வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம் வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது. saveiour@gmail.com
vendredi 30 mai 2014
கிழவர் சொன்னார்,
வீட்டை அழகாக வைத்திருக்க விரும்பிய ஒருவர் நிறைய செடிகொடிகளை நட்டு வைத்தார். உரமிட்டார். நீர் பாய்ச்சினார்.
செடிகள் பெரிதாக வளரவில்லை. பக்கத்தில் ஒரு பூங்காவைப் பராமரிக்கும் கிழவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். இரண்டே மாதங்களில் செடி கொடிகள் செழித்து தழைத்து வளரத் தொடங்கின.
வீட்டின் உரிமையாளருக்கு வியப்பு.
அதே தண்ணீர். அதே உரம்.
அதே இடம். இது எப்படி சாத்தியம்? கிழவர் சொன்னார்,
“அய்யா! நீங்கள் அலுவலகத்திற்குப் போகும் அவசரத்தில் நீர்பாய்ச்சுகிறீர்கள். நான், குழந்தைக்கு உணவு தரும் அன்னையின் மனநிலையில் இருந்து நீர்பாய்ச்சுகிறேன்” என்று.

சிவ பூஜையில் கரடி என்றால் என்ன?
சிவ பூஜையில் கரடி என்றால் என்ன?
பூஜை செய்யும்போது தடங்கல் வந்தால், சிவ பூஜையில் கரடி வந்த மாதிரி என்று சொல்வார்கள். இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்தியம். முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும் போது, கரடி வாத்தியம் வாசிக்கச் செய்வர். இதைத்தான், சிவபூஜையில் கரடி என்பர். ஆனால், பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.

mardi 27 mai 2014
வீரன் ஒரு தடவை மட்டுமே இறக்கிறான்.
கோழைகள் மரணத்திற்கு முன் பல தடவைகள் இறக்கிறார்கள், வீரன் ஒரு தடவை மட்டுமே இறக்கிறான்.
குறையற்ற முழுமையான அன்பு அச்சத்தை வெளியே தள்ளுகிறது.
பகவத் கீதை சொல்கிறது : உன்னாலேயே உன்னை உயர்வாக்கிக்கொள்ள முடியும், உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே.. ஏனெனில் நீதான் உனது சொந்த நண்பன், அதுபோல நீயே உனது விரோதி.
கன்பூசியஸ் சொன்னார் : தன்னால் செய்யக்கூடிய மிகமிகச் சிறந்த போதனை எதுவென்றால்… ” உங்களது எண்ணங்களில் தீமை இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் ” என் றபோதனையாகவே இருக்குமென்றார்.
mercredi 14 mai 2014
வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பது எப்படி ?
வாய் துர் நாற்றம் , வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும். நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது.
சாதாரணமாக வாயிலுள்ள நுண்கிருமிகளால் வெளியேறும் கழிவுகளில் ஆவியாகக் கூடிய கந்தக (Sulfur) கூட்டுப் பொருட்கள் உள்ளன. அழுகிய முட்டையிலிருந்து வெளியேறும் Hydrogen sulfide, குப்பைக் கிடன்கிலிருந்து வரும் Methyl mercaptan, கடல் புறங்களிலிருந்து வெளியாகும் Dimethyl sulfide ஆகிய கழிவுகள் வாயிலுள்ள நுண் கிருமிகளிலிருந்து வெளியேறுகின்றன. இவைகள் Volatile Sulfur Compound (VSC) என்றழைக்கபடுகின்றன.
வாயிலிருக்கும் நுண்கிருமிகளால் வெளியேறும் இன்னும் வேறு பல கழிவுகளும் துர் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
Cadaverine – இறந்த உடலிலிருந்து வெளியேறும் நாற்றம்,
Putrescine – அழுகும் இறைச்சியிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Skatole – மனிதக் கழிவிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Isovaleric acid – வியர்க்கும் பாதத்திலிருந்து ஏற்படும் நாற்றம்.
Putrescine – அழுகும் இறைச்சியிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Skatole – மனிதக் கழிவிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Isovaleric acid – வியர்க்கும் பாதத்திலிருந்து ஏற்படும் நாற்றம்.
கிருமிகள் பெருகுவதற்கு தேவையான உணவு நாம் உண்ணும் மீன், இறைச்சி, முட்டை, பால் போன்ற புரத உணவிலிருந்தும், உமிழ் நீர், வாயின் உட்புறத்தில் கழியும் திசுக்களிலிருந்தும் கிடைக்கிறது. வாயை, சாப்பிட்ட ஒவ்வொரு முறையும் நன்றாக கொப்பளிக்காததால் உணவுப் பொருட்கள் வெண்மையான காரையாக பற்களின் இடுக்குகளில், பற்களின் மேல், ஈறுகளுக்கு உட்புறம் மற்றும் நாக்கின் பிற்பகுதியில் மாவு போன்ற வெண் படலமாக படிந்து விடுகிறது. வெண்படிமம் 0.1 – 0.2 மி.மீ அளவில் இருந்தாலும் கிருமிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் பெருகி கழிவுகளை வெளியேற்றுகின்றன.
பற்கள் கட்டியிருந்தால், அதற்கும், வாய்க்கு இடையிலும் உணவுப் பொருட்கள் தங்கி கிருமிகள் வளர ஏதுவாகிறது. வாயிலும், நாக்கிலும், பற்களின் இடுக்குகளிலும் உள்ள இடத்தில் குடியேறி கழிவுகளை வெளியேற்றும் கிருமிகளுக்கும், பிற கிருமிகளுக்கும் நிரந்தர போட்டி நடந்து கொண்டேயிருக்கிறது. இக்கிருமிகளும், அதன் கழிவுகளும் எல்லோரின் வாயிலும் இருக்கின்றன. வாயையும், பற்களையும் சுத்தமாக வைத்திருப்பவர்கள் பலருக்கு நாற்றம் இல்லாமல் இருக்கிறது. வாயையும், பற்களையும் சரியாக பராமரிக்காதவர்களுக்கு நாற்றம் மிகுந்து இருக்கிறது.
அடுத்து, வாயின் உட்பகுதியில் ஈறு நோய் (Gum disease – Chronic Periodontitis) பாதிப்புள்ளவர்களுக்கும் வாயில் துர் நாற்றம் ஏற்படலாம். குறிப்பாக நாக்கின் பின் புறத்திற்கு அருகிலுள்ள பற்கள் மற்றும் ஈற்றின் இடைவெளிகளில் உணவுப் பொருட்களின் படிமம் தேங்குகிறது. இந்த இடங்களிலும் நுண் கிருமிகள் தங்கி பற்களைச் சுற்றியுள்ள எலும்புப் பகுதியை அரித்து, பற்களில் குழியை (Periodontal pockets) ஏற்படுத்துகிறது. இந்த குழிகளிலும் மேலும் உணவுப் பொருட்களும், கிருமிகளும் தங்கி, கழிவுப் பொருட்களை உற்பத்தி செய்து வாய் துர் நாற்றத்தை அதிகரிக்கிறது.
வாய் துர் நாற்றத்திற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது?
1. நாக்கை சுத்தம் செய்வது மிகவும் முதன்மையானதும் அவசியமானதுமாகும். நாக்கின் முன் பாதி சாப்பிடும் போதும், பேசும் போதும் அடிக்கடி வாயின் மேல்புறத்தில் (Hard palate) உராய்வதால் இயற்கையாகவே சுத்தமாகிறது. ஆனால் நாக்கின் பின் பகுதி மிருதுவான Soft palate ல் உராய்வதால் போதுமான அளவில் சுத்தமாவதில்லை. வாயில் உற்பத்தியாகும் கிருமிகளையும், கந்தக காம்பௌன்ட் கழிவுகளையும் நீக்கக் கூடிய குளோரின் டை ஆக்ஸைடு அல்லது Cetylpyridinium குளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்த வேண்டும். Tooth brush மற்றும் பிளாஸ்டிக் ஸ்பூன் அல்லது Tooth scaraper உபயோகித்து நாக்கின் பின்பகுதியையும், பற்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
2. முறையான இடைவெளியில் பல் மருத்துவரிடம் ஈறு பரிசோதனையும், பற்களை சுத்தம் செய்வதும் மிக அவசியம். பற்களின் நிலைமையும், ஈறு நன்றாக வீக்கமின்றி இருக்கிறதா என்பதையும் பல் மருத்துவரிடம் முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பற்களில் காரை படிந்தும், எலும்பு தேய்ந்து பற்குழிகள் ஏற்பட்டிருந்தாலும் தகுந்த சிகிட்சை அளித்து பற்களைக் காப்பாற்றி, துர் நாற்றத்தையும் தவிர்க்க உதவுவார்.
3. புரதச்சத்துள்ள ஆகாரத்தை குறைத்தும், அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துள்ள உணவைச் சாப்பிட்டு வந்தால், வாயில் நுண் கிருமிகள் வளர வாய்ப்பிருக்காது. இத்துடன் புரதச் சத்துள்ள உணவைச் சாப்பிட்ட போது முறையாக நாக்கின் பின் பகுதியை சுரண்டி வழித்தும், பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள புரத உணவுத் துகள்களை Floss உபயோகித்து நீக்கியும், வாய் கொப்பளிக்கும் கிருமி நாசினி மருந்து (Chlorhexidine, Povidone 2% Gargle) திரவத்தால் வாய் கொப்பளித்தும் வாய் துர் நாற்றத்தைப் போக்கலாம்
4. வாயில் எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரவில் தூங்கும் போது உமிழ் நீர் சுரப்பது குறைந்து, தூங்கி எழும் போது காலையிலும், நீண்ட நேரம் பேசினாலும், பேசிய பின்னும் ஈரப்பதமின்றி வாய் உலர்ந்து விடும். வாயில் ஈரப்பதம் இல்லையென்றால் துர் நாற்றம் வீசும். இதை தவிர்க்க தினமும் நிறைய நீர் குடிக்க வேண்டும். இது உமிழ் நீர் சுரக்க உதவி, வாய் ஈரப்பதத்துடன் இருக்கும். அடிக்கடி நல்ல நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் ஈரப்பதத்துடன், வாயிலுள்ள கிருமிகளையும் அதன் கழிவுகளையும் அகற்றலாம். சர்க்கரையில்லாத மிட்டாய்கள் சுவைப்பதாலும் வாயிலுள்ள ஈரப்பதத்தை அதிகமாக்கி துர் நாற்றத்தை போக்கலாம்.
5. கிருமி நாசினியாக வாய் கொப்பளிக்கும் மருந்தையும் (Mouth wash) பயன்படுத்த வேண்டும். வாய் கொப்பளிக்கும் மருந்து 1. நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையது, 2. வாய் நாற்றம் தரும் கந்தக கூட்டுப் பொருட்களை சமன் செய்வது என இரண்டு வகைப்படும். Listerine, Cetylpyridinium Chloride mouth wash ஆகிய இரண்டும் நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது. Zinc ions உள்ள Mouth wash வாயில் நுண் கிருமிகளால் உற்பத்தியாகும் கந்தகம் கலந்த கழிவுப் பொருட்களை சமன் படுத்தும் தன்மையுடையது. இரண்டு தன்மையும் உடைய Chlorine dioxide அல்லது Sodium chlorite கலந்த Mouth wash ம் உபயோகிக்கலாம்.
சில பற்கள் அல்லது முழுவதும் (Full denture) பல் கட்டியிருந்தால், சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் அவைகளையும் கழற்றி நன்றாக கழுவிய பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இரவில் தூங்கும் போது பல் செட்டை கழற்றி, பற்பசை கொண்டு பிரஷ்சால் செட்டின் உட்புறமும் வெளியிலும் தேய்த்து தனியாக ஒரு கப்பில் வைத்து விட வேண்டும். பல் செட்டில் இயற்கையாகவே நுண் துளைகள் இருக்கும். எனவே துளைகளுக்குள் சென்று சுத்தம் செய்யக் கூடிய கிருமி நாசினி யை உபயோகித்து இரண்டு வேளையும் பல் செட்டை சுத்தம் செய்ய வேண்டும். மேற் கூறிய எல்லா முறைகளையும் பின் பற்றினால்தான் வாய் துர் நாற்றத்தை முழுமையாக நீக்கலாம்.
mardi 13 mai 2014
தன்னைத்தானே ஏமாற்றுகிறான்..
நீ பிறக்க முன்னர் இந்த உலகம் உனக்குத் தெரியாது.. பிறந்த அக்கணமே இந்த உலகத்தைக் காண்கிறாய்.. பிறந்த நாள் என்றால் உலகத்தைக் காணும் நாள் என்று இறைவன் உனக்கொரு செய்தி சொல்கிறான். ஒவ்வொரு பிறந்த நாளிலும் நீ உலகத்தைப் பற்றி எவ்வளவு அறிந்தாய் என்ற கேள்வி உனக்காக காத்திருக்கிறது.. அதற்குப் பதில் கூறாமல் அன்றைய தினத்தில் போதையை சுவைக்கும் மனிதன் தன்னைத்தானே ஏமாற்றுகிறான்..
samedi 10 mai 2014
காதலுக்கும், திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்:
காதலுக்கும், திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்:
* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.
* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்
* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்
* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.
* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.
* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.
* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.
* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.
* ஆறிப்போன பார்சல் உணவு தான் கல்யாணம்
* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.
* கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்
* உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.
* ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.
* காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.
* திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.
* குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.
* அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.
* ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்
* செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.
* எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.
* எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.
* அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.
* கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.
* பல மணி நேர தொலைபேசி உரையாடல்
* திருமணத்திற்குப் பின்பும்தான், அவரவர் நண்பர்களுடன்.
* போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.
* போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.
அதுதான் அவன்.
பேசியபிறகு வருந்துவதை விட
பேசுவதற்கு முன் யோசனை செய்வது மிகவும் நல்லது
பேசுவதற்கு முன் யோசனை செய்வது மிகவும் நல்லது
உண்மையை நேசியுங்கள் , ஆனால் பிழையை மன்னித்து விடுங்கள்
நீங்கள் உயர்ந்த மனிதனாகி விடுவிங்க
நீங்கள் உயர்ந்த மனிதனாகி விடுவிங்க
நற்செயலுகளுக்கு அடிப்ப்டையே நல்லெண்ணம்தான்
வார்த்தைகள் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் வாழ்வில் வெற்றிகரமான இனிமை நிலவும் எனபதில் சந்தேகமில்லை.
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா................
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா................
புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை .புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை .
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
வார்த்தைகள் பூப்போன்றவை.அவற்றைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால் மதிப்பைப் பெற முடியும்.
எண்ணங்களால் நாம் எழுகிறோம்… எண்ணங்களால் நாம் விழுகிறோம்.. ஒரு நாள் முழுவதும் ஒருவன் எதைச் சிந்திக்கிறானோ.. அதுதான் அவன்.
மாற்றி சிந்திக்கப் பழக வேண்டும்.
ரயில் தண்டவாளத்தில் சிக்குப்பட்டுவிட்டான் ஒருவன். நள்ளிரவு நேரம்..! காப்பாற்ற எவரும் வரவில்லை. தூரத்தே ரயில் வண்டி வருகிறது. மரணம் ஏறத்தாழ நிச்சயமாகிவிட்டது. என்ன செய்யலாம்.. பாக்கட்டை பார்த்தான் சிகரட் கொழுத்தும் லைட்டர் மட்டும் இருந்தது. அதை கொழுத்தி கையில் பிடித்து அங்கும் இங்கும் ஆட்டினான்… யாரோ நிற்பது தெரிந்து ரயில் நின்றது. சிகரட் பற்ற மட்டும் பயன்படும் என்ற லைட்டரின் பாவனையை மாற்றி சிந்தித்த காரணத்தால் அவன் உயிர் தப்பியது. ஆகவே எப்போதும் மாற்றி சிந்திக்கப் பழக வேண்டும்.
இணைத்துப் பாருங்கள்…
இணைத்துப் பாருங்கள்…
பெஞ்சமின் பிராங்கிளின் பார்வைக்கு தனிக் கண்ணாடியும், படிப்பதற்கு தனிக் கண்ணாடியும் இருப்பதையும் மாற்றி இரண்டையும் பாதி பாதியாக்கி மேலே பார்க்கின்ற கண்ணாடியையும், கீழே படிக்கின்ற கண்ணாடியையும் இணைத்து முதன் முதலாக இரண்டுக்கும் பயன்படுத்தும் விதத்தில் ஒரே மூக்குக் கண்ணாடியை தயாரித்தார்.

மனித ஜென்மங்களுக்கு
உணவுக்காக ஒரு குரங்கை கொல்கிறது ஒரு சிறுத்தை,
கொன்ற பிறகு தான் சிறுத்தைக்கு தெரிகிறது அதன் அடிமடியில் அன்று பிறந்த அதன் குட்டி ஒன்று இருப்பது.
ஒரு தாயை கொன்றுவிட்டோமே, குட்டியை அநாதை ஆக்கிவிட்டோமே என்ற வேதனை பசியை மறக்கசெய்கிறது. ஒரு தாயாக குட்டி குரங்கை அரவணைக்க முயல்கிறது.
செய்த பாவங்களுடன் குற்ற உணர்வே இல்லாமல் திரியும் மனித ஜென்மங்களுக்கு இந்த விலங்குகளே மேல் என்று தோன்றுகிறது.

vendredi 14 mars 2014
ஆணவம், சுயநலம்
மேலான நிலைக்கு ஒருவன் உயர வேண்டுமானால் அகந்தையையும், சுயநலத்தையும் விட்டொழித்தாக வேண்டும். மனிதன் வண்ணத்துபூச்சி போல இருக்க வேண்டும், அது யாரையும் தொந்தரவு செய்வதில்லை யாருக்கும் சுமையாக இருப்பதும் இல்லை பஞ்சுபோல இலேசாகப் பறக்கும் அதுபோல பறக்க வேண்டுமானால் ஆணவம், சுயநலம் போன்ற பாரங்கள் இருத்தலாகாது.
