அமைதிகொள் மனிதா !....
வாடா மல்லிக்கு வண்ணம்
உண்டு வாசமில்லை !..
வாசமுள்ள மல்லிகைக்கோ
வயது குறைவு!..
வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை,
கொம்புள்ள கடமானுக்கோ
வீரம் இல்லை!...
கருங்குயிலுக்குத்
தோகையில்லை !...
தோகையுள்ள மயிலுக்கோ
இனிய குரலில்லை!..
காற்றுக்கு
உருவமில்லை !..
கதிரவனுக்கு நிழலில்லை,
நீருக்கு நிறமில்லை,
நெருப்புக்கு ஈரமில்லை,
ஒன்றைக் கொடுத்து
ஒன்றை எடுத்தான்,
ஒவ்வொன்றிற்கும் காரணம்
வைத்தான்,
எல்லாம் இருந்தும் எல்லாம் தெரிந்தும்
கல்லாய் நின்றான் இறைவன்.
அவனுக்கே இல்லை,
அற்பம் நீ
உனக்கெதற்கு பூரணத்துவம்?
எவர் வாழ்விலும் நிறைவில்லை
எவர் வாழ்விலும் குறைவில்லை
புரிந்துகொள் மனிதனே
அமைதி கொள் !
( படித்ததில் பிடித்தது ).
Aucun commentaire:
Enregistrer un commentaire