முகப்பு

mercredi 13 mars 2013

தன்மானம் இழந்து நீ வாழ்க்கையை வாங்காதே ...!!!

 
 
வாழ்க்கையில் ஒன்றை இழக்க மற்றொன்று கிடைக்கும் ..
வியர்வையை இழந்து நீ வெற்றியை வாங்கு ..
ஆசையை இழந்து நீ அமைதியை வாங்கு ..
மோகத்தை இழந்து நீ ஞானத்தை வாங்கு ..
விரோதத்தை இழந்து நீ உறவுகளை வாங்கு ..
தன்மானம் இழந்து நீ வாழ்க்கையை வாங்காதே ...!!! 

எது சிறந்தது ??

 
 
எது சிறந்தது ??
1. அனைவரையும் விட முதிர்ந்த மிகப் புராதன புருஷர் யார் ?
- இறைவன் !
2. மிகுந்த அழகுடையது எது ?
- அகில உலகம் !
...
3. மற்ற எதையும் விடப் பெரியது எது ?
- ஆகாயத்தின் வெட்டவெளி !
 
4. இந்த உலகில் எது நிலையானது ?
- நம்பிக்கை மட்டுமே !
 
5. மனிதனிடம் சிறந்ததாய் இருக்க வேண்டியது ?
- நற்குணம்தான் !
 
6. மிகவும் விரைந்து செல்லக் கூடியது ?
- நாம் எண்ணுகின்ற எண்ணங்கள் !
 
7. வலிமை மிக்கதாய் விளங்குவது ?
- தேவை !
 
8. மிகவும் சுலபமானது எது ?
- மற்றவருக்கு உபதேசம் செய்வது !
 
9. மனிதன் மிக்க கடினமானதாய் எதைக் கருதுகிறான் ?
- தன்னைத்தான் அறிதலே அவனுக்கு கடினமானது !


dimanche 10 mars 2013

பழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்..

பழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்..
 
 
எறும்பு தின்றால் கண்கள் நன்றாக தெரியும்.
 
 
விளக்கம்: இது உண்மை அல்ல... எறும்பு தின்னி என்னும் உயிரினத்திற்கு கண்கள் நன்றாக தெரியும் என்பதுதான் உண்மை.
 
2. ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்.
 
விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும். அதாவதுஇ நம் உறவினர்கள்இ நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால்இ அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது.
 
3. அடியாத மாடு படியாது.
 
விளக்கம்: உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும் என்பது தான்.

4. கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி
 
விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவேஇ (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.

5. ஆறிலும் சாவு நூறிலும் சாவு
 
விளக்கம்: மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கொளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் சாவுதான் என்பதுதான் அது. ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது.
 
6. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
 
விளக்கம்: உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்திலஇ பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு.
 
7. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
 
விளக்கம்: பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம்இ தஞ்சைஇ காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் "என் சிற்பம் எப்படி? என்று. அதற்குச் சுவைஞன் சொன்ன பதில் 'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை.

8. பசி வந்திட பத்தும் பறந்து போகும்
 
விளக்கம்: அறிவுடைமைஇ இன்சொல்இ ஈகைஇ தவம்இ காதல்இ தானம்இ தொழில்இ கல்விஇ குலப்பெருமைஇ மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை.

9. போக்கத்தவனுக்கு போலீஸ் வேலைஇ வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை
 
விளக்கம்: இந்த பழமொழியின் அர்த்தம்இ போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.

10. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
 
விளக்கம்: இதன் அர்த்தம்இ ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்து கொண்டால் இ அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.

11. சேலை கட்டிய மாதரை நம்பாதே
 
விளக்கம்: சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மை பொருள். சேல் என்றால் கண். தன் கணவனுடன் இருக்கும்போது  கண்களை அகட்டி வேறு ஒரு ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே என்பது தான் உண்மை பொருள்.
 
12. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.
 
விளக்கம்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை. அதாவது ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.



பொன்மொழிகள்!

 
 
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
 
2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.
4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.
5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.
7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.
8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.
9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.
10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.
11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான். வேண்டும்.
19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.
21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.
22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.
23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.
24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.


jeudi 7 mars 2013

ஜெயித்து விடலாம்.

 
 
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.



தவறவிடுகிறோம்.

 
 
ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால் நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம். 

பயங்களும் அகன்றுவிடும்.

 
 
நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

 
 
சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!


தயங்கியவர் வென்றதில்லை!

 
 
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!


அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!

 
 
 
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!



mardi 5 mars 2013

 
 
நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.


சிக்கனம்

 
 
சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும். 

ஒரு நிமிடமே போதும்

 
 
நல்ல நட்பை தேடிக்கொள்ள பல வருடம் போதாது.நல்ல நட்பை எதிரியாக்க ஒரு நிமிடமே போதும்

mercredi 20 février 2013

சிந்தனைகள்....

 
 
ஏற்கனவே எனது இணையத்தளத்தில் வெளிவந்தது மீண்டும் உங்களுக்காக
 
சிந்தனைகள்....
காலை எழுந்ததும் கைகளைப் பார்த்து வணங்குங்கள். விரல் நுனிப்பகுதியில் லக்சுமியும் மையப்பகுதியில் சரஸ்வதியும் மணிக்கட்டில் கோவிந்தனும் இருப்பதாகக் கூறுவார்கள். ஆலய தரிசனத்திற்கு உங்கள் கைகள் உள்ளன.

சிந்தனைகள்....
தன் தவறுகளை திருத்திக்கொண்டு தன்னைத் தொடர்ந்து புதிய மனிதனாக மாற்றிக் கொள்வதில்தான் மனிதனின் நல்ல குணம் இருக்கிறது. ஒரு மனிதனின் மனம்தான் அவனுடைய நண்பன்இ அதை அவன் தனது எதிரியாக மாற்றிவிடக் கூடாது.
 
சிந்தனைகள்....
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

சிந்தனைகள்....
தன் கிணற்றில் குளிக்கவிடாது..
தன் வாங்கில் படுக்க விடாது..
தனக்கு தேவையற்ற உணவை மற்றவருக்கு கொடுக்க மனமில்லாது..
வாழும் மனிதனாக புவியில் ஒருவன் காணப்பட்டால் அவனால் கடவுளும் கண்ணீர் வடிக்கிறார்.
பணத்தையும் உணவையும் பதுக்கி வைத்து சுயநலத்தோடு வாழ்வது வாழ்வல்ல.

சிந்தனைகள்....
பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.

சிந்தனைகள்....
நம்மைப்பற்றி நல்ல அபிப்பிராயத்தை உருவாக்காமல் நாம் எவரையுமே கவர இயலாது. செல்வத்தைச் சேமிப்பதைவிட நல்ல பெயரை உருவாக்குவதே சிறப்பானது.
 
சிந்தனைகள்....
சரியான ஜோடியை தேர்ந்தெடுப்பது முக்கியமல்ல சரியான ஜோடியாக இருப்பதுதான் முக்கியம்.
 திருமணம் வேருள்ளது வளர்ந்து பூ பூக்க வல்லது அதை விசுவாசமாகக் கவனிக்க வேண்டும்

சிந்தனைகள்....
ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்;
ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை....

சிந்தனைகள்....
எத்தனை நாள் பழகினோம் என்பது முக்கியமில்லை ;
எத்தனை நாள் உண்மையாக பழகினோம் என்பதே முக்கியம் ! 

mardi 5 février 2013

மழை

Photo : கொட்டி முடித்த மழையில் 
உடைந்திருந்த பள்ளங்களில் 
நிறைந்திருக்கும் மிச்சங்களில் 
கால் பதித்து துள்ளி விளையாடி
சேறுபூசிய அழுக்காகிய 
காலங்கள் அழியவில்லை 
இன்னும் என்னால் 
முடியும் அப்படி.....
என்தேசம் வாவென்றென்னைக் 
கை நீட்டி 
என்வாசல் தந்து 
வாடைக் காற்றில் அறையும்
என் அறையன்னலூடாய்
என் கடலை இரசிக்க விடுமானால்..
அதுவரை...
இரவல் தேசத்தின் 
இரவல் மழையில் 
இழந்தவற்றுடன் இருட்டில் 
குடைக்குள் தனியே
நனையாமல் ந(க)டக்கிறேன்!

வி.அல்விற்.
01.02.2013
 
கொட்டி முடித்த மழையில்
உடைந்திருந்த பள்ளங்களில்
நிறைந்திருக்கும் மிச்சங்களில்
கால் பதித்து துள்ளி விளையாடி
சேறுபூசிய அழுக்காகிய
காலங்கள் அழியவில்லை
... இன்னும் என்னால்
முடியும் அப்படி.....
என்தேசம் வாவென்றென்னைக்
கை நீட்டி
என்வாசல் தந்து
வாடைக் காற்றில் அறையும்
என் அறையன்னலூடாய்
என் கடலை இரசிக்க விடுமானால்..
அதுவரை...
இரவல் தேசத்தின்
இரவல் மழையில்
இழந்தவற்றுடன் இருட்டில்
குடைக்குள் தனியே
நனையாமல் ந(க)டக்கிறேன்!

வி.அல்விற்.
01.02.2013
 

dimanche 3 février 2013

உண்மையான நட்பு !!.

 
 
நினைவில் வைத்து
கனவில் காண்பதல்ல நட்பு !.
மனதில் புதைத்து மரணம்
வரை தொடர்வதுதான்
உண்மையான நட்பு !!.


தலைமைத் தகுதியை பெற முடியாது

 
 
உபதேசத்தைவிட நடந்து காட்டுவது மேலானது, முன்னுதாரணமாக நடந்து காட்டாமல் எவரும் தலைமைத் தகுதியை பெற முடியாது. 

வெளி வந்துவிடுகின்றன

 
 
அறையில் அழுகிய பொருள் இருந்தால் அதன் நாற்றம் உடனே அறையெங்கும் பரவுவதைப்போல பொறாமை, வெறுப்பு, தீமை ஆகியன இதயத்தில் இருந்தால் அவை உடனே வார்தையாக வெளி வந்துவிடுகின்றன

மனம் இருந்தால் மாட்டுக் கொட்டிலும் மாளிகை…!

 
 
நேசம் இருந்தால் விடுதியும் வீடு..!
பாசம் இருந்தால் வெட்ட வெளியும் அரண்மனை..!
இதயம் இருந்தால் இடுகாடும் சுவர்க்கம்..!
மனம் இருந்தால் மாட்டுக் கொட்டிலும் மாளிகை…!


இதனால்தான்.

 
 
கரும்பு – மிளகாய் – மலர்ச்செடி இந்த மூன்றையும் அருகருகாக நட்டு நீரை ஊற்றி வளர்த்தான் ஒருவன். ஊற்றியது ஒரே கிணற்றின் நீர்தான் ஆனால் மிளகாய் உறைத்தது, கரும்பு இனித்தது, பூ வாசமாக இருந்தது.. காரணம் இவை மூன்றும் ஒரே நீரை உண்டு வளர்ந்தாலும் தத்த...மது இயல்பை மாற்றவில்லை.
கரும்பு, மிளகாய், பூமரம் ஆகிய மூன்றும் மற்றவருக்காக தமது இயல்பை மாற்றவில்லை. மற்றவருக்கு பயந்து வாழ்ந்தால் மிளகாய் இனிக்னும் கரும்பு உறைக்கும். கடைசியில் இரண்டுமே சந்தையில் செல்லாக்காசாகப் போய்விடும். மற்றவர்களுக்கு பயந்து தமது இயல்பை மாற்றுவோர் செல்லாக்காசுகளாகவும், நடைப்பிணங்களாகவும் வாழ்வது இதனால்தான்.