முகப்பு

mardi 3 mai 2016

நிச்சயமற்ற மனித வாழ்க்கை





    நிச்சயமற்ற மனித வாழ்க்கை அடுத்த வினாடி எது வேண்டுமானாலும் நடக்கலாம், அழுது கொண்டிருப்பவன் சிரிக்கலாம், சிரித்துக் கொண்டிருப்பவன் அழலாம் ஏனெனில் கண நேரங்களிலெல்லாம் உலகம் மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது. நாம் எவளவு நாட்கள் வாழ்வோம் என்பதில் கூட எந்த நிச்சயமும் இல்லை, இதில் நானே பெரியவன் நானில்லையென்றால் எதுவும் நடக்காது என்று நினைத்துக் கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

    நமக்கு கொடுக்கப்பட்ட நிமிடங்களில் செய்ய வேண்டிய நல்ல செயல்களை, தேவையான காரியங்களை செய்து கொண்டிருப்பதை... விட்டு விட்டு எல்லாம் நானே என்று வாழ்ந்து கொண்டிருந்தால் அது அர்த்தமற்ற வாழ்க்கையாகும்.
    இன்னும் இரண்டு தலைமுறைகள் சென்றால் நம்மை யாரென்று யாருக்குமே தெரியாது. அர்ப்பமான மனிதனாக வாழ்வதும் போதாமல், அதில், இறுமாப்பு, ஆணவம், அகங்காரம் என்று தன்னைத்தான் \புகழ்ந்து கொண்டிருப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்.
    நாளைக்கே நாம் இறந்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். இறந்த பின்பு நடப்பதெல்லாம் நமக்கே தெரிகிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும், நம்மை நேசிப்பவர்கள் அழுது கொண்டிருப்பார்கள், வேண்டாதவர்கள் இறந்த பின்பும் அவதூறு பேசி திரிவார்கள், எல்லாம் ஒன்றிரண்டு மாதங்கள் தான்.
    பின்னர் பார்த்தால் அனைவரும் அவரவர், வேலையை செய்து கொண்டிருப்பார்கள், 'அட நாம் இல்லையென்றாலும் எல்லாம் நடந்து கொண்டுதானே இருக்கிறது. என்னால் செய்ய முடியாத காரியங்களையும் மற்றவர்கள் அற்புதமாக செய்து கொண்டிருக்கிறார்களே! உலகம் அழகாக இயங்கிக் கொண்டிருக்கிறதே, நானில்லையென்றாலும் இவையெல்லாம் நடந்து கொண்டுதானே இருக்கிறது.
    ஆம்! நம்மை எதிர்பார்த்து உலகம் இயங்கிக் கொண்டிருப்பதில்லை நாம் தான் எல்லாம் நம் கையில் உள்ளதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்
    எனவே நிச்சயமில்லாத இந்த வாழ்வில் பெருமையடித்துக் கொள்வதற்கு எதுவுமில்லை, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் வரை மற்றவருக்கு நன்மையை செய்து மற்றவர்களை சந்தோஷப்படுத்தி, எப்போதும் இயந்திரத்தனமாக வாழாமல், வாழ்வினை அனுபவித்து, நண்பர்கள், சுற்றார்கள், உற்றார் உறவினர்கள் என்று அனைவரிடமும் அன்பு செலுத்தி வாழ்க்கையின் உண்மை நிலையினை அனுபவிக்கும் மனிதனே வாழ்க்கையை நன்றாக வாழ்பவனாவான்.
    நிச்சயமற்ற மனித வாழ்க்கை

பொண்ணு,,



    பொண்ணு,,
    போட்டோவுல பாக்குறதுக்கு அப்படி ஒன்னும் பேரழகாக தெரியாததால்
    பையனுக்கு இதில் அவ்வளவாக நாட்டமில்லை, போய் பார்த்து விட்டு வந்து விடலாம் என்ற சொந்தகாரர்களின் குடைச்சல் தாங்க முடியாததால் அவர்களுடனே பெண் பார்க்க கிளம்பி போனான் அவன்'. மாப்பிள்ளைக்கு இருக்கும் ஒரே கெட்டப்பழக்கம் அவன் ஒரு காபி பிரியன்'. இதை ஏற்கனவே சொந்தகாரர்கள் மூலம் அறிந்து கொண்ட பெண் வீட்டார், என் பொண்ணு அவள் கையால் போட்ட காபி என்று சொல்லி அவள் கையாலே காபியை பரிமாற வைத்து விட்டார்கள், சிறிது பதட்டத்தில் இ...ருந்த நம்ம மாப்பிள்ளை பொண்ண சரியா கூட பார்க்காம காப்பிய எடுத்து குடிக்க ஆரம்பித்து விட்டான், அப்படி ஒரு காபியை அவன் இதுவரை குடித்ததே இல்லை அவ்வளவு சுவை, அவன் மெய்மறந்து குடித்து கொண்டிருக்கும் போது,,,
    'என்ன மாப்ள காபி புடிச்சிருக்கா ??' என்று பெண்ணின் தகப்பனார் கேட்க, அதே நேரத்தில் 'என்ன தம்பி பொண்ண புடிச்சிருக்கா' என்று பையனின் சித்தப்பா கேட்க , "ரொம்ப புடிச்சிருக்கு,, சான்சே இல்ல,," என்று நம்ம மாப்ள பெண்ணின் தகப்பனாருக்கு பதில் சொல்ல, அப்புறம் என்ன,,, 'பையனே பொண்ண ரொம்ப புடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்' என்று சொல்லி சித்தப்பா தட்டை மாற்றிவிட்டார்,
    இருந்தாலும்,,
    இந்த காபி ஒன்றே போதும்,, அவளுடன் வாழ,,,
    கலக்கிட்டடி காப்பி,, என்று மாப்பிள்ளையும் மனதுக்குள் கவிதை கிறுக்க ஆரம்பித்து விட்டான்,,
    கல்யாணமும் முடிந்து விட்டது,, முதலிரவில்,, நம்ம மாப்ள தன் மனைவியின் கையை பிடித்து கொண்டு,,
    எனக்கு சுவையான காபியை போட்டுத்தந்த இந்த கைக்கு அன்னைக்கே முத்தம் குடுக்கணும்னு நெனச்சேன்,, ஆனா உங்க அப்பா திட்டுவாருன்னு பேசாம போயிட்டேன்" ,,
    சிரிப்பு தாங்க முடியாமல் மனைவி கூறினாளாம்,,)
    நீங்க அன்னைக்கே முத்தம் குடுத்திருந்தாலும் எங்க அப்பா ஒன்னும் சொல்லி இருக்க மாட்டாரு, ஏன்னா அந்த காப்பிய போட்டதே எங்க அப்பா தான்,, அதனால தான் காபி எப்படி இருக்கு மாப்ளன்னு ரொம்ப ஆர்வமா உங்க கிட்ட கேட்டாரு,,,
    மாப்பிள்ளைக்கு கோபம் தலைக்கேற,, "அப்புறம் எதுக்கு நீ போட்டதுன்னு உங்க அம்மா பொய் சொன்னாங்க ??"
    மனைவியும் பயங்கர கோபத்துடன்..
    அந்த பொய்ய சொல்ல சொன்னதே உங்க அம்மாவும் உங்க சித்தியும் தான்,,எனக்கு பொய் சொல்ல தெரியாது,, எனக்கு அடுப்பு கூட பத்த வைக்க தெரியாதுன்னு அப்பவே அவங்க கிட்ட உண்மைய சொல்லிட்டேன்"
    திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுவதில்லை, சொந்த காரர்களால் நிச்சயிக்கப்படுகிறது.

மனைவி நல வேட்பு! (Wife Appreciation!)



மனைவி நல வேட்பு! (Wife Appreciation!)
.
கிராமம் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். வறுமை அவர்களை வாட்டியது. ஒரு நாள் அந்த மனைவி, தன் கணவனைப் பார்த்து வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால் குடும்பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள். அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்தான். வழியில் மாடு அங்குமிங்கும் மிரண்டு ஓடியது.
அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவன்; அவனைப் பார்த்து; ஏனய்யா அந்த முரட்டுக் காளையுடன் சிரமப்படுகிறாய்! என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாக என் ஆட்டைத் தருகிறேன் என்றான். அறிவிற் குறைந்த அந்தக் கணவன் மாட்டைக் கொடுத்துவிட்டு ஆட்டை ஓட்டிக் கொண்டு சந்தையை நோக்கிச் சென்றான்.
எதிரேயொருவன் கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தான். அவன், அந்தக் கணவனை ஏமாற்றி கோழியென்றால் கையிலேயே தூக்கிக் கொண்டு போய்விடலாம் என்றதும், அதற்கும் அறிவிலிக் கணவன் ஒப்புக்கொண்டு ஆட்டை அவனிடம் கொடுத்துவிட்டுக் கோழியை வாங்கிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான்.
போகும்போது ஒரு பிரியாணிக் கடை! அந்தக் கடைக்காரன் அந்தக் கோழியை வாங்கி அன்றைக்குச் சமைத்துவிடத் திட்டம் போட்டு அறிவிலிக் கணவனிடம் நயமாகப் பேசி, ஒரு குவளைத் தேநீருக்குக் கோழியை வாங்கிக் கொண்டான்.
அறிவிலிக் கணவன் தேநீரைக் குடிக்கும்போது அவன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் அவனைப் பார்த்து, ''அட முட்டாளே! நானும் உன்னைக் கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். மாட்டைக் கொடுத்து ஆட்டை வாங்கினாய் - ஆட்டைக் கொடுத்து கோழியை வாங்கினாய் - கோழியைக் கொடுத்து தேநீர் வாங்கிச் சாப்பிடுகிறாய் - இதையெல்லாம் உன் மனைவி அறிந்தால் உன்னைவிட்டு ஓடியேவிடுவாள்; அல்லது உன்னை அடித்துத் துரத்துவாள்'' என்றான்.
அறிவிலிக் கணவன், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என் மனைவியை அறிவேன், என்றான்.
தான் சொல்வதுதான் நடக்கும் என்றான் பக்கத்து வீட்டுக்காரன். நடக்குமா நடக்காதா என்பதற்கு இருவரும் பந்தயம் கட்டிக் கொண்டனர். நடந்தால் அறிவிலிக் கணவன் அவனது வீட்டைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எழுதி வைத்துவிடவேண்டும். நடக்காவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன், அவனது பெட்டிக்கடையை அறிவிலிக் கணவனுக்குத் தந்துவிடவேண்டும். இப்படிப் பந்தயம் கட்டிக்கொண்டு இருவரும் வீட்டிக்குத் திரும்பினர்.
அண்டை வீட்டுக்காரன் அறிவிலியின் மனைவியிடம் அவளது கணவன் செய்த முட்டாள்தனமான காரியங்களையெல்லாம் சொல்லி, கடைசியில் உன் கணவன் மாட்டோடு சென்று ஒரு கோப்பைத் தேநீருடன் திரும்பியிருக்கிறான் என்று கேலி செய்தான்.
அறிவிலியின் மனைவியோ; தன் கணவனைப் பார்த்து "அந்தத் தேநீரையாவது வயிறு நிரம்பச் சாப்பிட்டீர்காளா?'' என்று அன்பொழுகக் கேட்டாள்.
பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரே அதிர்ச்சி.
பந்தயத்தில் தோற்றுப்போய்ப் பெட்டிக் கடையை எழுதிக் கொடுத்துவிட்டான்.
மறுநாள் அந்த அறிவிலிக் கணவனை, அவன் பார்த்து, ''என்னடா உன் மனைவி உன்னைவிட முட்டாளாக இருக்கிறாளே?' என்று கேட்டான்.
''அப்படியொன்றுமில்லை. என்னதான் அவளுக்கு என்மீது வருத்தமோ, கோபமோ இருந்தாலும் அதைப்பிறர் முன்னால் காட்டிக்கொள்ள மாட்டாள். நானும் அப்படித்தான் நடந்து கொள்வேன். அந்தத் தைரியத்தில்தான் உன்னிடம் பந்தயம் கட்டினேன்'' என்றான் அந்த அறிவிலிக் கணவன்.
.
"உன் கண்ணில் நீர் வழிந்தால்......" கவியரசரின் பாடல் நாம் அறிந்ததே, எனினும் மனைவியின் தியாகத்தைப் போற்றி எத்துனைபேர் உணர்ந்து மதிக்கிறோம்?.
"கணவன், மனைவி இருவரும் ஒருவர் வினையை இன்னொருவர் கூட இருந்து தூய்மை செய்து வாழ்வதே இல்லறம். இருவரிடையே பிணக்கு வரக் கூடாது. மன அலையை குறைத்து தியானம் பழக அமைதி அலை நிலைத்து விடும், சிந்தனை சிறக்கும், வெறுப்பு உண்டாகாது. அன்பும், கருணையும் தழைக்கும்.சிறு தவறுகளை மன்னிக்கும் தன்மை மேம்படும். ஒருவருக்கொருவர் என்ன தேவையோ அதைச் செய்யும் மனம் உண்டாகும்" என்றும், சினம், கவலை, ஏமாற்றம் வெறுப்பு முதலியன வாழ்க்கைத் துணையை துன்பம் கொள்ளச் செய்வதை உணர்ந்து கணவன்மார் அனைவரும் திருந்த வேண்டும் என்கிறார் மகரிஷி.
மனைவியைப் பற்றற்ற துறவி எனக் கூறிய மகான் அவர். இதை எத்துனைபேர் உணர்ந்து செயல்படுகிறோம் என்பதே இன்றைய கேள்வி!
.

