முகப்பு

lundi 30 juillet 2012

ரோஜா பூ


ரோஜா பூ
காதலிக்க தெரியாத
பெண்ணின் கூந்தலில்
இருப்பதை விட,
காதலிக்க தெரிந்த
ஆணின் கல்லறையில்
இருப்பது மேலானது… 

dimanche 29 juillet 2012

இதயம்


என் இதயம் எதை
மறக்க சொன்னாலும் -மறந்துவிடும்!
ஆனால்
உன்னை மறக்க சொன்னால் -அது
துடிப்பதை நிறுத்திவிடும் !!!! 

நட்பு ….


ஒரு துளி கண்ணீரை துடைப்பது
நட்பல்ல ,…
மறு துளி கண்ணீரை வராமல்
தடுப்பதே உண்மையன நட்பு …. 

நினைப்பது


ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்;
ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை....

mardi 24 juillet 2012

உறுதியாய்



அனைத்தையும் செவிசாய்த்துக் கேளுங்கள். உங்களுக்கு எது நல்லதென்று படுகிறதோ,
அதை உறுதியாய்ப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.... 

நட்பு! ..காதல்!

 
 
 
நிறைய பேரின்
மனதில் இருக்கும்!
நிறைய பேரில்
ஒருவராய் இருப்பது
நட்பு!
ஒருவர் மனதில்
... மட்டும் இருக்கும்!
ஒருவராய் இருப்பது
காதல்!
 

உறவு



உறவுகளின் உன்னதம்,
பிரிவுகளில் தெரியும்
பிரிவுகளின் வேதனை,
உறவுகளைஇழந்திருக்கும்போது
புரியும் 

samedi 21 juillet 2012

முடியாது



 எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது, மூடன் அறிவாளியாகலாம் பைத்தியம் தெளிந்த சித்தமுடையவனாகலாம் ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டுக்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது.

சிறிது நேரமாவது பேசுங்கள்

குழந்தைகளுடன் ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப் பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள்.
பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அவன் அவனே.. நீங்கள் நீங்களே.. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள் உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

அலட்சியம்


எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது, மூடன் அறிவாளியாகலாம் பைத்தியம் தெளிந்த சித்தமுடையவனாகலாம் ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டுக்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது.

இன்பம்


குழந்தைகள் நமது நம்பிக்கைகள், ஒரு குழந்தையின் கௌரவத்தை உணருங்கள், ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள், ஏனெனில் உண்மையிலேயே நாம் அப்படி இல்லை நீங்கள், உங்கள் பிள்ளைகள், உங்கள் குடும்பம், உங்கள் சுற்றத்தவர் அனைவரும் நலமாக வளமாக வாழ வேண்டும் அதுவே நம் பேரின்பம்…! அதைவிட்டால் வேறேது இன்பம் !


வெற்றியின் முதற்படி.


வாழ்கையை அமைக்கும்
கருவி எண்ணம்.
எண்ணத்தை உருவாக்கும் சிற்பி நீ.
எண்ணம் என்பது சக்தி
வாய்ந்த ஒரு கருவி.
உனக்குள் நீயே
பேசிக்கொள்ளும்
வார்த்தைகள் மூலம்
உன் வாழ்க்கையை சிறப்பாக‌
அமைத்துக் கொள்ள முடியும்.
  சக்தி கொடுப்பது ஆசை.
வழி காட்டுவது ஆசை.
ஆசைப்படு அதுவே
வெற்றியின் முதற்படி.
 

செய்து பழகு


வாழ்கையில் உனக்கு என்ன வேண்டும்?
முன்கூட்டியே யோசனை செய்து
பட்டியல் போட்டுக் கொள்.
செய்ய முடியும் என்று நம்பு.
முதலில் அதை மனதுக்குள்
செய்து பழகு.
முதலில் ஒரு காரியம்
செய்யும் முன் மனத்தால்
அதைச் செய்து பழகு.
 

vendredi 20 juillet 2012

உள்ளம்


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் குழந்தை உள்ளம் உண்டு..வளர்ந்த பிறகு மீண்டும் குழந்தையாகி விட முடியாது..ஒரே ஒரு வழி அதை நினைத்து பார்ப்பது தான்!!!

jeudi 19 juillet 2012

காதலின் சிறப்பு..!


காதல் அற்புதமானது...உண்மை
... காதலாக இருந்தால்..?
காதல் ஒருமலரின்
மகரந்த சேர்க்கைபோல்
அவசர அவசரமாக ..
சில நிமிடங்களுக்குள்
கட்டப் படுவதல்ல ..

காதல் ஒரு தேன்கூடு!
கோடிக்கணக்கான வண்டுகள்
தமது உள்ளத்தில் குடியிருக்கும்
ராணிக்காக
மாதக் கணக்கில்
அல்லும் பகலும்
உழைத்து
சிறுகச் சிறுக
சின்னத் தும்பிகளால்
கொண்டுவந்து சேர்க்கும்
தேன்துளியின் உழைப்புத்தான்
காதலின் உயிர்ப்பு..!

ஒருதலைக் காதலாக இருந்தாலும்
அந்தக் காதல்
வலிமையானது..
காலமெலாம் நிலைத்து நிற்பது!

கடற்கரையோரம் ..
கடலுக்குப் போன காதலன்
திரும்பி வருவரையும்
கண்ணுறங்காமல்
கஞ்சிக் குடுவையுடன்
காத்திருக்கும் அந்தத்
தவிப்புத்தான்
காதலின் சிறப்பு..!

குருவிகளில் ஒருஇனம் உண்டு
இணையிரண்டும் சேர்ந்து
கூடு கட்டும்
பெண்ணவள் முட்டையிட்டதும்
தன்னவள் களைத்துவிட்டாள்
எனவறிந்து..
ஆண்குருவிதான் இறுதிவரை
அடைகாக்கும்...

ஆகா..எத்தனை
இதமான காதல் இது..?
துன்பத்தை பகிர்ந்து கொள்ளும்
தூய காதல் இது..!

என்பது வயதிலும்
இணைபிரியாமல்
இறுதிவரை சேர்ந்து
வாழும் அந்த
முதுமைத் தம்பதிகள்
ஒருவருக்கு ஒருவர்
ஊன்றுகோலாய்
வாழ்வதுவதுதான்
காதலின் மகிமை..!

காதல்..உடலின்
சுகம் அறியாதது..
உள்ளத்தின் நாதக் கம்பிகள்..
ஒன்று சேர்ந்து ஒலிக்கும்
ஒப்பற்ற சங்கீதமே ..காதல்!

நட்பு


காதலர்களே!!!
கடைசியில்
வெறும் நட்பு
என்று கூறி
கொச்சைப்படுத்தி விடாதீர்கள்!!!
உங்கள் காதலை அல்ல;
எங்கள் நட்பை!!! 

mardi 17 juillet 2012

மனித யாத்திரை

 
பத்து திங்கள் கழிந்து துவங்கும்

மனித யாத்திரை!

முலை தேடி பால் அருந்தும்

... மழலை யாத்திரை!

இரண்டால் எழுந்து உலா வரும்

பாலன் யாத்திரை!

உலகை அறிய பள்ளி செல்லும்

மாணவ யாத்திரை!

காமம் தலைக்கேறி கன்னியை நாடும்

வாலிப யாத்திரை!

இரண்டு நாலாகி பின் ஆறாகும்

குடும்ப யாத்திரை!

கடை யிரண்டை ஆறாக்க துடிக்கும்

நடுத்தர யாத்திரை!

இரண்டு மூன்றாகி யாருமின்றி துவளும்

வயோதிக யாத்திரை!

எட்டு கால்கள் தாங்கி முடிவுறும்

மனித யாத்திரை!
 

dimanche 15 juillet 2012

நூறு மெழுகு வர்த்திகளை ஒளிரச் செய்வான்


உள்ளம் என்கின்ற கதவுக்கு வெளிப்புறமாக கைபிடி கிடையாது, அதை உள்ளிருந்து நீங்களே திறக்க வேண்டும். உங்கள் உள்ளத்தை மற்றவரால் திறக்க முடியாது.
பிரச்சனையை பேசாதீர்கள் அதை தீர்க்கும் வழிமுறைகளை பேசுங்கள், குறைகளை பேசாதீர்கள் அதை தீர்க்க முயலுங்கள்.
நல்லவனாக இருங்கள், நல்லவன் கையில் ஒரு மெழுகுவர்த்தி கிடைத்தால் அதனால் அவன் மேலும் நூறு மெழுகு வர்த்திகளை ஒளிரச் செய்வான். 

mercredi 11 juillet 2012

நட்பு பயணத்தை

 
நட்பு என்ற மூன்றெழுத்தில்
தொடக்கினோம் .....................
அன்பு என்ற மூன்றெழுத்தில்
பரிமாறிக் கொண்டோம் - அதில்
உதவி என்ற மூன்றெழுத்தும்
வந்து போனது ......................
பிரிவு என்ற மூன்றெழுத்தை
சந்திக்காமல் ..............
உறவு என்ற மூன்றெழுத்தில்
தொடருவோம் நம்
நட்பு பயணத்தை ................
 

வாழும் உயிர் நீ

 
இமை நான் அதில்
வாழும் விழி நீ .............
மலர் நான் அதில்
இருக்கும் வாசம் நீ.........
தீபம் நான் அதில்
சுடர் நீ ....................
இரவு நான் அதில்
உலவும் நிலவு நீ..............
வானம் நான் அதில்
கொட்டிகிடக்கும்
நட்சத்திரம் நீ ................
உடல் நான் அதில்
வாழும் உயிர் நீ