முகப்பு

samedi 29 octobre 2011

நீரிழிவு நோய்கான அறிகுறிகள்

நீரிழிவு நோய்கான அறிகுறிகள்



நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை கடந்த ஐந்து வருடங்களில் 50 சதவீதம் அதிகரித்து வருவதாக மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரம்பரையினால் நீரிழிவு நோய் ஏற்படுவது ஒரு வகை என்றாலும், அதிகளவு இனிப்புப் பதார்தம், மாவுப்பொருள் போன்றவை அதிக அளவு உண்பதனால் உடல் பருமன் அதிகரித்து நீரிழிவு நோய் வருவதற்கு முக்கியகாரணம் என்று தற்போதைய மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மேலும் கடைகளில் விற்கப்படும் உடனடி உணவுப் பொருட்களளை அதிகளவு உண்பதனாலும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகும். நீரிழிவு நோய் ஏற்பட்டவர்களுக்கு வெளியே தெரியக்கூடிய அறிகுறிகளாவன அதிக நீர்தாகம் ஏற்படல், உடல் பலவீனம் அடைதல், களைப்படைதல் போன்றவையாகும்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பிரித்தானிய தேசீய வைத்தியத் துறை 9 பில்லியன் பவுண்ஸ் நிதியை செலவு செய்கின்றது. 3 மில்லியன் இளைஞர்களும், சிறுவர்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சென்ற 12 மாதங்களுக்குள் 11,7000 அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. நீரிழிவு நோயிற்காக அரசாங்கம் தனது நிதிச்செவில் பத்தில் ஒரு பகுதியை செலவிடுகின்றது.



Aucun commentaire:

Enregistrer un commentaire