வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம் வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது. saveiour@gmail.com
samedi 10 mai 2014
மனித ஜென்மங்களுக்கு
உணவுக்காக ஒரு குரங்கை கொல்கிறது ஒரு சிறுத்தை,
கொன்ற பிறகு தான் சிறுத்தைக்கு தெரிகிறது அதன் அடிமடியில் அன்று பிறந்த அதன் குட்டி ஒன்று இருப்பது.
ஒரு தாயை கொன்றுவிட்டோமே, குட்டியை அநாதை ஆக்கிவிட்டோமே என்ற வேதனை பசியை மறக்கசெய்கிறது. ஒரு தாயாக குட்டி குரங்கை அரவணைக்க முயல்கிறது.
செய்த பாவங்களுடன் குற்ற உணர்வே இல்லாமல் திரியும் மனித ஜென்மங்களுக்கு இந்த விலங்குகளே மேல் என்று தோன்றுகிறது.

vendredi 14 mars 2014
ஆணவம், சுயநலம்
மேலான நிலைக்கு ஒருவன் உயர வேண்டுமானால் அகந்தையையும், சுயநலத்தையும் விட்டொழித்தாக வேண்டும். மனிதன் வண்ணத்துபூச்சி போல இருக்க வேண்டும், அது யாரையும் தொந்தரவு செய்வதில்லை யாருக்கும் சுமையாக இருப்பதும் இல்லை பஞ்சுபோல இலேசாகப் பறக்கும் அதுபோல பறக்க வேண்டுமானால் ஆணவம், சுயநலம் போன்ற பாரங்கள் இருத்தலாகாது.
பெருமை
உங்கள் குறைகளை நீங்கள் உணரத் தொடங்கிவிட்டால் மற்றவர் குறைகள் உங்கள் கண்களில் படாது.
முயற்சி செய்யாமல் நாம் கடவுளிடம் உதவி கேட்க முடியாது. நம்மிடம் இருக்கும் பலத்தை பயன்படுத்தாமல் பலத்தைக் கொடு என்று கேட்க முடியாது.
இருக்கின்ற வழிகளை சரியாக உணராமல் வழி காட்டும்படி கடவுளிடம் கேட்க முடியாது. இருப்பதை ஊதாரித்தனமாக செலவு செய்துவிட்டு கடவுளிடம் கேட்க முடியாது.
எப்போதெல்லாம் நாம் நெறி பிறழ்ந்து வாழ்கிறோமோ அப்போதெல்லாம் நம் மனச்சாட்சியின் கனம் அதிகரிக்கும்.
பெருமை கிடைக்கும் என்பதற்காக கண்ணியத்தை இழத்தல் கூடாது.
பெருமைப்படுத்தப்படுவதைக் காட்டிலும் பெருமையோடு வாழ்வதே மேலானது.
பெருமைப்படுத்தப்படுவதைக் காட்டிலும் பெருமையோடு வாழ்வதே மேலானது.
என் மீது நம்பிக்கை வை..
உன்னையே நீயறிவாய் என்று கிரேக்கர் சொன்னார்கள்..
உன்னையே நீ ஆள்வாய் என்றார்கள் ரோமானியர்கள்..
உன்னை நீ சிறப்பாக்கிக் கொள் என்றார்கள் சீனர்கள்..
நான் என்பதை அழித்துக் கொள் என்றது பௌத்தம்..
பிரபஞ்சத்தோடு உன்னை ஐக்கியப்படுத்து என்றது இந்து மதம்..
சேவைக்கு உன்னை அர்ப்பணி என்றது இஸ்லாம்..
சமாதானத்தையே கொள்கையாக கொள் என்கிறது நவீன உலகு..
ஆனால் கடவுள் சொல்கிறார்..
என் மீது நம்பிக்கை வை..
என்னை விட்டு நீ எதையும் செய்ய முடியாது..

வளரும் குழந்தைகளுக்கு
உங்கள் அன்றாட வாழ்வில் அழகுக்கும் ஓரிடம் கொடுங்கள். சூரிய உதயம், அஸ்தமனம், பசுமையான புல்வெளி, சிறகடித்துப் பறக்கும் பறவை இப்படி எத்தனையோ விஷயங்களை இரசிப்பதற்கு நீங்கள் நேரம் எடுத்துக் கொள்ளலாம்.
எதைச் செய்தாலும் அழகுணர்ச்சியுடன் செய்யுங்கள், வீட்டை அழகுபடுத்துங்கள், நீங்கள் குடியிருக்கும் கோயில் அது. வீட்டை சுத்தமாக வைத்திருப்பதே ஓர் அழகுதான்.
எளிமையிலும் அழகு இருக்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். அழகாக வைக்கப்பட்டிருக்கும் வீடுகளில் வளரும் குழந்தைகளுக்கு அதுவே கல்வியாகிவிடுகிறது.

இதயமில்லாதவன் என்ற பட்டம்தான்.
மற்றவர்களின் துன்பங்களை பார்த்தும் பார்க்காதது போல செல்வதுதான் இன்று பெரிய சோகமாகும். வெறுப்பைவிட அலட்சியமே இன்று பெரியளவில் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது. வெறுப்பைவிட அலட்சியம் மிகவும் மோசமானது ஏனென்றால் அலட்சியத்தில் இருந்துதான் வெறுப்பு தோன்றுகிறது.
நாம் கஷ்டப்படும்போது மற்றவர் உதவி செய்யவில்லையே என்று எண்ணுகிறோம் ஆனால் மற்றவர்கள் கஷ்டப்படும்போது அப்படி நாம் எண்ணுகிறோமா என்று இதயத்தைக் கேட்க வேண்டும். உலகத்திலேயே மோசமான பட்டப் பெயர் இதயமில்லாதவன் என்ற பட்டம்தான்.

vendredi 7 février 2014
எதுவும் இல்லை.
மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாயைத் திறந்தால் நீ உன் செவியை அடைத்துக்கொள்.
நல்லதையே செய்யுங்கள் இதன் மூலம் நீங்களும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்விக்கலாம்.
ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதுதான் வாழ்க்கை என்று தவறாகக் கருதிவிடக் கூடாது. தீய ஆசைகளை அடக்கியாளவில்லை என்றால் வாழ்வில் நின்மதியே இருக்காது.
குறைகளை பார்ப்பதை விடுத்து, உங்கள் வெற்றிகளையும், மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள்.
தண்ணீருக்குள் விழுவதால் நீங்கள் மூழ்குவதில்லை நீந்த முயற்சிக்காமல் இருக்கும்போதுதான் மூழ்குகிறீர்கள்
ஒருவன் எவ்வளவுதான் கல்வி மேம்பாடு உடையவனாக இருப்பினும், பிறருடைய உரிமைகளை மதிக்கத் தெரியாதவனாக இருப்பின் அவன் பயின்ற கல்வியால் ஆன பயன் எதுவும் இல்லை.
vendredi 24 janvier 2014
அன்பின் அர்த்தம்
உன்னை நேசிப்பவரை
வெறுக்க காரணம் தேடாதே!
அதைவிட அதிகமாக
நேசிக்க சந்தர்பத்தைத்தேடு...
வெறுக்க காரணம் தேடாதே!
அதைவிட அதிகமாக
நேசிக்க சந்தர்பத்தைத்தேடு...
மலா்ந்ததும் உதிர்ந்து போக பூவல்ல நட்பு
வோ் பதித்த ஆலமரம்
எல்லோர் மனதையும் ஆளும் மரம்
வோ் பதித்த ஆலமரம்
எல்லோர் மனதையும் ஆளும் மரம்
காதல் என்பது கற்பனையும் அல்ல
நட்பு என்பது நடிப்பும் அல்ல
இரண்டுமே ஒரு உன்னதமான உறவுகள்....
நட்பு என்பது நடிப்பும் அல்ல
இரண்டுமே ஒரு உன்னதமான உறவுகள்....
நீ நேசிக்கும் இதயத்தில்
பல ஆண்டுகள் வாழ்வதைவிட....
உன்னை நேசிக்கும் இதயத்தில்
சில நொடிகள் வாழ்ந்து பார்...
அன்பின் அர்த்தம் புரியும்
பல ஆண்டுகள் வாழ்வதைவிட....
உன்னை நேசிக்கும் இதயத்தில்
சில நொடிகள் வாழ்ந்து பார்...
அன்பின் அர்த்தம் புரியும்
நிகழ்வுகள்
இனிமையானால்
நிழலும்
இனிக்கும்
நினைவால்,,,
இனிமையானால்
நிழலும்
இனிக்கும்
நினைவால்,,,
jeudi 23 janvier 2014
அன்புடன் சௌந்தா .
கசப்பான உண்மை
காதலி தேவதையாக தெரியும் பலருக்கு,
அம்மா தெய்வமாக தெரிவதில்லை..
காதலி தேவதையாக தெரியும் பலருக்கு,
அம்மா தெய்வமாக தெரிவதில்லை..
எல்லா நகையை விடவும்
மேலானது
என் தாயின் இனிய
புன்னகை தான்..
மேலானது
என் தாயின் இனிய
புன்னகை தான்..
குழந்தைக்கு
ஜென்மம் கொடுத்து
மறுஜென்மம் எடுப்பவள்
அம்மா....
ஜென்மம் கொடுத்து
மறுஜென்மம் எடுப்பவள்
அம்மா....
சிரித்து பார் உன் முகம் உனக்கு பிடிக்கும்.
பிறரை சிரிக்க வைத்துபார் உன் முகம் எல்லோருக்கும்
பிடிக்கும்
பிறரை சிரிக்க வைத்துபார் உன் முகம் எல்லோருக்கும்
பிடிக்கும்
காதலித்துப்பார் கவிதை வரும் என்ரார்கள்...
ஆனால்.....
கண்ணீர் தான் வருகின்றது..........!!!
ஆனால்.....
கண்ணீர் தான் வருகின்றது..........!!!
துணிவு வந்தால் பயமும் தெரியாது, தூரமும், தொலைவும் தெரியாது...
தன்னுடைய இலக்கு மட்டும் தான் தெரியும்...!
தன்னுடைய இலக்கு மட்டும் தான் தெரியும்...!
அன்புடன் சௌந்தா .
mardi 21 janvier 2014
Inscription à :
Articles (Atom)

.jpg)