முகப்பு

lundi 13 juin 2011

மரணம்



நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்த காலம் எப்படி உங்களுக்கு சொந்தமில்லையோ, அதுபோலத்தான் இறப்பதற்கு பின்னுள்ள காலமும் உங்களுக்கு சொந்தமில்லை. உங்களுக்கு அடுத்தவர் இடத்தை விட்டுக் கொடுத்ததைப் போல நீங்களும் விட்டுக் கொடுங்கள்.
இந்த உலகில் எப்படி பயமின்றி வந்தீர்களோ அப்படியே இதை விட்டுப் போகும்போதும் பயமின்றிப் போங்கள். மரணத்தில் இருந்து எப்படி வாழ்விற்கு வந்தீர்களோ அப்படியே வாழ்விலிருந்து மரணத்திற்கு போகிறீர்கள் என்று எளிமையாகக் கருதுங்கள். உலக ஒழுங்கில் உங்கள் மரணம் ஒரு பகுதி, ஆனால் உலக வாழ்வில் அது ஓர் அங்கம்.

samedi 11 juin 2011

ஆரோக்கியமான மேனியைப் பெற உதவும் சைவ உணவுகள்


ஆரோக்கியமான மேனியைப் பெற உதவும் சைவ உணவுகள்

சைவ உணவுகளை எடுத்துக் கொள்வது நமது உடல் நலனுக்கு மிகுந்த பலனை அளிக்கும் என்கின்றனர் மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
அதன் பலன்கள் பின்வருமாறு:
நச்சுக்களை அகற்றுபவை: நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.
எலும்புகளை வலுவாக்குபவை: இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சினை இல்லை.
கார்போஹைட்ரேட் பற்றாக்குறை: அசைவ உணவு அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு. இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக் கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.
எளிதில் ஜீரணம்: சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளுகோஸ் சத்தை சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.
ஆரோக்கியமான மேனி: பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.

தமிழ் மொழியில் அறிமுகமாகும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9


தமிழ் மொழியில் அறிமுகமாகும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில் அண்மையில் மேலும் 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது.
இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும்.
பல்வேறான மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
பிரவுசர் போட்டியில் மற்ற பிரவுசர்களை முந்திச் செல்ல இது கை கொடுக்கும் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது. இந்த பிரவுசர் வெளியான போது மைக்ரோசாப்ட் இந்தியாவில் பிரபலமான 29 இணைய தளங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ பிரபலப்படுத்த இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது. 
தமிழ் மற்றும் பிற மொழிகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை உங்கள் கணணியில் இயக்க http://windows.microsoft.com/en-US/internet-explorer/downloads/ie-9/worldwide-languages என்ற முகவரி சென்று அங்கிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உங்கள் கணணியில் இயங்கும் ஓபரேட்டிங் சிஸ்டம்(விஸ்டா/விண்டோஸ் 7 x 32 / 64 பிட்) எது என அறிந்து அதற்கேற்ற பதிப்பினை தரவிறக்கம் செய்திடவும்.
விண்டோஸ் எக்ஸ்பியில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 இயங்காது என்பது உங்களுக்கு ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.

jeudi 2 juin 2011

கனவு



கலைந்துபோகும் என் 
கனவுகளை 
கலைத்து பிடித்து 
கட்டிவைக்க விழையும் 
வாலிபன் நான் 
வசந்தத்தை அனுபவிக்கும் 
வயதில் 
வறுமையை 

உறக்கம் வேண்டும்



ஒளியிழந்து நிலவு,
மௌனத்தில் ஆகாயம்,
உறக்கத்தின் மடியில்
உறைந்து போன உலகம்

ஏக்கத்தில் விழித்திருக்கும் 
இந்த விழிகளுக்கு
ஓரிரவாவது உறக்கம் வேண்டும்

கைத்தொலைபேசி பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்


கைத்தொலைபேசி பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்
 உலக சுகாதார மையம் எச்சரிக்கை   கைத்தொலைபேசி பயன்படுத்தாதவர்கள் யாராவது இருக்கிறார்‌களா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்லும் அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் கைத்தொலைபேசியின் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது.
இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் கைத்தொலைபேசிகளை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப்படுத்துவதால் உடலில் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
இருப்பினும் கைத்தொலைபேசிகள் பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்ற வாதமும் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் கைத்தொலைபேசிகள் பயன்பாட்டால் புற்றுநோய் நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார மையம் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார மையத்தின் ஒரு அங்கமான சர்வதேச புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. கைத்தொலைபேசிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இடம் பெற்றிருந்தனர்.
குழுவுக்கு தலைவராக அமெரிக்க அ‌திபர் ஒபாமாவின் தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஜொனாதான் சாமெட் இருந்தார்.
கைத்தொலைபேசிகள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் எனவே அதனை அபாயகரமான பூச்சிக்கொல்லி, சலவை காரங்கள் ஆகிய ரசாயனப் பொருட்களுக்கு நிகராக பட்டியலிட வேண்டும் என்றும் அந்த ஆராய்ச்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.
கைத்தொலைபேசிகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. வெளிநாட்டில் கைத்தொலைபேசிகள் வாங்குபவர்கள், அந்த போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்ற‌ை அறிந்து கொண்டு பின்னர் தான் கைத்தொலைபேசியை வாங்குகின்றனர்.
ஆனால் இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்று பரவலாக கூறப்படுகிறது. இத்தகைய விழிப்புணர்வோடு கைத்தொலைபேசிகளை வாங்கினால் புற்றுநோய் அபாயத்தில் இருந்து ஓரளவுக்கு நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்

samedi 21 mai 2011

தவறுகளை


தன் தவறுகளை திருத்திக்கொண்டு தன்னைத் தொடர்ந்து புதிய மனிதனாக மாற்றிக் கொள்வதில்தான் மனிதனின் நல்ல குணம் இருக்கிறது. ஒரு மனிதனின் மனம்தான் அவனுடைய நண்பன், அதை அவன் தனது எதிரியாக மாற்றிவிடக் கூடாது.

உங்கள் வாழ்வை


மற்றவரில் தங்கியிராது உங்கள் வாழ்வை நீங்களே ஏற்படுத்திக் கொண்டால்தான் சொந்த வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அடைய முடியும்.

mercredi 18 mai 2011

முள்ளிவாய்க்காலில் கண்ணீரோடு .................



முள்ளிவாய்க்காலில் நின்று வானம் அதிர குழறினோமே
ஐநாவின் காதுகளுக்கு விழவேயில்லையா 
ஆண்டுகள் ஆனாலும் நீதி சாகாது என்று கூறலாம்
அநியாயமாய் கொன்றொழித்த உறவுகள் திரும்பிவருவாரோ
அறிக்கையும் ஆய்வுகளும் கண்டனங்களும் கண்துடைப்புகள் தானோ
வெறும் வாய்பேச்சும் வீண் கதைகளும் பொய் வேசம் தானோ

கொன்றொழித்து எரியூட்டி சாம்பலையும் இருந்த தடத்தையும் இல்லாதொழித்த பின்
எதை வைத்து குற்றவாளி என்பீர் 
போரே நடக்கவில்லை என்பான்
குண்டே போடவில்லை என்பான்
யாரையும் கொல்லவில்லை என்பான்
சிறையில் யாரும் இல்லை என்பான் 
என்னை யாரும் புடுங்கேலாது என்பான் 
மகிந்தனை மயிர் நரைத்து கூன் விழுந்த பின்போ கூண்டில் ஏற்றுவீர்

சிங்களவன் கொன்றது ஒன்றல்ல இரண்டல்ல நூறாயிரம் உறவுகளின் உயிர்கள்
அவன் இப்போதும் கொல்ல நினைப்பது
பலகோடி தமிழனின் தமிழீழ தாகத்தை

முப்பது ஆண்டுகளாய் வலி சுமக்கும் தேசம்

விடுதலையே மூச்சாக வாழும் மக்கள்
காற்றோடு கலந்தாலும் கடலோடு கரைந்தாலும்
மண்ணோடு புதைந்தாலும் அடங்காது எங்கள் தாகம்
விழுதுகளை வெட்டி எறிந்தாலும் வேரோடு புடுங்கி எறிந்தாலும்
மீண்டும் துளிர் விடும் விடுதலை வேட்கை
காலத்தால் அழியாத வலி வரினும் வலிமை கொண்டெழும் தன்மான உணர்வு
இழப்புகளை கண்டு இடிந்து போகாத இதயங்கள்
எதுவரினும் வீழ்ந்து கிடக்காத தமிழினம்