படித்ததில் பிடித்த 2 கடவுள் கதைகள் ...!



    படித்ததில் பிடித்த 2
      படித்ததில் பிடித்த 2 கடவுள் கதைகள் ...!
      1.கடவுளின் மனைவி
      குளிர் நிரம்பிய பொழுதொன்றில் காலணிகள் கடையின் ஜன்னல் வழியே ஏக்கத்துடன் காலணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் தோளில் கரமொன்று படிந்தது.
      ...
      புன்னகை முகத்துடன் பெண்மணி ஒருவர், “என்ன பார்க்கிறாய்” என்று கேட்டார்.
      “எனக்கு ஒரு ஜோடி காலணிகள் தருமாறு கடவுளைக் கேட்டுக்கொண்டிருந்தேன்”.
      சிறுவனை உள்ளே தூக்கிச் சென்ற பெண்மணி, புழுதி படிந்த அவனுடைய பிஞ்சுப் பாதங்களைக் கழுவி, பொருத்தமான காலுறைகளையும் காலணிகளையும் தேர்ந்தெடுத்து அணிவித்தார்.
      தான்தான் கடை உரிமையாளர் என்பதை சிறுவன் யூகித்திருப்பான் என்று நம்பி , “நான் யார் தெரியுமா!” என்றார்.
      சிறுவன் சொன்னான். “தெரியுமே! நீங்கள்தான் கடவுளின் மனைவி!!”
      கனிவை வெளிப்படுத்தும் போதெல்லாம் கடவுளாகிறோம்.
      2. ஆப்பிள் கடவுள்
      நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன.
      அந்தக் கூடையின் மேல், "ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்;
      கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என எழுதி இருந்தது.
      சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
      அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது:
      'எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!'
    1.கடவுளின் மனைவி
    குளிர் நிரம்பிய பொழுதொன்றில் காலணிகள் கடையின் ஜன்னல் வழியே ஏக்கத்துடன் காலணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் தோளில் கரமொன்று படிந்தது.
    ...
    புன்னகை முகத்துடன் பெண்மணி ஒருவர், “என்ன பார்க்கிறாய்” என்று கேட்டார்.
    “எனக்கு ஒரு ஜோடி காலணிகள் தருமாறு கடவுளைக் கேட்டுக்கொண்டிருந்தேன்”.
    சிறுவனை உள்ளே தூக்கிச் சென்ற பெண்மணி, புழுதி படிந்த அவனுடைய பிஞ்சுப் பாதங்களைக் கழுவி, பொருத்தமான காலுறைகளையும் காலணிகளையும் தேர்ந்தெடுத்து அணிவித்தார்.
    தான்தான் கடை உரிமையாளர் என்பதை சிறுவன் யூகித்திருப்பான் என்று நம்பி , “நான் யார் தெரியுமா!” என்றார்.
    சிறுவன் சொன்னான். “தெரியுமே! நீங்கள்தான் கடவுளின் மனைவி!!”
    கனிவை வெளிப்படுத்தும் போதெல்லாம் கடவுளாகிறோம்.
    2. ஆப்பிள் கடவுள்
    நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன.
    அந்தக் கூடையின் மேல், "ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்;
    கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என எழுதி இருந்தது.
    சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
    அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது:
    'எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!'

மனைவி என்பவள்



    "மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை
    போன்றவள் ஆவாள். . !
    கணவனாகிய நீங்கள் சிரித்தால் அவளும் சிரிப்பாள். . !
    நீங்கள் அழுதால் அவளும் அழுவாள். . !
    ஆனால் நீங்கள் முறைத்தாலோ அல்லது ஏசினாலோ...
    அவள் உடைந்துவிடுவாள். . !
    தயவு செய்து உங்களின் கவலைகளை கண்ணாடியிடம்
    பரிமாறுங்கள். . !
    கோபத்தை காட்டி அதனை உடைத்து விடாதீர்கள்...!

தமிழ் பெண்கள் தாலி அணியும் வழக்கம்


    பகுத்தறிவு என்று நாம் நமது
    முன்னோரின் சம்பிரதாயங்களில்
    இருக்கும் விஞ்ஞான அறிவைப்
    ...
    புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து
    கேவலப்படுத்துகிறோம் .

    தமிழ் பெண்கள் தாலி அணியும் வழக்கம்
    சங்ககாலத்தில் இல்லை . அந்தப்பழக்கம்
    இடைக்காலத்தில் தான் புகுத்தப்பட்டது
    என்பது உண்மை தான்.
    நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில்
    தாலி அணிய வேண்டும் ? இந்தப் பழக்கம்
    ஏன் வழக்கமானது ?
    ஒவ்வொரு இடத்தின் தட்பவெட்ப
    நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள்
    அமைகின்றன.
    மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து
    குளிக்கும்போது தினமும் தாலியில்
    மஞ்சளைப் பூசுகின்றனர்.
    மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி
    நாசினி..
    அப்போதெல்லாம் மணமான பெண்
    அடுத்த மூன்று மாதங்களில் ஒரு
    கருவை சுமக்க தயாராகிறாள்.
    அப்போது அப்பெண் பல்வேறு நோய்
    தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம்
    உள்ளது . .கிருமி நாசினியான மஞ்சள்
    தாயையும் அவள் வயிற்றில் வளரும்
    சேயையும் நோய் தொற்றிலிருந்து
    பாதுகாக்கிறது.
    பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு
    வரை கூட மஞ்சள்கயிறு தாலியில்
    கோர்த்து போட்டிருந்தனர்.
    அப்போதெல்லாம் நம் தமிழகத்தில்
    எவ்வளவு சுகபிரசவங்கள் நடந்தது
    என்றும், தங்க செயினில் தாலி
    அணியும் இப்போது எவ்வளவு
    சுகபிரசவங்கள் நடை பெறுகிறது
    என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தால்
    இந்த உண்மை நமக்குப் புரியும் .
    அது போல் 10 ஆண்டுகளுக்கு முன்பு
    வரை எத்தனை பெண்களுக்கு மார்பகப்
    புற்று நோய் இருந்தது, இப்போது
    எத்தனை பெண்களுக்கு இருக்கிறது
    என்றும் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு
    நன்கு புரியும்.
    இப்போதும் கூட கிராமங்களில் கர்ப்பம்
    தரித்த பெண்கள் வெளியூர்களுக்கு
    செல்லும் போது தலையில்
    வேப்பிலை இலையை செருகி
    வைப்பார்கள் அது எதற்காக ? வேப்பிலை
    ஒரு சிறந்த கிருமிநாசினி.
    கர்ப்பிணிகள் தலையில் இருக்கும்
    வேப்பிலையானது அவர்கள் செல்லும்
    வழியில் சுவாசிக்கும் காற்றில்
    இருக்கும் கிருமி தொற்றிலிருந்து
    காக்கிறது .
    மேலைநாட்டினர் அவற்றின்
    மகிமையைப் புரிந்துக்கொண்ட
    மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும்
    உரிமை கொண்டாடுகின்றனர்.
    பகுத்தறிவு என்று நாம் நமது
    முன்னோரின் சம்பிரதாயங்களில்
    இருக்கும் விஞ்ஞான அறிவைப்
    புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து
    கேவலப்படுத்துகிறோம் .

samedi 23 avril 2016

புரிந்து கொள்வது அவசியம்.



நாளைய மழை அறியும் எறும்பாய் இரு
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும்
காளானாய் இராதே!

மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான்
பிறக்கின்றன. -


தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய
பலவீனம்.


*உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து
வரவேண்டும்.


நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து
கொள்வது அவசியம். 

படிப்போமா !!



உன் தலைமுடி கூட உன்
கட்டுப்பாட்டில் இல்லை !!

வாழ்வின் யதார்த்தம் பற்றி
காஞ்சி பெரியவா !!

வாழ்க்கையில் நான் அதை சாதித்து விட்டேன், இதை சாதித்து விடுவேன் என்றெல்லாம் பேசுவார்கள். ஒரு சிறுதுன்பம் வந்து விட்டால், “என் சாதனைக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட்டதே’ என்று கதறுவார்கள். சாதனையோ, வேதனையோ எதுவுமே நம் கையில் இல்லை. எல்லாம் அவன் செயல் என்ற ரீதியில் காஞ்சிப்பெரியவர் சில அறிவுரைகளை நமக்கு வழங்கியுள்ளார்.

படிப்போமா !!

நிம்மதியாக இருங்கள். எதுவும் உங்கள் கையில் இல்லை. உலகிலுள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கும். ஏதோ ஒரு பொறுப்பும் இருக்கும். அது அவர்களின் அறியாமையைத் தவிர வேறில்லை. எது உங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சற்றே சிந்தியுங்கள்.

உங்கள் உடல் உங்களின் கட்டுப்பாட்டில் இல்லையே!

உங்களின் உடம்பே உங்கள் பேச்சை கேட்காத போது, உலகில் வேறு யார் கேட்பார்? உடலை விடுங்கள். உங்களின் தலைமுடி கூட உங்களது கட்டுப்பாட்டில் இல்லை. முடி நரைப்பதும், உதிர்வதும், வழுக்கை விழுவதும் யாருக்குத் தான் பிடிக்கும்? முடி நரைப்பதையோ, உதிர்வதையோ உங்களால் தடுக்க முடியவில்லையே!

உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு? தெரியாது
உண்ட உணவை நீங்களா ஜீரணம் செய்கிறீர்கள்? அதுவாகவே ஜீரணமாகிறது. இருதயத்தையும், குடல்களையும், கணையத்தையும், சிறுநீரகத்தையும் நீங்களா இயக்குகிறீர்கள்?
இல்லையே
.

இப்படி உங்களுக்குச் சொந்தமான உங்கள் உடம்பே உங்கள் கட்டுப் பாட்டிலும், பொறுப்பிலும் இல்லாத போது, உலகில் பலவற்றையும் உங்கள் பொறுப்பு என்று நீங்கள் சிந்திப்பது அறியாமை.

மழை உங்களைக் கேட்டா வானில் இருந்து பொழிகிறது! மரம் உங்களைக் கேட்டா முளைக்கிறது!

உலகம் உங்களுடைய பொறுப்பிலா சுழலுகிறது! நட்சத்திரங்கள் உங்களது பொறுப்பிலா ஜொலிக்கிறது! நீங்கள் தான் வானிலுள்ள கோள்களை கீழே விழாமல் அந்தரத்தில் தாங்கிப் பிடிப்பவரோ! உங்கள் பொறுப்புணர்ச்சியும், கடமை உணர்ச்சியும் எவ்வளவு அறியாமை! எதுவும் உங்கள் பொறுப்பில் இல்லை.

அனைத்துமான இறைவன் உங்கள் முடியைக் கூட உங்கள் பொறுப்பில் விடவில்லை. அனைத்துமே அவன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

எந்த சக்தி உங்களையும் சேர்த்து அனைத்தையும் இயக்குகிறதோ, அது அனைத்தையுமே பார்த்துக் கொள்ளும்.

உங்களுக்கு ஏன் வீண் கவலை
எதுவும் உங்கள் கையில் இல்லை. அமைதியாய் இருங்கள்.


தந்தை


தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..!
அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக) பயன் அடைந்துக்கொள்ளுங்கள்..
தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக்கூடியவர்...
* மிகவும் அழகாக முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர் ஆவார்...
* அவரின் மரணத்திற்கு முன்பே அவருக்கு மரியாதை செய்வோம்......
* அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விட வேண்டாம்
அவர் உன்னுடைய அருகில்
இருக்கும்போது அவர் உடைய
அருமை உனக்கு தெரியபோவதுமில்லை

nanmai




kavalai






வாழ்கவளமுடன்.



    பருவ வயது குழந்தைகளை பாதுகா
    க்க பெற்றோர்கள் அறிந்துக் கொள்ள வேண்டியவை!!!
    பெற்றோர், குழந்தைகளின் இடையே பெறும் விரிசல் ஏற்பட்டு வருகிறது. ஓர் பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக வலைதளங்களின் ஈர்ப்பு. மற்றொரு பக்கம் மேற்கத்திய கலாச்சாரம், பார்ட்டி.
    பெற்றோருக்கு பணம் சம்பாதிக்க வேண்டி ஓட வேண்டிய கட்டாயம். குழந்தைகள் கையில் ஸ்மார்ட் ஃபோனை வைத்துக் கொண்டு உலகை சுற்றி ஓடுகின்றனர்.
    ...
    பருவம் எட்டுவதற்கு முன்னே பருவ லீலைகளின் மேல் மோகம், இச்சை நூல் இழை வழியே அவர்கள் வாழ்க்கையில் நுழைந்து சின்னாபின்னம் ஆக்கி விடுகிறது.
    இதில் இருந்து உங்கள் பருவ வயது குழந்தைகளை காப்பாற்ற பெற்றோர் கீழ் வரும் விஷயங்களை கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும்…
    நண்பர்களாக இருங்கள்
    உங்கள் குழந்தைகளோடு நண்பர்கைாக பழகுங்கள், வாழ்வியல் குறித்து பேசுங்கள், முக்கியமாக இல்லறத்தைப் பற்றி.
    மனதினைப் புரிந்துக் கொள்ளுங்கள்
    உங்கள் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து பழகுங்கள். படிப்பு, உடை, உணவு மட்டுமின்றி, உணர்வுகளையும் அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.
    சமூக வலைதளம்
    மிக முக்கியமாக, சமூக வலைதளம் பற்றியும், அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்று எடுத்து கூறுங்கள். முக்கியமாக பெண் பிள்ளைகளுக்கு.
    உடல் உணர்வு
    ஒவ்வொரு தாயும், பெண் குழந்தையிடம் உடல் உணர்வுகளைப் பற்றி கட்டாயம் பேச வேண்டும். அப்போது இந்த வயதில் ஏற்படும் எல்லை மீறல்களை தடுக்க முடியும்.
    பெண்மையின் மகத்துவம்
    இன்று நாளுக்கு நாள் புதிதாய் ஓர் இளம் மங்கையின் நிர்வாணப் படம் வாட்ஸ்அப்பில் உலாவி வருகிறது. அதுவும் பள்ளி செல்லும் பிள்ளைகள். காதல் என்று கூறி ஏமாற்றப்படுகின்றனர். இதில் இருந்து அவர்களை காக்க பெண்மையை பற்றியும், நானம், கூச்சம், காதல் பற்றிய தெளிவாக கூறுங்கள்.
    தாத்தா, பாட்டி
    தாத்தா, பாட்டி எனும் உறவுகளை முதியோர் இல்லம் என்னும் சிறையில் அடைக்காது, வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களே குழந்தைகள் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்வார்கள்.
    வாழ்கவளமுடன்.

