முகப்பு

samedi 17 septembre 2011

குறுக்கிடாதவரை.......


இரண்டு நண்பர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள் அழகான ஒரு பெண் அவர்கள் வாழ்வில் குறுக்கிடாதவரை.......


நண்பர்


ஆண்டுகள் பல ஆனாலும் சிறந்த நண்பர்களை பெற முடியாது; ஆனால் ஒரு நெடியில் அவர்களை இழந்து விடமுடியும்

mardi 13 septembre 2011

திருமண வாழ்வில்


சரியான ஜோடியை தேர்ந்தெடுப்பது முக்கியமல்ல சரியான ஜோடியாக இருப்பதுதான் முக்கியம்.


திருமணம் வேருள்ளது வளர்ந்து பூ பூக்க வல்லது அதை விசுவாசமாகக் கவனிக்க வேண்டும்.

இருவரும் பரஸ்பர முயற்சி செய்யாவிட்டால் ஒரு நாள் நம்பிக்கையோடு ஆரம்பித்த திருமணம் திடீரென உதிர்ந்து போய்விடும்.

உலகின் உயர்ந்த சந்தோஷம் திருமணத்தில்தான் இருக்கிறது. வேறு எதில் தோற்றாலும் சந்தோஷமான திருமண வாழ்வில் இருப்பவன் ஒரு வெற்றிகரமான மனிதனே.



lundi 12 septembre 2011

சூரியன்


நேற்றின்மேலே ஒளி அடிப்பதற்காகவும் நாளையின் மேலே ஒளி வீசுவதற்காகவும் இன்று சூரியன் உதிப்பதில்லை. நேற்றையையும், நாளையையும் இன்றோடு சேர்த்து ஒளிபடுத்த சூரியனாலும் முடியாது. அது ஒவ்வொரு நாளையும் தனித்தனியாகவே கணித்து செயல்படுகிறது, தனது கடமைகளை எளிதாக செய்கிறது, அதனால் நெடுங்காலம் வாழ்கிறது

அழகான வாழ்வை


மக்கள் இயற்கையை நேசிப்பதில்லை..! வீடுகளையும், வசதிகளையும் பெருக்கிக் கொண்டு தங்களை அடிமைப்படுத்திக் கொள்கிறார்கள். பொருளாதார இலாபத்தைத் தேடி அலைந்து இயற்கையோடு இணைந்த அழகான வாழ்வை தொலைத்துவிடுகிறார்கள்

samedi 27 août 2011

நீ பூக்கும் நேரத்தை


பூ பூக்கும் நேரம்

தாமரைப் பூ சூரிய உதயத்தில் பூக்கும்

செண்பக பூ காலை 6 - 7 இல் பூக்கும்

வாழைப் பூ மாலை 5 - 6 இல் பூக்கும்

மல்லிகை பூ இரவு 7 - 8 இல் பூக்கும்

பெண்ணே நீ பூக்கும் நேரத்தை

யாரால் கணிக்க முடியும்

அவசரவேண்டுகோள்... உடனடியாக..!

அவசரவேண்டுகோள்... உடனடியாக..!




முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனை எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படகூடும். மூவரினதும் வாழ்வின் நாட்கள் நிமிடங்களாகவும், செக்கன்களாகவும் சுருங்கிக்கொண்டே போகின்றன.



கலகம் அடக்கும் காவல்துறையும், மத்திய ரிசேவ் ஆயுதக்காவல் பிரிவும் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள். சட்டம் - ஒழுங்கை காரணம்காட்டி நாளையோ மறுநாளோகூட தண்டனையை நிறைவேற்ற ஆளும்தரப்பு அவசரம் காட்டுகின்ற...து.



தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அவர்களை தூக்குகயிறு நெரிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது.



