முகப்பு

samedi 10 mars 2012

உள்ளத்தைத் தொட்ட பொன்மொழிகள்

  • ஓய்வு வாழ்க்கைக்கு அவசியம். ஓய்வின் மூலம் அடுத்த பணிக்கு நீங்கள் தயாராகலாம், அதற்காக உள்ளம் விரும்பாத ஓய்வை வலுக்கட்டாயமாக எடுத்தல் கூடாது.
  • இன்பமும் துன்பமும் வாழ்க்கைச் சக்கரம். மேலும் கீழுமாக மாறி வரும்.
  • மனச்சாட்சிக்கு அடங்கி நடந்தால் எளிதில் தீங்கு செய்ய முடியாது.
  • செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம்.
  • உதவி செய்யமுடியாத அளவுக்கு யாரும் ஏழையல்ல, உதவி தேவைப்படாத அளவுக்கு யாரும் பணக்காரருமல்ல.
  • மனிதனுக்கு மட்டும்தான் சிரிக்கத் தெரியும், அதுபோல பிறர் சிரிக்கும்படி வாழவும் மனிதனுக்கு மட்டும்தான் தெரியும்.
  • எண்ணங்களை ஏலத்தில் விடுங்கள், ஏழைகளின் கண்ணீரைத் துடையுங்கள்.
  • வாழ்வில் தன்னம்பிக்கை, அடுத்து கடின உழைப்பு இரண்டும் இருந்தால் ஒரு நல்ல நிலையைக் கட்டாயம் அடையலாம்.
  • "என் சிறந்த தகுதி, என் தகுதிக்குறைவை நான் உணர்ந்திருப்பதுதான்".
  • கடின உழைப்பு என்ற மதிப்பு மிக்க சொத்தைத் தொடர்ந்து சளைக்காமல் செலவழியுங்கள். இதைத் தவிர வெற்றிக்கு உத்தரவாதம் தருவது வேறு எதுவும் அல்ல.



Aucun commentaire:

Enregistrer un commentaire