முகப்பு

dimanche 10 novembre 2013

நேசியுங்கள்.

 
Photo : யாருடன் வாழ முடியுமோ அவர்களை நேசிப்பதைவிட,
 யார் இல்லாமல் வாழ முடியாதோ அவர்களை அதிகமாக நேசியுங்கள்.
 
யாருடன் வாழ முடியுமோ அவர்களை நேசிப்பதைவிட,
யார் இல்லாமல் வாழ முடியாதோ அவர்களை அதிகமாக நேசியுங்கள்.

இதயம் கல்லுக்கு ஒப்பானது

 
 
Photo : ஒரு சமுதாயத்திற்கு மிகப்பெரிய சாபக்கேடு எதுவென்றால் அந்தச் சமுதாயத்தின் குடிமக்கள் அக்கறையற்றவர்களாக இருப்பதுதான்.
  சமுதாயத்தின் துன்பங்களையும், துயரங்களையும் உணர்ந்து கொள்ளாத இதயம் கல்லுக்கு ஒப்பானது.
 
 
ஒரு சமுதாயத்திற்கு மிகப்பெரிய சாபக்கேடு எதுவென்றால் அந்தச் சமுதாயத்தின் குடிமக்கள் அக்கறையற்றவர்களாக இருப்பதுதான்.
சமுதாயத்தின் துன்பங்களையும், துயரங்களையும் உணர்ந்து கொள்ளாத இதயம் கல்லுக்கு ஒப்பானது.

இதயம் இருக்குமிடம்

 
Photo : அன்பாய் புன்னகைக்கும் தந்தையின் அருகே அமர்வது எவ்வளவு இனிமை, அன்பாக அம்மா ஆறுதல் சொல்வது எவ்வளவு இனிமை, சன்னலால் நிலவைப் பார்க்கும் சுகம் இனிமை. இத்தனையையும் தரும் என் வீடுபோல இனிமை உலகில் எதுவும் இல்லை.
 ராஜாவானாலும், கிராமத்தவனானாலும் வீட்டில் நின்மதி காண்பவன்தான் சந்தோஷமானவன். ஏனென்றால் வீடுதான் வாழ்வின் இதயம் இருக்குமிடம்
 
அன்பாய் புன்னகைக்கும் தந்தையின் அருகே அமர்வது எவ்வளவு இனிமை, அன்பாக அம்மா ஆறுதல் சொல்வது எவ்வளவு இனிமை, சன்னலால் நிலவைப் பார்க்கும் சுகம் இனிமை. இத்தனையையும் தரும் என் வீடுபோல இனிமை உலகில் எதுவும் இல்லை.
ராஜாவானாலும், கிராமத்தவனானாலும் வீட்டில் நின்மதி காண்பவன்தான் சந்தோஷமானவன். ஏனென்றால் வீடுதான் வாழ்வின் இதயம் இருக்குமிடம்

எதுவும் வேண்டாம்

 
Photo : அழகு இருந்தால் வருவேன் என்றது "காதல்".....
 பணம் இருந்தால் வருவேன் என்றது "சொந்தம்".....
 எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது................."நட்பு"
 
அழகு இருந்தால் வருவேன் என்றது "காதல்".....
பணம் இருந்தால் வருவேன் என்றது "சொந்தம்".....
எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது................."நட்பு"

தமிழாய் இரு

Photo : வாழும் வரை தமிழனாய் இரு
 வாழ்தபின் தமிழாய் இரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

இதயம் கல்லுக்கு ஒப்பானது

 
Photo : சமுதாயத்தின் துன்பங்களையும், துயரங்களையும் உணர்ந்து கொள்ளாத இதயம் கல்லுக்கு ஒப்பானது.
 
சமுதாயத்தின் துன்பங்களையும், துயரங்களையும் உணர்ந்து கொள்ளாத இதயம் கல்லுக்கு ஒப்பானது.

