முகப்பு

dimanche 28 septembre 2014

குறை கூற



ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்...
தப்புங்க தப்பு .......
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்...
இதாங்க சரி.....
காலப்போக்கில்... நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்...
..சௌந்தா.....

பெரும்பான்மை மனிதர்கள் வெற்றி பெற்றால் மட்டுமே மகிழ்ச்சியடைவார்கள், ஆனால் தோல்வியடைந்து கொண்டே அந்தத் தோல்வியை வெற்றியாக்கவும் ஒரு வழியிருக்கிறது என்பதே பலர் அறியாத இரகசியமாகும்.

தேவையற்ற சொல்லைப் போல தேவையற்ற பேச்சும் தீங்கையே விளைவிக்கும். மௌனத்தைப் போல சிறந்த அழகு எங்குமே கிடையாது.

கடவுள் தந்த கடமையை மறந்து வீண்பேச்சிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்காமல் செயலில் ஈடுபடுங்கள். இருட்டைச் சபித்துக் கொண்டிருப்பதைவிட, ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது சிறந்தது. சௌந்தா.......

Aucun commentaire:

Enregistrer un commentaire