அப்பா ஆகும் போது கெட்ட பழக்கங்கள் மறைந்து விடும்: சுவாரஸ்ய தகவல்
ஒரு ஆண் அப்பா ஆகும் போது கெட்ட பழக்கங்கள் இல்லாமல் போவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
முதன் முறையாக அப்பா ஆகும் ஆண்கள் மது, புகையிலை போன்ற தீய பழக்கங்களில் இருந்து விடுபடுவதாக Oregon மாநிலப் பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு கடந்த 19 வருடங்களாக இடம்பெற்றுள்ளது. அதில் 200 க்கும் மேற்பட்ட தீய பழக்கம் உள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் நடத்தைகள் காலப்போக்கில் குறிப்பாக திருமணம் ஆன பின்னரும் எவ்வாறு மாறுகின்றது என்பதை தீவிரமாக கண்காணித்தே ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
திருமணமாகி அப்பா ஆன பின்னர் நல்ல பழக்க வழக்கங்கள் உடன் சமூகத்தில் இணைந்து பயணிக்கிற தன்மையை காண முடிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் Journal of Marriage என்ற இதழில் வெளியாகியுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire