ஒரு அரசன் தன் நாட்டில் வசிக்கும் முதியவர்களால் எந்த பயனும் இல்லை என்பதால்,சுமார் 70 வயது நிறைந்தவர்களை கண் காணதா இடத்தில் கொண்டு விடச்சொல்லி உத்தரவு இட்டான்.
மக்களின் பெரும் கண்ணீருக்கு இடையில் உத்தரவு நடைமுறைப் படுத்தப்பட்டது.சில மாதங்கள் கழித்து,நாட்டில் கடும் மழை.ஊர் வெள்ளத்தில் சிக்கியது.மக்கள் பெறும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
இந்த நிலைமையை சாமாளிக்க சரியான தீர்வு கொடுப்பவர்களுக்குப் பெரும் பரிசு வழங்குவதாக அரசன் அறிவித்தான்.முருகன் என்பவன் கொடுத்த யோசனை, மற்ற எல்லோர்களின் யோசனைகளையும் விட மிகச்சிறந்ததாக இருந்தது.அரசன் அதை அமுல்ப்படுத்தி, வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பற்றினான்.
இன்னும் சில மாதங்கள் கழித்து,நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது.அப்போதும் முருகன் கொடுத்த யோசனைதான் அரசனுக்கு கை கொடுத்தது.
சில நாள் கழித்து நாட்டில் மிகவும் தொற்று நோய் பரவியது.
இந்த முறையும் முருகன் சொன்ன ஆலோசனை நல்ல பலனைக் கொடுத்தது.மக்கள் நோயில் இருந்து தப்பினர்.
அரசனுக்கு ஒரே ஆச்சிரியம்.எப்படி முருகனால் மட்டும் இப்படி சரியான தீர்வு கொடுக்க முடிகிறது என்று எண்ணி,முருகனை அழைத்து விவரம் கேட்டார்.
அதற்கு,முருகன்,"அரசே,தாங்கள் முதியவர்களை நாடு கடத்தீனீர்கள்.ஆனால் நான் என் தந்தையை விட்டு பிரிய மனம் இடம் கொடுக்கவில்லை.அதனால் நான் அவரை என் வீட்டுப் பரணில் ஒளித்து வைத்து,யாருக்கும் தெரியாமல் பராமரித்து வந்தேன்.
உடலால் இயலாமல் போனாலும் அவரின் பழுத்த அனுபவத்தால்தான் நம் நாட்டில் பிரச்சனைகள் வந்தபோது எல்லாம் அவரின் யோசனைதான் தீர்வு சொன்னது" என்றான்..
அரசன் தன் தவறை உணர்ந்து,நாடு கடத்திய முதியவர்களை சகல மரியாதையோடு தன் நாட்டுக்கு மீட்டுவந்து அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க செய்தான்..
இந்த கதை சொல்லும் பாடம் என்னவெனில்,
"வயதானவர்கள் மொத்தமாகப் பயனற்றவர்கள் அல்ல.
இளமையின் காரணமாக நமக்கு யாரையும் சார்ந்திருக்க அவசியம் இல்லாமல் இருக்காலம். இயலாமையும், தள்ளாமையும் முடக்கிவைத்து விட்டதால்,அவர்களால் இப்போது முடியாமல் இருக்கலாம்.
அதற்காக நாம் அவர்களை ஒதுக்கி வைக்கலாமா..?
அவர்கள் யார்.......?
இன்றைக்கு நீங்கள் இந்த நிலைமைக்கு வந்ததற்கு நம் பெற்றோர்கள் நம்மை நன்கு பராமரித்துத் தந்ததால் தானே..?
நாம் இந்த பூமியில் வந்த நாளில் இருந்து நமக்காக உணவை தேடிக்கொள்ளக்கூட நம்மிடம் எந்தத் திறனும் இல்லை.
முற்றிலும் கையாலாகாமல் கிடந்த நம்மை நம் அம்மா எடுத்து மார்போடு அணைத்துப் பாலூட்டவில்லை என்றால்,நாம் இந்நேரம் என்னவாகி இருப்போம்..?
உணவு மட்டுமல்ல..மொத்த உலகமே நமக்கு அவள்தானே...
உலகம் தோன்றிய நாளில் இருந்து இதுநாள் வரை யாரவது கடவுளை பார்த்ததுண்டா..? ஆனால் நாம் நம் கற்பனயில் எண்ணும் அந்த கடவுள் தன்மைக்கு நெருக்கமாக நாம் அனைவரும் உணர்ந்த உலகில் ஒரே ஒருவர் நம் தாய்தானே..
அவர்களால்தான் நாம் என்ற எண்ணம் நம் மனதில் என்றும் நிலைத்து இருக்க வேண்டும்.
ஆம்,நண்பர்களே.,
நமக்கு நடக்க கற்றுக் கொடுத்த பெற்றோர்கள்,அவர்கள்
வயதான காலத்தில்,ஒரு கௌரவமான வாழ்க்கை வாழ எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டியது நம் கடமை.

Aucun commentaire:
Enregistrer un commentaire