நமது கடமை

 
Photo : பிறருடைய துன்பத்தைப் பார்க்கும்போது மனம் இளகாமல் இருந்துகொண்டு அதை பற்றற்ற நிலை என்று கூறுவது மனிதாபிமானமற்ற செயலாகும். குரல் கொடுக்க முடியாதவர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை.
 
பிறருடைய துன்பத்தைப் பார்க்கும்போது மனம் இளகாமல் இருந்துகொண்டு அதை பற்றற்ற நிலை என்று கூறுவது மனிதாபிமானமற்ற செயலாகும். குரல் கொடுக்க முடியாதவர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை.

"மரணம்"

 
 
Photo : மனிதர்களுக்கு வழங்கப்படும்
 கட்டாய
 விடுதலைப் பத்திரம்
 "மரணம்"
 
மனிதர்களுக்கு வழங்கப்படும்
கட்டாய
விடுதலைப் பத்திரம்
"மரணம்"

பொய்களே

Photo : வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் வாய் திறந்து சொன்ன பொய்களைவிட வாய்திறக்காமல் மௌனமாக அங்கீகரிக்கப்பட்ட பொய்களே அதிகம். பேசும் பொய்யரைவிட உலகம் மௌனப் பொய்யர்களால்தான் நிறைந்து கிடக்கிறது.
 
 
வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் வாய் திறந்து சொன்ன பொய்களைவிட வாய்திறக்காமல் மௌனமாக அங்கீகரிக்கப்பட்ட பொய்களே அதிகம். பேசும் பொய்யரைவிட உலகம் மௌனப் பொய்யர்களால்தான் நிறைந்து கிடக்கிறது.
 

சமுதாயம் துடிப்புடன் விளங்குகிறது



சிறு நீரோடைகளை ஒன்று சேர்த்துத்தான் மகாநதிகள் உருவாகின்றன, அதுபோல சுய பரித்தியாகம் செய்யக்கூடிய ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடும்போதுதான் சமுதாயம் துடிப்புடன் விளங்குகிறது.

dimanche 22 septembre 2013

வெளிப்படும்

 
Photo : நல்ல தலைவர்கள் தலைமையேற்று நடக்கிறார்கள் ஆனால் தீய தலைவர்களோ தவறாக வழி காட்டுகிறார்கள்.
 தலைமை என்பது நெருக்கடி நேரங்களின்போதோ அல்லது போர்க்களத்தில் மட்டுமோ வெளிப்படும் ஒன்றல்ல. அது நம் அன்றாடச் செயல்களில்தான் வெளிப்படும்.
 
நல்ல தலைவர்கள் தலைமையேற்று நடக்கிறார்கள் ஆனால் தீய தலைவர்களோ தவறாக வழி காட்டுகிறார்கள்.
தலைமை என்பது நெருக்கடி நேரங்களின்போதோ அல்லது போர்க்களத்தில் மட்டுமோ வெளிப்படும் ஒன்றல்ல. அது நம் அன்றாடச் செயல்களில்தான் வெளிப்படும்


ஆயுள் நீண்டதல்ல

 
Photo : எப்போதும் உண்மை பேசுகிறவர்கள் முதற்தடவை பொய் பேசும்போது பிடிபடுகிறார்கள், எப்போதும் பொய் பேசுகிறவர் முதற்தடவையாக உண்மை பேசும்போது பிடிபடுகிறார்.
யாரும் உங்களை பார்க்கவில்லை என்றாலும் எப்போதும் நியாயமானதையே செய்யுங்கள். சொந்த நெறிகளில் உயர்ந்த தரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
அதிக புத்திசாலிகள் பிறருடைய தவறுகளில் இருந்து கற்றுக்கொள்கிறார்கள், ஏனென்றால் நாம் நம்முடைய தவறுகளில் இருந்தே கற்றுக்கொள்ளுமளவுக்கு நம்முடைய ஆயுள் நீண்டதல்ல.
 
எப்போதும் உண்மை பேசுகிறவர்கள் முதற்தடவை பொய் பேசும்போது பிடிபடுகிறார்கள், எப்போதும் பொய் பேசுகிறவர் முதற்தடவையாக உண்மை பேசும்போது பிடிபடுகிறார்.
யாரும் உங்களை பார்க்கவில்லை என்றாலும் எப்போதும் நியாயமானதையே செய்யுங்கள். சொந்த நெறிகளில் உயர்ந்த தரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
அதிக புத்திசாலிகள் பிறருடைய தவறுகளில் இருந்து கற்றுக்கொள்கிறார்கள், ஏனென்றால் நாம் நம்முடைய தவறுகளில் இருந்தே கற்றுக்கொள்ளுமளவுக்கு நம்முடைய ஆயுள் நீண்டதல்ல.


இருப்பது மேலானது

 
Photo : ரோஜா பூ 
காதலிக்க தெரியாத 
பெண்ணின் கூந்தலில் 
இருப்பதை விட, 
காதலிக்க தெரிந்த 
ஆணின் கல்லறையில் 
இருப்பது மேலானது…
 
 
ரோஜா பூ
காதலிக்க தெரியாத
பெண்ணின் கூந்தலில்
இருப்பதை விட,
காதலிக்க தெரிந்த
ஆணின் கல்லறையில்
இருப்பது மேலானது…


அம்மா அம்மா தான் !"

 
Photo : "உள்ள சொந்தம் எல்லாமே 
சும்மா சும்மா தான்! 
"உண்மையான சொந்தம் -உன் 
அம்மா அம்மா தான் !"
 
"உள்ள சொந்தம் எல்லாமே
சும்மா சும்மா தான்!
"உண்மையான சொந்தம் -உன்
அம்மா அம்மா தான் !"


தலைக்கனம்

 
Photo : ஒரு மனிதனின் உண்மையான சொத்து அவன் இந்த உலகிற்கு செய்த நன்மைதான்.
 
தகுதி இல்லாதவர்களைப் புகழ்ந்தால் அவர்களுக்கு தலைக்கனம் ஏறிவிடுகிறது, அவர்களை பகட்டுக்காரர் ஆக்கிவிடுகிறது. இப்படியான பகட்டு முட்டாள்தனம் என்ற காற்று நுழைவதற்கான ஜன்னலைத் திறந்துவிடுகிறது

சேரும்

 
நம்மில் எவரும் குறைகள் இல்லாதவர்கள் இல்லை. குறை நிறைகளை பரஸ்பரம் பார்த்தே முடிவு செய்ய வேண்டும். நேசிக்கப்படும் ஒருவர் திசைமாறிப் போனால் அவரை திருத்த முயலவேண்டும், இல்லையேல் அந்த உறவை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
உங்கள் குழந்தைகளை நல்ல பண்புடன் வளர்த்தால் அந்தப் பழக்கம் உங்கள் பேரக்குழந்தைகளிடமும் போய்ச் சேரும்


lundi 2 septembre 2013

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.





நாம் நமது நோக்கங்களை வைத்துத்தான் நம்மை மதிப்பிடுகிறோம் ஆனால் உலகமோ நமது செயற்பாடுகளை வைத்தே நம்மை மதிப்பிடுகிறது. – சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.

காட்டும்.



சரியென்று உறுதி செய்யாமல் எந்தப் படிவத்திலும் கையெழுத்து வைக்கக்கூடாது. ஆனால் சரியென்று தெரிந்தும் அதை செய்யாமல் இருப்பது உறுதியின்மையைத்தான் காட்டும்.

பெயரெடுக்கக் கூடாது.



இன்று ஒன்றைப் பேசுவோர் நாளை இன்னொன்றைப் பேசுவார்கள் இதை ஊசலாட்ட நடத்தை என்பார்கள். இத்தகைய தெளிவில்லாதவர்களால் மாண்புகளை பேணி வாழ முடியாது. ஊஞ்சல் இந்தப்பக்கமும் போகும் அந்தப்பக்கமும் போகும் அதற்கு எங்குபோவதெனத் தெரியாது. உலகில் 90 வீதமானவர்கள் ஊசலாட்டக்காரரே, அவர்களில் நாமும் ஒருவர் என்ற பெயரெடுக்கக் கூடாது.

