முகப்பு

mardi 19 avril 2016

நம் வாழ்கையும், நம் நாடும் இப்படிதான்

இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே
இருக்கு..
ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....
மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...
...
ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை
விளையாடிக் கொண்டிருக்கிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கிறது.
அத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில்
இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..உங்களுக்கு
அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது...
நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....??
உண்மையாக நாம் என்ன செய்வோம்...??
ஒரு குழந்தை விளையாடும் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றிவிடுவோம்..
ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்....
உண்மை தான்
இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.
ரயில் வரும் என்று தெரிந்து தப்பு செய்யும்
குழந்தைகள் காப்பற்றபடுகிறது...
ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தப்பே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது....
இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படிதான்

Aucun commentaire:

Enregistrer un commentaire