முகப்பு

samedi 5 décembre 2015

எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?"


பெருஞ்செல்வர் ஒருவர் ஓர் ஏழை விவசாயியிடம்,

"உன்னால் மட்டும் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?" என்று கேட்டார்.

அதற்கு ஏழை விவசாயி,

"கடன் இருக்கக்கூடாது. சேமிப்பு வேண்டும். தர்மம் செய்ய வேண்டும்" என்றான்.

பெருஞ்செல்வருக்குத் திகைப்பாக இருந்தது. ஓர் ஏழையால் கடனில்லாமல் எப்படி இருக்க முடியும்?

அவன் எதைச் சேமித்துவிடப் போகிறான்?

அவனாவது தர்மம் செய்வதாவது?

என்று யோசித்தார். அதை அவனிடமே கேட்டார்.

அதற்கு அந்த ஏழை சொன்னான்:

"நான் என் பெற்றோருக்குக் கடன்பட்டுள்ளேன்.
அந்தக் கடனை அடைக்க வாழ்நாள் முழுவதும்
அவர்களை என்னுடன் வைத்துக் காப்பாற்றுகிறேன்.

என் மகனை நன்கு படிக்க வைக்கிறேன்.
அவன்தான் என் சேமிப்பு.

வறுமை நிலையில் உள்ள என் தங்கைக்கு
முடிந்த உதவிகளைச் செய்கிறேன்.

அதுதான் நான் செய்யும் தர்மம்....

Aucun commentaire:

Enregistrer un commentaire