நன்மை – தீமை




நன்மை – தீமை இரண்டும் நம் வாழ்வில் மோதிக்கொண்டே இருக்கின்றன. அதில் எதை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற முடிவு நமது கையிலேயே இருக்கிறது. தீமையை வெற்றிபெறச் செய்வது இலகு, அதனால்தான் உலகம் தீயவர்களால் நிறைந்து கிடக்கிறது. ஆகவே நன்மையை வெற்றிபெறச் செய்யவே போராட வேண்டும்.

தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.



நீங்கள் நீங்களாகவே இருங்கள் நடிக்காதீர்கள், போலியாகக் காட்டிக்கொள்ளாதீர்கள். இதற்கு உங்கள் மறுபக்கத்தையும் காட்ட வேண்டும் என்பது பொருள் அல்ல. உங்கள் குறைகளைப் பற்றி பெருமைப்படாதீர்கள், முன்னேற முயற்சி செய்யுங்கள், ஆனால் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

உங்கள் ஆன்மாவை செழுமைப்படுத்தும்.




வதந்திகள் பரப்புவோர், வம்பளக்கும் நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உரையாடும்போது உங்கள் பேச்சில் பொறாமையோ, இகழ்ச்சியோ தொனிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெட்டிப்பேச்சு வீண் விதண்டாவாதங்களில் இருந்து விலகியிருங்கள். மற்றவர்களுக்கு நேர்ந்த துரதிருஷ்டத்தை பேசி சிரிக்காதீர்கள், அதில் மகிழ்ச்சியடையாதீர்கள், எந்தச் சந்தர்ப்பத்திலும் மற்றவர்களை கேலி பேசாதீர்கள்.
சுறுசுறுப்பாக இருங்கள் செயற்பட்டுக்கொண்டே இருங்கள். அனைவருக்கும் நன்மை தரக்கூடிய சமுதாயத்தை உருவாக்குங்கள். ஒரு பொழுதுபோக்கு அல்லது சேவையை தேர்வு செய்யுங்கள் அது நின்மதி தரும்.
வாரத்திற்கு ஒரு நல்ல புத்தகம் படியுங்கள். அது உங்கள் ஆன்மாவை செழுமைப்படுத்தும்.

உயிர் வாழவேண்டும்



பூசுகின்ற மஞ்சளாய் 
நான்வர வேண்டும் 
உன்முகம் தொட்ட சுகத்தில் 
நான் கவியெழுத வேண்டும் 
உன்னிரு கைகளுக்குள் 
உயிர் வாழவேண்டும்

நாட்கள்



  நாட்கள் இருந்தபொழுது
நட்பின் அருமை புரியவில்லை .....
நட்பின் அருமை புரிகின்ற போது 
நாட்கள் நம் கையெல் இல்லை இருந்தபொழுது
நட்பின் அருமை புரியவில்லை .....
நட்பின் அருமை புரிகின்ற போது 
நாட்கள் நம் கையெல் இல்லை

vendredi 2 août 2013

நமது பொறுப்பாகும்.



வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்.

நண்பராக நீங்கள் முதலில் இருந்து காட்டுங்கள்.




நம்புங்கள், ஒருவர் உங்களை நம்பலாம் அல்லது உங்களிடம் நம்பிக்கை கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு துரோகம் செய்யாதீர்கள்.
எப்படிப்பட்ட நண்பர் உங்களுக்கு அமைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படிப்பட்ட நண்பராக நீங்கள் முதலில் இருந்து காட்டுங்கள்.

மகிழ்ச்சியான விடயங்களையே பேசுங்கள்.