பேரறிவாளனின் தாயின் கதறல் எமது எல்லோரினதும் தாயினதும் கதறலாகவே நாம் கேட்கவேண்டும். இந்த தள்ளாத வயதிலும் அந்த தாய்படும் வேதனை நம் தாய்படும் வேதனை என்றே நாம் துடிக்க வேண்டும்.



நாம் ஒருகணமும் தாமதிக்காமல் உடனடியாக செயற்படவேண்டும். இந்த தூக்குதண்டனையை நிறுத்தும் சட்ட அதிகாரம் உள்ளவர்களிடமும், தூக்குதண்டனைக்கு எதிரான சர்வதேச நிறுவனங்களிடமும் இப்போதே நீதிகேட்டு மின்னஞ்சல்களையும், தகவல்களையும் அனுப்புவோம்.



சாத்தியமான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி இந்த மூவரின் தூக்குதண்டனையை நிறுத்த இப்போதே முயல ஆரம்பிப்போம்.



காலம் மிகவேகமாக நழுவிக்கொண்டிருக்கிறது.



நாளை என்றும் பின்னர் என்றும் ஒத்திப்போடாமல் இப்போதே,



இந்த நிமிடமே மின்னஞ்சல்கள், தொலைநகல்கள் அனுப்புங்கள்.



மின்னஞ்சல்கள், தொலைநகல்கள் அனுப்ப வேண்டிய முகவரிகள்.



President Prathiba Patil



Fax: (0091) 11 230 172 90 or 230 178 24



presidentofindia@rb.nic.in



---------------------------------------------------



Home Minister P.Chidambaram



Fax: (0091) 11 230 942 21



hm@nic.in



---------------------------------------------------



Prime minister Manmohan Singh



Fax: (0091) 11 230 195 45 230 168 57



manmohansingh@sansad.nic.in



---------------------------------------------------



Tamil nadu CM Jayalalitha



011 91 44 281 33510



011 91 44 24992255



011 91 44 24991414



011 91 44 24992121



cmcell@tn.gov.in

vendredi 26 août 2011

நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இதோ ஒரு கதை :


நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இதோ ஒரு கதை :


தாங்க முடியாத வெயிலில் ஒருவன் களைத்தபடி நடந்து கொண்டிருந்தான். சாலை ஓரத்தில் ஒரு மரம் நின்று கொண்டிருந்தது. அதன் நிழலில் ஒதுங்கி நின்றபோது அங்கே ஏதோ எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தான்.
அன்பர்களே.. வேலிக்கு அருகில் ஓர் அற்புதமான சுனை நீர் இருக்கிறது. தாகமாக இருந்தால் வந்து பருகவும் என்று எழுதியிருந்தது.
ஓடிச் சென்று தண்ணீரைக் குடித்தபோது வேறொரு வாசகம் எழுதப்பட்டிருந்தது. களைப்பாக இருந்தால் அதோ அருகில் இருக்கும் வாங்கில் அமர்ந்து ஓய்வெடுங்கள்.

ஓய்வெடுத்தபோது இன்னொரு வாசகம் தெரிந்தது : பசியாக இருந்தால் பக்கத்தில் இருக்கும் பீப்பாவில் ஆப்பிள்கள் இருக்கின்றன எடுத்து சாப்பிடுங்கள்.
சாப்பிட்டபோது அங்கு ஒரு முதியவர் வந்தார் : பாவிக்காவிட்டால் நீர் அசுத்தமடைந்துவிடும், படுக்காவிட்டால் வாங்கில் தூசி பிடித்துவிடும், அதிகமாக கொட்டுப்படும் ஆப்பிளை யாராவது சாப்பிடாவிட்டால் காய்த்த ஆப்பிள் மரத்திற்கு பெருமையில்லை என்றார்.
தன் கிணற்றில் குளிக்கவிடாது..

தன் வாங்கில் படுக்க விடாது..
தனக்கு தேவையற்ற உணவை மற்றவருக்கு கொடுக்க மனமில்லாது..
வாழும் மனிதனாக புவியில் ஒருவன் காணப்பட்டால் அவனால் கடவுளும் கண்ணீர் வடிக்கிறார்.

பணத்தையும், உணவையும் பதுக்கி வைத்து சுயநலத்தோடு வாழ்வது வாழ்வல்ல.



வேலை


வெகு தொலைவில் என்ன மங்கலாகத் தெரிகிறது என்பதல்ல, ஆனால் கையில் தெளிவாக என்ன வேலை இருக்கிறதோ அதைத்தான் முக்கிய வேலையாக கருதிச் செய்ய வேண்டும்.


அந்த நாளின் வேலையை முழுமையாக செய்யுங்கள். எதிர்காலம் குறித்து திட்டமிடுங்கள் ஆனால் அது குறித்து கவலைப்படாமல் இருங்கள். ஏனென்றால் எதிர்காலம் தன்னைத்தானே பார்த்துக் கொள்ளும்.



உயிர்நாடி..!


இந்த நாளைப் பாருங்கள்..!

இதுதான் உங்கள் வாழ்க்கையின் உயிர்நாடி..!

இந்த சுருக்கமான பாதையில்

உங்கள் வாழ்வின் எல்லாவகை உண்மைகளும் உண்டு

வளர்ச்சியில் இன்பம்

செயலில் மேன்மை

சாதனையில் சந்தோஷம்

கடந்த காலம் என்பது கனவு..!

எதிர்காலம் என்பது கற்பனை..!

இன்று நன்றாக வாழ்ந்தால் ஒவ்வொரு கடந்த நாளையும் அது

சந்தோஷக்கனவாக்குகிறது..!



 நாளைதான் இன்றைய சந்தோஷத்திற்குக் காரணம் என்று நினைப்பது முட்டாள்தனம்

dimanche 14 août 2011

அம்மா


அன்பென்ற சொல்லுக்கு அர்த்தம் தேடுபவர்களே

அறிந்தது கொள்வீர் அன்பென்றால் அம்மா தானே........

உங்களது மூளையின் வயதை கண்டறிவதற்கு


உங்களது மூளையின் வயதை கண்டறிவதற்கு




உங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உங்கள் மூளையின் வயது என்ன? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? மூளைக்கும் நம் வயது தானே என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை.

மூளைக்கு வயது அதன் செயல் திறனைப் பொறுத்து உள்ளது. உடல் வளர்ந்து தளர்ந்தாலும், மூளை செயல்படுவதைப் பொறுத்து தளர்வதில்லை.



எனவே உங்களுக்கு வயதானாலும் உங்கள் மூளையின் வயது குறைவாக இருந்தால் நீங்கள் புத்திசாலி என்று அர்த்தம். அப்படியானால் இதனை எப்படிக் கண்டுபிடிப்பது? இதற்கென ஓர் இணையதளம் இயங்குகிறது.



இந்த தளம் சென்று இதில் விளையாட்டுக்களாகத் தரும் சோதனைகளுக்கு நம்மை உட்படுத்திக் கொண்டால் நம் மூளையின் வயதைக் காணலாம். ஏன் அதுவே சொல்லிவிடுகிறது. இது எப்படி இயங்குகிறது எனப் பார்க்கலாம்.



இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன. முதலில்,



Recall: இதில் பொருட்கள் காட்டப்பட்டு அவை எந்த வரிசையில் காட்டப்படுகின்றன என்று நாம் காட்ட வேண்டும். முதலில் எளிதாக இருந்தாலும் போகப்போகச் சவால் விடும் வகையில் உள்ளது. இந்த விளையாட்டு விளையாடும் தளத்தின் கீழாக மெமரி என்பது என்ன, அதனை எப்படி நாம் தீட்டி வைத்துக் கொள்ளலாம் என்று டிப்ஸ்கள் வழங்கப்படுகின்றன.



Recognition: இமேஜ் ஒன்று காட்டப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் எத்தனை முறை அது காட்டப்படுகிறது என்று சொல்ல வேண்டும். விளையாடிப் பார்க்கும் போதுதான் எவ்வளவு கடினம் என்று தெரிகிறது. இதன் கீழாகவும் டிப்ஸ்கள் தரப்படுகின்றன.



Anagrams: எழுத்துக்கள் தரப்பட்டு சொற்களை அமைக்கும் சோதனை. இதில் எழுத்துக்களை இழுத்து வரிசையில் அமைத்துச் சொற்களை அமைக்க வேண்டும். ஆங்கில சொற்கள் தெரிந்தவர்களுக்கு இது எளிது.



Pounce: எதிர்செயல்திறனைச் சோதிக்கிறது நான்காவது பிரிவு. இதில் ஆங்காங்கே ஸ்டார்கள் காட்டப்பட்டு மறையும். உங்கள் மவுஸ் கொண்டு அதில் கிளிக் செய்திட வேண்டும். எத்தனை ஸ்டார்களைக் கிளிக் செய்கிறீர்கள் என்பதுதான் விளையாட்டு. சோதிக்கப்படும் திறன், ஒரு செயலுக்கான உங்களின் எதிர்த்திறன். Pounce என இது அழைக்கப்படுகிறது.



Blink: அடுத்த மூளை விளையாட்டு வைத்த கண் வாங்காமல் பார்த்து விளையாடும் விளையாட்டு. ஒரு இமேஜ் காட்டப்படும். திடீரென இது மாறும். மாறுகையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் மாற்றம் இருக்கும். அது என்ன என்று மவுஸால் காட்ட வேண்டும்.



சற்று சிக்கலானதுதான். ஆனால் விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கும். இவை அனைத்தையும் விளையாண்டு முடித்தவுடன் உங்களின் மூளை வயது காட்டப்படுகிறது. உங்கள் வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்து நீங்கள் உங்கள் மூளைத் திறன் எப்படி உள்ளது என அறியலாம். ஒருமுறை விளையாடிப் பார்த்தால் நிச்சயம் மூளைத்திறன் உயரும்.



இணையதள முகவரி

vendredi 12 août 2011

காலம் குறுகியது



மன்னியுங்கள், மறந்துவிடுங்கள், உங்கள் தவறுகளை மற்றவர்கள் எப்படி மன்னிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே மற்றவர்களை மன்னியுங்கள். பொறுமையோடும் புரிதலோடும் இருங்கள் விரோதம் பாராட்டவோ பழிவாங்கவோ நேரமில்லை வாழ்க்கை குறுகியது.
வாழ்க்கை குறுகியது, நம் பகைமையை தொந்தரவுகளை மறக்க வேண்டும். இன்னும் காலம் இருக்கும்போதே மறக்க, மன்னிக்க வேண்டும். சண்டையை நிறுத்த காத்திருக்காதீர்கள். அன்பான வார்த்தையை சொல்ல அன்பான செயலை செய்ய காத்திருக்காதீர்கள். காலம் குறுகியது நாளை மிகவும் தாமதமாகிவிடலாம்.

jeudi 11 août 2011

நாணல்



எல்லாவிதமான கசப்பு, கோபம், சண்டை, போராட்டம், தவறான பேச்சு, விரோதம் உட்பட அனைத்தையும் விலத்தி வையுங்கள்.
 நாணல் போல மென்மையாகவும், வளையும் தன்மையுடனும் இருங்கள். செடார் மரத்தைப்போல வளையாமல் இருக்காதீர்கள்.

நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இதோ ஒரு கதை



நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இதோ ஒரு கதை :
தாங்க முடியாத வெயிலில் ஒருவன் களைத்தபடி நடந்து கொண்டிருந்தான். சாலை ஓரத்தில் ஒரு மரம் நின்று கொண்டிருந்தது. அதன் நிழலில் ஒதுங்கி நின்றபோது அங்கே ஏதோ எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தான்.
அன்பர்களே.. வேலிக்கு அருகில் ஓர் அற்புதமான சுனை நீர் இருக்கிறது. தாகமாக இருந்தால் வந்து பருகவும் என்று எழுதியிருந்தது.
ஓடிச் சென்று தண்ணீரைக் குடித்தபோது வேறொரு வாசகம் எழுதப்பட்டிருந்தது. களைப்பாக இருந்தால் அதோ அருகில் இருக்கும் வாங்கில் அமர்ந்து ஓய்வெடுங்கள்.
ஓய்வெடுத்தபோது இன்னொரு வாசகம் தெரிந்தது : பசியாக இருந்தால் பக்கத்தில் இருக்கும் பீப்பாவில் ஆப்பிள்கள் இருக்கின்றன எடுத்து சாப்பிடுங்கள்.
சாப்பிட்டபோது அங்கு ஒரு முதியவர் வந்தார் : பாவிக்காவிட்டால் நீர் அசுத்தமடைந்துவிடும், படுக்காவிட்டால் வாங்கில் தூசி பிடித்துவிடும், அதிகமாக கொட்டுப்படும் ஆப்பிளை யாராவது சாப்பிடாவிட்டால் காய்த்த ஆப்பிள் மரத்திற்கு பெருமையில்லை என்றார்.
தன் கிணற்றில் குளிக்கவிடாது..
தன் வாங்கில் படுக்க விடாது..
தனக்கு தேவையற்ற உணவை மற்றவருக்கு கொடுக்க மனமில்லாது..
வாழும் மனிதனாக புவியில் ஒருவன் காணப்பட்டால் அவனால் கடவுளும் கண்ணீர் வடிக்கிறார்.
பணத்தையும், உணவையும் பதுக்கி வைத்து சுயநலத்தோடு வாழ்வது வாழ்வல்ல.

lundi 8 août 2011

மனங்களில் உள்ளதே வாழ்க்கை



சிவப்பு மனிதனுக்கு நிழல் 
கருப்புதான் 
கருப்பு மனிதனுக்கு குருதி சிவப்புதான் 
நிறங்களில் இல்லை வாழ்கை 
மனித மனங்களில் உள்ளதே வாழ்க்கை

நண்பன்



நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது கூட இலகுவானதுதான், ஆனால்
நம் உயிரைக் கொடுக்கும் அளவிற்கு தகுந்த நண்பன் கிடைப்பதுதான் கடினமானது.

vendredi 5 août 2011

அன்பு


நம்பிக்கை உள்ள இடத்தில் 
அன்புக்கு பஞ்சமா?

தேடிய இதயங்களுக்கு
காதல் பஞ்சமா?

கவிதை புனைய 
கற்பனைக்குத்தான் பஞ்சமா?

கிடைத்த காதலுக்கு
காத்திருப்பு பஞ்சமா?

பல தடவை 
அழுது விழுந்துமறுத்தாலும்மனம் விரும்பாதவனோடுமண வாழ்க்கை முதலிரவில்முகம் சுழிக்காதுபெற்றவர்களுக்காககுற்றஉணர்வோடுமுகம் குனிந்த படி கட்டிலில்அழுது கொண்டிருப்பதுஅவள் மட்டுமல்லஅவள் சேகரித்தசெல்லக் கனவுகளும் தான் மரபு வண்டியில்இறக்க முடியாதசுமைகளோடுஇதயம் உள்ளேகண்ணீர் கசியபோலிப் புன்னகையோடுபாவி வாழ்க்கை தொடங்குகிறது...

தோழி.........நீ.



வெயில்கால நிழலாக
குளிர்காலக் கம்பளியாக
மழை நேரக் குடையாக
பசி நேர உணவாக
இருளில் ஒளியாக
துன்பத்தில் தலை தடவும்
தோழி.........நீ....