உலகமே உன் நாட்குறிப்பேட்டில் குறித்துவை
முள்ளிவாய்கால் என்பது குருதியில் தீக்குளித்த தேசத்தின் அடையாளம்
அது முடிவல்ல தமிழனின் தன்மானப்போரின் நான்காம் அத்தியாயத்தின் ஆரம்பம்
முள்ளிவாய்க்காலில் கண்ணீரோடு விதைத்தோம்
தமிழீழத்தில் கெளரவத்தோடு அறுவடை செய்வோம்

mardi 17 mai 2011

மனம்தான் அவனுடைய நண்பன்



தன் தவறுகளை திருத்திக்கொண்டு தன்னைத் தொடர்ந்து புதிய மனிதனாக மாற்றிக் கொள்வதில்தான் மனிதனின் நல்ல குணம் இருக்கிறது. ஒரு மனிதனின் மனம்தான் அவனுடைய நண்பன், அதை அவன் தனது எதிரியாக மாற்றிவிடக் கூடாது.

கனி



நல்ல எண்ணங்கள் நல்ல கனிகளை தருகின்றன, கெட்ட எண்ணங்கள் கெட்ட கனிகளை தருகின்றன. மனிதன்தான் தனது எண்ணங்களின் தோட்டக்காரன்.

உங்களுக்கு உண்மையாக இருங்கள்



 உங்களுக்கு உண்மையாக இருங்கள் 


இதோ உனக்கு எனது ஆசிகள் உரித்தாகட்டும் !
இந்த அறிவுரைகள் உன் நினைவில் நின்று
உன் நடத்தையை உருவாக்கட்டும் !
உனது எண்ணங்களை சொல்லாதே…
தீர்மானிக்காத எண்ணத்தை செயலாக்காதே..
நட்பாக நடந்துகொள்.. அநாகரிகமாக நடந்து கொள்ளாதே..!
உனக்கிருக்கும் நண்பர்கள், அவர்களது நண்பர்களை
இரும்பு வளையங்களால் உன் இதயத்தோடு பிணைத்துக் கொள்..
ஆனால் ஒவ்வொரு புதிய,
முதிர்ச்சியடையாத தோழனோடும் கேளிக்கையில் மூழ்கி
உன் கரத்தை மாசுபடுத்தாதே..
சண்டையில் இறங்காமல் எச்சரிக்கையாயிரு..
ஆனால் இறங்கிவிட்டால் எதிராளி உன்னிடம்
எச்சரிக்கையாக இருக்கச் செய்..!
எல்லோருக்கும் செவி கொடு..
ஆனால் சிலருக்கு மட்டுமே குரல் கொடு..!
எல்லோருடைய கண்டனங்களையும் பெற்றுக்கொள்
ஆனால் முடிவை நீயே எடு !
உன் பணத்தால் வாங்க முடியாத
உன் நடத்தை உயர்வாயிருக்கட்டும் !
ஆனால் செயற்கையாக நடந்து கொள்ளாதே
செழிப்பாயிருக்கட்டும் ஆனால் பகட்டாயிருக்கக் கூடாது..!
ஆடைதான் மனிதனை வெளிப்படுத்துகிறது
கடன் கொடுக்காதே வாங்காதே !
கடன் கொடுத்தால் கடனும் போய்விடும்
நண்பனும் போய்விடுவான்..
கடன் வாங்குவதால் சிக்கனம் கெடுகிறது
எல்லாவற்றுக்கும் மேலாக உனக்கு நீ உண்மையாயிரு
இரவும் பகலும் இது தொடரட்டும்
எவனுக்கும் நீ பொய்யாக இருக்க முடியாது.