பெருமை
உங்கள் குறைகளை நீங்கள் உணரத் தொடங்கிவிட்டால் மற்றவர் குறைகள் உங்கள் கண்களில் படாது.
முயற்சி செய்யாமல் நாம் கடவுளிடம் உதவி கேட்க முடியாது. நம்மிடம் இருக்கும் பலத்தை பயன்படுத்தாமல் பலத்தைக் கொடு என்று கேட்க முடியாது.
இருக்கின்ற வழிகளை சரியாக உணராமல் வழி காட்டும்படி கடவுளிடம் கேட்க முடியாது. இருப்பதை ஊதாரித்தனமாக செலவு செய்துவிட்டு கடவுளிடம் கேட்க முடியாது.
எப்போதெல்லாம் நாம் நெறி பிறழ்ந்து வாழ்கிறோமோ அப்போதெல்லாம் நம் மனச்சாட்சியின் கனம் அதிகரிக்கும்.
பெருமை கிடைக்கும் என்பதற்காக கண்ணியத்தை இழத்தல் கூடாது.
பெருமைப்படுத்தப்படுவதைக் காட்டிலும் பெருமையோடு வாழ்வதே மேலானது.
பெருமைப்படுத்தப்படுவதைக் காட்டிலும் பெருமையோடு வாழ்வதே மேலானது.
என் மீது நம்பிக்கை வை..
உன்னையே நீயறிவாய் என்று கிரேக்கர் சொன்னார்கள்..
உன்னையே நீ ஆள்வாய் என்றார்கள் ரோமானியர்கள்..
உன்னை நீ சிறப்பாக்கிக் கொள் என்றார்கள் சீனர்கள்..
நான் என்பதை அழித்துக் கொள் என்றது பௌத்தம்..
பிரபஞ்சத்தோடு உன்னை ஐக்கியப்படுத்து என்றது இந்து மதம்..
சேவைக்கு உன்னை அர்ப்பணி என்றது இஸ்லாம்..
சமாதானத்தையே கொள்கையாக கொள் என்கிறது நவீன உலகு..
ஆனால் கடவுள் சொல்கிறார்..
என் மீது நம்பிக்கை வை..
என்னை விட்டு நீ எதையும் செய்ய முடியாது..

வளரும் குழந்தைகளுக்கு
உங்கள் அன்றாட வாழ்வில் அழகுக்கும் ஓரிடம் கொடுங்கள். சூரிய உதயம், அஸ்தமனம், பசுமையான புல்வெளி, சிறகடித்துப் பறக்கும் பறவை இப்படி எத்தனையோ விஷயங்களை இரசிப்பதற்கு நீங்கள் நேரம் எடுத்துக் கொள்ளலாம்.
எதைச் செய்தாலும் அழகுணர்ச்சியுடன் செய்யுங்கள், வீட்டை அழகுபடுத்துங்கள், நீங்கள் குடியிருக்கும் கோயில் அது. வீட்டை சுத்தமாக வைத்திருப்பதே ஓர் அழகுதான்.
எளிமையிலும் அழகு இருக்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். அழகாக வைக்கப்பட்டிருக்கும் வீடுகளில் வளரும் குழந்தைகளுக்கு அதுவே கல்வியாகிவிடுகிறது.

இதயமில்லாதவன் என்ற பட்டம்தான்.
மற்றவர்களின் துன்பங்களை பார்த்தும் பார்க்காதது போல செல்வதுதான் இன்று பெரிய சோகமாகும். வெறுப்பைவிட அலட்சியமே இன்று பெரியளவில் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது. வெறுப்பைவிட அலட்சியம் மிகவும் மோசமானது ஏனென்றால் அலட்சியத்தில் இருந்துதான் வெறுப்பு தோன்றுகிறது.
நாம் கஷ்டப்படும்போது மற்றவர் உதவி செய்யவில்லையே என்று எண்ணுகிறோம் ஆனால் மற்றவர்கள் கஷ்டப்படும்போது அப்படி நாம் எண்ணுகிறோமா என்று இதயத்தைக் கேட்க வேண்டும். உலகத்திலேயே மோசமான பட்டப் பெயர் இதயமில்லாதவன் என்ற பட்டம்தான்.

Inscription à :
Articles (Atom)