இளமைக்கு வழிவகுக்கும் திராட்சை
திராட்சைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் புற்றுநோயை தவிர்க்கலாம். அது மட்டுமல்லாமல் முன் கூட்டிய வயோதிகத்தை தடுக்கவும் திராட்சை உதவுகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
திராட்சையில் உள்ள கூட்டுப் பொருள்கள் சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் கதிர்வீச்சில் இருந்து செல்களை பாதுகாக்க உதவுகிறது. புற ஊதா கதிர்கள் தோல் புற்றுநோயை ஏற்படுத்த காரணமாக உள்ளது.
பார்சிலோனா பல்கலைகழகம் மற்றும் ஸ்பானிஷ் தேசிய ஆராய்ச்சி கொவுன்சில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. புற ஊதா கதிர்வீச்சு பாதிப்பை தவிர்க்க திராட்சையில் உள் ப்ளேவனாய்ட் உதவுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆய்வின் இயக்குனரும் பார்சிலோனா பல்கலைகழக உயிரி வேதியியல் நிபுணருமான மார்டா காஸ்கன்டே கூறுகையில்,"சூரிய ஒளியின் மூலம் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முடியும் என இந்த புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது" என்றார்.
அழகு சாதனப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றில் திராட்சை கூட்டுப் பொருள்கள் ஏற்கனவே உள்ளன. இருப்பினும் அவை தோல் செல்களை பாதுகாப்பதில் உரிய முறையில் செயல்படவில்லை. சூரிய கதிர்வீச்சால் தோலுக்கு ஏற்படும் சேதத்தை தவிர்ப்பதற்கு தற்போதைய ஆய்வு உதவும் என அவர் தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire