ஒரு சிறுவன் டீ போட்டுக்கொண்டிருந்தான். வகுப்பறையில் இருக்கவேண்டிய
வயதில் அனலில் நின்று வெந்து கொண்டிருந்தான். அவனிடம் அனைவரும் டீ வங்கி அருந்தினோம்.
இந்த சிறுவயதில் அருமையாக டீ போட்டிருந்தான். எனக்கு இந்த வயதில் வேன்னித்தண்ணி கூட
போடத்தெரியாது.
டீ குடுத்துவிட்டு காசை கொடுத்தேன். மீதம் இரண்டு ரூபாய்
தந்தான். நீயே வைத்துக்கொள் தம்பி உனது டீ மிக அருமையாக இருந்தது என்றேன்.
ரொம்ப நன்றி அக்கா…
நீங்க மொதல்ல கொடுத்த காசு எனக்கு மென் மேலும் உழைப்பை
கொடுக்கும் ஆனால் இரண்டாவது முறையாக கொடுத்த காசு என் உழைப்பை கெடுக்கும்.
நான் உங்களுக்கு ஓசில டீ கொடுத்தா வாங்கி அருந்துவீர்களா??
மாட்டேன் தம்பி. ஏன் கேக்குற?
அது போலத்தான் , நீங்க என் “உழைப்புக்கு ஊதியம் கொடுத்தால்
போதும் உழைக்காமல் இருக்க ஊதியம் கொடுத்துவிடாதீர்கள் ” என்றான் அந்த சிறுவன்.
குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் ஆனால் எது போல்
நேர்மையாக உழைக்கும் குழந்தைகளை பார்க்கையில் பெருமையாக இருக்கிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire