முகப்பு

lundi 20 avril 2015

உலகத்துலேயே அதிக மகிழ்ச்சி


மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!
கணவன்: என்ன?
மனைவி: யார் இந்த
உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக
இருக்கா? நீயா?? நானா???

கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான்
தான்!!!

மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல
வேலைக்கு போனா, இரவு தான் வர..
உனக்கு தான் உலகத்தை ரசிக்க
நேரமே இல்லையே….

கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள்
முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன
என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம்
செய், நாளைக்கு இரவு நான் பதில்
சொல்றேன்..

(மறுநாள் இரவு)
கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?
மனைவி:
அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன்,
பூக்களை ரசித்தேன்,
கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா,
நண்பர்களோடு பேசினேன்,
நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன்,
நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன்,
கவிதைகள் படித்தேன், கார்ட்டூன்
நெட்வொர்க் பாத்தேன்,
மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின்
அமைதியில் கரைந்தேன்,
இன்று மாலை பெய்த, மழையிலும்
நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால்
மொட்டை மாடியில்
பௌர்ணமி நிலவின் அழகையும்
ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல….
இந்தா உம்மா…. இதோ என்
செல்லத்தையும் முத்தமிடுவிடேன்…
எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த
மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார்
அதிக மகிழ்சியா இருக்காங்கனு???
கணவன்: இப்பவும் சொல்றேன்,
எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…

மனைவி: ம்ம்… எப்படி டா!!!
கணவன்: அட முட்டாள்,
உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள
அணைத்து அழகான பூக்களில் இருந்தும்
தேனை சேகரித்து, என் இதழ்களில்
வந்து சிந்திவிட
வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில்
சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில்
அடைந்துவிட்டேன் உன்னைவிட
நூறு மடங்கு மகிழ்ச்சியை…
நல்ல வேளை, ஒருவன் வாழ்வில்
இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க
வேண்டும்
என்று வரைமுறையை கடவுள்
விதிக்கவில்லை, இல்லையெனில் நீ
முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன்
நரகத்திற்கு…

மனைவி: நரகமா???
கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம்
தானடி எனக்கு…), உனக்கு இந்த
உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய்,
எனக்கு என்
உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட
மாதிரி இருந்தது…. இப்பொழுது சொல்
யாருக்கு அதிக மகிழ்ச்சி?????

(வெட்கத்தில் இன்னும்சில
தேன்துளிகளை சிந்தியது,
வண்ணத்து பூச்சி...)sountha

Aucun commentaire:

Enregistrer un commentaire