இதயத்தில் உள்ளவைதான் வார்த்தைகளாக வெளிவருகின்றன என்ற பழைய கோட்பாட்டை இன்றைய மனோதத்துவம் உறுதி செய்துள்ளது.
அறையில் அழுகிய பொருள் இருந்தால் அதன் நாற்றம் உடனே அறையெங்கும் பரவுவதைப்போல பொறாமை, வெறுப்பு, தீமை ஆகியன இதயத்தில் இருந்தால் அவை உடனே வார்தையாக வெளி வந்துவிடுகின்றன.
உங்கள் வாய் நாக்கு, உதடு என்பன ஒரு வாய்க்கால் போல அமைக்கப்பட்டுள்ளன அவற்றால் நல்ல வார்த்தைகள் மட்டுமே அனுப்பப்பட வேண்டும் என்பதே ஆண்டவன் விருப்பம்.
கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை ஆகவே அதைக் கையைவிட்டுவிட்டு மகிழ்ச்சியான விடயங்களையே பேசுங்கள்.

lundi 29 juillet 2013

மகிழ்ச்சியான விடயங்களையே பேசுங்கள்.



இதயத்தில் உள்ளவைதான் வார்த்தைகளாக வெளிவருகின்றன என்ற பழைய கோட்பாட்டை இன்றைய மனோதத்துவம் உறுதி செய்துள்ளது.
அறையில் அழுகிய பொருள் இருந்தால் அதன் நாற்றம் உடனே அறையெங்கும் பரவுவதைப்போல பொறாமை, வெறுப்பு, தீமை ஆகியன இதயத்தில் இருந்தால் அவை உடனே வார்தையாக வெளி வந்துவிடுகின்றன.
உங்கள் வாய் நாக்கு, உதடு என்பன ஒரு வாய்க்கால் போல அமைக்கப்பட்டுள்ளன அவற்றால் நல்ல வார்த்தைகள் மட்டுமே அனுப்பப்பட வேண்டும் என்பதே ஆண்டவன் விருப்பம்.
கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை ஆகவே அதைக் கையைவிட்டுவிட்டு மகிழ்ச்சியான விடயங்களையே பேசுங்கள்.

mercredi 24 juillet 2013

பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.



ரொட்டித் துண்டுதானே என்று சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள், ஒரு ரொட்டித் துண்டு உருவானதற்கு பின்னே எவ்வளவோ உழைப்பும் வியர்வையும் இருக்கிறது. ஆகவே உணவை விழுங்காதீர்கள் சுவைத்துச் சாப்பிடுங்கள் என்று பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.

திருப்தி



தனக்குத்தானே திருப்தியாக இருக்க முடியாத ஒரு மனிதனால் சந்தோஷமாக இருக்க முடியாது, சந்தோஷத்தை மற்றவர்களுக்கு வழங்கவும் முடியாது.

mardi 23 juillet 2013

கல்லறை



பணக்காரனாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, வேலை செய்யாமல் காலம் தள்ள எண்ணினால் வாழ்க்கை வீணாகிப் போகும், சீக்கிரமே கல்லறைப் பயணமும் ஆரம்பித்துவிடும்.

மகிழ்ச்சியான விடயங்களையே பேசுங்கள்.




அறையில் அழுகிய பொருள் இருந்தால் அதன் நாற்றம் உடனே அறையெங்கும் பரவுவதைப்போல பொறாமை, வெறுப்பு, தீமை ஆகியன இதயத்தில் இருந்தால் அவை உடனே வார்தையாக வெளி வந்துவிடுகின்றன.
உங்கள் வாய் நாக்கு, உதடு என்பன ஒரு வாய்க்கால் போல அமைக்கப்பட்டுள்ளன அவற்றால் நல்ல வார்த்தைகள் மட்டுமே அனுப்பப்பட வேண்டும் என்பதே ஆண்டவன் விருப்பம்.
கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை ஆகவே அதைக் கையைவிட்டுவிட்டு மகிழ்ச்சியான விடயங்களையே பேசுங்கள்.

கொடுக்கிறவர்களுக்கே அது கிடைக்கும்.



கடவுளிடமும், மனிதனிடமும் நீங்கள் காட்டுகிற அன்பு மேலோங்கட்டும். எந்த வேறுபாடும் இன்றி அனைவரையும் நேசிக்கவே நீங்கள் படைக்கப்பட்டுள்ளீர்கள். உங்களை விட தாழ்ந்தவர்கள் உங்களிடமிருந்து அதிகமான அன்பை பெறும் தகுதி உடையவர். அன்பை கொடுக்கிறவர்களுக்கே அது கிடைக்கும்.

வெற்றி பெற்றீர்களா தோற்றீர்களா என்பது முக்கியமில்லை.


பேசுவதிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவிடாது செயலில் இறங்குங்கள். தவறுகளைப்பற்றி வருந்திக் கொண்டிருக்காமல் தவறுகளை திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
மகிழ்ச்சியுடன் செயற்படுங்கள் எது தவறு என்று எண்ணி பயப்படாமல், எது நல்லதோ அதை நேசித்து, உங்கள் கடமையை செய்யுங்கள். வாழ்வது சந்தோஷமான விடயம் ஆகிவிடும்.
ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்க்காமல் உள்ளே புகுந்து வேலை செய்யுங்கள். செயல்களை உங்களாலும் நல்ல வழியில் திருப்ப முடியும்.
கணக்குப் பார்க்கும்போது வெற்றி பெற்றீர்களா தோற்றீர்களா என்பது முக்கியமில்லை. எப்படி வாழ்ந்தீர்கள் என்பதே முக்கிய

vendredi 19 juillet 2013

குறைகளை




உங்கள் குறைகளை நீங்கள் உணரத் தொடங்கிவிட்டால் மற்றவர் குறைகள் உங்கள் கண்களில் படாது.
ஒருவரிடம் எந்தக் குறையைக் காண்கிறீர்களோ, அந்தக் குறை உங்களிடம் இல்லையா என்று சோதித்துப் பாருங்கள். அப்போது உங்களிடம் உள்ள குறைகள் என்னவென்பது உங்களுக்கு தானாகவே விளங்கிவிடும்.

சுவர்க்கமாகும்.





நீங்கள் வார்த்தைகளை கடுமையாக உச்சரித்தால் அன்பு என்ற மலர் கசங்கிவிடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
வெறுப்பு என்பது கூடாத செயல் அது நமது எண்ணத்தில் இருந்துதான் பிறக்கிறது, வெறுப்பு வரும்போதெல்லாம் உள்ளே கூடாத எண்ணம் ஒன்று ஓடுவதைக் கண்டு பிடியுங்கள்.
சுவர்க்கம் என்பது ஓர் இடமல்ல மன அழுத்தமில்லாத, இலேசாக, கனமில்லாத உணர்ச்சியை அனுபவிக்கும் நிலைதான் சுவர்க்கமாகும்.

ஓய்வு பெறுவீர்கள்.



ஆழ்ந்து சுவாசியுங்கள்… உற்சாகமாக நடக்கப்பழகுங்கள்… எளிமையாக சாப்பிடுங்கள்… அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்… ஆழமாக சிந்தியுங்கள்.. உண்மையாக நடந்து கொள்ளுங்கள் இப்படி செய்தால் உங்கள் உணர்ச்சிகள் இயற்கை நிலையடைந்து நீங்கள் பூரண ஓய்வு பெறுவீர்கள்.

lundi 20 mai 2013

புரிந்து கொண்டால்

 
 
குற்றம் கண்டு பிடிக்காதீர்கள் எல்லாமே சரியாக நடக்க வேண்டும் என்று எதிர் பார்த்தால் உங்களுக்கு நண்பர்களே இருக்கமாட்டார்கள். ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு குறை இருக்கும் என்பதை புரிந்து கொண்டால் உங்களுக்கு சகிப்புத் தன்மை வந்துவிடும். 