மனம் ஒரு தோட்டம்



மனம் ஒரு தோட்டம் போன்றது. அதனுடைய மண்ணை நாமே கொத்தி பக்குவப்படுத்தி நல்ல விதைகளை விதைக்க வேண்டும். அந்த விதையில் வளரும் மரமே நம்மையும், நாம் சார்ந்த எல்லாவற்றையும் தீர்மானம் செய்கிறது.
ஒரு மனிதன் நினைத்தது போலவே ஆகிறான். அவனது நடத்தை அவன் எண்ணங்களின் ஒட்டு மொத்தத் தொகுப்பாக இருக்கிறது. 

mardi 10 mai 2011

சூரியனில் ஏற்படும் தீப்பிழம்புகளால் ஆபத்து: நாசா விண்வெளி ஆய்வு

  
நாசா விண்வெளி ஆய்வு மையத்தினரால் சூரிய இயக்க கண்காணிப்பு கருவியின் மூலம் சூரியனைப் பற்றி தொடர்ந்து கண்கானிக்கப்பட்டது.
அதில் சூரியன் சுழலும் போது இருண்ட பகுதிகளுக்கும் காந்தபுலங்களுக்கும் இடையிலான செயற்பாட்டினால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சூரியனில் உருவான பெரிய சூரியப் தீப்பிழம்புகள் உருவானதாக இங்கிலாந்தின் மத்திய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியன் சுழலும் போது இருண்ட பகுதிகளின் இயக்கப்பாட்டினால் கடந்த பிப்ரவரி மாதம் பெரிய தீப்பிழம்புகள் உருவானதாகத் தெரிவிக்கப்படுகிறது. சன்ஸ்பொர்ட்ஸ் அல்லது சூரியனின் இருண்ட பகுதிகளினால் காந்தப்புல சக்தி அதிகமாக உருவாவதாக ஆய்வாளர் டேனியல் பிறவுண் தெரிவித்துள்ளார்.
எலாஸ்டிக் வயர்களை கைகளினால் இழுப்பதன் மூலம் அந்த வயர்களில் விசை சேகரிக்கப்படுவதாகவும் அவற்றை விடும் போது சக்தியுடன் செயற்படுவதாகவும், இதனையொத்த செயல்முறையே சூரியனின் இருண்ட பகுதியில் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சூரியன் சுழலும் போது இருண்ட வலயங்களில் உள்ள சக்தி சேமிக்கப்பட்டு அவை காந்தப்புல சக்திகளுடன் மோதும் போது பெரிய ஒளியுடன் தீப்பிழம்பாக உருவெடுப்பதாக அவர் தெரிவித்தார். க்ளாஸ் எக்ஸ் ரக சூரியப் பிழம்புகளே மிகவும் வலுவானவை இருக்கின்றன எனவும் தெரிவித்தார்.

lundi 9 mai 2011

இதய திசுக்கள் பாதிப்படைந்தால் தானாகவே சரிசெய்து கொள்ளும் முறை: விஞ்ஞானிகள் சாதனை

                                                                     
பாதிக்கப்பட்ட இதயத்தில் திசுக்களை சரிசெய்து மீண்டும் துடிப்புடன் செயல்பட வைப்பதற்கான புதிய செல் தெரபி முறையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த முறையின் மூலம் திசுக்கள் தாங்களாகவே சரி செய்து கொண்டு செயல்படுகின்றன. இந்த ஆய்வு குறித்த கட்டுரை நேஷனல் அகாடமி ஆப் சயின்சில் வெளியிடப்பட்டுள்ளது.
கொலம்பியா பல்கலைகழகத்தின் ப்யூ பவுண்டேஷன்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங்கின் உயிரி மருத்துவ துறை பேராசிரியர் கார்டெனா வுன்ஜிக் நோவகோவிக் தலைமையில் நடந்த ஆய்வில் இந்த புதிய செல் தெரபி முறை கண்டறியப்பட்டுள்ளது.
மாரடைப்பு காரணமாக இதயம் மயோ கார்டியஸ் இன்பார்க்கஷன் என்ற பாதிப்பு நிலைக்கு ஆளாகிறது. இந்த பாதிப்பை சரி செய்ய சேதம் அடைந்த திசுக்கள் பகுதியில் ரத்த ஓட்டம் உச்ச நிலையில் இருக்கும் வகையில் மனித சீரமைப்பு செல்களை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர்.
புதிய மருத்துவ தொழில்நுட்பம் நல்ல பலனை அளித்துள்ளது என டொக்டர் வுன்ஜக் நோவகோவிக் தெரிவித்தார். இந்த புதிய முறையின் மூலம் பாதிப்படைந்த செல்களை தாங்களாகவே சேதத்தை சரிசெய்து கொண்டு மீண்டும் சிறப்பாக செயல்படுகின்றன. இதனால் இதய ரத்த ஓட்டமும் தடையின்றி நடைபெறும். இதய நோய்களும் தவிர்க்கப்படுகின்றன.
இதய தசை கட்டமைப்பு மற்றும் இதர இதய சீரமைப்பு ஆராய்ச்சிகளுக்கு மனித ஆதாரச் செல்லின் இதர வகைகளை பயன்படுத்தப் போவதாகவும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஆதாரச் செல்கள் மூலம் பாதிக்கப்பட்ட இதய ரத்த குழாய்கள் நன்கு வளர்கின்றன. புரதமும் உரிய அளவில் உற்பத்தி ஆகிறது. இதன் மூலம் இதய தசை பகுதியில் சேதமடைந்த பூர்விக திசு தன்னை சரிசெய்து கொண்டு இயல்பு நிலைக்கு திரும்புகிறது.

