முகப்பு

vendredi 26 août 2011

நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இதோ ஒரு கதை :


நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இதோ ஒரு கதை :


தாங்க முடியாத வெயிலில் ஒருவன் களைத்தபடி நடந்து கொண்டிருந்தான். சாலை ஓரத்தில் ஒரு மரம் நின்று கொண்டிருந்தது. அதன் நிழலில் ஒதுங்கி நின்றபோது அங்கே ஏதோ எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தான்.
அன்பர்களே.. வேலிக்கு அருகில் ஓர் அற்புதமான சுனை நீர் இருக்கிறது. தாகமாக இருந்தால் வந்து பருகவும் என்று எழுதியிருந்தது.
ஓடிச் சென்று தண்ணீரைக் குடித்தபோது வேறொரு வாசகம் எழுதப்பட்டிருந்தது. களைப்பாக இருந்தால் அதோ அருகில் இருக்கும் வாங்கில் அமர்ந்து ஓய்வெடுங்கள்.

ஓய்வெடுத்தபோது இன்னொரு வாசகம் தெரிந்தது : பசியாக இருந்தால் பக்கத்தில் இருக்கும் பீப்பாவில் ஆப்பிள்கள் இருக்கின்றன எடுத்து சாப்பிடுங்கள்.
சாப்பிட்டபோது அங்கு ஒரு முதியவர் வந்தார் : பாவிக்காவிட்டால் நீர் அசுத்தமடைந்துவிடும், படுக்காவிட்டால் வாங்கில் தூசி பிடித்துவிடும், அதிகமாக கொட்டுப்படும் ஆப்பிளை யாராவது சாப்பிடாவிட்டால் காய்த்த ஆப்பிள் மரத்திற்கு பெருமையில்லை என்றார்.
தன் கிணற்றில் குளிக்கவிடாது..

தன் வாங்கில் படுக்க விடாது..
தனக்கு தேவையற்ற உணவை மற்றவருக்கு கொடுக்க மனமில்லாது..
வாழும் மனிதனாக புவியில் ஒருவன் காணப்பட்டால் அவனால் கடவுளும் கண்ணீர் வடிக்கிறார்.

பணத்தையும், உணவையும் பதுக்கி வைத்து சுயநலத்தோடு வாழ்வது வாழ்வல்ல.



Aucun commentaire:

Enregistrer un commentaire