தவறு,

 
 
புகழ்வதால் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை வருமென பெற்றோர் நினைப்பது தவறு, நல்லது செய்யக் கற்றுக் கொடுத்தால் அதன் மூலம் தன்னம்பிக்கை தானாக வளரும்.
திறமைகளை வளர்த்துக்கொள்வதாலும், விஷயங்களை கற்றுக்கொள்வதாலும்தான் ஒருவருக்கு தன்னம்பிக்கை பிறக்கிறதே தவிர வெறுமனே பாராட்டடை அள்ளி வீசுவதால் அல்ல


கொடுங்கள்.

 
 
ரொட்டித் துண்டுதானே என்று சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள், ஒரு ரொட்டித் துண்டு உருவானதற்கு பின்னே எவ்வளவோ உழைப்பும் வியர்வையும் இருக்கிறது. ஆகவே உணவை விழுங்காதீர்கள் சுவைத்துச் சாப்பிடுங்கள் என்று பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். 

அநீதியாகும்.

 
 
வருமானத்திற்கு மீறி வாழ்க்கை நடத்த வேண்டாம், அது உங்கள் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் நீங்கள் இழைக்கிற பெரிய அநீதியாகும்.

mercredi 15 mai 2013

வளர்ச்சியடையாதவன்.

 
 
முள்ளும் ரோஜாவும் ஒரே செடியில் இருப்பதைப் போல வாழ்க்கையிலும் நன்மையும், தீமையும், ஒழுக்கமும் ஒழுக்கமின்மையும் கலந்துதான் இருக்கும், ஆகவே வாழ்வை குறையாக நினைத்து மகிழ்ச்சியான முகத்தை இழந்துவிடாதீர்கள்.
 வாழ்க்கை முழுவதும் வெற்றியே கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் குழந்தைப் பருவத்தைத் தாண்டாதவன், தோல்விகளை மட்டுமே எதிர்பார்ப்பவன் வளர்ச்சியடையாதவன்.

நமக்கு வேண்டும்.

 

 
கடவுள் ஒரு கதவை மூடும்போது இன்னொரு கதவைத் திறப்பார். இலட்சியத்திற்காக உழைக்கும் ஒருவனை யாரும் வென்றுவிட முடியாது. தட்டாமல் கதவு திறப்பதில்லை தட்டிக்கொண்டே இருக்கும் பிடிவாதம்தான் நமக்கு வேண்டும்.

மனிதனாக

 
 
அடித்த புயலில் போட்ட தோட்டமே நாசமாகிவிட்டதென ஒருவன் அழுதான், அப்போது வழியால் வந்த முதியவர் சொன்னார் இல்லை மகனே.. கடவுள் உன்னை மனிதனாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என்றார்.
எதிர்ப்புக்களும் சோதனைகளும் இல்லாமல் எவரும் பலமும் ஆற்றலும் பெற்றது கிடையாது.
 துயரமே இல்லாமல் கடவுள் உலகத்தைப் படைத்திருக்க முடியும். ஆனால் அப்படிப் படைத்திருந்தால் மனிதன் வெறும் இயந்திரமாகவே இருந்திருப்பானே தவிர மனிதனாக இருந்திருக்கமாட்டான்.

நோய்க்கும்

 
 
அழிந்து போகும் செல்வத்தையே பலர் இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். பணத்தால் வாங்க முடியாத விஷயங்களும் இந்த உலகில் இருக்கின்றன என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். வெறியோடு பணத்தைச் சேர்த்து வரியைக்கட்டி, அந்தக் கவலையால் நோய்க்கும் ஆளாகிவிடுகிறார்கள்.

சோர்வு தானாகப் பறக்கும்.

 
 
படித்தும், கேட்டும் மகிழ்ந்த நல்ல விடயங்களை குறிப்பாக எழுதி வையுங்கள், மனம் சோர்வாக இருக்கும்போது அதை மறுபடியும் எடுத்துப் படியுங்கள் சோர்வு தானாகப் பறக்கும்.

பயனைக் கொடுத்தது.