வணக்கம்


    வணக்கம் சொல்லும் பொழுது
    இருகரம் கூப்புவதன் அர்த்தம் என்ன ?
    வலதுகரம் நாம் என பொருள்படும், இடதுகரம் நம்முன் அல்லது நம்மனதில் நிற்பவர்கள் என பொருள்படும்.
    நண்பர்கள். உறவினர்கள். விருத்தினர்கள். மற்றும் அனைவரையும் வரவேற்றல்
    நண்பர்கள். உறவினர்கள். விருத்தினர்கள். மற்றும் அனைவரையும் வரவேற்கும் போது இருகரங்களையும் இதயத்தின் முன் நிறுத்தி (கைகளை கூப்பி) சிரம்தாழ்த்தி வரவேற்க வேண்டும்.
    ...
    நம் கரங்களை இதயத்தின் முன் நிறுத்துவதால் இதயபூர்வமாகவும். சிரம் தாழ்த்துவதால் பணிவுடனும். வரவேற்கின்றோம்.என்று பொருள்படும்.
    தாய் தந்தையை வணங்குதல், வரவேற்றல்
    தாய் தந்தையை வணங்கும் போது முகத்தின் முன் கரங்கூப்பி வணங்க வேண்டும். (ஓர் மனிதனை அடையாளம் காண்பது என்றால் முகத்தை வைத்தே அடையாளம் காண்போம்.) நம்மை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியதால் தாய் தந்தையை முகத்தின் முன் கரங்கூப்பி வணங்கவேண்டும்.
    குருவை வணங்குதல், வரவேற்றல்
    குருவை வணங்கும்போது நெற்றிக்குநேர் கரங்கூப்பி வணங்கவேண்டும். நம் சிந்தனையை தூண்டி நம்மை சித்தித்து செயற்பட வைத்தவர் என்பதினால்.குருவை நெற்றிக்கு நேர் கரங்கூப்பி வணங்க வேண்டும்.
    கடவுளை வணங்குதல்
    கடவுளை வணங்கும் போது இருகரங்களையும் தலைக்குமேல் உயர்த்தி கூப்பி வணங்கவேண்டும்.
    கடவுள் அனைத்தையும் கடந்தவர். அனைத்தையும் நமக்கு தந்தவர். எப்பொழுதும் எம்மை ஆழ்பவர் என்பதனால் நம் கரங்களை முடிந்த அளவிற்க்கு தலைமேல் உயர்த்தி கூப்பி வணங்கவேண்டும்

தற்பெருமை, அகங்காரம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்



      ஒரு நாள், ஏழை விவசாயி ஒருவர் அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்றார். அது ஒரு கோடை காலம்.

      வெயில் சுட்டெரித்து விவசாயிக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. வெயில் காரணமாக தண்ணீர் தாகமும் எடுத்தது. சோர்வடைந்த அவர், சாலை ஓரத்தில் இருந்த மரத்தடியில் நிழலில் ஒதுங்கினார்.
      ...
      அப்போது அங்கு ஒரு இளைஞன் வந்தான். அவன் மெத்தப்படித்த மேதாவி. தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவன். தான் சந்திக்கும் நபர்களிடம் தனது புத்திசாலித் தனத்தையும், மேதமை கொள்வான்.
      மேலும் தனக்கு தெரியாதது எதுவும் இல்லை என் ஆணவம். அப்படி தெரிந்தால் அதை தனக்கு கூறுமாறு பிறரிடம் கேட்பான். அவனது இந்த ஆணவப்பெருக்கை அறிந்த பலரும் அவனைக்கண்டால் ஒதுங்கிச் செல்லத் தொடங்கினார்கள். இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட அந்த இளைஞன், தன்னைப்போல சிறந்த கல்வியாளர் யாரும் இல்லை என்ற அகந்தயுடன் இருந்தான்.
      அந்த இளைஞன் மரநிழலில் ஒதுங்கி இருந்த விவசாயியை பார்த்தான். உடனே அவரிடம் பேச ஆரம்பித்தான். ஐயா விவசாயி நான் நிறைய படித்திருக்கிறேன். எனக்கு எல்லாமே தெரியும். இருந்தாலும் எனக்கு தெரியாத எதுவும் உங்களுக்கு தெரிந்தால் அதை கூறுங்கள் பார்க்கலாம் என்று ஆனவத்துடன் பேசினான்.
      அந்த இளைஞனின் ஆணவம் குறித்து அந்த விவசாயி ஏற்கனவே அறிந்திருந்தார். எனவே அவர் அமைதியாக இருந்தார்.
      அது அந்த இளைஞனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவன் என்னதான் பேசினாலும் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் விவசாயி மவுனம் காத்தார்.
      இந்த நிலையில் அந்த இளைஞன் தன்னிடம் இருந்த உணவுப்பொட்டலத்தை பிரித்தான். சாப்பாட்டைப் பார்த்ததும் விவசாயிக்கு பசி அதிகரித்தது. அவர் கண்களில், ‘கொஞ்சம் உணவு கிடைக்காதா?’ என்ற ஏக்கம் எட்டிப்பார்த்தது. இதை வைத்து அந்த விவசாயியை மடக்க அவன் நினைத்தான்.
      இதையடுத்து அந்த விவசாயியிடம், ‘ஐயா என்னிடம் உள்ள உணவை நான் பங்கிட்டு கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு தெரியாத , நான் அறியாத, நான் கற்றுக்கொள்ளாத விஷயம் ஒன்றை நீங்கள் சொல்ல வேண்டும். அப்போது தான் என்னிடம் உள்ள உணவை உங்களுக்கு கொடுக்க முடியும்’ என்றான்.
      விவசாயி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் அந்த இளைஞனுக்கு சரியான பதிலடி கொடுத்தால் தான் அடங்குவான் என்று கருதினார். பின்னர் அந்த இளைஞன் நோக்கி, ‘படித்த முட்டாள் தான் பெருமை பேசித்திரிவான்’ என்றார். தொடர்ந்து அவர், ‘இது தான் இது வரை நீ கற்றுக்கொள்ளாத விஷயம், நான் அறிந்த விஷயம்’ என்றார்.
      விவசாயி கூறிய இந்த பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டான் அந்த இளைஞன். தற்பெருமை, அகங்காரம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை அந்த இளைஞன் உணர்ந்து கொண்டான், தன்னை மன்னிக்கும்படி அந்த விவசாயிடம் கேட்டுக்கொண்டு, தனது உணவை மகிழ்ச்சியுடன் அவரிடம் பங்கிட்டுக்கொண்டான் .

mardi 19 avril 2016

கடவுள் பக்தி என்றால் என்ன ?



கடவுள் பக்தி என்றால் என்ன ?
பூலோகத்தில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர். செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான்.
செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார். செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.
...
ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து ”அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?” என்றார்.
விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார். போகும்போது நாரதரைப் பார்த்து, “நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்,’ என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள்.
அவர் ‘தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?’ என்று கேட்பார். அதற்கு நீங்கள் ‘நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்’ என்று பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.
”அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்” என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.
நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், “நீங்கள் யார்?” என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார்.
அதற்கு அந்தச் செல்வந்தர் “தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?” என்று கேட்க, நாரதரும், நாராயணன் ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார். அதற்கு அந்த செல்வந்தர் “அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?” என்று கேட்டார்.
நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார்.
அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, “இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னார்.
அவர்கள் இருவரும் சொன்ன பதிலை நாராயணனிடம் வந்து சொன்னார் நாரதர். கடவுள் பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை.
இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று பற்றுவதே ”உண்மையான பக்தி” இப்பொழுது தெரிகிறதா? ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று பதிலளித்தார்

சொர்க்கமே ஈடாகாது


ஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி.
வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெயிலின் காரணமாக கர்பமான மனைவிக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. ஆளில்லா நடைபாதையில் என் கணவர் தண்ணீர்கு எங்கு செல்வார்! என்று அதை கணவனிடம் சொல்லாமலே வருகிறாள்.
மனைவிக்கு தாகம் எடுக்கிறது என்று அவன் புரிந்துகொண்டான். இதற்கு பெயர் தான் கணவன் மனைவி உறவு. தூரத்தில் ஒரு முதியவர் இளநீர் வியாபாரம் செய்வதை பார்த்து அவள் கையை பிடித்துகொண்டு வேகமாக சென்ற ...பிறகுதான் தெரிகிறது.
அவனிடம் ஒரு இளநீர் வாங்குவதற்கு மட்டுமே காசு இருக்கிறது என்று சரி ஒரு இளநீர் தாருங்கள் என்கிறான்.
இளநீரை வாங்கியவன் தன் மனைவியிடம் கொடுத்து எனக்கு வேண்டாம் நீ குடிமா! என்கிறான். எனக்கு மட்டும் என்றால் வேண்டாம் நீங்கள் குடித்துவிட்டு தாருங்கள் என்றாள் அவள்.
இறுதியில் மனைவியை குடிக்க வைத்தான் ஆனால் அவளோ என் கணவர் எனக்காக காடு மலையெல்லாம் வேலை செய்பவர் அவர் குடிக்கட்டும் என்று குடிப்பது போல் நடித்துக்கொண்டிருக்கிறாள்.
இளநீர் கணவன் கைக்கு வந்தது. அவனும் மனைவியை போலவே இவள் என்னை நம்பி வாழவந்தவள். அதோடு என் குழந்தையை சுமக்கிறாள். இன்னும் கொஞ்சம் இவள் குடித்தால் என்ன! என்று இவனும் குடிப்பது போல் நடிக்கிறான்.
இவர்களின் காதலையும் விட்டுக்கொடுக்கும் குணத்தையும் பார்த்த முதியவர் அந்த பெண்ணிடம் நீ என் பொண்ணு போல இருக்கிறாய் இந்த இளநீரை நீ குடிமா என்று வேறொரு இளநீரை வெட்டி தருகிறார். கணவனின் அனுமதியோடு தாகம் தீர குடித்துவிட்டு அவன் மார்பில் மெதுவாக சாய்ந்துக்கொண்டு என் மேல் இவ்வளவு பாசமா என்பது போல் அவள் பார்க்கிறாள்.
நீ என் மனைவி. என் உயிரின் பாதி என்ற அர்த்தத்துடன் கண் சிமிட்டுகிறான் அந்த காதல் கொண்ட கணவன். இப்போது அன்பு என்ற ஒன்றும் விட்டுக்கொடுக்கும் குணமும் இருந்ததால் ஒரு இளநீர் வாங்க இருந்த காசுக்கு இரண்டு இளநீர் கிடைத்தது.
((இவ்வுலகில் எல்லா உயிரும் அன்பிற்காக தான் ஏங்குகிறது நண்பர்களை. கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தலும் ஒருவர் குறையை மற்றொருவர் மறைத்து வாழும் வாழ்கைக்கு சொர்க்கமே ஈடாகாது நண்பர்களே.))

பெண்!!!



பெண்!!!
ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.
அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை ...நொடியில் சமாளிக்க வேண்டும். சின்ன காயத்திலிருந்துஉடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.
“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும?” என்று ஆச்சரியப்பட்டதுதேவதை. ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை.
அதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள். ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள். அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள். அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும். கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு. தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்.
“ஓ………இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது.
“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல. அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்.
அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது.
“அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்.
ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான். இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை.
“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,”………கடவுள் சிம்பிளாக பதிலளித்தார
புது வருடம் இன்னும் மகிழ்ச்சியாக அமைய இறைவன் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்....

நல்வாழ்த்துக்கள்...



ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.
ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.
அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
...
அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான்.
ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான்.
பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.
அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான்.
ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.
ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.
ஒருநாள்...
அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.
எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான்.
அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.
அவளோ நீயோ சாகப்போகிறாய்.
நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான்.
அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.
நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’
நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன்.
உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான்.
நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.
உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.
1. நான்காவது மனைவி நமது உடம்பு.
நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை.
நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.
2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.
நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.
அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.
அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.
நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.
உலகில் நான்கு திசைகளிலும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
புது வருடம் இன்னும் மகிழ்ச்சியாக அமைய இறைவன் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்....

காட்சி



கடவுள்....
கடவுளின் தரிசனம் வேண்டி பலகாலம் தவம்
இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது..பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்..கடவுளும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்று மன்னனிடம் சொல்ல..மன்னனும் தன்னுடைய விருப்பத்தை கடவுளிடம் வரமாக கேட்டான்.. எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ..அதேபோல.. ராணியாருக்கும்..மந்திரி மற்றும் அரச குடும்பத்தினருக்கும்... நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் நீங்கள் காட்சி தரவேண்டும்.. என்று ஆவலான வரத்தை கேட்டான்.இது அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமையும் இருந்தாலும் மன்னன் வரத்தை கேட்டுவிட்டதால் கடவுளும் அதற்க்கு சம்மதித்தார்.."அதோ தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை அங்கே அனைவரையும் அழைத்துக்கொண்டு வா..காட்சி தருகின்றேன்
என்று சொல்லி மறைந்தார்..மன்ன
னும் நாட்டில் அனைவருக்கும் தண்டோரா போட்டு அரச குடும்பத்தினருடனும்.. மக்களுடனும்.. மலையை நோக்கி புறப்பட்டான்..அனைவரும் கடவுளை காணும் ஆவலில் மலையேற துவங்கினர்.. சிறிது உயரம் சென்றவுடன்.. அங்கே செம்பு பாறைகள் தென்பட்டன..உடனே, மக்களில் நிறைய பேர்..செம்பை மடியில் கட்டிக்கொண்டு.. சிலர் பாறைகளை உடைத்து தலையில் வைத்துக்கொள்ளவும் ஆரம்பித்தனர்..மன்னன் அனைவருக்கும் கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது... இதெல்லாம் அதற்க்கு முன்னால் ஒன்றுமே இல்லை அனைவரும் வாருங்கள் என்று உரக்க சப்தமிட்டான்..அதற்க்கு "மன்னா இப்பொழுது இதுதான் தேவை கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்வது" என்று ஒட்டுமொத்தமாக கூட்டத்தில் குரல் எழும்பியது.. எப்படியோ போங்கள் என்று மீதி இருப்பவர்களை அழைத்துக்கொண்டு மலையேறதுவங்கினான் மன்னன்..மலையின் சில மைல் தூரத்தை கடந்தவுடன் அங்கே வெள்ளியிலான பாறைகளும்..வெள்ளி துண்டுகளும் நிறைய இருந்தன..அதை பார்த்த கொஞ்சம் மீதி இருந்த மக்கள் ஓடிச்சென்று மூட்டைகட்ட ஆரம்பித்தனர் மன்னன் மறுபடியும் மக்களுக்கு உரக்க சொன்னான்.. விலைமதிக்க முடியாத கடவுளின் காட்சி கிடைக்கபோகின்றது அதற்க்கு முன்னால் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்கு பயன்பட போகின்றன என்று உரைத்தான்..மன்ன
ா இப்பொழுது கடவுளின் காட்சியை விட வெள்ளிக்கட்டிகளே பிழைப்புக்கு உதவும் என்று சொல்லிக் கொண்டே மக்கள் முடிந்த அளவு அள்ள துவங்கினர்..உங்கள் தலையெழுத்து என்று சொன்ன மன்னன்.. மீதி இருந்த ராஜ குடும்பத்தினரோடு மலையேற ஆரம்பித்தான்.. இப்பொழுது சிறிதுதொலைவில் தென்பட்டது தங்கமலை.. ராஜகுடும்பத்தினர் பாதிபேர் அங்கே சென்றுவிட..மீதி இருந்தவர்கள் ராணியும்.. மந்திரியும்.. தளபதியும்..மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே..சரி வாருங்கள்.. செல்வோம் என்று மீதி இருந்தவர்களை அழைத்துக்கொண்டு முக்கால்வாசி மலையை கடந்திருப்பான் மன்னன்..அங்கே தென்பட்டது வைரமலை அதைப்பார்த்த ராணி முதற்கொண்டு அங்கே இருந்கவர்கள் ஓடிவிட..மலையின் உச்சியில் தன்னந்தனியாக போய் நின்றான் மன்னன்.. கடவுள் மன்னன் முன் பிரத்யட்சம் ஆகி எங்கே உன் மக்கள் என்றார்..மன்னன் தலை குனிந்தவனாக அவர்களது வினைப்பயன் அவர்களை அழைத்து சென்றது அய்யனே.. என்னை மன்னியுங்கள் என்றான் மன்னன்.. அதற்க்கு கடவுள் "நான் யாராக இருக்கின்றேன் எப்படி இருக்கின்றேன் என்று கோடியில் ஒரு சிலரே அறிவார்கள்..அப்
படிபட்டவர்களுக்கே எமது காட்சி என்பது கிட்டும்..உலக இச்சைகள் என்ற சேற்றை பூசிக்கொண்டவர்க
ள் சிலருக்கு உடல்..செல்வம்..
சொத்து...என்ற செம்பு.. வெள்ளி..தங்கம்..வைரம்..போன்ற ஏமாற்றும் மாயைகளில் சிக்கிக்கொண்டுள்ளனர்.. இவற்றையெல்லாம் கடந்து இச்சையற்ற நிலையில் இருப்பவரே எம்மை அடைவர்" என்று சொல்லி காட்சியை நிறைவு செய்தார் கடவுள்...

சகுனம் ::



சகுனம் ::
அவன் வீட்டை விட்டுப்...
புறப்பட்ட ஒரு காலை வேளையில்
குறுக்கே வந்தது
குட்டிகளை ஈன்று
இரண்டு நாட்களே ஆன
சாம்பல் நிற தாய்பூனை ஒன்று
பூனை குறுக்கே வந்ததால்
கெட்ட சகுனமெனப் பரபரத்த
அவன் கோபமுற்றுக்
கிழேக்கிடந்த கூரானக்
கல்லெடுத்து
பூனை மீது வீச
கல்லடிப்பட்ட பூனை
துள்ளிக்குதித்து பாய்ந்தோடி
சாலையில் விரைந்த
பேருந்து சக்கரத்தில் நசுங்கி
துடிதுடித்து
இறந்துபோனது.
தாய்பூனையைக் காணாத
குட்டிகள் ஏக்கத்தில்
சுணங்கலாம்
பசியால் வாடலாம்
கொஞ்சம் கொஞ்சமாக
இறந்து போகலாம்
இரைத்தேடி புறப்பட்ட
பூனைக்கும்
வீட்டிலிருந்து புறப்பட்ட
அவனுக்கும் யாருக்கு யாரு கெட்ட சகுனம்?
பூனைக்கு அவனா?
அவனுக்கு பூனையா?
இதில் யார் யாருக்கு ஜெமன்???