன்....?????
    இனியாவது யாரும் உங்களின் அன்பானவர்களை காயப்படுத்தி, கஷ்டப்படுத்தி பார்க்க விரும்பாதீர்கள்... காதலிக்கும் இதயம் மிகவும் மென்மையானது...! அது அன்பானவர்களைப் பற்றி பல்லாயிரகனக்கான கனவுகளுடன் இருக்கும் போது அதை நீங்கள் கசக்கி எறியும் போது எத்தனயோ தவறான முடிவுகளை எண்ண வைக்கும்...! தேவையில்லாத மெளனமும் கோவமும் இதயத்தை வேரோடு கிள்ளி எறியும் என்பதை யாரும்மறந்து விடாதீர்கள்

Aucun commentaire:

Enregistrer un commentaire