கடல் நீ்ர் மட்டம் உயருவதால் உலகின் முக்கிய நகரங்கள் மூழ்கி விடும் அபாயம்:


                                                                      
ஆர்டிக் மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் ஏற்பட்டுள்ள தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் அதிகமாக உருகி ஏராளமான அளவில் நீர் வெளியேறி வருகிறது.
இதே நிலை நீடித்தால் வரும் 2100ம் ஆண்டுக்குள் வங்கதேசம் முதல் புளோரிடா வரையிலும், பசிபிக் பெருங்கடலின் தாழ்வான பகுதிகளிலும், லண்டன் முதல் ஷங்காய் வரையிலான நகரங்களிலும் கடல் மட்டம் 1.6 மீட்டர் அளவிற்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் சுனாமி தாக்கும் ஆபத்தும் அதிகரிக்கும் என்று கடல் நீர் மட்டம் குறித்த சர்வதேச ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக பூமி உருண்டையின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக ஆர்டிக் பகுதியில் வெப்ப நிலை உயர்ந்துள்ளது என எட்டு நாடுகள் கொண்ட ஆர்டிக் மானிடரிங் அசெஸ்மென்ட் திட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனால் பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகி ஏராளமான அளவில் நீர் வெளியேறுகிறது. இவ்வாறு வெளியேறும் நீர் கடலில் கலப்பதால் கடல் மட்டம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் 0.9 மீற்றர் முதல் 1.6 மீற்றர் வரை அதாவது 5 அடி, 3 அங்குலம் வரை கடல் மட்டம் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலக தட்ப வெப்ப நிலை குறித்து ஆய்வு செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு கடந்த 2007ம் ஆண்டில் நடத்திய ஆய்வில் வரும் 2100ம் ஆண்டில் கடல் மட்டம் 18 முதல் 59 செ.மீ அளவுக்கு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடல் மட்டம் உயர்வது குறித்து ஐரோப்பிய தட்ப வெப்ப நிலை குறித்த அமைப்பின் ஆணையர் ஹெட்கார்டு கூறுகையில்,"உலகில் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அனைத்துமே அடுத்த சில ஆண்டுகளில் கடல் மட்டம் அதிகரிக்கும் என்று தான் கூறுகின்றன. இது கவலையளிக்கும் ஒரு தகவலாகும்" என்றார்.
இந்நிலையில் தட்ப வெட்ப சீர்குலைவை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடல் மட்டம் அதிகரிக்கும் போது மாலத்தீவு உள்ளிட்ட உலகின் சில நாடுகள் மூழ்கிவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 2100ம் ஆண்டில் 1.6 மீற்றர் அளவிற்கு கடல் மட்டம் அதிகரிக்கப் போகிறது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடல் மட்டம் அதிகரிப்பால் சுனாமி தாக்குதலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இதற்கு சமீபத்திய ஜப்பான் சுனாமியை உதாரணமாக அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாத்து வெப்ப நிலை அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சர்வதேச அளவிலான இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும்.

dimanche 8 mai 2011

தாயன்பு


ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அத்தனை உறவுகளினதும் ஆத்மார்த்தமான அன்பை ஒருமிக்கச் செய்து அன்பின் உச்சநிலையைக் காட்டுவது தாயன்பு மட்டுமே.

அந்தத் தாயன்பை ஒருகணம் உள்ளத்தில் எண்ணிப்பார்க்க உருவாக்கப்பட்டதே அன்னையர் தினமாகும். மேற்குலகத்தாரால் அறிமுகப்படுத்தப்பட்டதெனினும் அன்னையின் அன்பை எம் கண்முன் கொண்டுவருகிறது இந்த நாள்.

அமெரிக்காவில் வாழ்ந்த அன்னா மரியா ஜார்விஸ் என்ற பெண்மணியின் தாயன்பை அடியொற்றி அன்னையர் தினம் கொண்டாடப்படுவதாக பொதுவாகக் கூறப்படுகிறது.

எனினும் பண்டைய காலத்தில் பெண் தெய்வங்களை விசேடமாக வழிபடுவதற்காக இத்தினம் கொண்டாடப்படுவதாகவும் மாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருசில நாடுகளில் அன்னையர் தினம் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டாலும் ஒவ்வொரு வருடமும் மேமாதம் வருகின்ற இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையே பொதுவாக அன்னையர் தினமாக கொள்ளப்படுகிறது.

தூய்மையான அன்பின் மகத்துவத்தை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது. அதனை யதார்த்தமாக உணர்த்துகின்ற அன்னையின் பெருமையையும் இலகுவில் வார்த்தைகளாக்கிவிட முடியாது. அது நீலவானில் ஊஞ்சல் கட்டுவது போல் பத்துப் பௌர்ணமிகள் சுமந்து, முத்துப்போல் பெற்றெடுத்துக் காத்து, காலம்முழுவதும் தனக்காகவன்றி குழந்தைகளுக்காக வாழும் தெய்வம் தாய்.

மானுட வாழ்வில் அன்பின் முதல் வெளிப்பாடாகக் கருதப்படும் தாயன்பு வாழ்வின் அந்தம் வரை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.ஓடும் இயந்திரங்களுடன் ஓடி அலைந்து தானும் இயந்திரமாகவே மாறிக் களைத்து வருகிறான் மனிதன். விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் விந்தைகள் செய்துகொண்டிருக்கிறது விஞ்ஞானம்.
எம்மை இவ்வுலகுக்கு ஈன்றெடுத்த தாய்க்காக அந்த அன்பை உணர்வதற்காக ஒருநாளை பிரத்தியேகப்படுத்துவதில் தவறில்லை என்றே கூற முடியும்.பெண்ணின் அதியுயர் நிலையாக மதிப்பிடப்படும் தாய்மையின் மகத்துவத்தை அறிந்து அன்பான அந்த உறவுக்காக அன்பைப் பகிர்வோம்.

samedi 7 mai 2011

எனது அம்மாவின் அன்பிற்கு!



உலகிலேயே...

மிகவும் அழகானது
பூ
மிகவும் அதிசயமானது
தாஜ்மஹால்
மிகவும் பிரகாசமானது
சூரியன்
மிகவும் குளுமையானது
நிலவு
மிகவும் தெளிவானது
நதி
மிகவும் இனிமையானது
தென்றல்
ஆனாலும்...இவை எதுவும்
ஈடு இல்லை
எனது அம்மாவின்
அன்பிற்கு!

அன்பு


பூக்களில் விதையிருந்தால் அது பல கோடி பூக்களை உருவக்கும் மனிதனில் அன்பு இருந்தால் பல கோடி மனிதர்களை சொந்தமாக்கும்

vendredi 6 mai 2011

வாழ்வு


இறுக்கமான சூழலை எதிர் கொண்டு எல்லாமே உங்களுக்கு எதிராக இருந்தால், இன்னும் ஒரு நிமிடம் நீடிக்க முடியாது என்று தோன்றினாலும் கூட, கைவிட்டு விடாதீர்கள். ஏனெனில் அந்த இடத்தில் அந்த நேரத்தில்தான் வாழ்வு திசை திரும்புகிறது.