முகப்பு

mercredi 4 avril 2012

வாழ்ந்து காட்டுவோம்

 
 
துளியே கடல்
என்கிறது
காமம்
கடலே துளி
என்கிறது
நட்பு
 
அன்பு… காதல்… நட்பு என்ற மூன்றிற்கும் வித்தியாசம் தெரியாமல் இன்றைய நம் தலைமுறை குழம்பிக் கிடக்கிறது.
இவை ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்திருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் இடையே ஒரு மெல்லிய நூலிழை இடைவெளி இருக்கத்தான் செய்கிறது.
இதனை கவனமாய் கையாள்கிறவனுக்கு மட்டுமே காதலியுடனும், தோழியுடனும் நெருடல் இல்லாத நெருக்கம் ஏற்படும்.
நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு – என்றார் வள்ளுவப் பெருந்தகை.
சிரித்து மகிழ, நல்லன சொல்வதற்கு மட்டுமே அல்ல நட்பு. சிறந்த நட்பு என்பது தவறு செய்கிற போது, தடுத்து நிறுத்தி கண்டிப்பதே ஆகும் என்கிறார் வான் புகழ் கொண்ட வள்ளுவர்.
எனவே வள்ளுவரின் வாக்கிற்கேற்ப வாழ்ந்து காட்டுவோம்!


Aucun commentaire:

Enregistrer un commentaire