 
 
ஓர் எழுத்தாளன் தன் எழுத்துக்களில் நம்பிக்கை இல்லாமல் எழுதுவதில் பெரும்பகுதியை குப்பைக் கூடையில் கசக்கி எறிந்தான், ஒரு நாள் அவன் வறுமையால் இறந்துவிட்டான். அவனுடைய கடசங்கிய கடதாசிகளை சேகரித்து வைத்த பெண் அதை நூலாக்கி பெரும் பணக்காரியானாள். நம்பிக்கை இல்லாதவனுக்கு எழுதியும் கிடைக்காத பயன் நம்பிக்கை உள்ளவளுக்கோ எழுதாமலே பயனைக் கொடுத்தது.
 
 
உன்னையே நீயறிவாய் என்று கிரேக்கர் சொன்னார்கள்..
உன்னையே நீ ஆள்வாய் என்றார்கள் ரோமானியர்கள்..
உன்னை நீ சிறப்பாக்கிக் கொள் என்றார்கள் சீனர்கள்..
நான் என்பதை அழித்துக் கொள் என்றது பௌத்தம்..
பிரபஞ்சத்தோடு உன்னை ஐக்கியப்படுத்து என்றது இந்து மதம்..
சேவைக்கு உன்னை அர்ப்பணி என்றது இஸ்லாம்..
சமாதானத்தையே கொள்கையாக கொள் என்கிறது நவீன உலகு..
ஆனால் கடவுள் சொல்கிறார்..
என் மீது நம்பிக்கை வை.. என்னை விட்டு நீ எதையும் செய்ய முடியாது..
 கடவுளின் துணையுடன் நம்மால் எதையும் செய்ய முடியும்.

jeudi 9 mai 2013

 
 
சுயநலமும் பேராசையும் மன அமைதியை அழித்துவிடும். திருப்தி, மேம்படுவதில் அக்கறை, பயனுள்ளவராக இருப்பது, கடுமையாக படிப்பது, அமைதியாக சிந்திப்பது, எதையும் துணிச்சலோடு செய்வது இவைகள் சந்தோஷத்தை எட்டித்தொட சிறந்த படிக்கட்டுக்களாகும்.
ஒரு மனிதனிடம...் என்னென்ன சொத்து இருக்கிறது என்பது சந்தோஷமல்ல அவன் என்னவாக இருக்கிறான் என்பதே சந்தோஷமாகும்.
பணத்தால் உணவை வாங்கலாம் ஆனால் பசியை வாங்க முடியாது. மருந்தை வாங்கலாம் ஆனால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது. வேலையாட்களை பெறலாம் ஆனால் விசுவாசத்தைப் பெற முடியாது.
 

முயற்சியில்லாத மனிதன்.

 
 
ஒருவர் செய்த தியாகம், தளராத முயற்சிகள், விடாது பற்றிக் கொண்ட நம்பிக்கைகள், தங்கள் இதயக்கனவை நிறைவேற்ற கடந்த இருளான வழிகள், வலிகள் போன்றவற்றை பார்க்காது அவருடைய வெற்றியை மட்டுமே பார்க்கிறது உலகம். அதுபோல தனக்கும் அதிர்ஷ்டம் வராதா என்று கிரகத்தை பார்க்கிறான் முயற்சியில்லாத மனிதன்.

தாமதமாகிவிடலாம்.

 
 
மன்னியுங்கள், மறந்துவிடுங்கள், உங்கள் தவறுகளை மற்றவர்கள் எப்படி மன்னிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே மற்றவர்களை மன்னியுங்கள். பொறுமையோடும் புரிதலோடும் இருங்கள் விரோதம் பாராட்டவோ பழிவாங்கவோ நேரமில்லை வாழ்க்கை குறுகியது.
வாழ்க்கை குறுகியது, நம் பகைமையை தொந்தரவுகளை மறக்க வேண்டும். இன்னும் காலம் இருக்கும்போதே மறக்க, மன்னிக்க வேண்டும். சண்டையை நிறுத்த காத்திருக்காதீர்கள். அன்பான வார்த்தையை சொல்ல அன்பான செயலை செய்ய காத்திருக்காதீர்கள். காலம் குறுகியது நாளை மிகவும் தாமதமாகிவிடலாம்.