முகப்பு

mercredi 27 juillet 2011

maman



Une maman

Des milliers d'étoiles dans le ciel, 
Des milliers d'oiseaux dans les arbres, 
Des milliers de fleurs dans les jardins, 
Des milliers d'abeilles sur les fleurs, 
Des milliers de coquillages sur la plage, 
Des milliers de poissons dans la mer 
Et seulement seulement Une maman. 

mardi 26 juillet 2011

maman


elle est jolie

elle est mimi

elle est intelligente

elle est marrante

elle m'aime

je l'aime

vous l'avez deviné ?

c'est ma maman préférée

அழகு


பூக்களின் அழகு அதன் மனத்தினில்

மனிதரின் அழகு அவர் குணத்தினில்

பெண்ணின் அழகு நல்ல பண்பினில்

ஆணின் அழகு தன்னம்பிக்கையில்

நமது அழகே அழகு ஒரு புன்னகையில்

vendredi 22 juillet 2011

உன் இதயத்தின் கொள்கைகளுக்கு உண்மையாக இரு.


உன்னை நீ நம்பு.. ஒவ்வொரு இதயமும் அந்த இரும்புக் கம்பியின் இசைக்கு துடிக்கிறது. ஒரு மனிதன் தன் சொந்தத் திறமையை அறிய வேண்டும். கொள்கைகளின் வெற்றி தவிர, வேறெதுவும் உனக்கு அமைதி தராது.

 இயற்கை நீ என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறது என்பதைக் கண்டுபிடி. உன் இதயத்தின் கொள்கைகளுக்கு உண்மையாக இரு. மற்றவரின் கொள்கைகளுக்கு நீ உண்மையாக இருப்பதாகக் கூறி, உன் வாழ்வை போலி விசவாச நாடகமாக்காதே. உன் சொந்த எண்ணங்களை நம்பு, நம்பிக்கையாய் இரு, சுய சார்போடு நடந்து கொள்.

 இந்த உலகில் நன்மைகள் நிறைந்திருந்தாலும் போஷாக்கூட்டும் சோளம் தானாக வராது. உழுவதற்காக உங்களுக்குக் கிடைத்த நிலத்தில் உழுதால் மட்டுமே கிடைக்கும்.

நல்ல எண்ணங்கள்


எண்ணமும் நடத்தையும் ஒன்றுதான். நல்ல எண்ணங்கள் நல்ல பலனைத் தருகின்றன. ஒரு மனிதன் எவ்வளவு தூரம் தன் எண்ணங்களை உயர்த்துகிறானோ அவ்வளவு தூரம் வெற்றி பெறுவான். உங்கள் கனவுகளை குறிக்கோள்களை மதியுங்கள். உங்கள் இலட்சியங்களை எப்போதும் உங்கள் மனதில் நிறுத்துங்கள். ஒரு மனிதன் தான் நினைப்பதாகவே மாறுகிறான். இதுதான் முடிவில்லாத வாழ்க்கை மர்மம்.

பலன்


உங்கள் சொந்த எண்ணங்களின் பலன் உங்கள் கைகளிலேயே இருக்கிறது. நீங்கள் சம்பாதித்ததைத்தான் நீங்கள் பெறுவீர்கள், கூடக்குறைய இருக்காது. உங்களுடைய தற்போதய நிலை எதுவாக இருந்தாலும் எண்ணங்கள், கற்பனைகள் குறிக்கோள்களைப் பொறுத்தே உங்கள் எழுச்சியோ, வீழ்ச்சியோ, அல்லது நிலையாக இருப்பதோ நிகழும். இலட்சியத்திற்கு ஏற்பவே நீங்கள் பெரிதாவீர்கள்.

samedi 9 juillet 2011

உலக வெப்பமயமாதலால் பூமியின் பருமன் அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்






நாம் வாழும் பூமியின் பருமன் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. உலக தொழிற்சாலைகளில் வெளியேறும் கரியமில வாயுக்களால் வெப்பம் அதிகரித்து வருகிறது.
இந்த வெப்ப அதிகரிப்பால் பூமியின் வட துருவம் மற்றும் தென் துருவத்தில் ஆண்டுக்கு 38 ஆயிரத்து 200 கோடி டன் பனிக்கட்டி உருகி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த பனிக்கட்டி உருகலால் கடல்நீர் மட்டமும் அதிகரித்து வருகிறது.
20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது ஐஸ் யுகத்திற்கு பின்னர் பூமி மிகுந்த அளவு எடை குறைந்து காணப்பட்டது. இன்று நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. இப்போது பூமியின் மையப்பகுதி உலக வெப்பம் அதிகரிப்பால் பெருத்து உள்ளது. அண்டார்டிகாவிலும், கிறீன்லாந்திலும் ஐஸ் உருகி ஓடுவது தொடர்கிறது.
ஐஸ் கட்டி காலத்தின் போது பூமியின் எடை பருமன் ஆண்டுக்கு ஒரு மில்லி மீற்றருக்கும் குறைவான அளவில் இருந்து வந்தது. ஐஸ் கட்டியின் அடுக்குகள் கடுமையானதாக இருந்த போது பூமியின் மேல் பகுதியிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
கிரேஸ் எனப்படும் புவி ஈர்ப்பு மீட்பு சோதனை செயற்கை கோள் மூலம் ஆய்வு செய்யப்பட்டதில் பூமியில் பனிக்கட்டி உருகுவது அதிகரித்து பூமியின் வடிவத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதை அறிய முடிந்தது.

vendredi 8 juillet 2011

நாலு பேருக்கு பயன் இல்லாவிட்டால்.. ?


இரவு பகலா நீ வேலை செய்து என்ன பயன் அதனால் நாலு பேருக்கு பயன் இல்லாவிட்டால்.. ?

தவறு.


பத்து ரூபா விலையில் தரமான பொருள் தருவதற்குப் பதில் ஐந்து ரூபா விலையில் தரக்குறைவான பொருளைத் தருவது தவறு, அதை வாங்குவதோ அதைவிடத் தவறு.

மந்திரங்கள்.


வாழ்க்கையில் அவமானப்பட்டிருக்கிறீர்களா ? 
அதற்காக சந்தோஷப்படுங்கள். 
துரோகத்தை சந்தித்திருக்கிறீர்களா ? 
அதற்காகவும் சந்தோஷப்படுங்கள். 
யாரையாவது நம்பி கெட்டிருக்கிறீர்களா ? 
அதற்காகவும் சந்தோஷப்படுங்கள். 
அவமானமும், துரோகமும், ஏமாற்றமும் 
நம்முடைய பலத்தை நாமே 
தெரிந்து கொள்ள உதவும் மந்திரங்கள்.

நல்வழி


வாழ்க்கையின் ஆறாத காயங்களில்தான் இறைவனின் தீராத கருணை இருக்கிறது.
கடவுள் நடாத்தும் நாடகத்தில் கொடுத்த வேஷத்தைப் போடுகிற பொறுப்பு மட்டும்தான் நமக்கு, போடுங்கள் அவரே நல்வழி காட்டுவார்.

vendredi 24 juin 2011

மண வாழ்க்கை மிக சிறந்ததாக அமைய




இல்லற பந்தத்தில் கணவன் மனைவிக்கு இடையேயான உறவு என்பது மிகவும் புனிதமானது.
வெவ்வெறு தளங்களில் இருந்து வந்திருக்கும் இருவர் இணைந்து வசிக்கும் போது அவர்களுக்கிடையேயான பரஸ்பரம் புரிதலும் அன்புமே வாழ்க்கை பயணத்தில் இனிமையை கூட்டும்.
அபரிமிதமான அன்பும், எதிர்பார்ப்பில்லாத நேசமுமே உறவுச்சங்கிலியின் நெருக்கத்தை அதிகரிக்கும். பிறந்து வளர்ந்த இடங்களையும் உறவுகளையும் விட்டு விட்டு கணவனின் வீடே உலகம் என்று வரும் பெண்ணிற்கு சரியான பாதுகாப்பினை வழங்க வேண்டியது கணவனின் கடமை.
உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் கணவனுக்காக எதை வேண்டுமானலும் செய்ய மனைவி தயாராகி விடுகிறாள். மனைவியின் நன்மதிப்பு புத்தகத்தில் இடம் பெற கணவன் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:
அதிக நேரம் செலவிடுங்கள்: மனைவி என்பவர் உங்களை மட்டுமே நம்பி வந்தவர். அவருக்காக அதிக நேரம் செலவிடுவது ஒன்றும் தவறில்லை. உறவுகளும் மிகவும் முக்கியம் தான். ஆனால் வாழ்க்கையின் அனைத்து சுக துங்கங்களையும் சரிபாதியாக பகிர்ந்து கொள்ளும் மனைவிக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்குவதில் தவறொன்றும் இல்லை.
பொழுது போக்கில் ஆர்வம்: அதிகாலை எழுவது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கணவருக்காகவும், அவரது குடும்பத்திற்காகவும் நேரத்தை செலவிடுகின்றனர் பெண்கள். அவர்களுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு அக்கறை காட்டுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.
பொறுப்பான தந்தையாக நடந்து கொள்ளுங்கள்: கணவனுக்கு அடுத்தபடியாக பெண்கள் அதீத அக்கறை செலுத்துவது குழந்தைகள் மீது தான். குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் பெண்களுக்கு எந்த அளவிற்கு உரிமையும் கடமையும் இருக்கிறதோ அதே அளவு ஆண்களுக்கும் உண்டு. குழந்தைகளுக்கு பொறுப்பான தகப்பனாக நடந்து கொள்ளும் ஆண்களை கொண்டாடும் பெண்கள் அதிகம் உள்ளனர்.
மனைவியின் நட்புக்கு மதிப்பு ஆண்களுக்கு என்று நட்பு வட்டம் இருப்பதைப் போல பெண்களுக்கு உயிர்தோழிகள் உண்டு. திருமணத்திற்குப் பிறகு அதை தொடர முடியவில்லையே என்ற ஏக்கம் அநேகம் பேருக்கு ஏற்படுவதுண்டு. மனைவியை அழைத்துக்கொண்டு அவரது தோழிகளின் வீட்டுக்குச் சென்று நட்பை புதுப்பிப்பதில் தவறொன்றும் இல்லை.
பரிசுப் பொருட்களால் அசத்துங்கள்: ஒவ்வொரு பெண்ணிற்கும் விலை மதிப்பில்லாத பரிசுப்பொருள் கணவன் மட்டுமே. இருந்தாலும் கணவர் ஒரு முழம் வாங்கிக் கொடுத்தாலே அதை நான்கு பேரிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.
பிறந்தநாள், திருமணநாள் என வாழ்வின் முக்கிய தருணங்களை நினைவில் வைத்துக் கொண்டு அந்த நாளில் மனைவிக்கு பரிசுகளை வாங்கித் தந்து அசத்துங்கள். எந்த சந்தர்ப்பத்திலும் திருமண நாளை மறந்துவிடாதீர்கள்.
விடுமுறையை அனுபவியுங்கள்: ஆண்டு முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மனைவியை ஆண்டுக்கு ஒருமுறையாவது வெளியூருக்கு அழைத்துச் சென்று வாருங்கள். அது அவர்களுக்கு பரவசமான தருணமாக இருக்கும். இவற்றை சரியாக கடைபிடித்தாலே உறவுபந்தத்தின் நெருக்கம் அதிகரிக்கும். எந்த சந்தர்ப்பத்திலும் யாருக்காகவும் மனைவி உங்களை விட்டுக்கொடுக்க மாட்டார். 



தமிழிலும் இனி மொழிமாற்றம் செய்யலாம்: கூகுளின் சாதனை


தமிழிலும் இனி மொழிமாற்றம் செய்யலாம்: கூகுளின் சாதனை

தமிழிலும் இனி மொழிமாற்றம் செய்யலாம்: கூகுளின் சாதனை

கூகிள் Translate பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு கட்டுரைகளை மாற்ற உதவுகிறது.
இதுவரை தமிழ் மொழிக்கு மாற்றும் வசதி இல்லை. தற்போது அதனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது சோதனை முறையாகவே அறிமுகம் செய்துள்ளது.
அதனால் சரியாக மொழிமாற்றம் செய்யவில்லை. பல ஆங்கில வார்த்தைகளை ஆங்கில வார்த்தைகளாகவே கொடுக்கிறது. அதே போல தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றினால் பல தமிழ் வார்த்தைகளை தமிழிஷ்[Tamil word in English] வார்த்தைகளாகவே கொடுக்கிறது.
மொழிமாற்றம் செய்ய:
http://translate.google.com/  தளத்திற்கு சென்று நீங்கள் டைப் செய்யுங்கள். நீங்கள் எந்த மொழியில் டைப் செய்தாலும் முடிந்த வரை அது தானியங்கியாக கண்டுபிடித்து விடும். பிறகு மேலே TO என்ற இடத்தில் எந்த மொழிக்கு மாற்றம் செய்ய வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும். பிறகு Translate என்பதை க்ளிக் செய்யவும்.
தமிழுடன் சேர்த்து வங்காளம், குஜராத்தி, தெலுங்கு, கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகள் தற்போது சோதனை முறையில் இருக்கின்றன. Google Translate Gadget-ல் இன்னும் இந்த வசதி வரவில்லை.


http://translate.google.com

விண்ணில் இருந்து பொழியும் சுவையான மழை



பல ஆறுகள், விண்ணில் இருந்து பொழியும் சுவையான மழை என்று எது சேர்ந்தாலும் கடலின் சுவை மாறுவதில்லை. அதுபோல தைரியமுள்ளவனின் மனதை சோதனையின் களம் தாக்குவதில்லை.
நீயும் கடவுளாக மாற வேண்டுமா ? பெரும் துன்பங்களுக்கு எதிராகப் போராடு, சித்திரவதை, எதிர்ப்பு, சிறை, சாவு, தூக்குமரம் எது வந்தாலும் கலங்காது நிதானமாக முன்னேறு.

நம்பிக்கை



உன் தலையெழுத்தைத் தீர்மானிப்பவன் நீதான் உன் ஆன்மாவின் எஜமானனும் நீதான்.
ஒரு மனிதனின் நம்பிக்கை அவனுடைய பலவீனத்தை வெற்றி கொள்ளும்.

jeudi 23 juin 2011

வெறுப்பு இருக்கும் இடத்தில் அன்பு செலுத்துங்கள் :


வெறுப்பு இருக்கும் இடத்தில் அன்பு செலுத்துங்கள் : சந்தேகம் உள்ள இடத்தில் நம்பிக்கை கொடுங்கள் : மனச்சோர்வு உள்ள இடத்தில் விசுவாசம் கொடுங்கள் : இருள் உள்ள இடத்தில் வெளிச்சம் கொடுங்கள் : துக்கம் உள்ள இடத்தில் சந்தோசம் கொடுங்கள்.

உன்னிடம் அன்பு இருக்கிறதா என்று உன்னை நீயே கேட்டுப்பார்.


உன் உடலைத் தானம் செய்ய விரும்புகிறாயா.. அப்படியானால் உன்னிடம் அன்பு இருக்கிறதா என்று உன்னை நீயே கேட்டுப்பார். அன்பில்லாத உன் உடல் உறுப்புகள் இன்னொரு மனிதனில் பொருத்தப்பட்டால் அவனும் அன்பற்ற இயந்திரமாகிவிடுவான்.

அன்பு மேன்மையானது.


அன்பு தகாதசெயலில் ஈடுபடாது, தனக்காக எதையும் செய்யாது, எளிதில் உணர்ச்சிவசப்படாது, தீயதை எண்ணாது. அநீதி செய்துவிட்டு சந்தோஷப்படுவது குற்றம், உண்மையைப் பார்த்து, சந்தோஷப்படுவதே மேன்மையானது.

அன்பு


நாம் எவ்வளவு பணக்காரராக இருந்தாலும், வல்லமை உள்ளவராக இருந்தாலும் அன்பு இல்லை என்றால் ஒன்றுமே இல்லை.

lundi 13 juin 2011

உதிரம்


உதிரம் மட்டும் சிகப்பாக்கி

உறவை அதிலே பலமாக்கி
ஆணும் பெண்ணும் இரண்டாக்கி
ஆண்டவர் இணைத்தார் துணையாக்கி.


நேசி


அழகை நேசிக்காதே

அறிவை நேசி
பணத்தை நேசிக்காதே
பாசத்தை நேசி
ஆடம்பரத்தை நேசிக்காதே
அடக்கத்தை நேசி
ஆணவத்தை நேசிக்காதே
அன்பை நேசி
ஏனெனில் 
ஆணவம் அழிவுப்பாதையை
விரைவில் நோக்கி செல்லும்


எந்த வயதினிலும்,

பாசத்தோடு சோறூட்டி விட,
எப்போதும் என்னருகில் வேண்டும்...,
என் அருமை தாய்.......!

விழிகள்



என் விழிகள் துடிப்பது

உன்னை காண
உதடுகள் துடிப்பது
உன்னோடு பேச
இதயம் துடிப்பது
உன்னை தாங்க
இளமை துடிப்பது
உன்னோடு வாழ
ஆனால் இன்று 
என்னால் எதுவும்
முடியவில்லை
உன்னை பிரிந்ததால்..

பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்


பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்







பழச்சாறுகளை அடிக்கடி குடிப்பதால் உடல் பருமன், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல் உள்ளிட்ட உடல் நலக்கேடுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பழச்சாறு அருந்துவது மற்றும் உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு உண்டாகும் நன்மை, தீமைகள் குறித்து இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸ் பகுதியிலுள்ள பாங்கர் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. இதன் முடிவுகள் பழச்சாறு பிரியர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது.
பழச்சாறை தொடர்ந்து சாப்பிடுவதால் பற்களுக்கும் கேடு ஏற்படுவதுடன் கலோரி நிறைந்த உணவுகளை உண்ணத் தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. உடல் பருமன் உண்டாகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. புதிய பழங்களைக் கொண்டு சாறு பிழிந்தாலும் சாறில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.
அதாவது 1 டம்ளர் பழச்சாறில் 5 ஸ்பூண் அளவு சர்க்கரை உள்ளது. எனவே பழச்சாறு பருகுவது உடல் நலத்துக்கு நல்லதல்ல என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. ஒரு டம்ளர் பழச்சாறில் 4 மடங்கு தண்ணீர் கலந்து பருகினால் பாதிப்புகள் குறையும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நேரம் பழங்களைவிட உலர் பழங்களை திண்பதால் அதிக நன்மைகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஈக்வானிமிடஸ்



அன்டோனியஸ் பயஸ் என்னும் ரோமானிய மன்னன் மரணப்படுக்கையில் இருக்கும்போது வாழ்வின் தத்துவத்தை ஒரேயொரு வார்த்தையில் சொல்லும்படி கேட்டான். அவனுக்கு வாழ்க்கைத் தத்துவம் பற்றிக் கூறப்பட்ட வார்த்தை ஈக்வானிமிடஸ் என்ற ரோமானிய சொல்லாகும்.
ஈக்வானிமிடஸ் என்றால் : சமத்துவம் ஓர் அமைதியான பொறுமை, வாழ்வின் சோதனைகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கும் மேலாகச் செல்லது என்ற பொருள்தரும். ஆம் வாழ்க்கை என்றால் என்னெவென்று தேடுவோர்க்கு மிக எளிமையான விளக்கமே இதுவாகும்.

வாழ்க்கை பசுமையானது,



கோழைகள் இறப்பதற்கு முன்னரே பலமுறை இறந்துவிடுகிறார்கள். வீரனோ மரணத்தை ஒரு முறைதான் சந்திக்கிறான். மரணம் ஒரு தேவையான முடிவுதான் எப்போது வரவேண்டுமோ அப்போது வந்துவிடும் – வில்லியம் ஷேக்ஸ்பியர்
அவன் ஒரு கல்லை எட்டி உதைத்தான் அதன் அடியில் பாதுகாப்பாக இருந்த பூச்சி பறந்து போனது – இது போன்ற பறப்புத்தான் மரணம், அதற்கு பயப்பிடாதே.
வாழ்க்கை பசுமையானது, வசந்தமானது, மிகவும் சுருக்கமானது, பறந்து போவது. காலப் பெரு வெளியில் நமது வாழ்வு ஒரு கணத்திற்கும் குறைவானது.

மரணம்



நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்த காலம் எப்படி உங்களுக்கு சொந்தமில்லையோ, அதுபோலத்தான் இறப்பதற்கு பின்னுள்ள காலமும் உங்களுக்கு சொந்தமில்லை. உங்களுக்கு அடுத்தவர் இடத்தை விட்டுக் கொடுத்ததைப் போல நீங்களும் விட்டுக் கொடுங்கள்.
இந்த உலகில் எப்படி பயமின்றி வந்தீர்களோ அப்படியே இதை விட்டுப் போகும்போதும் பயமின்றிப் போங்கள். மரணத்தில் இருந்து எப்படி வாழ்விற்கு வந்தீர்களோ அப்படியே வாழ்விலிருந்து மரணத்திற்கு போகிறீர்கள் என்று எளிமையாகக் கருதுங்கள். உலக ஒழுங்கில் உங்கள் மரணம் ஒரு பகுதி, ஆனால் உலக வாழ்வில் அது ஓர் அங்கம்.

samedi 11 juin 2011

ஆரோக்கியமான மேனியைப் பெற உதவும் சைவ உணவுகள்


ஆரோக்கியமான மேனியைப் பெற உதவும் சைவ உணவுகள்

சைவ உணவுகளை எடுத்துக் கொள்வது நமது உடல் நலனுக்கு மிகுந்த பலனை அளிக்கும் என்கின்றனர் மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
அதன் பலன்கள் பின்வருமாறு:
நச்சுக்களை அகற்றுபவை: நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.
எலும்புகளை வலுவாக்குபவை: இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சினை இல்லை.
கார்போஹைட்ரேட் பற்றாக்குறை: அசைவ உணவு அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு. இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக் கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.
எளிதில் ஜீரணம்: சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளுகோஸ் சத்தை சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.
ஆரோக்கியமான மேனி: பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.

தமிழ் மொழியில் அறிமுகமாகும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9


தமிழ் மொழியில் அறிமுகமாகும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில் அண்மையில் மேலும் 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது.
இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும்.
பல்வேறான மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
பிரவுசர் போட்டியில் மற்ற பிரவுசர்களை முந்திச் செல்ல இது கை கொடுக்கும் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது. இந்த பிரவுசர் வெளியான போது மைக்ரோசாப்ட் இந்தியாவில் பிரபலமான 29 இணைய தளங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ பிரபலப்படுத்த இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது. 
தமிழ் மற்றும் பிற மொழிகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை உங்கள் கணணியில் இயக்க http://windows.microsoft.com/en-US/internet-explorer/downloads/ie-9/worldwide-languages என்ற முகவரி சென்று அங்கிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உங்கள் கணணியில் இயங்கும் ஓபரேட்டிங் சிஸ்டம்(விஸ்டா/விண்டோஸ் 7 x 32 / 64 பிட்) எது என அறிந்து அதற்கேற்ற பதிப்பினை தரவிறக்கம் செய்திடவும்.
விண்டோஸ் எக்ஸ்பியில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 இயங்காது என்பது உங்களுக்கு ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.

jeudi 2 juin 2011

கனவு



கலைந்துபோகும் என் 
கனவுகளை 
கலைத்து பிடித்து 
கட்டிவைக்க விழையும் 
வாலிபன் நான் 
வசந்தத்தை அனுபவிக்கும் 
வயதில் 
வறுமையை 

உறக்கம் வேண்டும்



ஒளியிழந்து நிலவு,
மௌனத்தில் ஆகாயம்,
உறக்கத்தின் மடியில்
உறைந்து போன உலகம்

ஏக்கத்தில் விழித்திருக்கும் 
இந்த விழிகளுக்கு
ஓரிரவாவது உறக்கம் வேண்டும்

கைத்தொலைபேசி பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்


கைத்தொலைபேசி பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்
 உலக சுகாதார மையம் எச்சரிக்கை   கைத்தொலைபேசி பயன்படுத்தாதவர்கள் யாராவது இருக்கிறார்‌களா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்லும் அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் கைத்தொலைபேசியின் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது.
இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் கைத்தொலைபேசிகளை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப்படுத்துவதால் உடலில் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
இருப்பினும் கைத்தொலைபேசிகள் பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்ற வாதமும் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் கைத்தொலைபேசிகள் பயன்பாட்டால் புற்றுநோய் நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார மையம் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார மையத்தின் ஒரு அங்கமான சர்வதேச புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. கைத்தொலைபேசிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இடம் பெற்றிருந்தனர்.
குழுவுக்கு தலைவராக அமெரிக்க அ‌திபர் ஒபாமாவின் தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஜொனாதான் சாமெட் இருந்தார்.
கைத்தொலைபேசிகள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் எனவே அதனை அபாயகரமான பூச்சிக்கொல்லி, சலவை காரங்கள் ஆகிய ரசாயனப் பொருட்களுக்கு நிகராக பட்டியலிட வேண்டும் என்றும் அந்த ஆராய்ச்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.
கைத்தொலைபேசிகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. வெளிநாட்டில் கைத்தொலைபேசிகள் வாங்குபவர்கள், அந்த போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்ற‌ை அறிந்து கொண்டு பின்னர் தான் கைத்தொலைபேசியை வாங்குகின்றனர்.
ஆனால் இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்று பரவலாக கூறப்படுகிறது. இத்தகைய விழிப்புணர்வோடு கைத்தொலைபேசிகளை வாங்கினால் புற்றுநோய் அபாயத்தில் இருந்து ஓரளவுக்கு நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்

samedi 21 mai 2011

தவறுகளை


தன் தவறுகளை திருத்திக்கொண்டு தன்னைத் தொடர்ந்து புதிய மனிதனாக மாற்றிக் கொள்வதில்தான் மனிதனின் நல்ல குணம் இருக்கிறது. ஒரு மனிதனின் மனம்தான் அவனுடைய நண்பன், அதை அவன் தனது எதிரியாக மாற்றிவிடக் கூடாது.

உங்கள் வாழ்வை


மற்றவரில் தங்கியிராது உங்கள் வாழ்வை நீங்களே ஏற்படுத்திக் கொண்டால்தான் சொந்த வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அடைய முடியும்.

mercredi 18 mai 2011

முள்ளிவாய்க்காலில் கண்ணீரோடு .................



முள்ளிவாய்க்காலில் நின்று வானம் அதிர குழறினோமே
ஐநாவின் காதுகளுக்கு விழவேயில்லையா 
ஆண்டுகள் ஆனாலும் நீதி சாகாது என்று கூறலாம்
அநியாயமாய் கொன்றொழித்த உறவுகள் திரும்பிவருவாரோ
அறிக்கையும் ஆய்வுகளும் கண்டனங்களும் கண்துடைப்புகள் தானோ
வெறும் வாய்பேச்சும் வீண் கதைகளும் பொய் வேசம் தானோ

கொன்றொழித்து எரியூட்டி சாம்பலையும் இருந்த தடத்தையும் இல்லாதொழித்த பின்
எதை வைத்து குற்றவாளி என்பீர் 
போரே நடக்கவில்லை என்பான்
குண்டே போடவில்லை என்பான்
யாரையும் கொல்லவில்லை என்பான்
சிறையில் யாரும் இல்லை என்பான் 
என்னை யாரும் புடுங்கேலாது என்பான் 
மகிந்தனை மயிர் நரைத்து கூன் விழுந்த பின்போ கூண்டில் ஏற்றுவீர்

சிங்களவன் கொன்றது ஒன்றல்ல இரண்டல்ல நூறாயிரம் உறவுகளின் உயிர்கள்
அவன் இப்போதும் கொல்ல நினைப்பது
பலகோடி தமிழனின் தமிழீழ தாகத்தை

முப்பது ஆண்டுகளாய் வலி சுமக்கும் தேசம்

விடுதலையே மூச்சாக வாழும் மக்கள்
காற்றோடு கலந்தாலும் கடலோடு கரைந்தாலும்
மண்ணோடு புதைந்தாலும் அடங்காது எங்கள் தாகம்
விழுதுகளை வெட்டி எறிந்தாலும் வேரோடு புடுங்கி எறிந்தாலும்
மீண்டும் துளிர் விடும் விடுதலை வேட்கை
காலத்தால் அழியாத வலி வரினும் வலிமை கொண்டெழும் தன்மான உணர்வு
இழப்புகளை கண்டு இடிந்து போகாத இதயங்கள்
எதுவரினும் வீழ்ந்து கிடக்காத தமிழினம்

உலகமே உன் நாட்குறிப்பேட்டில் குறித்துவை
முள்ளிவாய்கால் என்பது குருதியில் தீக்குளித்த தேசத்தின் அடையாளம்
அது முடிவல்ல தமிழனின் தன்மானப்போரின் நான்காம் அத்தியாயத்தின் ஆரம்பம்
முள்ளிவாய்க்காலில் கண்ணீரோடு விதைத்தோம்
தமிழீழத்தில் கெளரவத்தோடு அறுவடை செய்வோம்

mardi 17 mai 2011

மனம்தான் அவனுடைய நண்பன்



தன் தவறுகளை திருத்திக்கொண்டு தன்னைத் தொடர்ந்து புதிய மனிதனாக மாற்றிக் கொள்வதில்தான் மனிதனின் நல்ல குணம் இருக்கிறது. ஒரு மனிதனின் மனம்தான் அவனுடைய நண்பன், அதை அவன் தனது எதிரியாக மாற்றிவிடக் கூடாது.

கனி



நல்ல எண்ணங்கள் நல்ல கனிகளை தருகின்றன, கெட்ட எண்ணங்கள் கெட்ட கனிகளை தருகின்றன. மனிதன்தான் தனது எண்ணங்களின் தோட்டக்காரன்.

உங்களுக்கு உண்மையாக இருங்கள்



 உங்களுக்கு உண்மையாக இருங்கள் 


இதோ உனக்கு எனது ஆசிகள் உரித்தாகட்டும் !
இந்த அறிவுரைகள் உன் நினைவில் நின்று
உன் நடத்தையை உருவாக்கட்டும் !
உனது எண்ணங்களை சொல்லாதே…
தீர்மானிக்காத எண்ணத்தை செயலாக்காதே..
நட்பாக நடந்துகொள்.. அநாகரிகமாக நடந்து கொள்ளாதே..!
உனக்கிருக்கும் நண்பர்கள், அவர்களது நண்பர்களை
இரும்பு வளையங்களால் உன் இதயத்தோடு பிணைத்துக் கொள்..
ஆனால் ஒவ்வொரு புதிய,
முதிர்ச்சியடையாத தோழனோடும் கேளிக்கையில் மூழ்கி
உன் கரத்தை மாசுபடுத்தாதே..
சண்டையில் இறங்காமல் எச்சரிக்கையாயிரு..
ஆனால் இறங்கிவிட்டால் எதிராளி உன்னிடம்
எச்சரிக்கையாக இருக்கச் செய்..!
எல்லோருக்கும் செவி கொடு..
ஆனால் சிலருக்கு மட்டுமே குரல் கொடு..!
எல்லோருடைய கண்டனங்களையும் பெற்றுக்கொள்
ஆனால் முடிவை நீயே எடு !
உன் பணத்தால் வாங்க முடியாத
உன் நடத்தை உயர்வாயிருக்கட்டும் !
ஆனால் செயற்கையாக நடந்து கொள்ளாதே
செழிப்பாயிருக்கட்டும் ஆனால் பகட்டாயிருக்கக் கூடாது..!
ஆடைதான் மனிதனை வெளிப்படுத்துகிறது
கடன் கொடுக்காதே வாங்காதே !
கடன் கொடுத்தால் கடனும் போய்விடும்
நண்பனும் போய்விடுவான்..
கடன் வாங்குவதால் சிக்கனம் கெடுகிறது
எல்லாவற்றுக்கும் மேலாக உனக்கு நீ உண்மையாயிரு
இரவும் பகலும் இது தொடரட்டும்
எவனுக்கும் நீ பொய்யாக இருக்க முடியாது.

மனம் ஒரு தோட்டம்



மனம் ஒரு தோட்டம் போன்றது. அதனுடைய மண்ணை நாமே கொத்தி பக்குவப்படுத்தி நல்ல விதைகளை விதைக்க வேண்டும். அந்த விதையில் வளரும் மரமே நம்மையும், நாம் சார்ந்த எல்லாவற்றையும் தீர்மானம் செய்கிறது.
ஒரு மனிதன் நினைத்தது போலவே ஆகிறான். அவனது நடத்தை அவன் எண்ணங்களின் ஒட்டு மொத்தத் தொகுப்பாக இருக்கிறது. 

mardi 10 mai 2011

சூரியனில் ஏற்படும் தீப்பிழம்புகளால் ஆபத்து: நாசா விண்வெளி ஆய்வு

  
நாசா விண்வெளி ஆய்வு மையத்தினரால் சூரிய இயக்க கண்காணிப்பு கருவியின் மூலம் சூரியனைப் பற்றி தொடர்ந்து கண்கானிக்கப்பட்டது.
அதில் சூரியன் சுழலும் போது இருண்ட பகுதிகளுக்கும் காந்தபுலங்களுக்கும் இடையிலான செயற்பாட்டினால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சூரியனில் உருவான பெரிய சூரியப் தீப்பிழம்புகள் உருவானதாக இங்கிலாந்தின் மத்திய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியன் சுழலும் போது இருண்ட பகுதிகளின் இயக்கப்பாட்டினால் கடந்த பிப்ரவரி மாதம் பெரிய தீப்பிழம்புகள் உருவானதாகத் தெரிவிக்கப்படுகிறது. சன்ஸ்பொர்ட்ஸ் அல்லது சூரியனின் இருண்ட பகுதிகளினால் காந்தப்புல சக்தி அதிகமாக உருவாவதாக ஆய்வாளர் டேனியல் பிறவுண் தெரிவித்துள்ளார்.
எலாஸ்டிக் வயர்களை கைகளினால் இழுப்பதன் மூலம் அந்த வயர்களில் விசை சேகரிக்கப்படுவதாகவும் அவற்றை விடும் போது சக்தியுடன் செயற்படுவதாகவும், இதனையொத்த செயல்முறையே சூரியனின் இருண்ட பகுதியில் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சூரியன் சுழலும் போது இருண்ட வலயங்களில் உள்ள சக்தி சேமிக்கப்பட்டு அவை காந்தப்புல சக்திகளுடன் மோதும் போது பெரிய ஒளியுடன் தீப்பிழம்பாக உருவெடுப்பதாக அவர் தெரிவித்தார். க்ளாஸ் எக்ஸ் ரக சூரியப் பிழம்புகளே மிகவும் வலுவானவை இருக்கின்றன எனவும் தெரிவித்தார்.

lundi 9 mai 2011

இதய திசுக்கள் பாதிப்படைந்தால் தானாகவே சரிசெய்து கொள்ளும் முறை: விஞ்ஞானிகள் சாதனை

                                                                     
பாதிக்கப்பட்ட இதயத்தில் திசுக்களை சரிசெய்து மீண்டும் துடிப்புடன் செயல்பட வைப்பதற்கான புதிய செல் தெரபி முறையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த முறையின் மூலம் திசுக்கள் தாங்களாகவே சரி செய்து கொண்டு செயல்படுகின்றன. இந்த ஆய்வு குறித்த கட்டுரை நேஷனல் அகாடமி ஆப் சயின்சில் வெளியிடப்பட்டுள்ளது.
கொலம்பியா பல்கலைகழகத்தின் ப்யூ பவுண்டேஷன்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங்கின் உயிரி மருத்துவ துறை பேராசிரியர் கார்டெனா வுன்ஜிக் நோவகோவிக் தலைமையில் நடந்த ஆய்வில் இந்த புதிய செல் தெரபி முறை கண்டறியப்பட்டுள்ளது.
மாரடைப்பு காரணமாக இதயம் மயோ கார்டியஸ் இன்பார்க்கஷன் என்ற பாதிப்பு நிலைக்கு ஆளாகிறது. இந்த பாதிப்பை சரி செய்ய சேதம் அடைந்த திசுக்கள் பகுதியில் ரத்த ஓட்டம் உச்ச நிலையில் இருக்கும் வகையில் மனித சீரமைப்பு செல்களை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர்.
புதிய மருத்துவ தொழில்நுட்பம் நல்ல பலனை அளித்துள்ளது என டொக்டர் வுன்ஜக் நோவகோவிக் தெரிவித்தார். இந்த புதிய முறையின் மூலம் பாதிப்படைந்த செல்களை தாங்களாகவே சேதத்தை சரிசெய்து கொண்டு மீண்டும் சிறப்பாக செயல்படுகின்றன. இதனால் இதய ரத்த ஓட்டமும் தடையின்றி நடைபெறும். இதய நோய்களும் தவிர்க்கப்படுகின்றன.
இதய தசை கட்டமைப்பு மற்றும் இதர இதய சீரமைப்பு ஆராய்ச்சிகளுக்கு மனித ஆதாரச் செல்லின் இதர வகைகளை பயன்படுத்தப் போவதாகவும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஆதாரச் செல்கள் மூலம் பாதிக்கப்பட்ட இதய ரத்த குழாய்கள் நன்கு வளர்கின்றன. புரதமும் உரிய அளவில் உற்பத்தி ஆகிறது. இதன் மூலம் இதய தசை பகுதியில் சேதமடைந்த பூர்விக திசு தன்னை சரிசெய்து கொண்டு இயல்பு நிலைக்கு திரும்புகிறது.

கடல் நீ்ர் மட்டம் உயருவதால் உலகின் முக்கிய நகரங்கள் மூழ்கி விடும் அபாயம்:


                                                                      
ஆர்டிக் மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் ஏற்பட்டுள்ள தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் அதிகமாக உருகி ஏராளமான அளவில் நீர் வெளியேறி வருகிறது.
இதே நிலை நீடித்தால் வரும் 2100ம் ஆண்டுக்குள் வங்கதேசம் முதல் புளோரிடா வரையிலும், பசிபிக் பெருங்கடலின் தாழ்வான பகுதிகளிலும், லண்டன் முதல் ஷங்காய் வரையிலான நகரங்களிலும் கடல் மட்டம் 1.6 மீட்டர் அளவிற்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் சுனாமி தாக்கும் ஆபத்தும் அதிகரிக்கும் என்று கடல் நீர் மட்டம் குறித்த சர்வதேச ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக பூமி உருண்டையின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக ஆர்டிக் பகுதியில் வெப்ப நிலை உயர்ந்துள்ளது என எட்டு நாடுகள் கொண்ட ஆர்டிக் மானிடரிங் அசெஸ்மென்ட் திட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனால் பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகி ஏராளமான அளவில் நீர் வெளியேறுகிறது. இவ்வாறு வெளியேறும் நீர் கடலில் கலப்பதால் கடல் மட்டம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் 0.9 மீற்றர் முதல் 1.6 மீற்றர் வரை அதாவது 5 அடி, 3 அங்குலம் வரை கடல் மட்டம் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலக தட்ப வெப்ப நிலை குறித்து ஆய்வு செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு கடந்த 2007ம் ஆண்டில் நடத்திய ஆய்வில் வரும் 2100ம் ஆண்டில் கடல் மட்டம் 18 முதல் 59 செ.மீ அளவுக்கு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடல் மட்டம் உயர்வது குறித்து ஐரோப்பிய தட்ப வெப்ப நிலை குறித்த அமைப்பின் ஆணையர் ஹெட்கார்டு கூறுகையில்,"உலகில் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அனைத்துமே அடுத்த சில ஆண்டுகளில் கடல் மட்டம் அதிகரிக்கும் என்று தான் கூறுகின்றன. இது கவலையளிக்கும் ஒரு தகவலாகும்" என்றார்.
இந்நிலையில் தட்ப வெட்ப சீர்குலைவை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடல் மட்டம் அதிகரிக்கும் போது மாலத்தீவு உள்ளிட்ட உலகின் சில நாடுகள் மூழ்கிவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 2100ம் ஆண்டில் 1.6 மீற்றர் அளவிற்கு கடல் மட்டம் அதிகரிக்கப் போகிறது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடல் மட்டம் அதிகரிப்பால் சுனாமி தாக்குதலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இதற்கு சமீபத்திய ஜப்பான் சுனாமியை உதாரணமாக அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாத்து வெப்ப நிலை அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சர்வதேச அளவிலான இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும்.

dimanche 8 mai 2011

தாயன்பு


ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அத்தனை உறவுகளினதும் ஆத்மார்த்தமான அன்பை ஒருமிக்கச் செய்து அன்பின் உச்சநிலையைக் காட்டுவது தாயன்பு மட்டுமே.

அந்தத் தாயன்பை ஒருகணம் உள்ளத்தில் எண்ணிப்பார்க்க உருவாக்கப்பட்டதே அன்னையர் தினமாகும். மேற்குலகத்தாரால் அறிமுகப்படுத்தப்பட்டதெனினும் அன்னையின் அன்பை எம் கண்முன் கொண்டுவருகிறது இந்த நாள்.

அமெரிக்காவில் வாழ்ந்த அன்னா மரியா ஜார்விஸ் என்ற பெண்மணியின் தாயன்பை அடியொற்றி அன்னையர் தினம் கொண்டாடப்படுவதாக பொதுவாகக் கூறப்படுகிறது.

எனினும் பண்டைய காலத்தில் பெண் தெய்வங்களை விசேடமாக வழிபடுவதற்காக இத்தினம் கொண்டாடப்படுவதாகவும் மாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருசில நாடுகளில் அன்னையர் தினம் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டாலும் ஒவ்வொரு வருடமும் மேமாதம் வருகின்ற இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையே பொதுவாக அன்னையர் தினமாக கொள்ளப்படுகிறது.

தூய்மையான அன்பின் மகத்துவத்தை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது. அதனை யதார்த்தமாக உணர்த்துகின்ற அன்னையின் பெருமையையும் இலகுவில் வார்த்தைகளாக்கிவிட முடியாது. அது நீலவானில் ஊஞ்சல் கட்டுவது போல் பத்துப் பௌர்ணமிகள் சுமந்து, முத்துப்போல் பெற்றெடுத்துக் காத்து, காலம்முழுவதும் தனக்காகவன்றி குழந்தைகளுக்காக வாழும் தெய்வம் தாய்.

மானுட வாழ்வில் அன்பின் முதல் வெளிப்பாடாகக் கருதப்படும் தாயன்பு வாழ்வின் அந்தம் வரை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.ஓடும் இயந்திரங்களுடன் ஓடி அலைந்து தானும் இயந்திரமாகவே மாறிக் களைத்து வருகிறான் மனிதன். விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் விந்தைகள் செய்துகொண்டிருக்கிறது விஞ்ஞானம்.
எம்மை இவ்வுலகுக்கு ஈன்றெடுத்த தாய்க்காக அந்த அன்பை உணர்வதற்காக ஒருநாளை பிரத்தியேகப்படுத்துவதில் தவறில்லை என்றே கூற முடியும்.பெண்ணின் அதியுயர் நிலையாக மதிப்பிடப்படும் தாய்மையின் மகத்துவத்தை அறிந்து அன்பான அந்த உறவுக்காக அன்பைப் பகிர்வோம்.

samedi 7 mai 2011

எனது அம்மாவின் அன்பிற்கு!



உலகிலேயே...

மிகவும் அழகானது
பூ
மிகவும் அதிசயமானது
தாஜ்மஹால்
மிகவும் பிரகாசமானது
சூரியன்
மிகவும் குளுமையானது
நிலவு
மிகவும் தெளிவானது
நதி
மிகவும் இனிமையானது
தென்றல்
ஆனாலும்...இவை எதுவும்
ஈடு இல்லை
எனது அம்மாவின்
அன்பிற்கு!

அன்பு


பூக்களில் விதையிருந்தால் அது பல கோடி பூக்களை உருவக்கும் மனிதனில் அன்பு இருந்தால் பல கோடி மனிதர்களை சொந்தமாக்கும்

vendredi 6 mai 2011

வாழ்வு


இறுக்கமான சூழலை எதிர் கொண்டு எல்லாமே உங்களுக்கு எதிராக இருந்தால், இன்னும் ஒரு நிமிடம் நீடிக்க முடியாது என்று தோன்றினாலும் கூட, கைவிட்டு விடாதீர்கள். ஏனெனில் அந்த இடத்தில் அந்த நேரத்தில்தான் வாழ்வு திசை திரும்புகிறது.